Advertisement

அண்ணா பல்கலை பட்டமளிப்பு: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை:அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்க தலைவர், அருள் அறம் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையில், துணைவேந்தர் இல்லை. பட்டமளிப்பு விழாவை இன்று நடத்த, பல்கலை சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. துணைவேந்தர் இல்லாமல், பட்ட மளிப்பு விழா நடப்பது, அண்ணா பல்கலை சட்டத்துக்கு எதிரானது.சட்டப்படி, துணைவேந்த ருக்கு உரிய பணிகளை,அவர் தான் மேற் கொள்ள வேண்டும். துணைவேந்தரை தேர்வு செய்ய, தேர்வுக் குழுவும் அமைக்கப்பட்டு விட் டது. பட்டமளிப்பு விழாவில், துணை வேந்தர் தான், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். எனவே, துணைவேந்தர் இல்லாமல் பட்ட மளிப்பு விழா நடத்த, சிண்டிகேட் நிறைவேற்றிய தீர் மானத்தை ரத்து செய்ய வேண்டும். பட்டமளிப்பு விழாவுக்கு, தடை விதிக்க வேண்டும். துணைவேந் தர் தேர்வு நடவடிக்கையை துரிதப்படுத்த, தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட வேண் டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கோவிந்தராஜ் பிறப்பித்த உத்தரவு:சட்டப்பூர்வமாக தடை ஏதும் இல்லாத பட்சத்தில், பல்கலை வேந்தர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவை, 19ம் தேதி நடத்தலாம். சிண்டிகேட் குழுவுக்கு, நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலை அதிகாரிகள் மூலம், பட்டமளிப்பு விழாவை நடத்தவும், அதற்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தர் பதவியை, பல்கலை உறுப்பினர் தான் வகிக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை உறுதி செய்ய, சட்டத்தில் ஏதும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சான்றிதழின் நம்பகத்தன்மையில் சந்தேகம் அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பட்டப்படிப்பு முடித்தோருக்கு, சென்ற ஆண்டே பட்டமளிப்பு
விழா நடத்தப்படவில்லை. அதனால், மாணவர் கள் வேலைவாய்ப்பு கிடைத்தும், பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த ஆண்டும்,மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதால், அரசு மாற்று ஏற்பாடு செய்து, இன்று பட்ட மளிப்பு விழா நடத்தப்படுகிறது. இதில், கவர்னர் வித்யா சாகர் ராவ், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் மற்றும் சிறப்பு அழைப் பாளராக, இஸ்ரோவின் பெங்களூரு மைய இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை ஆகி யோர் பங்கேற்கின்றனர்.

பட்ட சான்றிதழ்களில், இதுவரை பல்கலை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளே கையெழுத்திட்டு வந்துள்ளனர். இம்முறை துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல், இன்று பட்ட சான்றிதழ் வழங்கப் படுகிறது.

இந்த சான்றிதழ் மூலம், வெளிநாட்டு வேலை க்கு செல்லும் போது, எதிர்காலத்தில் சான்றித ழின் உண்மை தன்மையை அறிவதில் சிக்கல் ஏற்படும் என, மாணவர்கள் அச்சம் அடைந்துள் ளனர். 'ஓர் ஆண்டில் மட்டும், துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் இருந் தால், அது வெளிநாட்டு துாதரகம் மற்றும் வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களை சந்தே கம் அடைய செய்யும். 'பல்கலை மீதான நம்ப கத்தன்மை குறையும்' என, சில மாணவர்களும், பேராசிரியர்களும் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • Experiments on truth - Chennai,இந்தியா

  Past two years no VC in Univ of Madras, Anna university. Politicians expect more and more quantity from professors . Although few agreed but cm dead, noteban etc Stop quantity. Politicians ask not a new note or a old note. They ask just 100 rupee. Professors unable to give and also they unable to earn in tenure of three years.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  ஒரு துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை நடத்துவது தமிழக வரலாற்றிலே இதுதான் முதல் முறை. ஒரு துணை வேந்தரை தேர்ந்ததெடுக்க வக்கில்லாமல் ஒரு அரசு செயல்படுகிறது என்றால் அது தமிழக அரசாகத்தான் இருக்கவேண்டும். ஏன் என்றால், ஜாதி ஒருபக்கம், லஞ்சம் ஒருபக்கம் மறுபக்கம் மந்திரிமார்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பது போன்ற சிக்கல்கள். ஐயோ பாபம் தமிழக அரசு துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் ஒரு பட்டம் செல்லுபடியாகுமா? பின்பு மாணவ/மாணவிகள் வேலையுக்கு வெளிநாட்டுக்கு செல்லும்போது படத்தை பாடு படவேண்டியதுதான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பழனியும் பன்னீரும் எப்போ சண்டைக்கு விடிவுகாலம் பொறக்கிறது ... துணை வேந்தரை நியமிக்கிறது...கனவு காண வேண்டியதுதான்...அதுதான் நீதிமன்றம் தடை விதிக்க வில்லை...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வேந்தர்... துணை வேந்தர்... எல்லாம் பிரிட்டிஷ் கால வழிமுறைகள்.... அடிமைத்தனம் ஒழியவேண்டும்...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  காந்தி காலத்து நடைமுறைகளை சுட்டி காட்டி, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்க கூடாது. துணை வேந்தர்கள் பணம் கொடுத்து பதவிக்கு வந்து, கொள்ளை அடித்த பொது இவர்கள் எப்படி வாய் மூடி இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருக்க வேண்டும். கல்யாணி கை எழுத்து போடவில்லை என்றால், கருமாதியா வந்து விட்டது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement