Advertisement

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்து விடலாம்

புதுடில்லி : 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்ட தொகை ரூ.5.3 லட்சம் கோடி (தோராய மதிப்பு). இவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து விடலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கழகம் சமீபத்தில் கறுப்பு பணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1200 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், வறண்ட மற்றும் வெள்ளம் பாயும் நதிகளை இணைப்பதற்காக நீர்வளத்துறை கணக்கிட்டுள்ள தொகை ரூ.5.6 லட்சம் கோடி. 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.5.3 லட்சம் கோடி. இந்த தொகையை மீட்டாலே இந்திய நதிகளை இணைத்து விடலாம்.
2009-10 ம் ஆண்டுகளில் பதுக்கப்பட்ட ரூ.46,200 கோடியை மீட்டால் மருந்து துறையை முன்னேற்றலாம். 2010 ம் ஆண்டில் பதுக்கப்பட்ட ரூ.2.3 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டால் சாலை, ரயில்வே, கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துகளை நவீன மயமாக்குவதற்கான பட்ஜெட் தொகை கிடைத்து விடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (37)

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  புண்ணியவாளர்களின் பெயர்பட்டியலை முதலில் அறிவிக்கலாமே. எத்தனை அரசியல்வாதிகள், பணமுதலைகள் யார்யார் என்று அறியலாம்.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  Engappa kasimani, desa nesadai kanoom

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ம்ம்.... "ஒவ்வொருத்தர் பேங்க் அக்கவுண்டில் பத்து லட்சம் போட்டாச்சு", ம்ம்ம் ... "நதி நீரை இணைச்சாச்சு".. ம்ம்ம்.. அப்புறம்.. '"டேய் இன்னுமா தூங்கல்லை "? இன்னும் தூக்கம் வரலை.. இன்னும் கதை சொல்லுங்கஜீ.. கறுப்புப்பணம் ஒழிஞ்சிடும், விவசாயி வருமானம் டபுள் ஆகும்ன்னு காமெடி கதை சொல்லுவாங்களே, அதை சொல்லுங்க.. அப்பியே ம்ம்ம் கொட்டிக்கிட்டே நான் தூங்கிடுறேன்..

 • sankar - trichy,இந்தியா

  நதிகளை இணைக்க தேவை இல்லை . நதிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் சேரும் கழிவுகளை தடுத்தாலே போதும்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்த ரீல் அந்து போயி, வயர் பிஞ்சு போயி ரொம்ப நாளாகுது..

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  ஆக இப்போது சாத்தியம் இல்லை.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Whether Black money is with the middle class ??? G.s.rajan, Chennai.

 • adalarasan - chennai,இந்தியா

  அப்பொழுது பல ஊழல்கள், ஏர்ஸல் மேக்சிஸ்,2g...COMMONWEALTH, KEICOPTER, போன்ற பல ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடதக்கது? விசாரணையில் உண்மைகள் வெளி வரும் என்று நம்புவோம்? ஆனால் எப்பொழுது முடிவு பெரும் என்பது தான் பெரிய கேவிக்குறி???

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  இப்படிப் பேசிப் பேசியே மூன்று வருடங்களை ஓட்டிட்டீங்க. வீரவசனம் பேசியபடி முடிஞ்சா பதுங்கியுள்ள பணத்தைக் கொண்டு வாங்க. முடியவில்லை எனில் இருக்கிறதை வைத்து நாட்டிற்கு என்ன நல்லது செய்யலாம் என முடிவெடுங்கள். நீங்களாவது இந்த நாட்டிற்கு ஒரு விடிவெள்ளியாக இருப்பீர்கள் என மக்கள் நம்பி தேர்ந்தெடுத்து உள்ளார்கள். உருப்படியாக எதுவும் செய்யாமல், திரும்பத் திரும்ப இதையே பேசிகிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தால் என்ன பிரயோசனம்?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அப்படி அந்த பணத்தை மீது கொண்டு வந்தால், அதனுடன் உள்நாட்டு பணத்தையும் சேர்த்து ஒரு இருநூறு லட்சம் கோடிக்கு திட்டத்த்தை ஆரம்பித்து, வெளிநாட்டு பணம் மற்றும் உள்நாட்டு பணம் அனைத்தையும் பாதுகாப்பாக வெளி நாட்டிற்கே கொண்டு சென்று வேறு ஒருவர் பதுக்கிவிடுவார். நமக்கு நதிகள் இணைப்பு பேப்பரில் ஜோராக நடக்கும், இறுதியில் நதிகள் இணைப்பு சாத்திய படவில்லை சில ஒப்பந்தங்களை எதிராக இருக்கிறது, சுற்றுசூழல் பிரச்சினை, கடல் வளம் அழிந்து விடும், பாரம்பரியம் சீர்குலைந்து விடும் என்று மூடி விடுவார்கள். இப்போதெல்லாம் அரசின் கவனம் வேறு வகையில் தான் இருக்கிறியாது. இருக்கும் சொர்ப்ப பணமும் வெளியேறிவிடாமல் தடுப்பதற்கே மூச்சு திணறும் அளவிற்க்கு உழைக்க வேண்டியதிருக்கிறது.

 • Paramuk - kumari,இந்தியா

  அடுத்த தேர்தலுக்கு வாக்கு பெறுவதற்காக போடப்பட்டுள்ள வெகு அருமையான வியூகம் பாவம் மக்கள் எப்போதும் போல மாக்களாகிவிடுவார்கள். தமிழ்நாட்டு மக்களை குறி வைத்து போடப்பட்டுள்ளது போல தான் தோன்றுகிறது. ஏ மா றா தே ஏமாறாதே ஏ மா ற் றா தே ஏமாற்றாதே ... தமிழா தமிழா தூங்கி விடாதே

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நதிகளை இணைக்க பணமா முக்கியம் .மனசு . இப்போது இணைத்துள்ள நதியில் நீரை கேரளாவும் ,கர்நாடகாவும் விட மறுக்குது. காவேரிக்கு குறுக்கால மோடி கான்க்ரீட் போடுறார் . காவ வெட்ட கைகளும் , கரைக்கட்ட சீமென்ட்டும் இங்கு கிடைக்குது . கமிசன் அடிக்க காத்திருக்கும் அரசியல்வாதிகள் பினாமி களும் இந்தியாவை கீளுக்கு தள்ளும் கூட்டமும் ஒழிந்தால் ,ஆறுகள் ஆறுமாத்தில் இணையும் . வெளிநாட்டுப்பணம் விவகாரம் , தேர்தல் சமயத்தில் மோடி கூவும் கூச்சல் .அது வராது . அது வரவே வராது . மோடிக்கு அதுல எல்லாம் அக்கறை கிடையாது . உள்நாட்டில் கறுப்புப்பணம் ஒழிப்பதாக கூறி , பாமரர்களை வங்கிவாசலில் நிற்கவைப்பதுதான் வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு கொண்டுவரும் மோடியிசம் .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அடஅடஅட ..புல்லரிக்க வைக்கிறாங்கப்பா......

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  அந்த பணம் வந்தாலும், நதிகள் இணைப்பிற்காக இங்கே ஒன்றும் புடுங்க முடியாது.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இப்புடியே சொல்லிகிட்டே இருந்து, இருந்து..... .பாக்கி எதுவுமே இல்ல.. இப்போ எல்லாமே காலி பண்ணிட்டானுவோ.

 • PeruVishnu -

  மோடி அரசு சொல்வதோடு சரி, செயலில் ஒன்னும் இல்லை

 • rajan - kerala,இந்தியா

  முதலில் ஊழலுக்கு எதிரான கடும் தண்டனை மிக்க சட்டத்தை கொண்டு வாருங்கள். இந்நாட்டில் எந்த ஒரு திட்டமும் ஊழலை சந்திக்காமல் நடைமுறைக்கு வர சாத்தியம் இல்லை. எத்தனை கோடிகள் கொட்டினாலும் ஊழல் புரையோடி கொண்டிருக்கும். எல்லாவனுக்கும் குளிர் விட்டு போச்சு.

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  இந்தியாவில் நதிகளை இணைப்பது என்பது ஒரு பெரிய பகீரத பிராயத்தினம். ஆனாலும் செய்துதான் ஆக வேண்டும். இப்போது ஆரம்பித்தாலாவது இன்னும் பத்து வருடங்களிலாவது முடியும். பணம் கிடைக்கும் ஆனால் அரசியல்வியாதிகளின் மனம்தான் கிடைக்க வேண்டும்.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  பிஜேபி ஆட்சிக்கு வரைவதற்கு முன் இந்தியரகள் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு ஒவொவொரு இந்தியனுக்கு ரூ 15 லட்சம் கொடுப்போம் என்றார்கள். இப்போ அந்த திட்டம் பங்க நாமா ஆயிற்று. இப்போ அதாவது பிஜேபி ஆட்சியின் முற்று ஆண்டுகள் போனபின் வெளிநாட்டிலுள்ள பணத்தை வைத்து நதிகளை இணைக்க போகிறார்களாம். ஆஹா என்ன உண்மைக்கு முரண்பாடான பேச்சு. இதற்க்கு பெயர் தான் தில்லுமுல்லு லேகியம் இந்தியர்கள் சீக்கிரம் மறக்கும் தன்மை படைத்தவர்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரிவதால் தான் இப்படி யெல்லாம் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.

 • dharma - chennai,இந்தியா

  இப்படியே சொல்லி சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்கி காலத்தை ஓட்டுங்கள். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே இன்னும் சுலபமா அமல் படுத்த வேண்டிய லோக் பாலை அமல் செய்யவில்லை, கங்கையை ஒரிசாவின் மஹாநதியோடு இணைத்து அதை கோதாவரியுடன் இணைத்தால் தென்னிந்தியா வளம் பெறும். எங்கே அது நடந்து விடக்கூடாதுன்னு மிக தெளிவாக நாட்களை கடத்துகிறீர்கள்.

 • kum - paris,பிரான்ஸ்

  இன்னும் எத்தனை நாளுக்குத்தான்டா இப்படி பொய்யா சொல்லுவீங்க. வர வேண்டிய காவேரி தண்ணிய வரவிடாம பண்ணிட்டு. 6 மாசத்துக்கு முன்னாடி இப்படி ஒன்னு சொல்லித்தாண்ட எங்க காச எடுக்க தெரு தெருவா அலையவிட்டிங்க

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சொல்லிக் கொண்டே இருங்கள்... 2014 முதல் 17 வரை , அப்படி முதலீடு பண்ணப்படவில்லையா?... அல்லது பண்ணப்படும் அளவுக்கு இந்தியாவில் தொழில் இல்லையா?... 2014 முதல் 17 வரை இப்பாடியாப்பட்ட இந்திய பணம் எங்கு போயிற்று ?... பழங்கதை பேசி பிரயோசனம் இல்லை... ஒரு ஆண்டிலேயே , அதாவது 2007 இல் மட்டும் 5 லட்சம் கோடி வெளிநாடுகளுக்கு சென்றது என்று சொல்லத்தெரிந்த மத்திய அரசுக்கு, 2014 முதல் 2017 வரை குவிந்த கருப்பு பணம் எங்கு போயிற்று என்று கண்டுபிடிக்க திராணியில்லையா?... அல்லது அந்த காலகட்டத்தில் கறுப்புப்பணம் உருவாக வில்லையா?.. அல்லது எல்லாம் வெள்ளையாக வர்த்தகம் நடந்ததா?.. அல்லது வர்த்தகமே நடக்கவில்லையா?... எது உண்மை ?..[ தேசபக்தர்கள் எப்படி பால் போட்டாலும் அடிப்போம்ல. ]

 • hasan - Chennai,இந்தியா

  மீட்டால் செய்துவிடலாம் மீட்டால் கிடைத்துவிடும் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் எல்லா காரியமும் முடிந்து விடுமா? மீட்ட்பது எப்பொது? யார் மீட்பது? ஒவ்வொரு ஆட்சியாளர்களூம் சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டு மறுபடியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்போம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  பொருளாதார துரோகிகளை சுட்டாலும் தவறில்லை. பசி மிக கம்மி பொருளீட்டும் மக்களைக்கூட விடாது சேவை வரி மூலம் ரத்தத்தை உறையவைத்த பாவி. இவர்களை மக்கள் எதிரிலே சுட்டால் கூட தவறில்லை. சத்தீஸ்கர் தீவிரவாதிகள் ஏற்பட இது போல துரோகிகளே காரணம், தேசத்திற்கு எதிரிகள்.

 • kundalakesi - VANCOUVER,கனடா

  ஹையா , அச்சே பாணி ஆநேவாலி ஹை.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  2007 ஆண்டு என்ன ஸ்பெஷல்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  80 லட்சம் கோடி இன்றைய நிலவரப்படி வெளிநாட்டில் பதுக்கல் , ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் கோடி வெளியே பதுக்கப்படுகின்றது???

 • THANGARAJ - CHENNAI,இந்தியா

  நதிகளை இணைக்க உறுதியான திட்டம் தொடங்கினால், இந்திய மக்கள் பணம் தருவார்கள், வெளிநாட்டில் உள்ள பணம் தானாகவே இந்தியாவில் முதலீடாக வரும். நதிகள் இன்னைக்கும் திட்டத்தை தொடங்க நீங்கள் தயாரா?

 • Saravana kumar - Coimbatore,இந்தியா

  இப்படித்தான் சொல்லி வாய்ல வடை சுட்டுட்டு இருக்கீங்க, உருப்படியா ஒரு திட்டம் கூட கொண்டுவரல..

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அது சரி,,,, அதை கொண்டு வரது எப்போது..... எப்படி.... இப்படியே வாயிலேயே வடை சுட்டு கொண்டு இருந்தால்...

 • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

  நதிகளை இணைக்க எதுக்கு பணம்? உங்க அல்லக்கைகளுக்கு கொடுக்கவா? நல்ல நிறுவனங்களை கூப்பிட்டு, நதிகளை இணைக்க சொல்லி, கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களுக்கு வருமான வரியில் சலுகை (ஒரு சில வருடங்களுக்கு) கொடுங்கள்.. நாடு பற்று உள்ள நிறுவனங்கள் நிறைய உள்ளன.. அவர்களை பயன்படுத்துங்கள்.. அவர்கள் நிறைய பணம் எதிர்பார்க்க மாட்டார்கள்

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  அட பாவிகளா.. இந்த கருப்பு பணத்தை கொண்டுவந்து ஒவ்வொர்த்தர் அகௌண்ட்லயும் 15 லட்சம் போடுறேனு சொன்னிங்க அது நடக்கல. அப்போ நதி நீர் இணைப்பும் நடக்காதுனு எவ்ளோ தைரியமா சொல்லுறீங்க பா. மான்கராத்தே போட்டுறதுல பிஜேபி நம்பர் ஒன் கட்சி

 • murugesan - kuwait city,குவைத்

  அட பாவிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லியா நாட்டை சுரண்டி நாசம் பண்ணீட்டிங்களே

 • thiru - Chennai,இந்தியா

  கேட்டு கேட்டு புளிச்சு போன விஷயம் ...

 • S.ANANDARAJ - tirupur, udumalpet,இந்தியா

  எப்ப, அது மீட்டால் இணைத்து விடலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement