Advertisement

மாவட்டத்தில் முதன்முறையாக பசுந்தீவனம் தயாரிப்பு...அறிமுகம்!:குறைந்த செலவில் கால்நடைகள் பசியை போக்கலாம்

திருத்தணி:கடும் வறட்சி காரணமாக, கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாட்டை போக்க, எட்டு நாட்களில், மண்சத்து இல்லாமல் வளரும் பசுந்தீவனம் திட்டம், மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குறைந்த செலவில் பசுந்தீவனம் தயாரிக்கும் திட்டத்தை செயல்முறைபடுத்த, அரசு மானியம் வழங்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தின், 14 ஒன்றியங்களில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு தொழில் முக்கியமாக உள்ளது. 1.50 லட்சம் பேர், 2.40 லட்சம் கால்நடைகளை வளர்க்கின்றனர். கடந்தாண்டு பருவ மழை தப்பியதால், ஏரி, குளம் உள்ளிட்ட நீராதார நிலைகள் வறண்டு விட்டன.
ரூ.20 ஆயிரம் செலவுபசுந்தீவனம் தயாரிப்பு குறித்து, மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில், செயல்முறை விளக்க கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கால்நடை துறை இயக்குனர்கள், மருத்துவர்களுக்கு இந்த ஹைட்ரோபானிக்ஸ் பசுந்தீவனம் வளர்ப்பு முறை, அதிலுள்ள சத்துகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மண்சத்து இல்லாமல் தீவனம் தயாரிக்க தேவையான உபகரணங்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதை விவசாயிகளே பார்த்து கொள்ள வேண்டும்.குறைந்தளவு தண்ணீரில், எட்டு நாட்களில் பசுத்தீவனம் தயாராகி விடுவதால், வறட்சியின் போது கால்நடைகளுக்கு தீவன பிரச்னை வராது.
கால்நடை துறை அதிகாரி, திருவள்ளூர்இதனால், தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காமல், கால்நடைகள் அவதிப்படுகின்றன. கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இல்லாததால், தங்கள் கால்நடைகளுக்கு தீவனப்புல் உற்பத்தி செய்ய முடியாமல் விவசாயிகளும் சிரமப்படுகின்றனர்.இதையடுத்து, அரசின் முயற்சியால், மானிய விலை வைக்கோல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாவட்டத்தின் எட்டு இடங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வைக்கோல் வரத்து இல்லாதது, ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை முறையாக தராதது உள்ளிட்ட பிரச்னையால், சற்று, 'தொங்கலில்' விழுந்தது.இந்நிலையில், கால்நடை துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சேர்ந்து, மண்ணில்லாமல் குறைந்த செலவில் தயாரிக்கும் பசுந்தீவனமான, 'ஹைட்ரோபோனிக்ஸ்' பயிர் வளர்க்கும் முறையை, திருவள்ளூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த, 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி தலைமையில், கால்நடை இயக்குனர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது.கடும் வறட்சி நிலவும் இந்த சூழலில், இத்திட்டம் கால்நடை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இது தொடர்பான சந்தேகம் மற்றும் உதவிகளுக்கு, கால்நடை துறை அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை, விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
மானியம் வழங்க வேண்டும்கடந்த ஆண்டில் மழை இல்லாததால், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. மானிய விலை வைக்கோலும் கிடைப்பதில்லை. எட்டு நாட்களில் வளரும் பசுந்தீவனம் நல்ல திட்டமாக இருந்தாலும், அதை செயல்படுத்துவதற்கு அதிகபட்ச தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆந்திர மாநிலத்தில், அரசு மானியத்துடன் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. அந்த திட்டம் இங்கும் முறையாக வளர, அரசு மானியம் வழங்க வேண்டும்.வி.துார்வாசுலுவிவசாயி, சந்தான கோபாலபுரம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement