Advertisement

இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்தாலும் வேலைவாய்ப்பு உயரவில்லை

புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு வெறும் 1.1 சதவீதம் மட்டுமே உயர்வதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியவில்லை. சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி ஏறக்குறைய 10,000 தொழில்நிறுவனங்களில் 7.8 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
உ.பி.,யில் மட்டும் 1 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை குறைத்து வருவதும் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியாததற்கு முக்கிய காரணமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க உற்பத்தி, கட்டுமானம், போக்குவரத்து உள்ளிட்ட 8 துறைகளில் 2.3 லட்சம் வேலைவாய்ப்புக்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்கினாலும் குறைந்த அளவே சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்த துறைகளில் வேலைக்கு செல்ல யாரும் தயாராக இல்லை.
நாட்டில் 61 சதவீதம் பேர் மட்டுமே ஆண்டு முழுவதும் வேலையில் உள்ளனர். 34 சதவீதம் பேர் அதிகபட்சமாக 6 முதல் 11 மாதங்கள் மட்டுமே ஒருவேலையில் இருக்க விரும்புகிறார்கள். 68 சதவீதம் வீடுகளின் மாத வருமானம் ரூ.10,000 ஆக மட்டுமே உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Who bothers about bloody economic Development in India??? Economic Development is only on paper not in the real. G.s.rajan, Chennai.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  India will soon become another Somalia . G.s.rajan, Chennai.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  பொருளாதாரம் வளர்ந்து விட்டது எனபது மோடி வந்த பிறகு மாற்றியமைத்த கணக்கீட்டின் அடிப்படையில். இதே கணக்கை பழைய மதிப்பீட்டின் படி பார்த்தல் 6 புள்ளிகள் என்கிற விதத்தில் தான் இருக்கும் . எல்லா திருஆயிலும் FDI திருந்து விட்டதால் வெளிநாட்டு முதலீடு உள்ளே வந்ததும் ஒரு காரணம் மன்மோகன் இருக்கும் போது FDI வர விடாமல் பார்த்து கொண்டவர்கள் தாங்கள் வந்த பிறகு தாராளமாக துறந்து விட்டு நாட்டை வெளி நாட்டுக்காரர்களுக்கு குத்தகை விட்டு விட்டார்கள் , இவர்களால் வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியாது வெளிநாட்டு கொள்கையும் வகுக்க தெரியாது . இவர்களுடைய ஒரே அதிஷ்டம் கச்சா என்னை குறைந்த விலையில் இப்பொழுது கிடைப்பது மிக பெரிய வர பிரசாதமாக பொய் விட்டது இந்த நிலை மன்மோகன் ஆட்சியில் இருந்திருந்தால் நாடு சூப்பர் டூப்பர் வளர்ச்சியில் பொய் இருக்கும்

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அம்பானி அதானி போன்ற கார்போரேட்டுகளின் பொருளாதாரம் தான் உயர்ந்திருக்கும்... சாதாரண மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்...வேலை இழப்பு பிஜேபி யின் ஆட்சியில் அதிகம்.. பல தொழில்கள் முடங்கி போய் இருக்கின்றன.. அரசு புள்ளி விவரங்கள் மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே பயன் படும்.

 • suburamani - nagaland,இந்தியா

  அடிப்படை விஷயங்களில் ஒன்றான மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத வரை வளர்ச்சி என்னும் இலக்கை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நாம் முன்னதாகவே நூற்று முப்பது கோடியை தாண்டிவிட்டோம். ஊழலுக்கும் கடுமையான சட்டங்கள் இல்லை. இதற்கு அரசியல்வாதிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறார்கள்.

 • Victor -

  I am seeing lots of people moving out of India in last 3 years. People move out of a place only when there is no oppourtunities. Definitely this is not healthy for our Countrys growth. I can understand Modi cannot bring progress but atleast dont put much load on peoples head.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  பரவாயில்லை மத்திய அரசே இதை ஒத்துக்கொண்டுள்ளது, ஆண்டு முழுவதும் வேலையில் இருப்போர் 61 சதவிகிதம் என்பது அதிகப்படியான மதிப்பீடு, ஏராளமானவர்கள் வேலையை இழந்துள்ளார்கள், புதிதாக படித்து வெளியே வருபவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை, இந்த விஷயத்தில் அரசின் தோல்வி வெளிப்படையாகவே தெரிகிறது

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வேலைவாய்ப்பு பெருகாமல் எப்படி பொருளாதாரம் ஆண்டுக்கு 7 % உயர்வதா கணக்கு காட்டுறாங்க?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இன்றைய படித்த இந்திய இளைஞர்கள் புத்திசாலிகள் கடும் உழைப்பாளிகள் நாளுக்கு 16 மணிநேரம் வியர்வை சிந்தி செல் போன் லேப்டாப் கம்பியூட்டர் கேம்ஸ் காபி ஷாப் மீம்ஸ் போடுதல் ஐ பி எல் கிரிக்கெட் என படுபிசி இந்த முக்கிய வேலைகளால் குடும்பத்துக்கு சம்பாதிக்க நேரமில்லை .ஜல்லிக்கட்டுக்குப் பிறகு அவனவன் நாட்டு மாடு வளர்த்து மேய்க்கப்போய்விட்டான். இன்டிரெஸ்ட் அதிகமாகி அடுத்த ஜல்லிகட்டுப் போராட்டம் எங்கேன்னு அலையறாங்க எங்கேன்னு தெரிஞ்சா வாட்ஸாப்பிலோ FB லோ உடனே அப்டேட் பண்ணுங்க தமில் வால்க தமிளிணம் வளர்க

 • ananda - thirunelveli,இந்தியா

  ஏங்க உங்க பொருளாதாரம் வளர்ந்திருக்குதா? அது எல்லாம் பெரும் முதலைகளுக்குத்தான். நாட்டு பாமர மக்களுக்கு எங்கே பொருளாதார உயர்வு? விலைவாசி ஏற்றம் ரயில் கடடன ஏற்றம் , பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வாங்கி கடன் ஏற்றம் என எல்லாமே பாமர மக்களுக்கு உயர்வு தானே? அது வெறும் ஏழு சதவீதமா? இன்னும் அதிகம் அல்லவே?இன்னும் உயராயிருக்கிறது கிஸ்தி வந்த பின் பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வு அது சார்ந்த எல்லா அன்றாட உபயோக பொருட்களின் விலை உயர்வு இது போதாதற்கு மானியங்கள் ரத்து , கடன் வசூலிப்பதில் கெடுபிடி என எல்லாமே இந்த பி ஜெ பி அரசியல் எப்போதுமே ஏற்றம் தான். பி ஜெ பி வாக்கு வங்கியிலும் ஏற்றம் தான் எப்படித்தான் மகத்தான சாதனையோ தெரியவில்லையே . எல்லாமே மாயா ஜாலமாகத்தான் இருக்கிறது

 • தேசநேசன்  -

  நாடு சுபிட்சமாகிவிட்டதால் முன்னைவிட வேகமாக பெற்றுத்தள்ளுங்கள்.பெரிய நீர்வளமும் தங்கம் வைரமுமாய் கொட்டிக்கிடக்கும் நமது நாட்டிற்கு 130  கோடி ஜனத்தொகையெல்லாம்   போதவே போதாது.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எல்லாவற்றிலும் தானியங்கி ஆட்டோமேஷன் வரவர வேலைவாய்ப்பு குறையத்தான்  செய்யும். இன்று பொறியியல் படிப்போரில் 60 % க்குமேல். ஐ டி தான் படிக்கின்றனர். ஆட்டோமேஷனால் மிக அதிக பாதிப்பும் அத்துறைக்குத்தான். முட்டாள்தனமாக எல்லோரையும் பட்டதாரிகளாக்க முயன்றதன் பலன் பல லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம் வங்கிக்கடன் வீண்.வேலையின்மையால் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. உடலுழைப்பைக் கேவலமாகப்  பார்க்கும் தலைமுறையை உருவாக்கிய மடத்தனமான தலைமையை தேர்ந்தெடுத்தது நம் தவறு. இப்போதிருக்கும் 90   %பொறியியற்கல்லூரிகளை ITI  களாக்கி தச்சு ஆட்டோ மெக்கானிக் எலக்ட்ரீசியன்  மேஸ்திரி போன்ற சான்றிதழ் படிப்புகளை சொல்லிக்கொடுக்கலாம். இவ்வேலைகளைக் கற்றவர்கள் சர்வசாதாரணமாக 50000  ரூபாய்கூட சம்பாதிப்பதை பார்க்கலாம்  ஐ டி வேலை கிடைக்காமல் பீட்சா கூரியர் டெலிவரி செய்து திண்டாடுவதைவிட இது எவ்வளவோ மேல். வேலைவாய்ப்பை பெருக்குவோம் என்பதெல்லாம் போலியான  தேர்தல் உத்திகளே.உண்மையில் என்றுமே அரசால் 100  % வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.

 • Venkii - Chennai,இந்தியா

  இதுதான் மோடியோட வண்டவாளம்

 • RAFI -

  But they will not think about income tax , inflation ,salary ratio still they will waste the money in ISRO ,publicity

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வேலை வாய்ப்பு அதலபாதாளத்தில் சென்றுள்ளது...பாஜக அபிமானிகளுக்கு இதனை சொன்னால் கோவம் பொத்துக்கொண்டு வரும் ... ஏனென்றால், நல்ல வேலையில் இருப்பவர்கள், கார்பரேட்கள், IT துறையில் அடிமைகளாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், FD யில் பணம் போட்டுவிட்டு ஹாயா இருப்பவர்கள், ஆகியோர் தான் பாஜக அபிமானிகள் இவர்கள் ஒரு 10 % இருக்கக்கூடும்... இவர்களுக்காக மட்டும் ஒரு அரசாங்கம் என்று சொன்னால், அது தான் பாஜக அரசு... மற்றவர்கள் பற்றிய கவலை துளியும் இல்லை... இதனை சொன்னால், சம்மந்தமே இல்லாமல் , என்னை தேச துரோகி, என்று சொல்வதே பாஜக அபிமானிகள் பொழப்பா போய்விட்டது... நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிக மிக அபரிதமாக உயர்கிறது... மோடிக்கு அதனை பற்றிய கவலை இல்லை... இது எங்கு போயி முடியும் என்று தெரியவில்லை... கடந்த 3 ஆண்டுகளில் , இந்தியாவில் அந்நிய முதலீடு என்பது அறவே இல்லை... மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதால், தொழில்கள் முடங்கியுள்ளது... பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது... வீடுகள் கூட சென்னையில் பல்வேறு இடங்களில் காலியாக , லட்சக்கணக்கில் கிடக்கிறதாம்... மோடி அரசின் ரூபாய் முடக்கத்தால், ஒரு சதவிகித பலன் கூட இல்லை... முகேஷ் அம்பானிக்காக தான் ஒரு அரசு நடப்பது போல தெரிகிறது.... ஆனால் அவர்கள் கூட ஆள் குறைப்பு செய்கிறார்கள்... காரணம் சந்தையில் வாங்க மக்களிடம் பணம் இல்லை... பணம் வங்கியில் குவிந்துவிட்டது...அதனால் வங்கிகளும் FD க்கான வட்டியை குறைத்துவிட்டது... வங்கியிடம் கடன் வாங்க ஆள் இல்லை.... இப்படி போகிறது நாடு..... இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லித்தான் வாஜ்பாயாய் தோல்வியை தழுவினார்....அதைவிட மோசமான ஒரு தோல்வியை வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சந்திக்கும்.... காரணம் வேலையில்லா திண்டாட்டம் ...ஆனால் EVM மிஷினில் தில்லுமுல்லு பண்ணி அல்லது பாகிஸ்தான் என்ற தம்மாத்துண்டு கேடுகெட்ட நாட்டுடன் ஒரு போரை வலிய திணித்து, வெற்றி பெற்று, அதனை ஓட்டாக மாற்றலாம் என்ற இந்திரா காலத்து டெக்னீக்கை உபயோகப்படுத்த நினைக்கலாம்... ஆனால் அதெல்லாம் நடக்காது.... காரணம் வேலையில்லா திண்டாட்டம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது....

 • Jaya Ram - madurai,இந்தியா

  இதனை தவிர்க்க விவசாயத்தினையும், கைத்தறியினையும் ஊக்கப்படுத்தினால் பெருமளவு வேலையில்லா திண்டாட்டத்தினை போக்கலாம், அதற்க்கு முதல் படியாக அரசுத்துறைகளில் வேலைபார்க்கும் அதிகாரிகள்முதல் ஊழியர்கள் வரை கைத்தறி ஆடைகளையே அவரவர் மாநிலத்திற்கு ஏற்றவாறு அணிய கட்டாயப்படுத்தவேண்டும், அதற்கு முதல்படியாக பிரதமரும் அவருடைய மந்திரிகளும் கைத்தறி ஆடைகளை அணியாதவன்கை வழிகாட்ட வேண்டும் அப்படி செய்தால் நிறைய பேர் அவர்களுடைய சொந்த ஊர்களை விட்டு வெளியேறமாட்டார்கள் அதற்கான உற்பத்தி விலைகளையும் கணிசமான விலைக்கு உயர்த்தினால் அவர்களின் வறுமையும் போகும் அது அவர்களின் சொந்த தொழில் ஆகும் இதற்க்கு ஒரு குடும்பத்திற்கு Rs 50000 /= குறிப்பாக தொழில் தெரிந்தவர்களுக்கு வங்கிகளில் இருந்து கடனுதவி கொடுத்தால் ஒரு வீட்டில் இரண்டு தறிகள் தேவையான பொருள்களுடன் நடத்த முடியும் இதனை விடுத்து பெரு முதலாளிகளிடம் 5000 கோடி 10000 கோடி என்று கடன் கொடுத்து விட்டு அவர்கள் திவால் ஆனவுடன் ( ஆனால் அது உண்மையான திவால் அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயம் ) பின்னர் வராக்கடன் என்று கூறி 2 லட்சம் கோடி , 3 லட்சம் கோடி என்று தள்ளுபடி செய்தல் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் சிலபேர்மட்டும் பயன் பெறுவார் இதனை மத்திய அரசுகள் செய்யுமா ?

 • NRK Theesan - chennai,இந்தியா

  வேலை செய்ய தயாராக இல்லை அதனால் இருக்கும் தொழிலை மூடிவிட்டு உழைக்காமல் கமிஸ்ஸின் வியாபாரம் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் கவனம் செலுத்திவிட்டு அரசு மலிவு விலை உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பிழைப்பை ஓட்ட தயார்படுத்திக்கொண்டு விட்டார்கள் .விவசாய வேலைகூட செய்யாமல் மதுவுக்கும் போதை இன்டர்நெட் சினிமா டிவி போன்ற ஒன்றுக்கு உருப்படாத விஷயத்தில் செலவு செய்தால் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement