Advertisement

வைர விழா நடத்துவது ஆதாயத்திற்காக : பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அவருக்காக வைர விழா நடத்தவது ஆதாயத்திற்காகவே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை அழைத்து விழா தி.மு.க. நடத்தும் வைரவிழா இதுவாகும். கூடா நட்பு கேடாய் முடியும் என கூறிய காங்., கூட்டத்தில் இருப்பது யாருக்கு பெருமை என அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Prem Kumar - Bangalore,இந்தியா

    திரு கருணாநிதி அவர்களுக்கு வைர விழா நடத்தப் போவதாகவும் அதில் மக்கள் மனதிலிருந்து அகன்றுபோன தேசிய கட்சி காங்கிரஸ் உள்பட தலைவர்களையும், தமிழகத்தில் தி.மு.க எப்போதும்- எதை சொன்னாலும் அதன் பின்னால் அணிவகுக்க தலையாட்ட தயாராக உள்ள சில லெட்டர்பேட் தலைவர்களும் கந்து கொள்வார்கள் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். வீழ்ந்து வரும் தனது மற்றும் தி.மு.கவின் - செல்வாக்கை மீட்க இப்படி ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். அண்ணா தி.மு.கவின் இணைப்பு நாடகம் ஒருசரியான முடிவிற்கு வரும் வரை- மோடி தமிழ் நாட்டின் பக்கம் தனது பார்வையை திருப்பும்வரை ஸ்டாலின் தமிழ்நாட்டின் ராஜா என கூறிக்கொள்ளலாம்

  • Karthik - Pondy,இந்தியா

    பொன்னர் அவர்களே கூடா நட்பு கேடாய் முடியும் எங்களுக்கும் தெரியும். காவேரி மேல்ண்மை வாரியம் எங்கே. உங்களின் கருத்தாக உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னீங்க. கர்நாடகாவில் உங்கள் கட்சி கூட தண்ணீர் தரக்கூடாது சொல்லுது. விவசாயிகளை உங்களை நம்பவில்லை. நீங்கள் செய்தது துரோகம் இல்லியா?

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    வைர விழா நடத்துவது ஆதாயத்திற்காக என்பது முற்றிலும் உண்மை தான்..

  • தமிழ் - ஈரோடு,இந்தியா

    'வைர விழா நடத்தவது ஆதாயத்திற்காகவே' :-அடேங்கப்பா... என்ன அரிய கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பிற்காக ராதாவிற்கு ஒரு நோபல் பரிசு குடுக்கலாம்.

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    இருந்து விட்டு போகட்டும் உங்களுக்கும் தமிழ் இம்சிக்கும் வேறு வேலையே இல்லயா அழையா வீட்டில் நுழய ஆசை படுகிறீர்களே வெட்கமா இல்லை. இதை விட்டு நீங்கள் ஒருவிழா ஏற்பாடு செயங்கள் உங்கள் ஆதாயத்திற்காக எவனாவது வருவான் என்கிறீர்கள் வேண்டுமானால் MISSED CALL கொடுத்து வரவழைத்து பாருங்கள் இதையே பேசி பேசி போர் அடிக்குது உருப்படியா ஏதாவது பேசுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement