Advertisement

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எஸ்., மீடியா' என்ற, 'டிவி' நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. இதை, 4.62 கோடி ரூபாயாக குறைத்துக் காட்ட, 2007ல், உதவி செய்ததாகவும், அதற்காக ஆதாயம் பெற்றதாகவும், ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இது குறித்து, கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும், 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில், 2015 டிசம்பரில், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இது தொடர்பாக, அவர் மீது மேலும், நான்கு வழக்குகள் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில், லண்டன் சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • Rajinikanth - Chennai,இந்தியா

  பல முறை நிதி அமைச்சரா இருந்து நாட்டுக்கு சேவை செய்த மிகப்பெரும் குடும்பத்து செல்லப்பிள்ளை அவர் ...அவர் மீது அவ்வளவு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்திட முடியாது .. அவங்க அம்மா வேற சுப்ரீம் கோர்ட்டு வக்கீலு ... இந்த கேசு செல்லாது செல்லாது ...யாரை எங்கே பிடிச்சு எப்படி தன்னோட மகனை மீட்பதுன்னு பழம்பெருச்சாளி அப்பாவுக்கு தெரியும் ...போங்கப்பா... போய் பெட்டிக்கேசு ஏதாவது போட முடியுமான்னு பாருங்க ..உங்க ஜம்பமெல்லாம் குப்பன் சுப்பன்கிட்டேதான் செல்லுபடியாகும்

 • kundalakesi - VANCOUVER,கனடா

  காங்கிரஸ் பாஜக ரெண்டும் உள்ளாரா பேசிவச்சிட்டு நாடகம் போடுறானுவோன்னு தோணுது .

 • V.Ravichandran - chennai .,இந்தியா

  அப்பன தூக்கி ஜெயிலில் போடு, மவன் தன்னால வருவார் .

 • grg - chennai,இந்தியா

  because of the hatred for bjp govt that the muslims show even ordinary hindus are now getting drawn to bjp. even in this karti chidambaram epidsode all the muslims here write against BJP. why? they are not able to tolerate one party which supports hindu causes. that is the reason ordinary hindus also go to bjp than a congress headed by foreigner.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அதுக்கு தான் லண்டன் பயணம் மல்லையா/லலித் மோடி போல டாட்டா பை பை ஸீ யு இந்த நெக்ஸ்ட் டிகேட் (10 வருடம் கழித்து)

 • karunchilai - vallam,இந்தியா

  சரியான இடம் தான் சென்றிருக்கிறார் கார்த்தி. பன்னாட்டுக் களவாணிகளுக்கும் புகலிடம் லண்டன் தான்.

 • karunchilai - vallam,இந்தியா

  பறவை பறந்துவிட்டது?

 • rajan - kerala,இந்தியா

  அதான் ஊரை காலி பண்ணி மவன் லண்டன் பூட்டான்ல நீங்க வழக்கு பதிவு செய்யும் முன்பே. எனவே கூடவே தேடபடும் குற்றவாளி என இப்பவே அறிவியுங்க. அப்போ தான் 18 வருசம் கழிச்சாவது அவனை இந்தியா கொண்டு வர முடியும்.

 • VELAN S - Chennai,இந்தியா

  லண்டன் போன கார்த்தி சிதம்பரம் அங்கு பெரிய தல மல்லையாவை கட்டி பிடிச்சிட்டு அங்கேயே உட்கார்ந்து விடுவார் என்று எதிர் பார்க்கிறேன் , ஏதோ பழமொழி சொல்லுவாங்களே , இனம் இனத்தோடு சேரும் என்று வருமே அது மாதிரி ஆகி விடும் என்று நினைக்கிறேன் , இந்த திருடங்களையெல்லாம் அசைக்க முடியாது , ஆமா சொல்லிட்டேன் .

 • Shiva -

  என்ன பிரயோஐனம்? கார்த்தி மற்றும் அவனுடைய மூன்று நன்பர்களும் நேற்றே லண்டன் போய்விட்டார்களே....

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  சரி ரூ 305 கோடி inx என்ற tv நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது என்று அமலாக்க துறை முடிவு செய்த பின் அந்த 305 கோடி ரூபாயை 4.64 கோடி ரூபாயாக குறைத்து காட்டப்பட்டுள்ளது என்றால் மீதி பணம் எங்கே போனது என்பதை அந்த TV நிறுவனத்தின் ஆடிட்டர் பாலன்ஸ் ஷீட்டிலிருந்து மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாமே யாருடைய அந்த பணமாக்கி போயிருக்கிறதோ அவங்களை பிடித்து நோண்டி நுங்கு எடுக்க வேண்டியதுதானே

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  தும்பையும் விட்டுவிட்டு வாளைப் பிடிக்கிறார் என்று சொல்வார்கள். இப்போதும் தும்பும் இல்லை வாழும் இல்லை. அந்த தில்லையில் ஆடுபவனுக்கே வெளிச்சம்.

 • appavi - cumbum,இந்தியா

  மற்றவர்கள் மீது இதற்கு முன் போடப்பட்ட வழக்குகளில் என்ன நடந்ததோ அதேதான் இதிலும் நடக்கும்.....நாமும் கருத்தை பதிவு செய்து வழக்கம் போல் ஏமாறுவோம் ...

 • karunchilai - vallam,இந்தியா

  கார்த்தியின் பாஸ்போர்ட்டுக்கள் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? சிதம்பர ரகசியம்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இதுவும் பத்தோட பதினொன்னா ? லண்டனுக்கு தப்ப விட்டது சரிதானா ?

 • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

  அரசாங்கம் திருடர்களை லண்டன் போக அனுமதித்தது தவறு.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜகவை எதிர்ப்பவர்கள் மீது மட்டும், அமலாக்கம், CBI , வருமானவரித்துறை ஆகியவை ஏவிவிடப்படும்...மற்றவர்கள் ENJOY ....OPS , சேகர் ரெட்டி, ஜனார்தன் ரெட்டி , எடியூரப்பா, இவர்களெல்லாம் பாஜகவை பொறுத்தவரை உத்தமர்கள்...

 • thiru - Chennai,இந்தியா

  லண்டன் போய் செட்டிலேஆயாச்சு.. இனி வழக்கு போட்டு நாக்கு வழிக்கவா ??

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement