Advertisement

நிலக்கரி ஊழல் வழக்கில் தண்டனை பெறும் முதல் உயர் அதிகாரி

புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்சி குப்தா குற்றவாளி என தீர்ப்பளித்தது.
மேலும், நிலக்கரித்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமரியா ஆகியோரும் குற்றவாளிகள் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலக்கரி ஊழல் வழக்கில் உயர் அதிகாரி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுவது இது முதல்முறையாகும்.
கடந்த 2008 ல் ஓய்வு பெற்ற குப்தா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிலக்கரி செயலராக பதவி வகித்தார். இவர் சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான குழுவின் தலைவராக இருந்து 40 சுரங்கங்கள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் முறைகேடு நடந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது என சி.பி.ஐ., குற்றம்சாட்டியது.. ஏல நடைமுறையில் வெளிப்படை தன்மைக்கு அனுமதிக்காமல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

 • karunchilai - vallam,இந்தியா

  ஆரம்பம். இது இனி தொடரும்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஐ.ஏ .எஸ் அதிகாரிகளுக்கு சங்கம் உள்ளது. அவர்கள் அவ்வப்போது சந்தித்து பேசுவதும் உண்டு. இவர்கள் உண்மையிலேயே ஊழலுக்கு துணை போகாதவர்களாய் இருந்தால் முறை கேடான அல்லாட்மென்ட் -களுக்கு துணை போகமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்க வேண்டும். ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்தால் ,அடுத்து வருபவரும் கண்டிப்புடன் நடந்து கொண்டால் அரசியல் வாதிகளால் எல்லா அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யமுடியாது. தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் போன்றவர்கள் மட்டுமே என்று ஐ.ஏ.எஸ் தேர்வு என்பதன் மூலம் உள்ளே புகுத்தப் படுகிறார்கள். வரும் வழியே சரியில்லை. அதனால்தான் ஐ.ஏ.எஸ்-கள் இரண்டாம் கட்ட அரசியல்வாதிகள் போல் செயல் படுகிறார்கள். குற்றவாளிகளான அரசியல்வாதிகளை விட அவர்கள் குற்றங்களுக்கு துணைபோகும் அதிகாரிகளே அதிக தண்டனைக்கு உகந்தவர்கள். நீதி மன்றம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  பயனடைந்தது சோனியா. தண்டனை பெற்றது குப்தா.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  குப்தாவும் குரோபாவும் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு அப்படித்தானே?? இதன் பின்புலம் நிலக்கரி மந்திரி, பிரதம மந்திரி, சோனியா எல்லாரும் தான் அதை பார்க்க மாட்டார்களே???அதை பற்றி ஒரு சொல் வெளியே வராதே????இது தான் இந்தியாவின் உள்ள சி.பி.ஐ யின் ஆய்வு முறை. இதுவே அயல்நாடாக இருந்திருந்தால் பிரதமந்திரி பெயர் கூட வந்து தண்டனை கூட கிடைத்திருக்கும். நாம் இதை பார்த்து கொஞ்சம் ஆறுதல் அடையலாம் நீதி நல்ல வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது என்று. நாம் நிஜமான நீதிப்பாதையை அடைய இன்னும் எவ்வ்ளளவு காலம் ஆகுமோ? இறைவா?

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  மலையை கெல்லி எலியை பிடிச்சுட்டாங்க...

 • sundaram - Kuwait,குவைத்

  2008 ல் இவர் ஒய்வு பெற்றுவிட்டார். அப்போ இவர் பதவியில் இருந்த போது இந்த ஊழல் நடந்திருக்கணும். இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது எப்போது? இவருக்கு தண்டனை என்ன?

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  கொள்ளைக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வாரா????

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஊழலெல்லாமில்லை சோனியாவும் மன்மோகன் பசியும் உலகமகா உத்தமர்கள் பாஜக யாரையும் இதுவரை தண்டிக்கவில்லை தேர்தலுக்காக பொய் சொன்னார்கள் என்றெல்லாம் எழுதியவர்கள் எங்கே போனீர்கள்? இன்னொன்று இதே HC குப்தா அப்போது நிலக்கரி மந்திரியாக இருந்த மன்மோகனை மட்டும் ஏன் குற்றவாளியாக சேர்க்கவில்லை எனக் கதறினபோது என்ன செய்தீர்கள்?? இந்த ஊழலை அங்கீகரித்து கையெழுத்துப்போட்ட அடிவருடி மன்மோகன் மீது நடவடிக்கையெடுத்தால் அவரது முதலாளி உலகவங்கி கோபித்துக் கொள்ளுமென்று பாஜக அரசு பயந்தது அசிங்கம் துரோகம்

 • sivakumar - cbe

  should hang them like as china did to control corruption.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஆஹா இந்த கிரிமினலை HC குப்தான்னு போடாம .... குப்தான்னு போட்டு கவுரவப்படுத்திட்டீங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement