Advertisement

அமெரிக்காவில் அதிகாரிகள் பிடியிலிருந்த இந்தியர் மரணம்

நியூயார்க்: அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் பிடியிலிருந்த இந்தியர் ஒருவர் மரணமடைந்தார்.
இந்தியாவை சேர்ந்த அதுல் குமார் பகுபாய் படேல் என்பவர், கடந்த மே 10ம் தேதி ஈக்வடார் நாட்டிலிருந்து அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தேவையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருந்தது தெரியவந்தை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, நர்ஸ் ஒருவர் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது பகுபாய் படேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது . இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்தார். இதயம் செயலிழப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இவரது இறப்பு குறித்து இந்தியதூதரகம் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Dhanasekaran Balasubramanian - chennai,இந்தியா

    ஆயிரம் சோதனைசெய்த்துதான் விசாவே கொடுக்கிறீங்க அப்புறம் ஆவணம் இல்லையான்னு புடிச்சுவட்சா எப்படி. இதுவே பாகிஸ்தானிலே ஒருத்தன் செத்துப்போயிருந்த இந்நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குடிப்பானுங்கோ எல்லாம்.

  • ranaraja - Kl,மலேஷியா

    Sivakumar onum illa yaru thambi sons,teriyama pesathhe

  • MANIMARAN PERIYASAMY - VAYALAIKEERANUR,இந்தியா

    ஒழுங்கா நம்ம சிவகுமார் அப்பா மாதிரி யோகா பண்ணுங்கடா. ஒரு வியாதியும் வராது.

    • sankar - trichy,இந்தியா

      சிவகுமார் அப்பா உயிரோட இல்லையே அவரை மாதிரி saga சொல்கிறீர்களா

    • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

      அப்பாவின் மகன் மார்க்கத்திற்கு மாறியதாக அங்கு பேச்சு அடிபட்டதே? யோகா ஒரு நிலையில் வைத்திருக்கவில்லையா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement