Advertisement

ரயில், சாலை, விமான சேவைக்கு 5% வரி: ஜெட்லி

ஜம்மு : ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை க;ட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விலை மற்றும் வரிவிதிப்பு நிர்ணயம் குறித்து விளக்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சேவைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரயில், சாலை மற்றும் விமான சேவைக்கு 5% வரி. சிறிய உணவகங்களுக்க 5% வரி. ஏசி உணவகங்களுக்கு 12 % சேவை வரி. ஏசி அல்லாத உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 18 % வரி.

கேளிக்கை வரி இணைப்பு:ஜிஎஸ்டி.,யின் கீழ் கேளிக்கை வரிகளும் சேவை வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரும்பாலான சேவை வரிகள், முன்பு இருந்த முறையிலேயே தொடரும். ஜிஎஸ்டி.,யின் அடிப்படை அம்சங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து விதமான சேவைகளுக்கும் 5%, 12%, 18%,28% (சொகுசு சேவைகள்) என 4 வகையாக வரி நிர்ணயம் செய்யப்பட்டு, வகைபடுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி.,யின் அடுத்த கூட்டம் ஜூன் 3 ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (14)

 • sundaram - Kuwait,குவைத்

  ரயில் சேவைக்கு வரியை எதுக்கு அஞ்சு சதவீதமாக்குறீங்க. அம்பது சதமாக்கவேண்டியதுதானே. பட்ஜெட் ல சொல்லாம கொல்லைப்புறமா டிக்கட் விலையை மூணு வருசமா ஏத்துங்க. அப்புறம் நாங்க மூணுவருஷமா வரியே விதிக்காம பட்ஜெட் போட்டோம் ன்னு 56 இஞ்ச் விரிச்சு காட்டுங்க. இப்படி மறைமுகமா வரியை ஏத்திக்கிட்டே போயி கிட்டே இருங்க. உங்க டீசல் விலை கொள்கையால் மாநில அரசுகள் பஸ் டிக்கட்டை ஒரு சதவீதம் ஏத்துனாலும் பால் விலையை அஞ்சு ரூபா ஏத்துனாலும் நம்ம இம்சை அரசி தலைமையில ஆர்ப்பாட்டம் பண்ணறதுக்கு ஆள் கூட்டியாந்துடுங்க. சூப்பர் ஜனநாயகம் , இந்த ஜனநாயகத்துக்கு ஓட்டுவாரொட்டியா இந்துத்வா வேற

 • g.s,rajan - chennai ,இந்தியா

  For breathing,natural calls....???. G.s.rajan, Chennai.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  வயதானவர்களுக்கு, நடக்க முடியாதவர்களுக்கு, பேச முடியாதவர்களுக்கு வரி விதித்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும், உங்கள் சம்பளம் மற்றும் பென்சன் தொகையயை ஏற்றுக்கொள்ளலாம், வந்தே மாதரம்

 • MuraliRangachari -

  walk in the road you have to pay some % TAX

 • Indian - Bangalore,இந்தியா

  தற்போது ரயில் சேவை வரி 15 %. அதை 5 % ஆக குறைந்திருப்பது வரவேற்கவேண்டிய விஷயம் தான்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஒட்டகம் மெதுவாக மூக்கை கூடாரத்திற்குள் நுழைத்திருக்கிறது?

 • m.viswanathan - chennai,இந்தியா

  MP , MLA ஆக இருப்பவருக்கு 15 % வரியும் , அமைச்சராக இருந்தால் 25 % வரியும் போடலாமே

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வரிக்குதிரைகள்.மக்கள் உங்களுக்கு வரி வரியாக போட்டு விரட்டியடிக்கும் காலம் வெகுவிரைவில் ..ஏற்கனவே ரெயில்வே தீவட்டி கொள்ளை அடிக்குது..

 • Kailash - Chennai,இந்தியா

  ரொம்ப அநியாயம். வாங்கும் பணத்திற்கு வருமானவரி அதை கட்டி மீதி தொகைக்கு GST. சேவைவரிக்கும் 28 சதம் உயர்த்திருப்பது அநியாயம். முன்பு ப.சி நிதியமைச்சராக இருந்த போது மக்களிடம் பசி இருந்தது. இப்போது ஜெட்லீ நிதிஅமைச்சராக இருக்கும் போது விலைவாசி "ஜெட்" வேகத்தில் இருக்க போகிறது.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  பாவிகளே.பசி.போல.உள்ள.கொள்ளையர்கள்..சொத்தை.அரசுடைமையாக்கினால்.வரியே.போட.தேவை.இல்லை.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  " ஏசி உணவகங்களுக்கு 12 % சேவை வரி. ஏசி அல்லாத உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 18 % வரி."..... என்னடா இது.... ஏசி உணவங்களுக்கு 12 % வரியாம் ஏசி அல்லாத உணவங்களுக்கு 18 % வரியாம்..... என்னடா நடக்குது இங்கே.... ஒரு வேலை ஜெட்லீயும் டாஸ்மாக் வந்து போவாரோ...

 • thiru - Chennai,இந்தியா

  கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - ரெண்டும் தனியார் நிறுவனங்கள் கோடி கோடியா அள்ளுகின்றனர் எனவே வரிவிலக்கு... . ரயில், சாலை மற்றும் விமான சேவைக்கு 5% - விமான சேவை தவிர்த்து ரயில் மற்றும் சாலையில் (இனி நடந்து சென்றாலும் டோல் ) பயணிக்கும் மக்களிடம் 5 % வரி... போட்டு தாக்கு..

 • Kundalakesi - Coimbatore,இந்தியா

  போதும் நீங்க அடுத்த கூட்டம் போட்டு வரிய கூட்டிறாதீங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement