Advertisement

விவசாயிகளுக்கு மானிய விலை உரம் : ஜூன் 1 முதல் 'ஆதார்' கட்டாயம்

'ஆதார்' அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூன், ௧ முதல், மானிய விலையில் உரங்கள் கிடைக்கும். மத்திய அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில், உரங்களை வழங்கி வருகிறது.


தமிழகத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, தனியார் மூலமாகவும், உரங்கள் வினியோகம் நடக்கிறது. இதில், முறைகேடுகளை தடுக்க, மானிய உரம் வழங்க, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. தமிழகத்தில், ஜூன், 1 முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாயிகள் என்ற பெயரில், மானிய விலையில் உரங்களை பெறும் பலர், அதை பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட, பல நிறுவனங்களுக்கு விற்கின்றனர்.இதனால், மத்திய அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுவதோடு, தகுதியான விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில்லை.


இதையடுத்து, ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரங்களை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, கையடக்க எலக்ட்ரானிக் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. ஜூன், ௧ முதல், இந்த கருவிகளில், விவசாயிகளின் ஆதார் அட்டை எண் அல்லது கைரேகையை பதிவு செய்த பின்னே, உரங்கள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

  • Senthil -

    what a country..what we have achieved by mandating adhaae for everything... nothing....but for sure some one is gaining.. definitely not the common man

    • Indian - Bangalore

      இந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு 36000 கோடி ஆதார் மூலமாக சேமித்துள்ளது. PAHAL திட்டம் மூலம் 21000 கோடி ருபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் அவையெல்லாம் நம் வரி பணத்தில் ஊழலாய் சென்றுகொண்டிருந்தது. இவையெல்லாம் நல்லது இல்லையா? ஊழல் முதலைகளுக்கே நம் வரிப்பணம் செல்ல வேண்டுமா?

  • தமிழ் - ஈரோடு,இந்தியா

    உங்கள் உரமும் வேண்டாம், மானியமும் வேண்டாம், ஆதாரும் வேண்டாம்... உரத்தைப் போட்டு மண்ணை மலடாக்கியது போதும். நாங்க இயற்கை விவசாயத்திற்கு மாறிட்டோம்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    ஆதார் இல்லாதவர் அரைமனிதர் கூட கிடையாது..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எங்கும் ஆதார் எதிலும் ஆதார்... ஆனால் நீதிமன்றம் இது தொடர்பாக கன்டும் காணாமல் உள்ளது...

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ஏற்கனவே விவசாயம் தவற மற்றவற்றுக்குப் பயன்படாமலடிக்க வேம்பு கலக்கபப்ட்ட யூரியாவை இந்த அரசு அறிமுகப்படுத்தியது அதனாலேயே தவறான பயன்பாடு நின்றுவிட்டது மற்ற உரங்களுக்கும் விரைவில் இதுபோன்ற உத்திகளை அமல் படுத்தலாம்

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ஆக இனி நிஜமான விவசாயிகள் மட்டுமே, மானிய விலை உரங்களை பெறமுடியும். நல்ல விசயம்தான்.

    • Karthik - New Jersey,யூ.எஸ்.ஏ

      உண்மையான விவசாயிகளுக்கு இது நன்மை தான். ஆனால் அதிகாரிகளின் ஆதரவோடு தில்லுமுல்லு செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement