Advertisement

பெருங்குடி பொது மருத்துவமனை அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்

பெருங்குடி:புறநகர் பகுதி மக்கள் வசதிக்காக, பெருங்குடியில் கட்டப்படும், 100 படுக்கை கொண்ட அரசு பொது மருத்துவமனை, அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பெருங்குடி மண்டலத்தில், 11 வார்டுகள் உள்ளன. இங்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தை தவிர, அரசு பொது மருத்துவமனை இல்லை. பெருங்குடி மண்டலத்தை மையப்படுத்தி, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பெருங்குடி, பள்ளி சாலையில், 8.5 கோடி ரூபாயில், 100 படுக்கை கொண்ட, 4 மாடி மருத்துவமனை கட்டப்படுகிறது.

100 படுக்கை கொண்ட பெரிய அறைகள், அறுவை சிகிச்சை மையம், பரிசோதனை கூடம், மருந்து பாதுகாப்பு அறை, ஊழியர்கள் ஓய்வு அறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டடம் உள்ளது.அனைத்து பணிகளையும் முடித்து, அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement