Advertisement

பேருந்து நிலையத்தில் நவீன 'இ - டாய்லெட்' கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட 'இ - டாய்லெட்' டில், தொடர் பராமரிப்பு இல்லாததால், பயணியர் முகம் சுளிக்கும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையத்தில், ஆறு மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில், ஐந்து கழிப்பறை கொண்ட, இ - டாய்லெட் அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களாக, தண்ணீர் சேகரிப்பது, சுத்தம் செய்வது போன்ற பணிகள் நடப்பதில்லை.இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதால், கழிப்பறையை பயன்படுத்த பயணியர் தயக்கம் காட்டுகின்றனர். மாநகராட்சியும், பேருந்து நிலைய நிர்வாகமும் மாறி மாறி, பராமரிப்பு பொறுப்பை தட்டிக் கழிப்பதால், பயணிகள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

உயரதிகாரிகள் கவனித்து, கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement