Advertisement

கலக்கத்தில் எம்.எல்.ஏ.,க்கள் சொல்கிறார் ஓ.பி.எஸ்.,

ராஜபாளையம்:“தோப்பு வெங்கடாசலம் உள் ளிட்ட பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க் கள் கலக்கத்தில் உள்ளனர்,” என, முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ராஜபாளையம் வந்த அவர் கூறியதாவது: அ.தி. மு.க., வின் இரு அணிகளின் பேச்சு வார்த்தை அதே நிலையில்தான் உள்ளது. தோப்பு வெங்கடாசலம் மட்டுமல்லாது பெரும்பான்மை யான சசி அணி எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில்
உள்ளனர்.அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கையாக, தொண்டர்களின் இயக்கமாக, மக்க ளாட்சி தத்துவத்தின் படியும் இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்த தர்ம யுத்தம். இந்த யுத்தம் மக்களின் நல் ஆதரவோடு வெற்றியடையும். தற்போது ஆண்டு வருபவர்கள் தடம் புரண்டுள்ள னர், என்றார்.

எங்களால் ஆட்சி கவிழாதுமதுரை விமான நிலையத்தில் நேற்று காலை அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணி மதுசூதனன் கூறுகையில்,''இரண்டு மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். அதன் பின்னர் அனைவரும் இங்கே வருவார்கள்.

மக்கள் விரும்பினால் அ.தி.மு.க., இணைப்பு தொட ரும். நத்தம் விஸ்வநாதனை 'போட்டுக் கொடுத்து' மந்திரியானவர் சீனிவாசன். அவரைப்பற்றி சொல்ல ஒன்றும் இல்லை,'' என்றார்.மதியம், சென்னை செல்ல, விமான நிலையத்திற்கு வந்த, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திடம் மதுசூதனின் கருத்து குறித்து கேட்ட போது, ''நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எங்களால் இந்த ஆட்சி கவிழாது,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (26)

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  ஜெயலலிதா.பெயரை.யாருக்கும்.வயோக.படுத்த.யோக்கியதை.இல்லை.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  பன்னீர்செல்வத்துக்கு அண்ணா தி மு க MLA களைப்பற்றி கதைக்க எந்த தகுதியும் இல்லை .அவர்கள் கலக்கமில்லாமல் இருக்கிறார்கள் .இவருக்கு ஏன் இந்த கவலை .முனுசாமியின் ஆலோசனைகளை கேட்டு நாயாக அழைக்கிறார்.இவர் செய்த ஊழல் பணத்தில் இனி கோடீஸ்வரனாக வாழலாம்

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  //ஜெயலலிதா கொள்கையாக // ...அவருக்கு கொள்ளை தானே கொள்கை...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பதவி படுத்தும் பாடு ஒபிஸ், EPS இருவரும் விதிவிலக்கு அல்ல ஆனால் இவர்களோடு ஒப்பிடும் போது திறமையானவர்கள் வெளியில் இருக்கிறார்கள் அதுதான் கால கொடுமை

 • suresh - covai,இந்தியா

  தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரன் என்ற படி செயல்படுவார்கள் இந்த கூமுட்டைகள் என்று தெரிந்து தான் அம்மா அவர்கள் இவர்களை அடக்கியே வைத்திருந்தார்கள். ஒரு பேட்டி கூட கொடுக்க அனுமதிக்கவில்லை இந்த நரிகளை . அம்மாவின் இறப்புக்குப் பின் எங்கே அதே போல் இந்த சசிகலாவும் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு வந்து விடுமோ அப்படி கட்சி மீண்டும் கட்டுக்கோப்பாக சசிகலாவின் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு விட்டால் பி.ஜே. பி யால் தமிழகத்தில் என்றுமே 3% ஐ தாண்ட முடியாது என்று எண்ணிதான் தந்திரமாக சசிகலாவையும் தினகரனையும் சிறையில் அடைத்து துரோகி பன்னீர் முலம் அ தி மு க வை இரண்டாக உடைத்து பன்னீரை தன் கைப்பாவையாக வைத்துக் கொண்டது பி.ஜே.பி.. இது எல்லாம் ஒரு பிழைப்பு. இதுக்கு போயி..... எடுக்கலாம். ஆனா ஒன்னு தமிழகத்தில் என்றுமே பி.ஜே.பி ஒரு ஆணி கூட புடுங்க முடியாது . தமிழக மக்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல என வரும் தேர்தலில் நிருபிப்போம் பி.ஜே.பிக்கு .

  • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

   என்னது "தந்திரமாக சசிகலாவையும் தினகரனையும் சிறையில் அடைத்தார்களா? அட பாவி மனுஷா? இப்படி பச்சயா புளுகிரியே? சதிகாரி உள்ளே போனது சுருட்டியதால்.....தினகரனை உள்ளே அடைத்தது லஞ்சம் கொடுக்க முயற்சித்ததால்....இன்னும் கொஞ்சம் விட்டால் இந்த ரெண்டு நாதாரிங்களையும் தேச தலைவர் ரேஞ்சுக்கு கொண்டுபோயிடுவே போல இருக்கே? ஸ்டாலினுக்கும் ஒரு நாளும் தமிழ்மக்கள் ஒட்டு போடமாட்டாங்க...நல்லவர் பன்னீர் ஏகோபித்த மக்கள் சொய்ஸ்

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   தமிழகமக்கள் ஏமாளிகள்.

  • Arumugam - Paris,பிரான்ஸ்

   திரு.சுரேஷ் கூறுவது முற்றிலும் உண்மை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்கள் இருவர் போட்டு கொள்ளும் போராட்டத்தில் தமிழக மக்களும்.... தமிழக அரசு இயந்திரமும்தான் கலக்கத்தில் உள்ளது...

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Actually we should appreciate Chinnamma for controlling these many MLA pigs as a lady. She may be the correct person to control these pigs, which is the " Sapakkedu " of TN.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எட்டப்பாடிகிட்ட இந்த பன்னீர் கொசு மாதிரி. சீக்கிரத்திலேயே மோடிக்கும், அமித்ஷாவுக்கும் சிலை வைத்து வணங்க உத்தரவிடடாலும் ஆச்சர்யப்பட முடியாது.

  • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

   ஹூம்...திமுக லோட்டா எல்லாம் கலைக்கிறமாதிரி ஆயிப்போச்சு... ஆனால் என்னதான் தலைகீழா நின்னாலும் திமுக சவக்குழிக்கு பூட்ட கேசு

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  // 'திடீர் புனிதர்' 0PS (காஞ்சிபுரம்) : எங்களால் இந்த ஆட்சி கவிழாது.. // ஆமா சார்.. உங்களால் இந்த ஆட்சி கவிழாது............... // 'திடீர் புனிதர்' 0PS (சென்னை) : எங்களால் இந்த ஆட்சி கவிழாது.. // சார்.. அதான் தெரியுமே உங்களால இந்த ஆட்சி கவிழாதுன்னு.. அப்புறம் ஏன் அதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.?.................. // 'திடீர் புனிதர்' 0PS (டில்லி விமான நிலையம்) : எங்களால் இந்த ஆட்சி கவிழாது.. // அலோ எங்களுக்கு தெரியாதா.. காலாவதியான முன்னாள் எம்.எல்.ஏக்களை மட்டும் வச்சிக்கிட்டு உங்களால கவிழ்க்க முடியாதுன்னு எங்களுக்கு தெரியாதா? சும்மா தொனத் தொனன்னு உளறிக்கிட்டு..

  • shankarvelu - watford,யுனைடெட் கிங்டம்

   ஹா ஹா lol

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இரண்டு கூட்டமும் காரியக்கொட்டு ஆகவே ஆட்சி மட்டும் பறிபோகாமல் கவனமாக பார்த்துக்கொள்வார்கள்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஏதோ அந்த அம்மா கஷ்டப்பட்டு , இந்த ஆட்சியை உருவாக்கி கொடுத்துட்டு போய்ட்டாங்க. அந்த ஆட்சியை நல்ல முறையில் நடத்தி சென்று , மக்களிடம் நற்பெயரை பெறுவதுதானே , அந்த அம்மாவுக்கு நீங்கள் செய்யும் நல்ல அஞ்சலியாக இருக்கும்.

  • krishna - chennai,இந்தியா

   ஜெயா போன்ற ஒரு கேடு கெட்ட கொள்ளை கூட்ட தலைவியை பார்க்க முடியாது.நமக்கு அவர் கொடுத்த சொத்துமன்னார்குடி மாபியா கூட்டம்.இன்னும் ஜெயா என்னும் ஈன பிறவியை பாராட்டினால் உங்கள் மூளையை பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்து kollavum

  • Jhansi Jasan - chennai,இந்தியா

   முதல்ல உங்க மூளைய கொண்டு போய் சிகிச்சை பாத்துக்கங்க ...அவங்க உயிரோட இருக்கும்போது எந்த இன்னலையாவது நீங்க சந்தித்ததுண்டா

  • Jhansi Jasan - chennai,இந்தியா

   இது போன்ற துரோக கூட்டத்தின் பேச்சுக்களை என்றும் நம்ப வேண்டாம்

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  நீங்கள் ஆட்சியை கலைக்கவில்லை என்றால், தமிழக மக்கள் உங்களை நல்லவர்கள் என்று ஏற்று கொள்ள மாட்டார்கள்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  எப்போ பன்னிரு விமானத்துல ஏறி பறக்கும்போது அந்த விமானத்தை ஒருத்தர் கும்புடுறாரோ அப்போதான் அ தி மு க வுக்கு ஜெயலலிதா மாதிரி பன்னிரும் தலைவர் ஆயிட்டாருன்னு அர்த்தம்

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

   கரெக்ட்டா சொன்னீங்க குஞ்சு...அந்த கட்சியில உள்ளவன் எல்லாவனும் ஜெயலலிதா இருக்கும்போது செம்மறி ஆடாகவும்...இல்லாத போது வெள்ளாடாகவும் இருக்கிறானுங்கோ...... செருப்பை தொட்டு கும்புட வைக்கக்கூடிய தலைவர் தான் இவனுங்களுக்கு லாயக்கு...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  எடப்பாடி மோடியிடம் சரணடைந்துவிட்டார். அதனால் தான், பன்னீர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இன்னும் ரெண்டு மாதங்களில் தேர்தல் என்பதெல்லாம் மதுசூதனின் கற்பனையாகத்தான் இருக்கும். பன்னீரை சமாதானமாக போக சொல்லி டெல்லியில் இருந்து உத்தரவு வரும். சேகர் ரெட்டியுடன் தொடர்பு கொண்டவருக்கு, சமாதானமாக போய் தானே ஆக வேண்டும். முதல்வர் கனவை கொஞ்ச காலம் முடக்கிவைத்து விட்டு, பன்னீர் எடப்பாடியுடன் ஐக்கியமாகிவிடுவார். சசி அண்ட்கோ வை, பிஜேபி க்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை. எடப்பாடி அரசை கலைப்பதற்கு, பிஜேபி எண்ணமும் இல்லை. ஏனனில், கலைத்தால், அது ஸ்டாலினுக்கு செய்யும் பெரிய உதவி. ஒரு வேலை ரஜினி, பிஜேபி இல் இணைந்தால் அல்லது தனி கட்சி தொடங்கினால், சிறிது காலத்திற்கு பின், அவரின் சூழ்நிலை சரியாக அமைந்தால், அதற்காக பிஜேபி தமிழக அரசை கலைக்க முன்னிடும். தற்போதைக்கு அதற்கான சாத்தியம் இல்லை. மதுசூதனன் மற்றும் பன்னீரின் வேலை முடிந்து விட்டது. பன்னீர் ஒரு சிறந்த தலையாட்டி பொம்மை. ஆள்வதற்கு உரிய திறமை எல்லாம் கிடையாது. சொன்ன வேலையை சிறப்பாக செய்து முடிக்கும் விசுவாசம் கொண்ட சிரிக்கும் மனிதர். பன்னீரை பற்றி மோடிக்கு கவலை இல்லை. எடப்பாடி தான் அமைதியான கில்லாடி. யார் காலில் விழுந்து பதவியை எப்படி தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதை கனகச்சிதமாக புரிந்தவர். சமயத்திற்கு தகுந்தவாறு மாறி, முதுகில் குத்தும் திறமை கொண்டவர். எடப்பாடியை யாரும் குறைந்தபடி எடை போட்டால், அதற்கான விலையை கொடுக்க நேரிடும்.

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

   எடப்பாடி காரிய புலி... பன்னீர் பாவம் கொஞ்சம் இடத்திற்கு ஏற்றாற்போல அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடியவர்... கூடிய சீக்கிரம் எடப்பாடி தினகரனை தூக்கி எரிந்து விட்டு தானே கட்சியை கைப்பற்றுகிறாரா இல்லையா பாருங்கள்... சிரித்து கொன்டே பின்னாடி வெடி வைப்பதில் அவர் கில்லாடி... மணலுக்கு பதிலா m sand என்று அறிவித்துவிட்டு அடுத்த நாளே அது இன்னும் மூன்று வருஷம் கழித்து என்று சொல்லிவிட்டு அடுத்த வாரமே ஏழு இடத்தில் புது மணல் குவாரிக்கு லைசன்ஸ் கொடுத்த காரிய சித்தன் அவர்... பன்னீர் , சசி, தினகர் உட்பட அனைவரையும் தூக்கி சாப்பிட போகிறார் இந்த சிரிப்பு வில்லன் .. பொறுத்திருந்து பாருங்கள்...

  • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

   ஐயோ பாவம் வில்லனுங்க ஒரு நாளும் ஜெயித்தது கிடையாதுங்கோ சின்ன சாமியோவ்

  • Arumugam - Paris,பிரான்ஸ்

   அன்பு சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது. தினகரன் விஷயத்தில் இவருடைய மவுனம் கேள்விக்குரியது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement