Advertisement

குப்பையில் இயற்கை உரம் தயாரிப்பு கன்டோன்மென்ட் கழகத்தில் விற்பனை

பல்லாவரம்:பல்லாவரம் கண்டோன்மென்ட் கழக பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல்லாவரம் கண்டோன்மென்ட் கழகத்தில், மூன்று வார்டுகள் உள்ளன; 3,600 வீடுகள் உள்ளன.

குடியிருப்புகளில் இருந்து நாள் ஒன்றுக்கு, 3 டன் குப்பை சேகரமாகிறது. அதில், மக்கும் குப்பை, 800 டன், மற்றவை மக்காத குப்பை. இப்பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்கள், தினசரி, 13 மூன்று சக்கர சைக்கிள்களில், வீடு வீடாக சென்று குப்பையை
சேகரிக்கின்றனர்.

மொத்தமுள்ள குடியிருப்புகளில், 10 சதவீதம் பேர், அவர்களாகவே குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து கொடுக்கின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, அரியன் தெருவில், உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தொட்டிகளில், மக்கும் குப்பையை கொட்டி, அதன்மீது மாட்டு சாணத்தை தெளித்து, 90 நாட்களில் உரம் தயாரிக்கின்றனர். உணவுக்கழிவுகளை, கண்டோன்மென்ட் கழக பள்ளியில், பயோமெட்ரிக் முறையில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, விற்பனை செய்கின்றனர். இயற்கை உரத்தை, கண்டோன்மென்ட் கழக அலுவலகத்தில், ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.மாதந்தோறும், 500 கிலோ உரம் விற்பனை ஆவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement