Advertisement

30 ஆண்டுகளுக்கு பின் பீரங்கி மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:இந்திய அரசியலை உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் வெளிவந்து, 30 ஆண்டுகளுக்கு பின், நவீன பீரங்கிகளை, மத்திய அரசு வாங்கிஉள்ளது.

காங்கிரசை சேர்ந்த மறைந்த பிரதமர் ராஜிவ் பதவி காலத்தில், சுவீடனில் இருந்து பீரங்கிகள் வாங்கியதில், காங்கிரஸ் பிரமுகர்கள் கமிஷன் பெற்றதாக, புகார் எழுந்தது. இதனால், இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு, 1989 லோக்சபா தேர்த லில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

இந்நிலை யில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லை பகுதியில் அடிக்கடி பதற்றமான சூழல் உருவாகி வருவதால், பீரங்கி படையை பலப்படுத்த, நம் ராணுவம் முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு தயாரிப்பு பீரங்கிகள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்து, பீரங்கிகளை வாங்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, போபர்ஸ் ஊழல் புகார் வெளி வந்து,30 ஆண்டு களுக்கு பின், தற்போது, வெளிநாடுகளில் இருந்து பீரங்கி வாங்கப்பட்டுள்ளது;அமெரிக்காவிடம் இருந்து, இரண்டு அதிநவீன பீரங்கிகளை மத்திய அரசு வாங்கியுள்ளது. இலக்கை நோக்கி துல்லி யமாக சுடக்கூடிய இந்த வகை பீரங்கிகள், நேற்று இந்தியா வந்து சேர்ந்தன. இலகு ரக, நவீன பீரங்கிகளான இவை, சீனா எல்லையில் நிறுத்தப்பட உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (37)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இந்தியாவின் எல்லை பகுதிகள் இரண்டு விதமானவை. இரண்டுமே மிகவும் சிக்கலானவை. ஒன்று பறந்து விரிந்த கடல் பகுதி. கண்காணிப்பில் தான் அதிக அக்கறை வேண்டும். நீர்மூழ்கிகளும், கப்பல்படையும் மிகவும் நவீரனா படுத்த படவேண்டும். ஹெலிகாப்டர் மற்றும் சோனார் ரேடார் கண்காணிப்புகள் உயர்த்தப் படவேண்டும். சுற்றி இருக்கும் தேசங்கள் மிகவும் சிறியவை ஆபத்துகள் பெரிதாக இல்லை. அடுத்தது கடுமையான பணியும், மழைகள் கொட்டி தீர்க்கும் நதி வெள்ளைப் பெருக்கெடுத்து ஓடும் காலநிலை தாறுமாறாக மாறும் இமையமலை. மிகவும் சிக்கலான எல்லை. பாதுகாப்பு மிகவும் பிரச்சினைக்குரியது. சிறிது சிறு தீவிரவாத குழுக்கள் தனி தனியாக நுழையும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் உள்ளே நுளைந்தாள் வரும் உள்நாட்டு ஆபத்து பெரிது. சில வழிகள் மூலம் மட்டுமே ராணுவத்தின் சில பட்டாணியங்கள் நுழைய முடியும். அதை கருத்தில் கொண்டு நவீன ரக பீரங்கிகள், சிறு ஏவுகணைகள் நிறைய தேவை. இவர்கள் போபார்ஸ் பீரங்கிகள் வாங்கிய போதே கூடவே சோப்மா வகை பீரங்கிகளை வாங்கி இருக்கலாம். பேரத்தில் சாதாக விலை கிடைத்திருக்கும். நாம் ஆப்பிள் போன் வைத்திருந்தாலும் சாம்சங் போனும் சாதரண நோக்கியாவும் வாங்கி வைத்திருப்பதில்லையா. அதை எப்போது எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்து அதன் பொருட்டு வாங்கி வைப்பது போல. வேறு சில நிறுவங்களிடமிருந்தும் வாங்கும் நடைமுறையை அமல் செய்திருக்கவேண்டும் அதை செய்ய வில்லை. யார் அதிகம் லஞ்சம் கொடுத்தார்களையோ அவர்களிடமிருந்து மட்டுமே பீரங்கிகளை வாங்கினார்கள். எல்லாம் இருக்கட்டும். நாம் அமெரிக்க ரஷியா விடமிருந்தும் இஸ்ரேலிடமிருந்தும் ராணுவ கவச உடைகளையும் வாங்க வேண்டும் அதிக அளவில் அதில் கோட்டை விட்டு விட கூடாது. எதிரியிடம் மாற்றுகின்ற நமது ராணுவ வீரர்கள் தப்பிக்கவோ அல்லது அவர்களை கொன்று விட்டு உயிர் தியாகம் செய்யவோ வழியில்லாமல் போய் விடுகிறது நமது கவச உடைகளின் தன்மை. எதோ பெயரளவிற்கு ஹெல்மெட்டாய் வண்டியில் மாட்டி வைத்து விட்டு தடையாய் வீலெர் ஒட்டி செல்வது போலத்தான் ராணுவ வீரர்களுக்கு கவச உடைகள் தரப்பு பட்டிருக்கிறது. கவச உடையை முதன் முதலில் பயன் படுத்தியதே இந்தியர்கள் தான். துரியோதனனின் கவச உடை நமது ஒவ்வொரு ராணுவ சகோதர சகோதஹ்ரிகளுக்கு கட்டாயம் தரபடவேண்டும்.

 • Amaladas - coimbatore,இந்தியா

  அப்பே இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் சண்டை வராதா ? சும்மா தான் பீரங்கி வாங்கி இருக்கோமா ?

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  எல்லாம் நேரம்டா சாமி.... நாம ஏற்றுமதி செய்த மூளைதான் இந்த பீரங்கியை வடிவமைத்திருக்கும்.. முதலில் IIT போன்ற தரமான கல்விக்கூடங்களில் படிக்கும் மாணவர் குறைந்தது 5 வருடம் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்ற கண்டிப்பு வேணும். சும்மா சூப்பர் பவர் ... சூப்பர் பவ்ர் என்று வாயால் சொன்னால் பத்தாது... நாம் இன்னும் ஐஸ் குச்சியை சூப்புற பவராதான் இருக்கோம்.....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாங்கி என்ன புண்ணியம்... அனைத்து படைக்கலன்களும் உபயோகிக்காமல் துருப்பிடித்து அல்லவா கிடக்கிறது....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எல்லா டிப்ளமேடிக் ராஜீய உறவு ஒப்பந்தங்களிலும் அவற்றுக்கு விலையாக ஆயுதங்களை அதிக விலைக்கு வாங்குதல் மரபுதான் பாஜகவும் அம்மரபுப்படி (??) பீரங்கி வாங்கியுள்ளது ஏனெனில் அந்நாடு சொந்தமாக விலைகுறைவாக தரமாக செய்யும் தொழில்கள் ஆயுதம் மது மற்றும் விபச்சாரமும்தான்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பீரங்கியை பற்றி இப்பவே பெருமை பட்டுக்கொண்டால் தான் உண்டு. அடுத்து ஆள வருபவர்களுக்கும் இந்த சி பி ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் அடி பணியுமே............

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஆமா இந்த ஊழல் விடயத்தை நம்ம துப்பறிவாளர், சு.சாமி இந்த 30 வருடமாக என்னசெய்தார், இதை பற்றி போட்டுக்கொடுக்க அவருக்கு இத்தாலி மச்சான்ஸ் கிடைக்கவில்லையா? அல்லது ராஜிவ் கொலை கேசில் மாட்டிவிடுவாங்க என்று பயமா?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பிரச்சினை செய்யும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடுகொடுக்க ஆயுதம் வாங்கித்தான் ஆகவேண்டும்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அமெரிக்காவின் பீரங்கிகளுக்கு, இன்றைய காலகட்டத்தில், மிகவும் அனுபவம் அதிகம் எனலாம். அந்த நம்பிக்கையில் அந்த பீரங்கிகளை இந்திய அரசு வாங்குதோ? .

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  மலை பிரதேசங்களுக்கு இப்படிப்பட்ட பீரங்கிகள்தான், யூசர் பிரென்ட்லி-யாக இருக்கும் (இராணுவத்துக்கு).

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  வர விருக்கும் நாடாளு மன்ற தேர்தலில், என்னதான் எதிர்கட்சிகளை ரைட் மூலம் மிரட்டி ஒடுக்கினாலும், மக்களுக்கு கொடுக்க பணம் வேண்டுமே? இல்லையென்றால் ஒட்டு போட மாட்டார்களே பொதுஜனம்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  முப்பது வருஷம் கழிச்சும் வெளிநாட்டுல இருந்துதான் வாங்கணுமா ? முப்பது வருசமா சொந்தமா பீரங்கி தயாரிக்குற அளவுக்கு நம்ம அறிவை நாம வளர்த்துகுலையா ? உள்நாட்டு தயாரிப்பு பீரங்கிகள் கிட்ட எதோ குறை இருக்கு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement