Advertisement

நீதிபதி கர்ணன் கோரிக்கை நிராகரிப்பு

புதுடில்லி: தன் மீதான 6மாத சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி நீதிபதி கர்ணன் அளித்த மனுவை சுப்ரீம் கோர்ட் பதிவாளர் நிராகரித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உடன் மோதல் போக்கை தொடர்ந்து கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

பணியில் இருந்து ஒய்வுபெற சில நாட்களே உள்ளதால் தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். கர்ணனின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது. மேலும் இறுதி உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளதால் வழக்கில் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பில்லை என கூறிய பதிவாளர் கோரிக்கை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி கதையாகிவிட்டது. கிடைத்த பதவியை பயன்படுத்தி நீதிக்காக காத்திருக்கும் நிறைய பேர்களுக்கு நன்மை செய்திருக்கலாம். இல்லாவிடில் நீதிபதி குமாரசாமிபோல் ஓய்வு பெறுகிற இந்த நேரத்தில் எதாவது அரசியல்வாதிக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி லம்பா பெரும் கோடி பணத்தை சேர்த்துட்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்று இருக்கலாம். ஒரு பைசாவுக்கு உதவாத காரியம்களில் நேரத்தை செலவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தண்டனை கொடுக்கிறேன் என்று தனக்கு தானே இப்போ தண்டனை கொடுத்துவிட்டு கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டும், தனது வக்கீல் மூலமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டும் அலைகிறார். நீதிபதியே வக்கீலுக்கு பணம் கொடுக்கவேண்டிய சூழல். இது தேவையா ? நல்ல முறையில் ஓய்வு பெற்று ராஜமரியாதையுடன் கொல்கொத்தாவிலிருந்து விடை பெற்று வந்தால் தமிழர்களுக்கே ஒரு மதிப்பு கூடும்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளுக்கே எதிர் தீர்ப்பு வழங்கிய இந்த கர்ண கடூரனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்......

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  சட்டத்தின் பார்வையில் இவர் ஒரு குற்றவாளி. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. என்னத்துக்கு இவர் கோரிக்கை வைக்கிறார். தகுதி இல்லாத மனிதர்களை மாண்புமிக்க பதவிகளில் இட ஒதுக்கீடு மூலம் உட்கார வைத்தால் இப்படி தான் நடக்கும். இவர்களை போன்ற ஆட்கள் தான் அந்த பதவியின் மாண்பை கெடுத்து வருகிறார்கள். பாவம் எந்த ஜாதி காட்சியாவது துணைக்கு வராதா என்று இத்தனை நாள் காத்து கொண்டிருந்தார். எதுவும் வரவில்லை. ஆகவே தான் தற்போது கோரிக்கை வைக்கிறார் போல இருக்கிறது.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பலர் கருதுவதுபோல ஹைகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை கொலீஜியம் யார் உத்தமர் யார் சத்திய சந்தன் யார் திறமையானவர் என தானே முடிவு செய்து நியமிக்கிறது அவர்களில் யாராவது ஆபத்தானவர் என அரசு நினைத்தால் கொஞ்ச நாள் நிறுத்தலாம் ஆனால் அதற்குஒப்புக்கொல்லாமல் கொலீஜியம் கோபப்படுகிறது அதே நேரம் தவறானவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு தவறு வெளிவந்தாலும் கொலீஜியம் விளக்கமளிப்பதுமில்லை மன்னிப்போ கேட்பதில்லை ஆகமொத்தம் எல்லையில்லா அதிகாரம் வேண்டும் பொறுப்பு மட்டும் வேண்டாம் என்பது எதில் கொண்டு போய்விடும்?

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  கிடைத்த பதவியை வைத்து தன் இனத்திற்கு பெருமை சேர்க்காமல்,மேலும் மேலும் இழுக்கு சேர்த்த நபர். என்று திருந்தும் இந்த நாடு?

 • Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா

  இதனால் தெரிவிப்பது என்னவென்றால், நீதித்துறையில் ஊழல் செய்யலாம், ஆனால் யாரும் சுட்டிக்காட்ட கூடாது.. கர்ணன் சொன்ன குற்றசாட்டுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஆசை, தினமலர் வெளியிடுமா. நீதித்துறையில் பாதிக்கும் மேல் பெங்களூரு குமாரசாமியை போன்றவர்கள், அதனால்தான் கர்ணன் மீது இத்தனை வேகம் (எங்கே ஊழல் வெளியே வந்துவொடுமோ என்று)..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏற்கனவே தமிழன் என்றாலே இந்தி காரர்களுக்கு பிடிக்காது... இதில் வேற நீங்கள் உளறி கொட்டி உள்ளீர்கள்... என்ன நடக்குதோ... பொறுமையை கடை பிடியுங்கள்... ஆண்டவன் கை கொடுப்பான்...

 • RENU - Chennai,இந்தியா

  இன்னமும் சஸ்பெண்ட் பண்ணலியா ...சம்பளம் தராளா ...

 • Manian - Chennai,இந்தியா

  கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே -கைமா பிளான் - 3 வது நியூட்டன் பவுதீக விதி- ஒவ்வொரு செயலுக்கும், அதே சக்தி உள்ள எதிர் மறை சக்தி இருக்கும் - இனி கர்ணனே உதாரணமாக சரித்திரத்தில் இருப்பர்.

 • Karthik - Chennai,இந்தியா

  இவர் செய்த தவறுக்கு தண்டனை தந்து விட்டார்கள். ஆனால் இவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே? இவர் செய்த சில தவறான செயல்கள் இவர் கூறிய குற்றசாட்டு மறந்து போனது.

 • ரங்கன் -

  இன்னுமா இவரைப் புடிக்க முடியலே? போலீசெல்லாம் என்ன பண்ணறாங்க?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  திறமை வேறு , தகுதி வேறு, வந்தே மாதரம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இந்த ஆளுக்கு ஜனநாயகம், சட்டம் இதன் மீது நம்பிக்கை இல்லை, மேலும் இவர் எதிர்பார்ப்பது எல்லாமே இவர் சார்ந்த இயக்கங்கள் மற்றும் கழகங்கள் தோள் கொடுக்கும் என்ற ஒரே நம்பிக்கைதான், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, மத சார்பின்மை , இறையாண்மை, மனித நேயம், இவைகளுக்கு அப்பாற்பட்டு இவர் இயங்கிக்கொண்டு இருக்கிறார், இது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய்,. ஒரு பதவி வழங்கப்படுகிறது என்றால் அது ஒரு தனி மனிதருக்கு அல்ல, அந்த உடலுக்கு, அசிங்கமாகக் கூறவேண்டுமானால் உயிரற்ற ஒரு உடலுக்கு பதவியை கொடுத்தாலும் ஜனநாயகம் சலூட் அடித்து வாழ்த்து தெரிவிக்கும், இதுதான் உண்மை, ஆகவே இந்திய மக்கள் திறமை, கல்வி அறிவு, ஜாதி இவைகளை பார்ப்பது இல்லை, பதவிக்கு மரியாதை தருகிறார்கள், ஆகவே கிடைத்த பதவியை கண்ணனியமாக காப்பதே நம் கடமை, வந்தே மாதரம்

 • யுவா -

  ஏனய்யா உமக்கு இந்த வேலை

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  எப்படி இருந்த இவர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement