Advertisement

வடகிழக்கு மாநிலங்களில் தங்க வேண்டும்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் மத்திய அமைச்சர்கள், அங்கு ஒரு நாள் தங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் அனைவருக்கும் பாதுகாப்பானது என்ற தகவலை அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர்கள் அடிக்கடி சென்று தங்கி வர அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாவையும் வளர்ச்சியையும் இணைக்க நடடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியை அனைவருக்குமான சுற்றுலா தளமாக்குவது பிரதமரின் கனவு. இதனை நிறைவேற்ற, வடகிழக்கு மாநிலங்கள் செல்ல வேண்டும் என அனைத்து அமைச்சர்களும் கேட்டு கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் இரவு கட்டாயம் தங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    ஷில்லாங் பல்கலை வளாகத்தை தவிர வேறெங்கும் நமக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் இருக்கிறது எங்களுக்கு. இன்னமும் அங்கு தீவிரவாதிகள் தொல்லை அதிகம் இருப்பதாக தெரிகிறது. மிகப்பெரிய பாதுகாப்பான நட்சத்திர ஓட்டல்கள் இல்லாதததால் அங்கு செல்வதில்லை. அவர்கள் அங்கு கிளை பரப்பி வியாபாரம் செய்தார்கள் என்றால் பாதுகாப்பான இடம் தான் ஏன்னு ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement