Advertisement

ஆம்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்; வன்முறை

ஆம்பூர் ; வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சமீப காலமாக டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்யக்கூடாது என சமீபத்தில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அழிஞ்சிக்குப்பத்தில்மது கடையை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது. அதிகாரிகள் பேச்சு நடத்தியும் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து , போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிகாரிகளை ஓட ஓட விரட்டினர். 2 லட்சம் மதிப்புள் மது பாட்டீல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீ வைப்பு சம்பவமும் நடந்தது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

  • பிரபு -

    "குடி"மக்களின் நலன்காக்க "குடி காவல் துறை" என்ற சிறப்பு அமைப்பை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    மாற்றம் தேவையே.

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

    பயந்து போயி கூரைக்கு மேல நிக்கிறான் பாரு.......இதுக்கு தான் சாராயம் விக்கிற கவருமெண்டுல வேலை பார்க்க கூடாது ன்னு சொல்லுறது...

  • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

    தமிழக அரசே, மக்களுக்கு பிடிக்காத செயல்களை ஏன் செய்கிறாய்??? மரியாதையாக பதவி விலகு. மானத்தை வாங்குகிறாய்.

  • Venkii - Chennai,இந்தியா

    மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை பெருமையாக பேசுவது தவறு. இன்று டாஸ்மாக். நாளை வேறு எதுவாகவும் இருந்தால்

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      முட்டாள்தனமாக உளற வேண்டாம். மக்கள் வேண்டாம் எனும்போது மதுவை திணிப்பது தவறு. அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ஒழிப்பதற்கு ஒரே வழி .

    • Naduvar - Toronto,கனடா

      ஒழிப்பதற்கு ஒரேவழி மது தயாரிக்கும் ஆலையை முற்றுகை இடுவது

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      நடத்துவது திமுக அதிமுக கார்கள் தான் , இவர்களை ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும் இருவரும் கூட்டு கள்ளர்கள்

  • Jothi - Thiruvananthapuram,இஸ்ல் ஆப் மேன்

    ஒரு காலத்தில் பக்கத்துக்கு ஊரான வாலாஜாபாத் இருந்து இரண்டு போலீஸ்காரர்கள் வந்து எங்க கிராமத்தில் குடித்து விட்டு கலாட்டா செய்த ஒரு நபரை இழுத்து போவார்கள். ஆனால் காலம் செய்த கோலம் இப்போ இவர்கள் சாராய கடைகளுக்கு காவல் இருக்க வேண்டியதை இருக்கிறது. காவல் துறை எவ்வளவு கண்ணியம் மிக்க துறை. அதன் உபயோகத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகள் உருப்பட போவதில்லை. தமிழக காவல் துறை இழந்த புகழை கண்டிப்பாக மீட்டு எடுக்கும் ஓர்நாள். அந்த நாள் தமிழகத்தின் பொன்னால். தமிழக காவல் துறைக்கு உண்டான மதிப்பையும் அதிகாரத்தையும் கொடுத்தால் தமிழகத்தை குற்றமற்ற மாநிலமாக அமைதி பூங்காவாக கொண்டு வருவார்கள்.

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      நல்லவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தான் இது சாத்தியம் திமுக , அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை அதட்கு வாய்ப்பு இல்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement