Advertisement

ஜெ.,யின் கடைசி ஆலோசகரும் 'டாட்டா' விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

அரசு ஆலோசகர்களாக, ஜெயலலிதாவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்ட நிலையில், கடைசியாக, பதவியில் தொடர்ந்து கொண்டிருந்த டில்லி உயர் அதிகாரியும், விரைவில் விடுவிக்கப்பட லாம் என, தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசின் அதிகாரப்பூர்வ பதவிகளை தாண்டி, சிலரை, அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட, தன் ஆலோசகர்களாக நியமித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் வீசிய, அரசியல் புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், இவர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே கழன்று கொண்டனர்.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்களில், இன்னமும்
நீடித்துக் கொண்டிருக்கும் ஒரே அதிகாரி, பவன் ரெய்னா மட்டுமே; இவருக்கு, டில்லியில் உள்ள, பழைய தமிழ்நாடு இல்லத்தில், தனி அலுவலகம் அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தை பூர்வீகமாக உடைய இவர், தன் நீண்ட அனுபவம் காரணமாக,டில்லி அதிகார வட்டாரங்களில், புகுந்து வரக் கூடியவராக கருதப் பட்டார்.இதனால், ஜெயலலிதாவின் சிறப்பு நியம னங்களில் ஒன்றாக, டில்லியிலும் ஒரு ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டு, அதில் அமர்த்தப்பட்டவர் தான் இவர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத் தில், சுகேஷ் சந்தர் கைதானபோது, டில்லியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தமிழ்நாடு இல்ல உயர் அதிகாரியான பவன் ரெய்னா பெயர், இந்த விவகாரத்தில் அடிபட்டது.

லஞ்ச விவகாரம் தொடர் பான பேரம், தமிழ்நாடு இல்லத்தில் நடந்ததாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலருக்கு, இங்கு அறைகள் ஒதுக்கப் பட்டதாகவும், அதில், அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், டில்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான், அரசு ஆலோசகர் பதவியில்
இருந்து,ராஜினாமா செய்படி, பவன் ரெய்னா வுக்கு,தலைமை செயலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ரெய்னாவின் ராஜினாமா கடிதம், சென்னைக்கு போய்விட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறி விப்பு விரைவில் வெளியாகும்.இதன் மூலம், ஜெயலலிதா காலத்தில் அமைக்கப் பட்டிருந்த, உயர் அதிகார கட்டமைப்பின் கடைசி செங்க லும், அகற்றப்பட உள்ளது. என அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

 • rama - johor,மலேஷியா

  அம்மா திறமையானவர்களை வைத்து ஆட்சி செய்து வந்தார். இனி தமிழ்நாட்டுக்கு நல்லவர்கள் தேவையில்லை. நடிகர்கள் திறமையான பேச்சாளர்கள் ஒன்றுக்குமே புரோஜனமில்லாத தலைவர்கள் இவர்கள்தான் தமிழ்நாட்டை ஆளப்போகின்றனர். நாசமாகப போகிறது தமிழ்நாடு

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இவர்கள் தான் வித்திட்டது எதிலும் அம்மா என்ற கொள்கையை. அம்மா தண்ணீர் முதல் அம்மா சிமெண்ட் வரை. யாருடைய காசு அரசுடையதா அம்மாவுடையதா??என்ன ஒரு அகங்காராமான, கீழ்த்தரமான அசிங்கமான சிந்தனை? தர்மம் செய்பவர்கள் கூட தான் தான் தர்மம் செய்தேன் என்று சொன்னால் அது தர்மம் ஆகாது, தன்னை எல்லோரும் புகழ வேண்டும் என்று சொல்லும் ஆர்வக்கோளாறு ஆகும். இந்த மாதிரி கூமூட்டைகள் காட்டிய வழிகாட்டுதலினால் தான் டாஸ்மாக் நாடு நாசமானது. நிலக்கரி செகிரேட்டரியை பிலு பிலு என்று பிடித்தது போல் இவர்களையும் பிடித்து விசாரித்தால் அதே ஊழல் புராணம் தான் இருக்கும். இவர்கள் செய்தது அரசு வேலை அல்ல மாமா வேலை.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அத்தாவே இல்லியே ?இவுங்க இன்னுமா வாங்கி தின்னுகிட்டு இருக்காங்க? ருசி யார உட்டுது? ஆனா கொஞ்சமாவது வெக்கம் இருக்கனும்?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரைதான் பாம்புக்கு மரியாதை.... பரமசிவன் இல்லை என்றால்...

 • sam - Doha,கத்தார்

  ஜெயலலிதா ஆலோசகர்கள் எல்லாம் நன்றாக சம்பாதித்து விட்டார்கள். இனியும் இருந்தால் அவர்களும் மாட்டி கொள்வார்கள் என்பதால் தான் வெளியேறுகிறார்கள்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எம் ஜி ஆர், ஜெயலலிதா பெயரை உச்சரிக்கூட தடை வரலாம். அறிஞர் அண்ணாவின் படம் இன்னும் அக்கட்சி கொடியில் இருப்பது ஆச்சர்யமான விஷயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement