Advertisement

எவர்வின் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

கொளத்துார்:கொளத்துார், எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய, 439 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 70௦ மாணவர்கள், 475 முதல், 495 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். 112 மாணவர்கள், வெவ்வேறு பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதுதவிர, 450க்கு மேல், ௧௬௪ மாணவர்களும், 425க்கு மேல், 236 மாணவர்களும், 400க்கு மேல், 308 மாணவர்களும் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி தொடர்ச்சியாக,100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளியின் சி.இ.ஓ., மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்தமன், முதல்வர் கலையரசி மற்றும் துணை முதல்வர் நிலவரசி ஆகியோர், சாதனை படைத்த மாணவர்களுக்கு, இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement