Advertisement

ஜிஎஸ்டி: எந்த வகையில் எந்த பொருள்?

புதுடில்லி: ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் 1211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5, 12, 18, 28 என்ற சதவீத அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன. பெரும்பாலான பொருட்கள் 18 சதவீதம் வரி என்ற பிரிவின் கீழே கொண்டு வரப்பட்டுள்ளன.
வரியில்லா பொருட்கள் : இறைச்சி, மீன்கள், சிக்கன், முட்டை, பால், தயிர், மோர், தேன், பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பிரெட், கோயில் பிரசாதங்கள், உப்பு, குங்குமம், பொட்டு, தபால் தலைகள், முத்திரைத் தாள்கள், புத்தகங்கள், செய்திதாள்கள், வளையல்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை.
5 சதவீதம் வரி : மீன் பொருட்கள், க்ரீம், பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பிராண்டட் பன்னீர், உலர் காய்கறிகள், காபி, டீ, மசாலா பொருட்கள், பீசா பிரட், ரஸ்க், ஜவ்வரிசி, மண்ணெண்ணைய், நிலக்கரி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், படகுகளில் உயிர் காக்கும் சாதனங்கள்.
12 சதவீதம் வரி : பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், வெண்ணை, பாலாடை, நெய், பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள், மிருக கொழுப்புக்கள், பழச்சாறுகள், நாய் உணவுகள், ஆயுர்வேத மருந்துகள், பல்பொடி, அகர்பத்தி, வண்ணப் பயிற்சி புத்தகங்கள், படங்களுடனான புத்தகங்கள், குடை, தையல் மிஷின், மொபைல் போன்கள்.
18 சதவீதம் வரி : பெரும்பாலான பொருட்கள் இந்த பிரிவின் கீழே வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன்பிளக்ஸ், கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம், சாஸ், சூப் வகைகள், ஐஸ்க்ரீம், துரித உணவு மசாலாக்கள், மினரல் வாட்டர், டிஸ்யூ பேப்பர்கள், என்வலப் கவர்கள், நோட்கள், இரும்பு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கேமிரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள்.
28 சதவீதம் வரி : சூயிங்கம், மொலாசஸ், கொக்கோ சேர்க்கப்பட்டாத சாக்லேட்கள், சாக்லேட் உடனான மொறு மொறுப்பு உணவுகள், பான் மசாலா, சோடா போன்ற நுரைதன்மை கொண்ட பானங்கள், பெயிண்ட், டியோடரன்ட், ஷேவிங் க்ரீம், ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், ஷாம்பூ, டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஸ்வாசர், வெயிட் மிஷின்கள், வாஷிங் மிஷின், ஏடிஎம், வென்டிங் மிஷின்கள், வாக்யூம் க்ளீனர், ஷேவிங் பொருட்கள், ஹேர் க்ளிப்பர்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மக்களுக்கு அன்றாட தேவைக்கு அத்தியாவசியமான பொருட்களின் விலை நேரடியாகவே உயர்ந்திருக்கிறது. அதிக விலை பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைத்தால் என்ன கிடைக்கவில்லை என்றால் என்ன? வாங்கும் தகுதிக்கு அதிகம் விலை ஏறும் என்று தெரிகிறது. உள்நாட்டில் மொபைல், லேப்டாப், மென்பொருட்களை தயாரிக்காததால் இறக்குமதி செய்து அங்கும் வரி விற்கும் இடத்திலும் அதிக வரி என்று பயன்பாட்டை குரைக்கவோ அல்லது ஏழைகளை சென்றடையாமல் செய்யவோ நேரடியாக செய்வதாக தெரிகிறது. வரி ஏய்ப்புகள் அடிமட்டத்தில் கூட அதிகம் இனி இருக்கவேண்டிய நிலையை தோற்றுவிக்கிறது. இனி ஆவின் பாலை வாங்குவதை தவிர்த்து டீ வி எஸ் 50 பாலை வாங்க வேண்டியதுதான். பால்காரர் அந்த வண்டியில் வந்துதான் நேரடியாக வீட்டிலேயே டெலிவரி செய்கிறார். அதை தான் வரவேற்கவேண்டும் போல.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  விஷபரிசார்த்தமுறை.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  15 % பொருட்களுக்கு இனி 18 % வரி? நேரடியாக வரி உயர்த்தும் முறைக்கு பெயர்தான் ஜி எஸ் டி என்று புரிந்து கொள்ளலாமா எளிமையாக.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறோம் எங்கிறார்கள், ஏ டி எம் மெஷினுக்கு அதிக வரி எதற்கு?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  28 % என்பது மிகவும் அதிகம். 1000 ரூ க்கு பொருள் வாங்கினால் 280 ரூ வரி கட்ட வேண்டும். இது பில் போடாமல் விற்பனை செய்வதை ஊக்கு விக்கும்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதனால் வருமானம் பெருகுமா அரசுக்கு, அப்படியென்றால் எவ்வளவு, இதையும் ஆய்ந்து சொல்லியிருந்தால் நலம்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  மாடு சுமை இழுக்குதா பார்ப்போம்..பாலாறும் தேனாறும் ஓடும் என்கிறார்கள்..இது அந்நிய முதலீட்டாளர் பையில் தான் ஓடுமா என்பதையும் பார்ப்போம்..

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  இந்திய முறைப்படி / இயற்கை சார்ந்து வாழ்ந்தால் GST கொஞ்சம். மேற்கத்திய முறை படி வாழ்ந்தால் , மிக அதிகம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement