Advertisement

10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று...! திருப்பூர் சிறப்பிடம் பெறுமா?

திருப்பூர் :பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று காலை வெளியாகின்றன; இதில், திருப்பூர் மாவட்டம் எந்த இடத்தை பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கடந்த, மார்ச், 8ல் துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, திருப்பூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 584 மாணவர்கள்; 14 ஆயிரத்து, 700 மாணவியர் என, 29 ஆயிரத்து, 284 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், இன்று காலை வெளியிடப்படுகிறது.
"ரேங்கிங்' முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அளவிலான தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியர் தேர்ச்சி விகிதம் மட்டுமே தெரிவிக்கப்படும். திருப்பூர் கல்வி மாவட்டம், கடந்த கல்வியாண்டு தேர்ச்சி சதவீதம், 95.62. நடப்பு ஆண்டு, தேர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்; மாநில அளவில் திருப்பூர் எத்தகை இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு, கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு, 164 பள்ளிகள், நூறு சதவீத தேர்ச்சி பெற்றன. இதில், 117 மெட்ரிக் பள்ளிகள்; மூன்று சுயநிதி பள்ளிகள், நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், இரு மாநகராட்சி பள்ளி, 39 அரசு பள்ளிகள் அடங்கும். 2015ல், 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் திருப்பூர் முதலிடத்தை பெற்றது. கடந்த முறை, மாவட்டத்தில் அதிகபட்ச மதிப்பெண், 497 ஆகும்.
உடனடி விண்ணப்பம்
வழக்கத்துக்கு மாறாக, இம்முறை, தேர்வு முடிவுகள் வெளியானதுமே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்; வரும், 22 வரை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், இதற்கான விண்ணப்பத்தை பெறலாம். தனித்தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்தில் விண்ணப்பம் பெற வேண்டும். வரும், 25ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழக்கப்படும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement