Advertisement

மதுரை வங்கி மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

மதுரை: மதுரையில் உள்ள வங்கி கிளை ஒன்றில் முறைகேடாக கடன் வழங்கியதாக மேலாளர் உட்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதிகப்பட்டது.
மதுரை வங்கி ஒன்றின் கிளையில் முறை கேடாக கடன் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது,இதில் வங்கி மேலாளர் உட்பட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் இரண்டு பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் விதித்து மாவட்ட சி.பி..ஐ.,நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

 • Karthik - Pondy,இந்தியா

  இதே போல மல்லையா வழக்குல ஏன் இது நடக்கல

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  9000 கோடி கடன் கொடுத்த தேச பக்தர்களுக்கு பத்ம விருது கொடுப்பீங்களோ..? அந்த கொள்ளையில் இன்னி வரைக்கும் எம்புட்டு பேரை கைது செஞ்சு ஜெயிலுக்கு அனுப்பி தண்டிச்சிருக்கீங்க. ? அது சரி, எம்புட்டு கடனை , யாருக்கு இங்கே கொடுத்தாங்கன்னு போடுங்களேன்.. கணக்கு பார்த்து கலாய்க்கிறதுக்கு வசதியாக இருக்கும்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  குடும்பம் செட்டில் ஆகிவிட்டது பிறகு என்ன இருக்கிறது, இன்றைக்கு சிறை என்பது புனித பயணமாகக் கருதப்படுவதால் யாரும் தலை குனியவோ அல்லது வருத்தமோ படப்போவது இல்லை, அரசியல் கட்சிகள் வாழ்க, இவர்கள்தான் மூலதனம், இவர்கள்தான் எடுத்துக்காட்டு, பல லட்சம் கோடி ஊழல் செய்தாலும் சிறைக்கு சென்றாலும் வெளியே வந்தாலும் குரல் கொடுக்க மக்கள் கூட்டம், இவர்களை ஏதோ இந்த நாட்டிற்கு இறைவன் படித்த ஒரு சொத்தாக முன்னிறுத்தி நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்த இவர்களுக்கே எல்லா பெருமையும், வந்தே மாதரம்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தலைப்பில் இருப்பது போல யாருக்கு நாலாண்டு சிறை தண்டனை. செய்தியை படித்தால் மேலாளருக்கு ஏழாண்டு மற்றவர்களுக்கு ஐந்தாண்டு என்பதாக தெரிகிறதே. பஞ்சாப் தேசிய வங்கி, சிறப்பாக செயல் பட்ட வங்கி, திடிரெனெ நிறைய பேருக்கு கடன் வாரி வழங்கியது. வங்கி அதிகாரிகள் உண்மையாக அந்த தேசியவங்கியினரால் நேரடியாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வங்கியின் செயல்பாடு பயிற்சி விதிமுறைகள் திருப்தியாக தான் இருக்கின்றன. நெடுங்காடு வங்கியை தன்னகத்தே இணைத்து கொண்டது தமிழகம் கேரளா போன்ற தென்மாநிலங்களில் அதற்கு கிளைகள் வேண்டும் வியாபாரம் பெரியளவில் விஸ்தரிக்கப் படவேண்டும் என்பதற்காக. அதனால் நெடுங்காடு வங்கியின் பழைய அதிகாரிகள் தான் பஞ்சாப் தேசிய வங்கியால் தன்னகத்தே இணைக்கப் பட்டபோது அந்த கிளைக்கு மேலாளர்களா இருந்து கவனித்து வர, விளையாடி இருக்கிறார்கள். இதை கவனிக்க தவறி விட்டது வங்கி இணைக்கும் பொது இது போன்ற பிரச்சினைகள் வரும் என்பதை பெரிதாக கவனிக்காமல்.

 • Baalu - tirupur,இந்தியா

  அண்ணா, எந்த பேங்க். அதில் என்ன ராணுவ ரகசியம்

  • Arivu Nambi - madurai,இந்தியா

   பஞ்சாப் நேஷனல் பேங்க் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement