Advertisement

ஜி.எஸ்.டி., வரி அமலானால் பருப்பு விலை குறையும்

புதுடில்லி:'ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை கணிசமாக குறையும். பாலுக்கு, வரி விலக்கு அளிக்கப் படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த, மத்திய அரசு தீவிரம் காட்டி வரு கிறது.இதன் மூலம், பலமுனை வரிக்கு பதி லாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு
அமலுக்கு வரும். ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்து வதற்கான பணிகள், இறுதி கட்டத்தை நெருங்கி யுள்ள நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், ஜம்மு -காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரில் நேற்று நடந்தது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை யில் நடந்த கூட்டத்தில், பல்வேறு மாநில நிதி யமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத் திற்கு பின், மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ் முஹ் ஆதியா கூறியதாவது: நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலுக்கு வந்த பின், தானியங்கள் மற்றும் பருப்பு விலை கணிசமாக குறையும்.

அன்றாடம் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருட் கள் விலை குறையும். தானியங்கள் மற்றும் பாலுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நிலக்கரி க்கு தற்போது வசூலிக்கப்படும், 11. 69 வரி, 5 சதவீத மாக குறைக்கப்படும்.சர்க்கரை, தேயிலை, காபி,
சமையல் எண்ணெய்க்கு, 5 சதவீத வரி விதிக் கப்படும்.சோப்பு, ஹேர் ஆயில், டூத் பேஸ்ட் உள்ளிட்டவற்றிக்கு, 18 சதவீத வரி விதிக்கப் படும். கார், 'ஏசி' உள்ளிட்டவற்றிக்கு, 28 சதவீத வரி விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், இரண்டாவது நாளாக இன்றும் நடக்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • Anandha Kumar - Bangalore,இந்தியா

  நல்ல செய்தி.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  ஏற்கனவே "சேவை வரி" கொண்டு வந்த "மறைமுக ஊழல் வாதி சிதம்பரம்|" இந்தியமக்களை சாகடித்தான் இப்போ போதாக்குறைக்கு GST என்கிற வரி சுமையை இந்தியமக்களுக்கு திணித்து சாகடிக்க போகிறார் அருஞ்சைலி. இதுவும் வேணும் இதுக்கு மேலே வேண்டும் இந்திய மக்களுக்கு.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  GST அடித்தளத்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் ஓர் பகல் கொள்ளை என்று சொல்லலாம். உதாரணத்திற்கு சொல்லப்போனால் "பாலைவனத்தில் ஒட்டகங்கள் எல்லாம் எழுந்திருக்க முடியாத அளவில் ஏகப்பட்ட சுமையை ஏற்றிவிடுவார்கள். பின்பு ஒட்டகம் பளு சுமையை பார்த்து எழுந்திருக்காது. அச்சமயம் ஒட்டகத்தின் பாகன் ஒட்டகம் முன்னாள் நின்று ஒரு கல்லை தூக்கி வீசாட்டுவான். பின்பு முட்டாள் ஒட்டகம் தன்மீது ஒரு பெரிய பளுவை இறக்கிவிட்டான் என்று எழுந்திருந்து நடக்கும். அதுதான் இன்றைய திணம் பிஜேபி அரசு GST போர்வையின் மூலம் பருப்பு வில்லை குறைத்து காண்பித்து மீதி விலை எல்லாம் சொல்லி மாளாது. இதனை பொது மக்கள் நடைமுறையில் புரிந்து கொள்வர்.

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  உருளைக்கிழங்கு மற்றும் பருப்பைக் கவனிக்கலை எனில் வட மாநிலங்களில் இவங்க பருப்பு வேகாது.

 • tamilan - city,அங்கியுலா

  poi miga periya poi. bangalore D-MART la dhall tax 0%. poi check panni parthukonga

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  நான் சாதாரணமா அரசியல் கருத்து கூறுவதில்லை...... ஆனால் ஒன்று புரிகிறது ... தற்போதய அரசு என்ன செஞ்சுதோ இல்லையோ அது தெரியாது...... ஆனால் நிறய ஜால்றாக்களை சம்பாதித்து வைத்துருக்கீறது......

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  சூப்பரான தலைப்பு... " ஜி.எஸ்.டி., வரி அமலானால் பருப்பு விலை குறையும் " ... எவ்வளவு.... ஒரு 50 ரூபாய் குறையுமா?...... ஏன்யா வைத்தெறிச்சலை கெளப்புறீர்......

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பருப்பு விலை எப்பிடி குறையும்...நாங்க அடுத்ததாக பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவிடுவோமே...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இப்போது தானியங்களுக்கு வரி எவ்வளவு?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  சாதாரண சாமான்ய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரிவிதிப்பில் விலக்கு, மற்றும் குறைந்த அளவு வரி வரவேற்க தகுந்தது தான், ஆனால் இதனால் விவசாயிகள் நஷ்டப்படக்கூடாது, அதை அரசு பார்த்துக்கொள்ள வேண்டும், இதன் பிறகு மாநில வரி வருவாய் எந்த அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை பார்க்க வேண்டும், போகிற போக்கை பார்த்தால் மாநில அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இருக்காது என்றே தோன்றுகிறது, இது அமுலுக்கு வந்தால் இந்த திட்டத்தை கண்காணிப்பது யார், மத்திய அரசா, அல்லது மாநில அரசா, இன்னும் நிறைய கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்,

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உலகின் பருப்பு விளைச்சலில் 80 % நம்நாட்டில்தான் பயன்பாட்டிலும் நாம்தான் 80 %இங்கு பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதித்தாலும் நமது தேவையை வேறெந்த நாட்டாலும் நிறைவேற்றவே முடியாது பருப்புப்பயிருக்கேற்ற புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளித்து விளைச்சலைப்பெருக்க இன்னும் சில ஆண்டுகளாகும் அதன் விலையும் அதிகமாகும் இதெல்லாம் காலத்தின் கட்டாயங்கள் வரிக்குறைப்பு ஓரளவுக்கே உதவும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அடித்தட்டு மக்கள் பலன் பெற்றால் நல்லதுதான்...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  இதுவும் பெட்ரோல் மாதிரி ஆயிடுமா? சைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரி

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  பயிரை விளைவிக்கும் விவசாயி அதெற்கு விலை வைக்க முடியாதபடி வெள்ளையர் காலத்து சட்டம் இன்னும் அமலில் உள்ளது. அரசாங்கத்தின் சார்பில் வாங்கி விற்கும் முகமூடி போடாத கொள்ளை கார நிறுவனங்கள் (NAFED , Food கார்பொரேஷன் of இந்தியா, MMTC , etc ) போன்றவை இருக்கும் வரை இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்வது நிற்காது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இந்த திட்டத்தால், பொதுமக்களுக்கு நற்பலன்கள் கிடைத்தால், மக்கள், பிரதமர் மோடிஜியை மிகவும் பாராட்டவே செய்வார்கள். அதே போல மாநில அரசுகளும் பாராட்டினால், அது இன்னும் கூடுதல் சிறப்பு பிரதமருக்கு எனலாம்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  சும்மா பெரிய பருப்பு மாதிரி அறிக்கை விட்டா மட்டும் போதாது உண்மையாலுமே விலையை குறைச்சு காட்டணும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement