Advertisement

பயங்கரவாதிகள் 4 பேருக்கு தூக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், அப்பாவி மக்களை கொன்று குவித்த, நான்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கு, அந்நாட்டு ராணுவ கோர்ட் உத்தரவுபடி, நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.அண்டை நாடான, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில், 2014ல், ராணுவ பள்ளியில், தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 150 பள்ளி குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீதான விசாரணையை வேகமாக முடித்து தீர்ப்பு
வழங்குவதற்காக, சிறப்பு ராணுவ கோர்ட் அமைக்கப்பட்டது.இந்த கோர்ட், இதுவரை, 170க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துன்வாகா மாகாணத்தில், வெடிகுண்டு வைத்து, மக்களை கொன்று குவித்த வழக்கில் கைதான, நான்கு முக்கிய பயங்கரவாதிகளுக்கு, ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, அவர்கள் நான்கு பேருக்கும், அங்குள்ள சிறையில், நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • N. Sridhar - Kanchipuram

    தப்பே இல்லை, மொத்த நாடும் காணாமல் போகவேண்டும். என்று தணியும் இந்த தீவிரவாத மோகம். இதற்கு ஒரு முடிவே இல்லையா? உலக வரைபடத்தில் PAKISTHAN என்ற நாடே இல்லாமல் போக வேண்டும். அதுதான் ஒரே வழி!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement