Advertisement

மாட்டு கொட்டகையாகும் மாநகராட்சி பூங்கா!

செம்மஞ்சேரி:மாநகராட்சி பூங்காவை, மாடுகளை மேயவிடவும், துணிகள் காயவைக்கும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, 89வது குறுக்கு தெருவில், சென்னை பெருநகர மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுத்திடல் அமைந்துள்ளது.

இங்கு, சிறுவர்கள் விளையாடவும், பெரியவர்கள் நடைபயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பராமரிப்பின்மையால் இப்பூங்கா சமீபகாலமாக, மாடுகளை மேயவிடவும், துணிகளை காய வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'பூங்காவிற்குள் மாடுகள் மேய்வதால், விளையாடவும், நடைபயிற்சி செய்யவும் தயக்கம் காட்டும் நிலை ஏற்படுகிறது. 'அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், ஆங்காங்கே துணிகளை காய வைப்பதால், பூங்கா கலையிழந்து வருகிறது. பூங்காவை முறையாக பராமரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement