Advertisement

குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

டேராடூன்:'ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதி, குளிப்பதற்கு கூட லாயக்கில்லாத அளவு மாசடைந்து உள்ளது' என, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந் திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேவப்பிரயாகையில் உற்பத் தியாகும் கங்கை நதி, ஹரித்துவார் உள்ளிட்ட
முக்கிய நகரங்கள் வழியாக ஓடுகிறது.கங்கையில் குளித்தால்பாவங்கள் அகலும் என்பதால், லட்சக் கணக்கானோர், கங்கையில்புனித நீராடுகின்றனர்.

ஹரித்துவார் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித் துள்ளது. முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைக்கப்படாததால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, கங்கையில் கலக்கி றது. இதனால், கங்கைநதி மாசடைந்துஉள்ளது.

இந்நிலையில், தகவல்அறியும் உரிமைசட்டத்தின் கீழ், கங்கை நதி நீரின் மாசு தன்மை குறித்து கேட் கப்பட்டகேள்விக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்அளித்துள்ள பதில்:

உத்தரகண்டில், கங்கோத்ரி முதல், ஹரித்துவார் வரை, 11 இடங்களில் கங்கை நதிநீர் மாதிரிகள் ஆய் வுக்காக எடுக்கப்பட்டன. தண்ணீரின் வெப்ப நிலை, ஆக்சிஜனின் அளவு மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை வைத்து, சோதனை நடத்தப் பட்டது.

இதில், கங்கை நதிநீர், குடிப்பதற்கும், குளிப்ப தற்கும் பாதுகாப் பற்றது என்பது தெரிய வந்துள் ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (51)

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  மிகப் பெரிய பாவம் செய்துட்டீங்களேடா... இனி எங்கு போய் உங்கள் பாவத்தைப் போக்குவீங்க?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  நீங்க காச கொட்டி சுத்தம் பண்ணவே வேண்டாம். அதை அசுத்தம் பண்ணாம இருந்தாலே போதும்.

 • Kaunakaran Narayanasamy - chennai,இந்தியா

  நம்ம நாட்டில் எந்த நதி சுத்தமாக ஓடிகிக்கொண்டிருக்கிறது, மனிதனின் சுயநலத்தினாலும், அறிவிண்மியானாலும் எல்லா இயற்கையும் அழித்து கொண்டிருக்கிறான், கடைசியில் அனைவரும் அழியப்போகிறோம்

 • Visu Iyer - chennai,இந்தியா

  கங்கையில் குளிக்க தடை என்று சட்டம் போட போறாங்க.. அதற்கான முன் மாதிரி செய்தி தான் இது... இதற்கு தானே ஆசை பட்டாய் ராசகுமாரா

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இதெல்லாம் தமிழனுக்கு பெரிய விஷயமே இல்லை . எப்போ தலைவன் படம் வரும் உழைத்து சேர்த்த பணத்தை குடும்பத்துக்கு கொடுக்காமல் அவனிடம் கொட்டி இன்னும் எப்படி அம்பானி அளவிற்கு பணக்காரன் ஆக்கலாம் . எப்படி அவனை தமிழ நாட்டையே கொடுத்து பில் கேட்ஸ் அளவுக்கு ஆகலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள்.

 • Kalyani S - Ranipet,இந்தியா

  நல்லவேளை புனித கங்கை நதி தமிழகத்தில் ஓடவில்லை இல்லை என்றால் தமிழிசைகளும், ராஜாக்களும் 50 ஆண்டுகால திராவிட ஆட்சி தான் ஊழல் மிகுந்த நிர்வாகத்தால் கங்கையை மாசு படுத்தி விட்டது என்று ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

 • krishna - cbe,இந்தியா

  மாசுபடுதல் என்பது மக்களின் செயல்களால் மட்டுமே. மக்கள் வசிக்காத பகுதிகளில் மாசடைவது இல்லையே.

 • Rahim - Jubail,சவுதி அரேபியா

  சுத்தப்படுத்த முடியாது என்று தெரிந்தும் கங்கையை சுத்தமாக்க 3000 கோடி ரூபாய் ஒதுக்கி ஊழலில் திளைக்கிறது மத்திய அரசு அதோடு சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 2500 கோடி , ஆனால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1700 கோடி அதுவும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பாதி தொகையும் மீதி கொஞ்சம் கொசுறுகள் மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு, ஆகா பேஷ் பேஷ்.

 • rammeshbabu - bangalore,இந்தியா

  15 வருடங்களுக்கு முன்பு ஓர் பிளாஸ்டிக் கேனில் ஹ்ரித்வாரில் இருந்து எடுத்து வந்த கங்கை நீர் இன்னுமும் துர்நாற்றம் வராமல் இருக்கிறது. இயற்கை அதனை பாதுகாத்து கொள்ளும் நம்மால் முடிந்த வரியில் நதிகளை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும். அது தான் நாம் இயற்கைக்கு செய்யும் பரிகாரம்

 • ரினேக்ஷ் -

  நம்மவர்கள் கூவத்தை சுத்தம் செய்கிறோம் என்று சொல்வதைப் போல், BJP கங்கையை சுத்தம் செய்வதாக சொல்லியது என்ன ஆனது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இயற்கையே இயற்கைக்கையை மாசு படுத்தாது.... இதற்க்கு மனித குலம் தான் முக்கிய பொறுப்பு...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  பல நதிகள் வரைபடத்தில் தான் இருக்கிறது, தண்ணீர் இல்லை என்று வருத்தப்பட்ட நமது பிரதமரிடம் தான் இந்த தகவலை அனுப்பவேண்டும், கங்கை நதியை தூய்மைப்படுத்தி தேம்ஸ் நதி போல மாற்றுவேன் என்று சொன்னவர் நமது தானைத்தலைவர் பிரதமர் தான், தகவல் கேட்கும் உரிமை சட்டத்தின் படி இந்த தகவலாவது வந்ததே அதுவே பெருமை தான்

 • Raamji - chennai,இந்தியா

  இந்நிலையில், தகவல்அறியும் உரிமைசட்டத்தின் கீழ், கங்கை நதி நீரின் மாசு தன்மை குறித்து கேட் கப்பட்டகேள்விக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்அளித்துள்ள பதில்:பலமுறைகள், பல வழிகளிலும் ஒரே சிறந்த வழியினை எழுதி வருகிறேன்:- நம்நாட்டின் ஆன்மீக சந்யாசிகளுக்கும், ஆன்மீகவாதிகளும், பக்தர்களும் இனைந்து "உஷ்ணம் உஷ்ணேன சாம்யதி" உஷ்ணத்தை உஷ்ணத்தினால்தான் குளிர்விக்க முடியும் என்ற உண்மைக்கு ஏற்ப, மத்திய, மாநில நெடுஞ்சாலைகளில் புளிய மரங்களை நட்டோமேயானால், இதுவே புவி காக்கும் புளி. இதுவே வரும் காலத்திற்கு அனைத்து ஜீவன்களும் இன்பமாக வாழ்வழி வகுக்க வேண்டும். ரஜினி அரசியல் சாக்கடையில் முழ்குவதை விட மக்கள் உண்மையில் நல்ல முறையில் வாழ்கிற வழியை ஏன் தேர்ந்தெடுக்க கூடாது.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மாசுப்பாட்டுக்கான காரணங்கள் அப்படியே இருக்கும் வரை, எதையம் யாராலும் மாற்ற முடியாது. காசை கொட்டுனா மட்டும் கங்கை சுத்தமாயிடாது.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கழிவுகள் சேராமல் தடுக்கவே பல லட்சம் சிறு ஆலைகள் தொழில் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும் சுமார் ஒரு கோடி சிறிய மாற்றம் பெரிய வெஈடுகளை ஆகற்றவேண்டியிருக்கும் குரைந்தது மூன்று கோடி பேரை மாற்று இடத்தில் குடியேற்றவேண்டியிருக்கும் .இதில் சிறு தொழில் முனைவோரின் பெரும்பகுதி சிறுபான்மையினர் வேறு கட்டாயப்படுத்தி வெளியேற்றினால் குண்டுவெடிப்புதான் இந்த நிலையில் மிகப்பெரிய அத்திட்டம் போட்டுத்தான் சுத்தப்படுத்தமுடியும் ஏனெனில் அதில் சுமார் பதினைந்து கோடி மக்களின் வாழ்வாதாரம் அடங்கியுளளது

 • kundalakesi - VANCOUVER,கனடா

  ஹரிதவாரில்தான் கங்கை இமயத்தில் இருந்து இறங்கி சமவெளியை தொடுகிறது. அங்கேயே மாசு அதிகம் என்றால் கீழ்வரும் நூற்றுக் கணக்கான துறைகளில் எப்படி?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிலருக்கு கங்கையை சுத்தம் படுத்துவது வீட்டை சுத்தப்படுத்துவது போல எளிதான விஷயமாக தெரிகிறது... கங்கையை உதாரணமாக எடுப்பதற்கு முன் சில நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள கூவத்தை எடுத்துக்கொள்ளலாம்... முக அந்தக்காலத்தில் கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று 100 (70 களில் நூறு கோடி என்பது இன்று 50,000 கோடி) கோடி செலவு செய்து முதலை மட்டும் வாங்க முடிந்தது... இன்றுவரை கூவம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது... கங்கையை சுத்தப்படுத்த பல மாநிலங்கள் கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்த வேண்டும்... தொழிற்சாலை மற்றும் கழிவுகளை கலப்பதை தடுத்து அவற்றை அப்புறப்படுத்த போதிய கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும்... பிள்ளை பெற குறைந்தபட்சம் 10 மாதம் வேண்டும்... அதை எக்காரணம் கொண்டும் மாற்றி விடமுடியாது...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  நம்மூரு அதிகாரிகள்/அரசியல்வாதிகள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், ஆறுகள் வடிகால் அல்ல, கழிவுகள் காட்டப்படுவது, கலக்கப்படுவது கண்டிப்பாய் தடுக்கப்பட வேண்டும், அறப்போராட்டம் நடைபெறுமா?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ராஜிவ் காந்தி காலத்தில் இருந்து இது வரைக்கும் ஒரு லட்சம் கோடிகள் கங்கையை சுத்தப்படுத்த அதெற்குள் போடப்பட்டு இருக்கிறது கொசுறு தகவல். ஆனால் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அந்த கணக்கு வழக்குகளை பற்றி கேட்ட போது அதிகாரிகள் பேந்த பேந்த விழித்தார்கள். அந்த அளவுக்கு கங்கையை சுத்தம் பண்ணினார்களையோ இல்லையோ கணக்கை "சுத்தம்" பண்ணி விட்டார்கள் அந்த பன்னிகள்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  கங்கையே சூதகம் ஆயிருச்சா ? என்ன ஆச்சு தூய்மை பாரதம் திட்டத்துக்கு ? ராமர் கோயில்தான் கட்டுல கங்கையையாவது சுத்தம் பண்ணியிருக்கலாமே?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  மலை பிரதேசமான ஹரித்துவாரில் இந்த நிலை என்றால், பிஹாரில் ஆற்றில் இருந்து நூறு அடியிலேயே துர்நாற்றம் தாங்காது. நமது புண்ணிய நதியான தம்பிரபரணியில் பொதுப்பிணி துறை நெல்லையில் கழிவு நீரை ஆற்றில் விடும் திட்ட்த்தில் மிக மும்முரமாக இருக்கின்றது. நீர்நிலைகளை தூர் வாராவிட்டாலும் பரவாயில்லை, காசு சம்பாதிப்பதற்காக நீர் நிலைகளை கொல்லும் இவர்களை சாகும் வரை தூக்கில் போட வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement