Advertisement

அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு : விசாரிக்க குழு அமைத்தது அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்யா செயல்பட்டதாக எழுந்த புகார் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ.,யின் முன்னாள் இயக்குனர், ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு, விசாரணை நடத்த உள்ளது.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், ஜனவரியில் பதவியேற்றார்.
முன்னதாக, அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்ய அரசு, பல்வேறு முறைகேடுகளை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து விசாரித்து வந்த, எப்.பி.ஐ., தலைவர் ஜேம்ஸ் காமேவை, அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்ய அரசு செயல்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து,
எப்.பி.ஐ.,யின் முன்னாள் இயக்குனர், ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரிக்க உள்ளது. இதற்கான உத்தரவை, அந்நாட்டு கோர்ட் பிறப்பித்துள்ளது.

'நேட்டோ'வில் இருந்து வெளியேற முடிவு?
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் அடங்கிய அமைப்பு நேட்டோ. இதன் கூட்டம், பெல்ஜியம் தலைநகர், பிரஸ்ஸல்சில் நடக்கிறது. இந்த
கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு
டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு
எதிராக நடவடிக்கை எடுப்பதில், நேட்டோ நாடுகள் தயக்கம் காட்டி வருவதால், டிரம்ப்
அதிருப்தி அடைந்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேட்டோ அமைப்பில் இருந்து, அமெரிக்கா வெளியேறும் முடிவை, டிரம்ப் விரைவில்
எடுக்க உள்ளதாகவும், அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'உண்மை வெளி வரும்'
அதிபர் தேர்தலில், எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என, மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். இந்த புகார் பற்றி, ராபர்ட் முல்லர் விசாரணை நடத்துவதை வரவேற்கிறேன்; அதிபர் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது, விசாரணையின் இறுதியில் தெரிய வரும்.
- டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement