கலிபோர்னியா: மகராஷ்டா மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி என்பவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட மூன்று பேருக்கு இஸ்ரேல் நாட்டின் 'டேன் டேவிட் விருது' அறிவிக்கப்பட்டிருக்கிறது. வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'டேன் டேவிட்' விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கப்பரிசுடன் கூடியது. இந்திய மதிப்பில் இது சுமார் ஆறரைக் கோடி ஆகும். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் உள்ள 'டேன் டேவிட்' அறக்கட்டளைதான் இந்த விருதை வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா வரும் 21-ம் தேதி டெல் அவிவ் நகரில் நடக்கிறது.
அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிக்கு டேன் டேவிட் விருது
Outbrain
வாசகர் கருத்து (3)
மிகவும் பெருமையாக உள்ளது.
இன்னும் நம்மவர்கள் விருது பெறவேண்டும்...
Congrats Ji. Very proud of you