Advertisement

தினகரன் குரல் மாதிரி எடுக்க கோர்ட் அனுமதி

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சசிகலாவின் அக்கா மகன் தினகரனிடம், குரல் மாதிரி எடுத் துக் கொள்வதற்கு, டில்லி போலீசுக்கு, கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

அ.தி.மு.க., பிளவுபட்டதை தொடர்ந்து முடக்கப் பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர் தல் கமிஷன் அதிகாரிகளுக்கு,50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.'இந்த வழக்கு தொடர்பாக,
தினகரன், இடைத் தரகர் சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய, 'சிடி' கிடைத்துள்ளது. அதை உறுதி செய்வதற்கு, தினகரன் மற்றும் சுகேஷ் சந்தரின் குரல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்' என, டில்லி போலீஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்துபதிலளிக்கும்படி இருவருக்கும்,' நோட் டீஸ்' அனுப்பப்பட்டது. 'குரல் மாதிரி எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது' என, தினகரன் சார்பில் வலியுறுத்தப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும்
கேட்ட, ஊழல் தடுப்பு சட்டசிறப்பு கோர்ட் நீதிபதிபூனம் சவுத்ரி, தினகர னின் வாதத்தை நிரா கரித்தார். இருவரிடமும் குரல் மாதிரி எடுத்துக் கொள்ள, போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  வேற ஏதாவது சாம்பிள் எடுக்குறேன் பேர்வழி ன்னு எடுத்து விட்டுராதீங்க...சிறு வயசு..பாவம்...

 • narayanan iyer - chennai,இந்தியா

  Dinakaran has applied for jaamin. It has been posted for Monday. Why? Is Judge expecting from this hero for settling any issue in personal? When move came to court , the court must have dismissed his petition. Sorry the situation now a days not allowing to believe any one in the society.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  குரல் மாதிரி எடுப்பீங்களோ...இல்ல குரல்வளையை பிடிப்பீங்களோ.....தப்பிக்க விட்டுடாதீங்க நீதியரசர்களே....தமிழ்நாட்டில் திடீர் என்று முளைத்த ... இது .....தமிழ்நாட்டின் அரசியலை குழப்பியதே இந்த நாதாரிதான்....ஆகவே இந்த பயலுக்கும் குறைந்த பட்சம் ஏழு வருஷமாச்சும் தண்டனை கொடுத்து உள்ளெ தள்ளினீங்கனா...ஜனங்க உங்களை வாழ்த்துவங்க

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தப்பிக்க முதல் வழி ஆரம்பம்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவன் கிரிமினல் என்று உலகுக்கே தெரியும் - இருந்தும் நேரத்தை வீணடிப்பது தவறு...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  அப்படியே அவரது முழு உடல்நல ஆரோக்கியத்தையும் பற்றி ஒரு certificate கொடுத்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

 • Karthik - Chennai,இந்தியா

  மாதிரி குரல் எல்லாம் வீண். குரலை மாற்றி பேசினால் என்ன பண்ண முடியும். இன்னைக்கு டெக்னாலஜி எவ்ளோ வளர்ந்து விட்டது. வேறுவிதத்தில் தான் ஆதாரங்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  திருவள்ளுவருக்கு அப்புறம் குரல் இயற்றும் தமிழர் தினகரன் என்ற பெருமை அ தி மு க வுக்கு கிடைச்சு இருக்கு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement