Advertisement

அதிமுகவை மீட்போம்: டில்லியில் ஓ.பி.எஸ்., பேட்டி

புதுடில்லி: தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். இதற்காக பாடுபட்டு வருகிறோம் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., கூறியதாவது: இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம். ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்தும், அங்கு கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் விசாரணை துரிதபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன், சுகேஷ் மீதான விசாரணையை துரிதபடுத்த வேண்டும் அதிமுக பொது செயலராக நியமன முறையில் தேர்வு செய்யப்பட்ட சசி பணியாற்ற தார்மீக உரிமை கிடையாது. அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் சசியால் நியமிக்கப்பட்டார். இதனால், சீனிவாசன் வங்கி பணத்தை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சீனிவாசன் நியமனம் தவறானது. கட்சி பணத்தை கையாள சீனிவாசனுக்கு உரிமையில்லை .பயன்படுத்துவது குற்றமாகும்.

ஆமைவேகத்தில்....:ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டபின்னர் தான் யாருக்கு ஆதரவு என முடிவு அறிவிக்கப்படும். தொண்டர்களின் இயக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இதனை அவர்கள் சொல்லவில்லை. மக்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். அதிமுகவில் யார் கை ஓங்கியிருக்கிறது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். நிர்வாகிகள் தான் அவர்கள் பக்கம் உள்ளனர். எங்களுடைய தர்ம யுத்தத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகவில்லை. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக சென்று விடக்கூடாது. இரு அணிகளுக்கு இடையேயான பேச்சு ஆமை வேகத்தில் செல்கிறது. பேச்சுவார்த்தைக்கான தடைக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
உடன் வந்த முனுசாமி கூறியதாவது: அதிமுக, தற்போது திவாகரன் மற்றும் அவரது வாரிசுகள் கட்டுப்பாட்டில் உள்ளது. போயஸ் கூட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்களை பற்றி ஆட்சி செய்பவர்கள் சிந்திக்கவில்லை. பன்னீர் சிந்திக்கிறார். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் களத்தில் இருக்கும் பிரச்னை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (23)

 • MANIMARAN PERIYASAMY - VAYALAIKEERANUR,இந்தியா

  அரசியல் சாணக்கியா மீண்டு வா

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  பாவம், பன்னீர். மத்திய அரசின் அழுத்தத்தினால் சசிக்கு எதிரியாகி, மீதமிருந்த நிதி அமைச்சர் பதவியையும் இழந்து புரியோசனமில்லாத சகாக்களுடன் அரசியலில் வீண் போராட்டம் பண்ணிக்கொண்டிருக்கிறார். இவருடைய எதிர்காலம் பட்டமரத்தில் பால் வடியுமென்று எதிர்பார்ப்பதுதான். சசி இவரை மன்னித்து மீண்டும் கட்சியில் சேர்த்தால் பட்ட மரம் தளிர்விட வாய்ப்புண்டு.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  பணத்திற்கு இலவசத்திற்கு சினிமா மோகத்திற்கு வாக்களித்தது நாம்தான்பாஜாகாவை குறைகூறுபவர்கள் அரசியல் தெரியாதவர்கள்

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  மீட்டெடுக்க அது என்ன வேறு தீவா? முடிந்தால் பாருங்கள் இல்லையென்றால் ஆளாளுக்கு ஒரு கட்சி தொடங்குவது போல் நீங்களும் ஒரு புது கட்சி தொடங்குங்கள். புது சின்னம் புது கொடி, புது தொண்டர்கள், ............ ஆஹா பிரமாதமாக இருக்கும்.

 • Rajinikanth - Chennai,இந்தியா

  எப்படி மீட்க முடியும் அதுதான் பிஜேபியிடம் அடகு வச்சுட்டீங்களே

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த சுயநலவாதியிடம் யாரும் பிச்சை கேட்கவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சுயநலவாதிகள் சமூக சேவையில் ஈடுபடுவேன் என்பது நகைப்பிற்குரியது. நீங்க ரஜினி செய்ததாக சொல்லும் எதுவும் உண்மை இல்லை, திருமண மண்டபத்தை தமிழக மக்களுக்கு எழுதிவைத்துவிட்டார் என்கிறீர்கள் , ஒரு சொத்தை தனி நபருக்கோ , அறக்கட்டளைக்கோ , கோவிலுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ தான் எழுதி வைக்க முடியும், அந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை ரஜினி ஏமாற்றலாம். தானே ஆயிரக்கணக்கான கோடிகள் குவித்து வைத்திருக்கும்போது ராகவா லாரன்ஸ் நடத்தும் பள்ளியில் 100 குழந்தைக்கு சோறுபோடுகிறார் என்பதெல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. தொழிலதிபர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால் ரஜினி பணம் வாங்காமல் நடிக்கிறாரா ? தன் படம் வசூலை குவிக்க ரசிகர்களை முட்டாளாக்கி ஒவ்வொருமுறையும் ஒரு ஸ்டண்ட் அடித்து அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  .I don't think Mr.OPS and Mr.Munusamy will success in all their attempts in 4 years and may also continue after the period also.

 • தறுதலைஜி - Coimbatore,இந்தியா

  நீயும் பதவிக்காக என்னென்னமோ செஞ்சிட்ட

 • Jhansi Jasan - chennai,இந்தியா

  என்னம்மா நடிக்குர பன்னீரு..ஊர் ஊரா சுத்திட்டு நீங்க கட்சிய மீட்டெடுக்க போரீங்களா...விளங்கிடும். இதுவரை நீங்க கட்சிக்காகவும் மக்களுக்காகவும் என்ன செய்தீர்கள்??? பதில் உண்டா

 • அமுதவாணன் - chennai,இந்தியா

  அதிமுக என்ன டெல்லிலயா இருக்கு. மோடி மற்றும் அமித் ஷா சொன்னபடி செய் இல்லை என்றால் சேகர் ரெட்டி போல் உனக்கு புழல்.

 • தல -

  பன்னீர் செல்வம் சேகர் ரெட்டி கூட்டணி மீண்டும் கொள்ளை அடிக்க டில்லி சென்றார்

 • Venkii - Chennai,இந்தியா

  தி மு க வும் பா ஜ காவும் கெடந்து அலையுதுக இதுல ரஜினி வேற தள்ளி நின்னு மோப்பம் பாக்குது. தமிழ் நாட்டை கொள்ளையடிக்க கும்மி கொட்டிக்கிட்டு வாரானுக

 • Venkii - Chennai,இந்தியா

  டெல்லி காமெடி

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  பன்னீர்செல்வம் ஒரு நடினாக மாறிவிட்டார் .இவரா அண்ணா தி மு க வை காப்பாற்றப் போகிறார் ?இவர் பிஜேபி யுடன் சேர்ந்து கட்சியை உடைத்துவிடலாம் என்று கனவு கண்டார்.எல்லாம் பிழைத்து போய்விட்டது .இப்ப மோடியின் காலில் விழுந்து தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலையை வாங்கித்தாங்கள்.நான் அதில் போட்டியிட்டு முதல்வராகவந்து பிஜேபி கு அடகு வைப்பேன் .சேகர் ரெட்டியுடன் செய்த ஊழலை வெளிப்படுத்ததேங்கோ.நா உங்களின் விசுவாசி .பன்னீர் என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் இவர் ஆட்சியை பிடிக்கமுடியாது.கடந்த தேர்தலில் அம்மா வீட்டுக் காவலில் வைத்து இருந்தா.அம்மா சுகவீனமாக இருந்த பொது சசிகலாதான் பனீரை முதல்வர் ஆக்கியது.பன்னீர்தான் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய சசியை பொதுச்செயலாராகியது.சேகர் ரெட்டியை ஊழலில் பிடிப்பட்டபோது பன்னீரின் பங்கை போலீசுக்கு கூறியதால்தான் பிஜேபி இவரை வெருட்டி கட்சியை உடைத்து பிஜேபி கு வா.உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்று மோடி சொல்லி இருப்பார்..அதுதான் பன்னீர் அழைக்கிறார்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  இந்த மாச கமிஷனை நேர்ல வந்து வாங்கிக்க சொல்லிட்டாரோ..

 • selvaraj N - coimbatore,இந்தியா

  ஏன் தமிழ் நாட்டுல பேட்டி குடுத்த ஆகாத... இத சொல்ல டெல்லி போகனுமா..

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  கே பி முனுசாமி பேச்சை கேட்டால் நீர் தெருவில்தான் நிற்ப்பீர்கள். அதிமுகவை அழிக்க பெரும்பாடு படாதீர்கள். நீதி அமைச்சர் பதவி வாங்கி கொண்டு கூட இருக்கும் அல்லக்கைகளை விரட்டி அடித்துவிடுங்கள். இல்லையென்றால் ரஜினியை தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின் செல்லுங்கள் கொஞ்ச ஓட்டாவது கெடைக்கும்.

 • rajan - kerala,இந்தியா

  ஐயா பன்னீரு, அந்த கட்சி மீட்க வேணாம், அப்படியே முழுசா ஒழிச்சு கட்டுற வழிய பாருங்க. அது இரட்டை எச்சில் இலை. உங்க அம்மா ஊழல் அவுகளோட ஒழியட்டும். கொஞ்சநஞ்சமா ஆட்டைய போட்டாக அன்னகாவடிகள்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மணல் மாபியாவை கைது பண்ணி சிறையிலடைக்க திராணியற்ற பாஜக அரசு ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement