Advertisement

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? அதிர்ச்சி வைத்தியத்திற்கு ஸ்டாலின் திட்டம்

சென்னை: தமிழக சட்டசபையைக் கூட கூட்ட மறுக்கும் அ.தி.மு.க., அரசை எதிர்த்து, தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைக்கும் திட்டம் குறித்து, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், லஞ்சம், ஊழல் பெருத்து விட்டது, விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று, தி.மு.க., தரப்பில் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்த பின், கட்சியின் கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, அடுத்த சில மணி நேரத்தில், தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின், கட்சி தலைமை அலுவலகத்தில், அமைச்சர்களை கூட்டி, இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, தி.மு.க., வலியுறுத்தியெல்லாம், தமிழக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இந்த நேரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்டினால், பன்னீர்செல்வம் அணியினரோடு சேர்ந்து, தி.மு.க.,வினர் அரசுக்கு நெருக்கடி கொடுப்பர் என்று, நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை அடுத்து, சட்டசபையை கூட்டுவதில்லை என்ற முடிவுக்கு பழனிச்சாமி வந்தார். ஆனால், அரசின் முடிவை ஜெயக்குமாரே அறிவிக்கட்டும் என, அவரிடமே பொறுப்பை ஒப்படைத்தார் பழனிச்சாமி.

ஜெயக்குமார் மறுப்பு:இதையடுத்து, சட்டசபையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், தி.மு.க., ஆட்சி காலத்திலும் இப்படி சட்டசபை கூட்டத் தொடரை கூட்டாமல் இருந்துள்ளனர் எனவும் கூறினார். இதையடுத்து, ஜெயக்குமார் மீது கோபம் அடைந்த ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என கோபமாக கூறினார்.இதையடுத்து, தமிழக அரசுக்கு அதிர்ச்சியும்; கடும் நெருக்கடியும் தி.மு.க., தரப்பில் கொடுக்க வேண்டும் என்று, ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் சொல்லப்பட்டு வருகிறது. இதையடுத்து, தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.,க்களையும், கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு நடக்கவிருக்கும் சட்டசபை செயல்பாடுகள் தொடர்பான வைர விழா நிகழ்ச்சிக்குப் பின், ராஜினாமா செய்ய வைக்கலாமா என்பது குறித்து, ஸ்டாலின் தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (34)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அய்யா ஒன்று நினைவில் கொள்ளுங்கள்... ... எது செயதாலும் மக்களின் வரிப்பணம் வீணாவது பார்த்து கொள்ளுங்கள்...

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  ஸ்டாலின் முதலில் ராஜினாமா செய்யவும் . கோடி புண்ணியம் கிடைக்கும் .சுபராம காரைக்குடி

 • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சுடாலின் சொல்வது இருக்கட்டும் இந்த கேடுகெட்ட அரசாங்கமும் கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தால் அவரை பேசவிடாமல் அரசாங்கமே முன்னின்று முக்கிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டியது தானே அதற்க்கு நாதியற்ற அரசு இருந்தால் இதுபோன்ற நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் கருமம்

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  வெளி நாட்டில் இருந்து கமெண்ட் பண்ணுபவர்களே இங்கு வந்து பாருங்கடா என்ன நடக்குது என்று சும்மா ac ரூமில் உட்க்கார்ந்து எதையாவது கமெண்ட் பண்ணக்கூடாது

 • Paranthaman - kadappa,இந்தியா

  திமுகவில் இருந்து ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை. ராஜினாமா செய்வதே மேல். எதிர் கட்சி என்ற விலாசம் அத்துடன் மறைந்து போகும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன. இப்படி ஒரு அழுத்தம் தருவதால் எதை சாதிக்க முடியும். சட்ட சிக்கல்கள் அரசிற்கு வருமா? எதிர்க்கட்சி எம் எல் ஏ கள் மொத்தமாக ராஜினாமா செய்வதால், அதற்கு பிறகு சபையை நடத்த அல்லது கூட்டவே முடியும் போய்விட வழி உண்டா? காரணத்தை எழுதி இருக்கலாம். அரசியல் அரசியலமைப்பு பற்றி என் போன்றோருக்கு தெரியாது, தெரிந்து கொள்ள வழி கிடைத்திருக்கும்.

 • Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ

  பாதி பிரச்சனைக்கு இவங்களும்தான் காரணம். எல்லா பிரச்சனையும் 2014ல ஆரம்பிச்சித ?

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  சீக்கிரமா உங்க திமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லிடுங்க , அதோடு நீ்ங்களும் ராஜினாமா பண்ணிடுங்க, நீங்கள் தினம் தினம் ஆடும் கபட நாடகம் ஒழியட்டும். தமிழ்நாடு தப்பிச்சி போகட்டும்

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  எப்படியாவது நாற்காலியைப் பிடிக்கலாம்னு பார்க்கிறார், ஒரு பருப்பும் வேகலையே.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  எப்படியாவது முதல்வர் பதவி கிடைக்கவேண்டும், அதற்க்காக எது வேண்டுமானாலும் நடக்கலாம், மாநில பேருந்து மக்கள் கடும் எதிர்ப்பு தோல்வி, தற்போது இந்த வழி, சூப்பர் , வந்தே மாதரம்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இவரு சொன்னா அவங்க செய்யணுமே? வந்தா அமைச்சர் பதவி, 3 கோடின்னு அவங்க சொல்ல, ஓடி போயி எதிர்க்கட்சியில் சேர்ந்துட்டா? வோணாம்.. ரிஸ்க்கு..

 • Shekar Raghavan - muscat,ஓமன்

  உள்ளதும் போகும் நண்பா

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  பதவியிலிருந்து விலக திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் முட்டாள்கள் அல்ல. ஆமாம் அவரது நமக்கு நாமே திட்டம் என்னவாயிற்று?

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  இந்த திட்டத்தை முதலில் இவருடைய எம் எல் ஏ க்கள் ஏற்றுக்கொள்வார்களா? வேடிக்கையாக ஸ்டாலின் செய்யும் சிறை நிரப்பு போராட்டம்போல் அல்ல இது. இவர்கள் ராஜினாமா செய்தால் மீண்டும் ஒருபோதும் எம் எல் ஏ வாக முடியாது என்பது இவர்களுக்கு தெரியுமே.

 • rmr - chennai,இந்தியா

  என்னோவோ இவனுங்க ஆட்சில நதிநீர் இணைத்த மாதிரியும் ஏரியை தூர் வாருண மாதிரியும் பேசுறான் ஊழல் வாதி இவன் குடும்ப அரசியல் தமிழ்நாட்டின் சாப கேடு திரும்பவும் இந்த ஊழல் வாதிகள் வேண்டாம் என்பதே மக்களின் விருப்பம் , ஒரு செயல் திட்டமும் இல்லாத திருடர்கள் கட்சி

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எப்படியாவது நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடிக்கிறார்... ஆட்சியை கலைத்து விட்டு நான்கு ஆண்டுகள் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும்....

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  ரெண்டு கட்சியும் அடிச்சிக்கிட்டு செத்தால் பொது மக்களுக்கு நிம்மதி.... நல்ல பொழுது போகும்...ஒங்க ரெண்டு கட்சிகளுக்கு ஒட்டு போட்ட கேணைகளுக்கு இதை விட ஒரு நல்ல செய்தி நீங்க குடுக்க முடியாது...

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  சீக்கிரம் சட்டசபை தேர்தல் வரணும். அதில் திமுக அதிக சீட்டுகளை பெற்று ஆச்சி அமைக்கவேண்டும். அப்பா ஸ்டாலின் முதல் அமைச்சராக வேண்டும் என்ற சாணக்கியத்தனம் புரியுது. இந்த சாணக்கியத்தனத்துக்கு மத்தியில் பிஜேபிக்கு ஒத்து வரவேண்டுமே.

 • Gopal.V. - bangalore,இந்தியா

  சமஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி உள்ளது "விநாச காலே விபரீத புத்தி" என்று..ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை போல தெரிகிறது...

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  ஸ்டாலின் , துணிந்து 89 எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ? நல்ல தலைவன் என்றால் எப்போவோ இந்த ராஜினாமா முடிவை எடுத்து இருக்க வேண்டும் .

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  ஸ்டாலின் சட்டசபையை கூட்டச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்வார் .அவருக்கு இப்ப கொஞ்ச புதினம் தேவைப்படுகிறது .இவர்கள் பதவியை விட்டு விலக மாட்டார்கள் .எல்லாம் ஒரு புருடா

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  நம்பிட்டோம்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இந்த விசயத்தில், " அட்ராசக்க அட்ராசக்க " என்று வரவேற்க்கும் கட்சியினர் எவரோ?. வாசகரே?.

 • Pats - Coimbatore,இந்தியா

  தனக்கு தானே குழி தோண்டிக்கொள்வது என்பது இதுதான்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This is very good decision by the main opposition party of DMK to make the ruling party to consider the demand of conducting the Satta Sabhai kootta Thodar immediately.to In he present government there is no control and the ruling party also not maintain discipline in it's party like Jayalalithaa's time and every body gives statement as they wish.Let the opposition party show it's firm decision of resigning all it's MLAs at one go as a wake up call or warning to the present ruling party for it's decision of not conducting the Satta Sabhai in spite of several requests from Opposition party.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ராஜினாமா செய்தும் பிரயோசனம் இல்லை... அந்த தொகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் வரும்... மீண்டும் செலவு.... ஆனால் திமுக தான் அந்த தொகுதிகளிலில் மறுபடியும் வெல்லும்,.... வென்றாலும் எந்த பிரயோசனமும் இல்லை... பாஜக, இப்போதைக்கு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிடாது.... 123 MLA க்களையும் மிரட்டியே பினாமி ஆட்சி நடத்துவது தான் அவர்கள் திட்டம்... ரஜினி, OPS ஆகியோர் ஏதாவது புகுந்து 123 MLA க்களையும் கலைத்தால், சசிகலா ஆதரவு தீவிர MLA க்கள் 25 பேர் இருந்தால் கூட போதும், ஓன்று ஆட்சி கவிழும்...இல்லை திமுக - காங் - சசிகலா கூட்டணி ஆட்சி அமையும்....பாஜகவுக்கு இந்த ஒரு அதிர்ச்சி வைத்தியம் மட்டுமே இப்போதைக்கு கொடுக்க முடியும்...

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழ்நாடு அரசு என்று இன்று ஓன்று இல்லை. ஜெயா விட்டுப்போன ஒரு கும்பல் தங்கள் அதிகார பசிக்கு , அமைப்பை பயன்படுத்தி நாற்காலியில் குந்தி , ஊரை அடித்து உலையில் போடுகிறார்கள் . மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுகிறது . தமிழர்கள் வழக்கம் போல எதாவது ஒரு நடிகர் நாடாள மாட்டாரா என்று விசாலு , ரஜினி ,விஸ்கிகாந்த், என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் . இதுல பிஜேபி தமிழகத்தில் புறவாசல் தேடி கொண்டிருக்கிறார்கள் . இந்நேரத்தில் DMK , தனது MLA களை ராஜினாமா செய்திடச் சொன்னால் இந்த வழிப்பறி கும்பலும் , ஹிட்லரும் சேர்ந்து , தமிழகத்தை , ஹிந்தி தேசமாக்கி விடுவார்கள் . விவரம் தெரியாமல் ஸ்டாலின் , கள நிலவரம் தெரியாமல் யோசிக்கிறார்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  நீங்களும் சேர்ந்து பண்ணினால் புண்ணியமாகப் போகும்...

 • kuppusami - chennai,இந்தியா

  அனைத்து எதிர் கட்சிகளும் ராஜினாமா செய்ய வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் நடத்தும் அரசு சட்ட சபையை கூட்டினால் என்ன கூட்டவில்லை என்றால் என்ன.?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement