Advertisement

ரஜினி அரசியல் குறித்த பேச்சு; தலைவர்களின் நழுவல் விமர்சனம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடம் பேசுகையில்; அரசியல் தொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் போர் வரும் போது பார்த்து கொள்வோம், அது வரை பொறுமை காப்போம். நான் பச்சைத்தமிழன் என்றும் சஸ்பென்ஸ் வைத்து பேச்சை முடித்தார்.
ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ;
ரஜினி என்னை சிறந்த நிர்வாகி என கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி தேர்தலுக்கு வருவதைத்தான் போர் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார். அவரது பாணியில் சொல்வதென்றால் , அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் :
முதல் நாள் பேசும் போது வந்து விடுவார் என்ற தோற்றம் இருந்தது. இன்று ஒரு எதிர்பார்ப்புடன் முடிந்துள்ளது. ஆனால் அவர் , சிஸ்டம், அடிப்படை நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்கிறார். இதனை சரி செய்யும் மோடியை அவர் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ஏன் புகழ்ந்தார் என்பது எனக்கு புரியவில்லை. நேரிடையாக போருக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா;
அவரது போர் என்ற மறைமுக பேச்சு தேர்தலுக்கு தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி துவங்கினாலும், எங்களுடன் இணைந்தாலும் வரவேற்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் ;
அரசியலில் எல்லாம் ஊழல் கலந்து விட்டது. தூய்மைாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவது வரவேற்கத்தக்கது. அரசியல் வருவது குறித்து அவர் வெளிப்படையாக அறிவிப்பாரானால் அதன் பின் எனது கருத்தை சொல்கிறேன்.

காங்., கட்சி தலைவர் திருநாவுக்கரசர்:
ரஜினி ஏறக்குறைய தான் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பின் முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம். ஜனநாயக நாட்டில் கட்சி துவங்க யாருக்கும் உரிமை உள்ளது. ரஜினி மக்கள் செல்வாக்கு பெற்றவர். அவர் மக்களிடம் நம்பிக்கை பெற்றவர். அனைவராலும் மதிக்ககூடியவர். அவர் அரசியலுக்கு வந்தால் எந்த தேசிய கட்சியிலும் சேர மாட்டார் . அவர் தனியாவே கட்சி ஆரம்பிப்பார் .

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., -
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்று கொள்வதும், தீர்ப்பளிப்பதும் மக்கள் தான். அவரது அரசியல் பிரவேசம் காரணமாக அதிமுக என்னும் ஆலமரத்திற்கு பாதிப்பு வராது.

திருமாவளவன் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்:
ரஜினி அரசியலுக்கு வந்தால் திருப்புமுனையாக அமையும். அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முனுசாமி-
ரஜினி அரசியலுக்கு வரட்டும், வந்தால் தான் களத்தில் இருக்கும் பிரச்னைகள் தெரியும்.

ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மா.பாண்டிய ராஜன் -
ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்:
ரஜினி தலைமை ஏற்று சேவை செய்யட்டும். ஆனால் முதல்வராகி, தலைமையேற்று தமிழ்மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் விட்டு விடலாம். அரசியலில் அளப்பரிய தியாகம் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் அவருக்கு சரிப்படாது.

ரசிகர்கள் கருத்து:
ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்கள் நிருபர்களிடம் பேசுகையில்; எங்கள் தலைவர் மக்களுக்கு நல்ல தீர்வு காண்பார். போர் என்று துவக்கியிருக்கிறார். அவர் முதல்வர் ஆகும் வரை போர் நடக்கும் என்றனர்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம். டாக்டர் வேண்டும். சினிமா துறையை சார்ந்தவர்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்தை நாசப்படுத்தியது போதும். நடிகர்கள் மாநிலத்தை 50 ஆண்டுகள் வேறெங்கும் ஆண்டதில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (66)

 • sudharshana - chennai,இந்தியா

  They wont give a of water . They even ban his films ..Here these ppl construct dam on our part of water source.. looks like Tamils are double destilled stupids for them and we will.welcome them.arms to rule us... what do we leave for our descants? Bitterness. Sorrow for ever.?discriminations and depression for ever? We only invite our own ruins .. pl Tamilians i put my palms to gether and request u to pl pl think think before u take any decision on this issue.. Remember it s nothing against Rajini..but to safeguard our Thamizh Thesam.. Our people become idol like worshippers that s the problem. Any way i have blown my horn that s all.

 • sudharshana - chennai,இந்தியா

  Rajini is not welcome to b The CM OF T.N He acts. Better stop with his business Ruling is not his cup of tea but his wife and daughters ll rule in his name.. Do we need that?

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் கட்சில இடம் கிடையாது என்று ரஜினி சொல்லிவிட்டார். பெரிய மீசை, கலர் கலர் துண்டு, அண்ணனுக்கு பணம் ரஜினி சொன்ன மாதிரி எல்லாரும் பிள்ளைகளை நல்ல படிக்க வையுங்க இப்போவே மாற்று தொழில் மாற்று வேலைக்கு தயாராயிடுங்க இருக்கற பணத்தை விட்றாதீங்க

 • SaiBaba - Chennai,இந்தியா

  ரஜினி தமிழனில்லை என்றால் இன்று ஒட்டு மொத்த தமிழகமும் ஏன் அவர் பேசும் ஒவ்வொரு வரியையும் உற்று நோக்குகிறது? ஒவ்வொரு வரியையும் ஏன் விமர்சிக்கிறார்கள்? அவருடைய ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஏன் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் பணம் பண்ணுகின்றன. பத்தோடு பதினொன்று என்று உதறித்தள்ளி விட்டுப்போக வேண்டியது தானே? மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று பொய் சொல்லி 305 சொத்துக்கள் வாங்கிய ஜெயலலிதாவை நம்பிய தமிழக மக்கள், சசிகலாவால் நான், சசிகலாவுக்காகவே நான் என்று அவர் வாழ்ந்ததையும் ஏற்றுக்கொள்ளும் தமிழக மக்கள், ஒருமனிதன் மக்களையே தெய்வங்கள் என்று குறிப்பிடுகிறான் என்றால் அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள் இல்லை. ஆனால் இந்த தனுஷ், ஐஸ்வர்யா, லதா, சௌந்தர்யா, ஒய் ஜி போன்ற காசுக்காக மாரடிக்கிற கூட்டம் தொலைக்காட்சியில் தோன்றி போலியாக உதட்டை சுழித்து ரஜினிக்காக பேசுவார்கள் என்றால் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. ரஜினியை மட்டும் தான் தமிழக மக்களுக்கு பிடிக்கும். அதை ரஜினி உணர வேண்டும். திரு. சகாயம் அவர்களை கூட வைத்துக்கொண்டால் தமிழகம் அடுத்த இருபது ஆண்டுகள் நிம்மதியாக இருக்கும்.

 • ஷாஜஹான் முஹமது - Jeddah,சவுதி அரேபியா

  ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை 'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீர்க்கிறீங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார் மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2)சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு 3)அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு 4)படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு 5)பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு 6)லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குறீங்க...? தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா? இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா? அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா? போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பைக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிர்றோம் ,அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அது சரி, இந்தாளு அப்படி கட்சி ஆரம்பிச்சா கட்சிக்கு என்ன பெயர் வைப்பாரு? கட்சி சின்னம் "பீடி" அல்லது "சிகரெட்" வைக்கலாம்.. பிஞ்ச டயலாக் பேசியே கட்சியை ஓட்டுறது குஷ்டம் ஆச்சே.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அது சரி கோடீஸ்வர ஆன்மீகவாதிக்கும் கோடீஸ்வர அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்.. ஒண்ணுமில்லை. ரெண்டு கொள்ளைக்காரங்களுமே மக்களை ஏமாத்தி சம்பாரிச்ச கூட்டம். இப்போ இவரு கோடீஸ்வர ஆன்மீக அரசியல்வாதியாக வாராருன்னா, இந்தாளுக்கு பணத்தாசை இன்னும் போகல்லைன்னு தான் தெரியுது.. போலி ஆன்மீக பணப்பேய்...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  //ரஜினி அரசியல் குறித்த பேச்சு// ஓட்டு போடும் மக்கள் சொல்றாங்க "பேச்சு படு போர்"..

 • Kongu maakkan - Tuticorin,இந்தியா

  நானும் பச்சை தமிழன்தான்.. சும்மா மொழி மத இன உணர்வுகளை தாண்டி சிந்திக்க பழகுங்கள்... கருத்து சொல்றவங்கள சொன்னேன்..

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  வயதான காலத்தில் எதற்கு இந்த விபரீத விளையாட்டு ? 1976 களில் நாங்கள் பார்க்காத மனநல விளையாட்டா? இது ஒரு தனி குடும்பம், கோபாலபுரம் போல் இதுவும் ஒரு குடும்பம், கடிக்குதே குடையுதே என்று பின்னால் அழுது ஒரு பயனும் இல்லை, வந்தே மாதரம்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அக்னி வெயிலின் தாக்கம் அதிகமோ.

 • Senthil Kumar Kandasamy - Salem,இந்தியா

  திரு. ரஜினி அவர்கள் பேசிய பேச்சினை கவனித்தால், அவர் அரசியலுக்கு வருவதை போல் தெரியவில்லை. சரியான தலைவர் என்றால், எதிர்காலத்தில் நடக்கப்போவதற்கு இப்பொழுதே ரெடியாக இருப்பர். நமது கலைஞரை போல. ( நான் தி.மு.க. அல்ல ). ரஜினியின் பாஷையில் சொன்னால் போர் / தேர்தல் அடுத்தது கண்டீப்பாக வரப்போகிறது. இப்பொழுது இருந்தே தேர்தலுக்கு ரெடி ஆனாலே, தேர்தலை எதிர் கொள்வது கடினம். போர் வரும்போது பார்க்கலாம் என்றால், போர் வரும்போது வேடிக்கை பார்க்க வேண்டியது தான். போரில் கலந்து கொள்ள முடியாது. எனவே ரஜினி சொல்வதை வைத்து பார்த்தால், அவர் அரசியலுக்கு வர மாட்டார். இந்த விஷயத்தில் விஜய காந்த் எவ்வளவோ பரவாயில்லை. ரஜினி மீண்டும் அவர் ரசிகர்களை ஏமாற்று கிறார். இதற்க்கே தெளிவான முடிவு எடுக்காதவர், நிர்வாக விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பார்???. மீண்டும் மீண்டும், தன் ரசிகர்களை ஏன் இப்படி ஏமாற்றுகிறார் ?? நான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்றாவது சொல்லவேண்டும். இப்படி ரசிகர்களை ஒரு விதமான அரசியல் கனவு போதையிலேயே வைத்து இருப்பது அவருடைய மரியாதையை கெடுக்கவே செய்யும். நம் தமிழ் மக்கள் அவர் எண்ணத்தை புரிந்து கொள்வார்களா???

 • sankar - trichy,இந்தியா

  தமிழகத்துக்கு நல்லவன்தான் வேணும் அவன் நடிகரா டாக்டரா விவசாயியா என்பது பிரச்சனை இல்லை . அப்படி பார்த்தால் இது வரை யார் காசையும் எடுக்காதே ரஜினிதான் சாய்ஸ்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சுமார் 1996 ஆம் வருட வாக்கில், இவரை நோக்கி ஒரு எதிர்பார்ப்பான அரசியல் அலை உருவானது என்னமோ உண்மைதான். ஆனால் இன்றைக்கு ஆதிமுக இரண்டாக பிரிந்துள்ளதால், ஒரு 35% ஓட்டு வாங்கினால் முதலமைச்சராகி விடலாம் என்று அரசியலுக்கு , திரு. ரஜினி வருவதாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் பிற கட்சிகளில் உள்ள அவரின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்தாலும் அவர் வாக்கு வங்கி ஒரு 15% வருமா?. என்னா ஒரு விசயம் என்றால் , இனி அவரை வைத்து இன்டர்நெட்டில் மீம்ஸ் போடும் நெட்டிசன்கள் அதிகமாவார்கள். இன்டர்நெட் உலகம் மிக சுறுசுறுப்பாக இருக்கும் மீம்ஸ் உற்பத்தியில். சரியா வாசகரே?.

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  அப்படி ஏதாவது கருத்து கூறினால் அவர்களுக்கு எதிராக ரசிகர்கள் என்ற பெயரில் RSS கழிசடைடை கூட்டத்தை சேர்ந்தவர்களை ரோட்டில் இறக்கி கலாட்டா செய்ய விடுவார்கள் காபந்து அரசு போல் செயல்படும் அதிமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கும்

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  ரஜனி ஊழல் செய்யாதவரா .அவரின் வீட்டை ஏன் பிஜேபி ரெய்டு செய்யவில்லை

 • Prem Kumar - Bangalore,இந்தியா

  வழக்கம்போல் திரு ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி சுற்றி வளைத்து பிரசங்கம் செய்திருக்கிறார். இதற்கு பலவகையிலும் வெவ்வேறு விதமாக கோணங்களில் நமது அரசியல் பிரமுகர்களும் அலசி, தங்களது கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். ஒன்றில் மட்டும் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை தமிழக தலைவர்கள் மறந்துவிட கூடாது. மற்றொரு எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ தமிழ்நாட்டில் உருவாக முடியாது. உருவாவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களது இடத்தை வேறு யாருக்கும் தர மாட்டார்கள். திரு எஸ்.எஸ்.ராஜேந்திரனும், திரு சிவாஜி கணேசனும் இரு முக்கிய உதாரணங்கள். .ஆந்திரத்தில் என்.டி.ராமராவிற்கு பிறகு கட்சியை துவக்கிய அல்லது பிற கட்சியில் சேர்ந்த எந்த நடிகரும் அரசியலில் பிரகாசிக்கவில்லை. வடநாட்டிலும் அமிதாப்பச்சன் உள்பட சில நடிகர்-நடிகைகள் அரசியல் கட்சியில் சேர்ந்ததையும் அதனால் அந்த கட்சிகளுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிட கூடாது. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் தங்களது துறையை விட்டு வேறொரு துறையான அரசியலுக்கு வந்தால் மக்கள் அதை முழு மனதோடு வரவேற்பார்கள் என சொல்ல முடியாது. ஏனெனில், ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து இவர்கள் இருவரும் பேசினால் அவர்களது பேச்சை ரசிப்பதும் புரிந்து கொள்வதும் சற்று கடினமே. எனவே, மக்களிடம் உள்ள செல்வாக்கை காப்பாற்றி கொள்ள திரு ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமலே, சமூக தொண்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களிடம் நெருங்கி வர முயற்சிக்கலாம்.

 • ESSEN - VA,யூ.எஸ்.ஏ

  ஏதோ ஒரு விழாவுக்கு அலங்காரமாக புறப்படுவது போல இருக்கு. இவர் மாட்டுக்கும் சிகரெட்டை தூக்கி வாயிலே போட்டோமா என்று இருந்தால் தேவலை. தலை விரித்து ஆடும் லஞ்சத்தை நிறுத்த உருப்படியான யோஜனை ஒன்று சொல்லட்டும் பார்க்கலாம். எந்த சினிமாக்காரங்களாவது முழு வருமான கணக்கை காண்பித்த காலம் உண்டா ?

 • v rajagopal - Chennai,இந்தியா

  Let him come or don't. Ultimately people would decide. At least let him don't praise corrupt leaders the one who had been making TN miserable till 2011

 • jagadeesan - Hosur,இந்தியா

  ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசியல் ஒரு சாக்கடை போன்றது அதில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் அப்படி இருக்கும் பொது கடந்த 20 வருடங்களாக ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் இருப்பது யாருக்கும் நல்லது இல்லை. அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமல் இவவ்ளவு காலம் இருந்துவிட்டு இப்புழுது நான் அரசிலுக்கு வருகிறேன் என்றால் கண் இருக்கும் பொது உலகத்தை பார்க்காமல் கண் பார்வை இழந்தபின் நான் உலகத்தை நன்கு பார்ப்பேன் என்றால் உங்களுக்கே இது வேடிக்கையாக இல்லை.உங்கள் பேச்சி படி தனி கட்சி தொடங்குவேன் என்று சொல்லும் நீங்கள் உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பம் கட்சியே நடத்துவார்களா என்பதை தெளியுவ் படுத்தேத்தி விடு கட்சியே ஆரம்பித்தால் நல்லது. நீங்கள் ஊழலுக்கு எதிரானவர் அப்படி இருக்கும் பொது ஊழலுக்கு ஆளானவர்களை பாராட்டுவது ,அவர்களை விமர்சனம் செய்யாமல் இருப்பது உங்களை அறியாமல் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். அன்று mgr அவர்களை திமுக கட்சி தலைவர் மலையாளி என்று சொல்லி மலையாளி நம்மை ஆட்சி சேவைக்கலாமா என்ற கேள்விகளை கேட்டவர் இந்த கருணாநிதி.இன்று சாடலின் உங்களை கண்டிப்பாக கன்னடியன் நம்மை அழுவதை இன்று கேட்பார் .அரசியல் பொருளாதாரம் செய்ந்தால் நல்லது. இது சினிமா இல்லை டுப்பு போடு படம் எடுக்க. எல்லாம் ஆளுமை திறன் இருக்கவேண்டும் அது உங்களுக்கு இருக்க என்பதை சொல்லுங்கள்.

 • jysen - Madurai,இந்தியா

  1967 தேர்தலில் ஒட்டு போட்டவர்களை பற்றி என்னும் போது நான் ஒரு தமிழன் என்று சொல்வதற்கு உண்மையான தமிழனாக எனக்கு அருவருப்பாக உள்ளது.நீ என்னய்யா பட்சைதமிழன்?

 • aravind - chennai,இந்தியா

  சாதியை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் & அன்புமணி,,,, மொழியை வைத்து அரசியல் செய்யும் சீமான், ஸ்டாலின், வைகோ,,,மதத்தை வைத்து அரசியல் மனிதர்கள், சில முஸ்லீம் கட்சிகள்,,, ஊர்களை வைத்து கொங்கு இயக்கம், கொங்கு கட்சி என்று சிலகட்சிகள், & சில மனிதர்கள், இப்படி இவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம், அப்படி செய்தால் தவறு இல்லை என்று சொல்ல்கிறார்கள், நல்லது செய்யணும் நினைக்கும் ஒரு நடிகனான ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாள் அதை எதிர்த்து குறை சொல்கிறார்கள்… ரஜினிகாந்த் தமிழன் இல்லை என்றும் சொல்கிறார்கள் , உண்மையான தமிழன் யார் என்றால் சைவ கொள்கையுடன் வாழ்பவர்கள்தான், முருகன் & சிவனை மட்டும் கும்பிடும் மனிதர்கள் தான் தமிழன், வேறு யாரும் உண்மை தமிழன் இல்லை…. வேறு மத்திலிருந்து மாறினால் அவர்கள் அந்த மதம் சார்ந்தவர்கள் ஆகிறார்கள், அதை ஏற்றுக்கொல்லும் மனிதர்கள், ஏன் வேறுமொழியில் இருந்து தமிழனாக மாறினால் குறை சொல்கிறீர்கள்.... உண்மையில் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பயம், விரைவில் இவர் தனி கட்சியோ அல்லது பாஜகவில் சேருவார்,,,, இந்த கட்சிதான் வரும் தேர்தலில் ஆட்சி அமைக்கும் இதுதான் உண்மை, யார் எப்படி கத்தினாலும் வயறு எரிந்தாலும் இதுதான் நடக்கும், அதை எவனாலும் தடுக்க இயலாது...

 • jysen - Madurai,இந்தியா

  கன்னி பொண்ணு மீனா கல்லூரிக்கு போனதுநால் கர்ப்பம் ஆனாள் என்று படிப்பையும் தமிழ் பெண்களையும் மிகவும் மட்டமாக கேலி செய்து வேலைக்காரன் படத்தில் பாடிய இவன் பச்சை தமிழனா.இவனுடைய மகள்கள் கல்லூரிக்கு போய்த்தான் கர்ப்பம் ஆனார்களா.இவன் நமக்கு தேவையா?

 • Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா

  இந்த தமிழ் நாட்டு வெட்டிகள் எப்போதுமே இப்படி தான். இவனுங்க பிரச்சனையை தீர்க்க வழிஇல்லையாம். போய்ட்டானுங்க இலங்கை பிரச்சனைக்கு. இது பத்தாதுன்னு இங்க கருத்து எழுதறேன் பேர்வழின்னு இந வெறியை காட்டுகிறார்கள் தமிழன்னு சொல்ற முட்டாளுங்க. தமிழ்நாட்டுல எப்போதுமே அடுத்தவன் சொத்தை அபகரிக்கிற கூட்டம் தான் உண்டு. நடாயா இது. மக்களாய்யா இவனுங்க? ஊரே திருட்டு பயலுங்க வாழற இடம்.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ரொம்ப நாளுக்கு அப்புறம் மலர் சீமானிடமும் கருத்து கேட்டுள்ளது? நாளைய சமூக மாற்றம் ஏற்படுத்த ஒரு ஆளாக அன்புமணி,சீமானை நான் பார்க்கிறேன்.ஆனால் ரெண்டு பெரும் வெவ்வேறு துருவங்களில் பயணித்தாலும் இனம் சார்ந்த விஷயங்களில் ஒத்து போகிறது நல்லது.ரஜினி செல்லா காசாக ஆக போவது உறுதி.ஒரு மேடையை ஒழுங்கா சந்திக்க கூட முடியாது விசயகாந்து யை விட மோசமாக காட்ச்சிகள் அரங்கேறும்.

 • tamilselvan - chennai,இந்தியா

  நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடம் பேசுகையில் போர் வரும் போது பார்த்து கொள்வோம் எந்த நாடு போர் வரபோது ரஜினிகாந்த் அவர்கள் சொல்கள் அவர் பாடம் வரபோது முன் ஏறபாடு இது சினிமா ஸ்டான்

 • CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்

  காமராஜர் பக்தவத்சலம் பன்னீர் எடப்பாடி இவர்கள் எல்லாம் பச்சை தமிழர்கள் தான் ஆண்டார்கள் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்..... நமக்கு மிகப்பெரிய தமிழின துரோகம் செய்யவில்லையா? சசிகலா தினகரன் திவாகரன் நடராஜன் திருமா ராமதாஸ் அன்புமணி சீமான் இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான் நம் தமிழ் மண்ணை ஆள துடிக்கிறார்கள்.... இவர்களும் இதுவரை எவ்வளவோ தமிழின துரோகம் செய்து இருக்கிறார்கள் முல்லை பெரியார் அணை தேவிகுளம் பீர்மேடு போன்ற நம் தமிழ் நிலங்கள் மலையாளிகளுக்கு கொடுத்தது சீமை கருவேல மரங்கள் நம் தமிழ் மண்ணில் விதைத்தது சென்னை திருத்தணி ஆந்திராவுடம் சேர்க்க சம்மதம் தெரிவித்தது இவை எல்லாம் தமிழ்நாட்டுக்கு காமராசர் செய்த பச்சை துரோகங்கள் ஹிந்தி திணிப்பை செய்து தமிழ் மொழியை அழிக்க நினைத்தது அதை எதிர்த்து போராடிய தமிழ் மாணவர்களை ராணுவம் அழைத்து கொன்று குவித்தது இவை எல்லாம் தமிழ்நாட்டுக்கு பக்தவத்சலம் செய்த பச்சை துரோகங்கள் பன்னீர் எடப்பாடி சொல்லவே தேவையில்லை தற்போது நடப்பது எல்லாருக்கும் தெரியும் அதே போல சசிகலா தினகரன் திவாகரன் நடராஜன் திருமா ராமதாஸ் அன்புமணி சீமான் இவர்கள் அடிக்கிற கூத்தும் இந்த தமிழ்நாட்டுக்கு தெரியும் பண பலம் அதிகாரம் சாதி மொழி இன உணர்வு இவைகளை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறவர்கள், தமிழர்கள் என்றுமே இவர்களை ஏற்கவே மாட்டார்கள் இன்னும் சொல்லப்போனால் சட்டை செய்வதே இல்லை அதுக்காக நான் திரு ரஜினிகாந்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அவருக்கு என்றுமே தமிழ் உணர்வு இருந்தது இல்லை ஆனால் அவர் நல்லவர் தமிழர்கள் என்று சொல்லப்படும் காமராசர் பக்தவத்சலம் அப்துல்கலாம் போல இன உணர்வு இல்லாமல் நல்லவரா இருப்பதால் எந்த உபயோகமும் அந்த இனமக்களுக்கு நன்மை செய்துவிடமுடியாது உதாரணத்துக்கு காமராசர் பக்தவத்சலம் அப்துல்கலாம் போன்றவர்களால் இந்திய திருநாட்டுக்கு மிகுந்த நன்மை ஏற்பட்டது ஆனால் தமிழ்நாட்டுக்கு? ரஜினி ஒரு வேளை முதல்வரா வந்தால் காவேரி முல்லைப்பெரியாறு அணை ஈழத்தமிழர் ஹிந்தி சம்ஸ்கிருத திணிப்பு என்று தமிழ்நாட்டுக்கு ஆதரவா இல்லாமல் மத்திய அரசுக்கு ஆதரவா செயல்படுவார் முதலில் அவரை தமிழ் மக்கள் முதல்வரா ஏற்க மாட்டார்கள். காரணம் அவர் சூப்பர் ஸ்டார் மக்கள் திலகம் இல்லை. ரசிகர்கள் விரும்பலாம் அது இயல்பு ஆனால் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.

 • CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்

  //// மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி.////// நடிகன்டா ..... சிவாஜி கமல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விட்ட்டார்யா இவர், எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் நடிச்ச ஷங்கர் படம் ராஜபக்ஷே பினாமி படம் ரிலீஸ் ஆகணும்.... புரியுது சிவாஜி ராவ் அவர்களே ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் பாபா ஆசி இருந்தாலும் நீங்க வெறும் சூப்பர் ஸ்டார் தான் என்றுமே இன்னொரு மக்கள் திலகம் ஆக மாட்டீங்க ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு எம்.ஜி.ஆர். இது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அதை வெளிப்படையா உங்க ரசிகர்கள் மத்தியில் சொல்லிட்டு போங்களேன் ரஜினி சார் ஏன் இந்த நடிப்பு?

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அமித் ஷா Nov 8 க்கு முன்னால் எதற்கு இவரை பார்க்க வந்தார் என்ற உண்மையை மக்களுக்கு சொல்வாரா இவர்???

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  மிஸ்டர். கட்ஜு மிக நல்ல மனிதர், உணமையான, நேர்மையானவர் தான். ஆனால் எல்லா நேர்மையானவர்களும், எல்லா நேரங்களிலும் நல்ல சிந்தனையோடு கருத்து கூறுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. ரஜினி ஒரு நேர்மையான குணமும், சிந்தனையும் உடையவர் என்று அவருக்கு எதிர் கருத்து கூறுபவர்களும் ஒப்புக் கொள்வார்கள். தமிழ் நாட்டு அரசியலுக்கு அவர் வந்தால் அது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புரையோடிவிட்ட TN அரசியலும், நிர்வாகமும் அவர் வந்ததால் நிமிர்த்தப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். நிர்வாகத்தை பொறுத்தவரை அவருடைய தாரக மந்திரம் minimum interference maximum governance , சரியான நபர் சரியான இடத்தில் என்பதே.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  one could do.. but would not do..one would do.. but could not do... this is the saying

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  குடும்பத்தை கவனிக்காமல் ரஜினி படத்திற்கு பாலபிஷேகம் செய்யும் கும்பல்தானே, விளங்கிடும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ///போர் என்று துவக்கியிருக்கிறார். அவர் முதல்வர் ஆகும் வரை போர் நடக்கும் என்றனர்/// சினிமாவில் வரும் போரைத்தானே சொல்கிறீர்கள் , அதில் பறந்து பறந்து அடித்து முதல்வர் என்ன பிரதமர்கூட ஆகலாம்.

 • Kalyani S - Ranipet,இந்தியா

  "சிஸ்டம், அடிப்படை நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்கிறார். இதனை சரி செய்யும் மோடியை அவர் எடுத்துரைத்திருக்க வேண்டும்". ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ஏன் புகழ்ந்தார் என்பது எனக்கு புரியவில்லை. ஸ்டாலினை மட்டுமா புகழ்ந்தார் இன்னு சிலரையும் தான் புகழ்ந்தார் நீங்கள் ஸ்டாலினை மட்டும் குறை கூறுவதை பார்த்தால் அவர் மற்றவர்களை பற்றி சொன்னது சரிதான் என்று ஒத்துக்கொள்வது போல் உள்ளது. எப்படி இருந்தாலும் வீட்டிலேயே வந்து குசலம் விசாரித்த மோடியை எப்படி மறந்தார் என்பது புரியவில்லை. பரவாயில்லை இருக்கவே இருக்கிறது வருமான வரித்துறை அனுப்புங்கள் அவர் வீட்டிற்கு அப்போது புரிந்து கொள்வார் மோடி எவ்வளவு திறமையானவர் என்று.

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  காமராஜருக்கு பிறகு தமிழ் நாடு ஒரு சீர் கெட்ட மாநிலமாக மாறி விட்டது. நாட்டு நிர்வாகம் பற்றிய அக்கறையில்லாத இலவசத்துக்கு ஏங்குகிற, உழைக்க விரும்பாத, மனம்போல் வாழ விரும்பும் பெரும்பாண்மையான வெட்டி கூட்டத்திடம் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்த கூட்டம் தான் திருடர்களை முதல்வர் பதவிகளில் அமரவைக்கிறது. படித்தவர்கள் அரசு பணிகளில் உள்ளவர்கள் திருட்டு அரசியல் வாதிகள் கொடுக்கும் சம்பள உயர்வு, சலுகைகளில் கண்ணை மூடிக்கொண்டு திருடர்களை குடும்ப சமேதமாக ஆதரிக்கிறார்கள். கேட்டால் அந்த குறிப்பிட்ட அரசியல் தலைவரால் தான் இந்த வசதியை அனுபவிப்பதாக கூறுகிறார்கள். தற்போது சிஸ்டம் கெட்டு போயிருப்பதாக ரஜனி சொல்கிறார்? சரி இந்த புரையோடிப்போன சிஸ்டத்தை இந்த கூத்தாடியால் சரி பண்ண முடியுமா? என்னுடைய கேள்வி மனக்கஷ்டத்தை கொடுக்கலாம், கோபப்படாமல் சிந்தித்தார் எனில். இவர் இதுவரை வருமான வரியை மறைக்காமல் முறையாக செலுத்தியிருக்கிறாரா? ஏனெனில் சிஸ்டத்தை சரி செய்பவர் தூய்மையானவராக இருக்க வேண்டுமல்லவா? சரி நீங்கள் நல்லவர், நீங்கள் ஒருவேளை முதல்வரானால் உங்கள் மருமகன் சம்பந்தி இவர்கள் ஆட்சியில் தலையிடமாட்டார்களா? ஏற்கனவே உங்கள் சம்பந்தி பைனான்சியரிடம் உங்களை வைத்து பண பைசல் செய்ய பார்த்ததாக செய்தியை படித்தேன். ஆண்டவன் ரஜினிக்கு நல்ல வழியை காண்பிக்க இறைவனிடம் வேண்டுகிறேன், எப்படியாவது தமிழர்களுக்கு காமராஜரை போன்ற ஒரு தமிழர் தலைவர் கிடைக்கவேண்டும் என்பது என்ஆவல்?

 • Jhansi Jasan - chennai,இந்தியா

  பட ரிலீச்க்கு எல்லா கட்சியையும் மறைமுகமா கூப்பிட்ரான்யா அததான் போர்னு சொல்ரா மறக்காம போய் அந்த மொக்க படத்த பாத்துட்டு வந்துடுங்க...இதுக்கு இந்த அலப்பரை..பா இந்த சினிமாகாரனுங்க தொல்ல தாங்க முடில

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  இந்த நடிகர் தன் வயிற்று பிழைப்புக்காக அவ்வப்போது எதோ சொல்லுகிறார் என்று நினைத்தாலும் துரதிர்ஷ்ட வசமாக இவர் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன், விஜயகாந்தைவிட தோல்வியை அடைந்து கேலிக்கு ஆளாவார் என்றே தோன்றுகிறது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  சுடலை சிறந்த நிர்வாகியாம்.....பார்றா....சுடலையே விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாரு...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தலீவரோட அடுத்த படத்தைத் தவறாமல் பாருங்க நாட்டில் சுபிட்சம் வரும் வறட்சி பஞ்சம் காணாமப்போயிடும்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம்..ரஜினியின் வசனம் இந்த நேரத்தில் நினைவில் வந்து தொலைக்குது....

 • Pandiyan - Chennai,இந்தியா

  ரஜினியும் அரசியல் வரட்டும்.. முதல்வர் ஆவது அல்லது ஆகாமல் இருப்பது மக்கள் முடிவுசெய்வார் அவர் பேசுவதை பார்த்தாவது இந்த திருட்டு கும்பல் ஒதுக்குதா பார்ப்போம்

 • velayutham - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ரஜினி சார் . ஒரேயொரு வாய்ஸ் கொடுங்கள். கர்நாடக அரசே சுப்ரீம்கோட் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடு. இதை மட்டும் சொல்லிவிட்டால் அவரை தமிழராக அல்ல ஒரு தமிழ் மக்களின் உண்மையான நேசன் ஆக உணர்கிறோம். இல்லை என்றால் மக்கள் ஆதரவுக்காக வெத்து பேச்சுதான் .

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  During his statement he has mentioned some political leaders names in that only those leaders given their comments good in order to please him.Totaly no one like his political entry in Tamil nadu.His Visil Aduchann kunjugal foolishly given their opinion as"CM Aagumvarai pore Thodarum "it's not any meaning at all.

 • rrk - srirangam,இந்தியா

  ...one can immense service to humanity,VIP....(velai Ella pattathari..) ..by ing many factories, etc in Tamil Nadu.... without entering politics...How about our wealthiest star???

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இவர் ஒரு வட நாட்டுக்காரன் ஏஜென்ட் . தமிழரகளை முட்டாளாக நினைப்பவர்கள் இப்போது ரஜினியை இறக்கினால் முட்டாள் தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தில் உள்ளார்கள் . ஊழல் மு கவிடம் கூடி குழைந்தவர் தான் இப்போது ஊழலை எதிர்கிறாராம் .தமிழனை இனி ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கட்சி தலைவர்களுக்கு பல நிர்பந்தங்கள்..அதனால் அவர்கள் சொல்லுவதை அப்படியே 100 % உண்மை என எடுத்துக்கொள்ள முடியாது..மக்கள் தான் உண்மையான எஜமானர்கள்..அவர்கள் போர் வரும்போது சரியான நிலைப்பாட்டை எடுத்து,பொருந்தாதவர்களை குப்பை தொட்டியில் எறிவார்கள்,டிபாசிட் கூட திரும்ப பெறமுடியாத அளவு அடி கொடுத்து..பலருக்கு இது நடந்துள்ளது..பார்த்து இருக்கிறோம்.அருகதையற்றவர்கள் ஆட்டம் போட முடியாது. கூச்சல் போடுவதோடு முடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

 • H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா

  இந்த ... அரசியலுக்கு வந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஏன் நமது மக்களின் அறிவு இப்படி மழுங்கிவிட்டது இனியாவது ஒரு தமிழனை முதல்வராக்குவோம் வேறு நாட்டை சேர்ந்தவரையோ வேறு மாநிலத்தை சேர்ந்தவரையோ நிராகரிப்போம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அவர் சொன்னது போரா இல்லை Bore ஆ?

 • Venkii - Chennai,இந்தியா

  போயும் போயும் ஸ்டாலினை சிறந்த நிர்வாகின்னு சொல்லுது கன்னடத்து தாடி. ரெண்டு பெரும் கர்நாடகால சொத்து வச்சிருக்காங்கள அதான்.

 • krishna - cbe,இந்தியா

  மீடியாவுக்கு தீனி அவ்வளவே.நமத்து போன பட்டாசு வெடிக்குமா?

 • Venkii - Chennai,இந்தியா

  23 ஆம் புலிகேசி போருக்கு போன மாதிரியே இருக்குல்ல. இப்படி காய் நடுங்குனா கத்தி கீழ விழுந்துடும் தாத்தாஆஆ

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி ,,,,,,, எதோ நடித்தோமா ,,??? காசு பார்த்தோமா ,,??? நடிகன் என்ற பெயரில் பல சலுகை அனுபதித்தோமா ,,????? என இருக்கும் நபரை அரசியலுக்கு வரவில்லையா ,,???? மீடியாக்கள் ஆடும் ஆட்டம் ,,,,, ஐயோ ஐயோ ,,,,மறைந்த சோ முன்பே சொல்லிவிட்டார் அரசியலுக்கு வந்தால் ரஜினி காணாமல் போவார் ,,,நடிப்பதோடு இருக்கட்டும் ,,,,மீடியாக்கள் நடிப்பதை நிறுத்துங்கள் ,,,

 • sankar - Nellai,இந்தியா

  "ஸ்டாலின் சிறந்த நிர்வாகி" - செம காமெடி- ரஜினியின் நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறோம்

 • moorthy moorthy - chennai,இந்தியா

  Now Tamil political field heating by Rajini ,every where talk about Rajini politics.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement