Advertisement

நடிகர் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு

புதுடில்லி:''அரசியல் பற்றியோ, மக்கள் பிரச்னை பற்றியோ, நடிகர் ரஜினிக்கு என்ன தெரியும்; அவர் அரசியலுக்கு வர வேண்டும் என, ஏன் விரும்புகின்றனர்,'' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி, கடந்த சில நாட்களாக, தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் அரசிய லுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூகதளத்தில்வெளியிட்டுள்ள பதிவு:
தென் மாநில மக்கள் மீது, எனக்கு மிகுந்தமதிப்பு உண்டு. ஆனால், திரைப்பட நடிகர்கள் மீது, அவர் களுக்கு உள்ள அபிமானம் மற்றும் முட்டாள்தன மான பக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. நான், 1967 - 68ல், அண்ணாமலை பல்கலையில் படித்த போது, சில தமிழ் நண்பர்களுடன் படம் பார்க்க சென்றேன். படத்தின் துவக்கத்தில், நடிகர் சிவாஜி கணேசனின் காலை காண்பித்த போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தற்போது, நடிகர் ரஜினி மீதுபைத்தியமாக உள்ளனர். அதில் சிலர், அவர் அரசியலுக்கு வர வேண்டும்; தமி ழக முதல்வராக வேண்டும் என்கின்றனர். ஆனால், ரஜினியிடம் என்ன உள்ளது; வறுமை, வேலை யில்லா திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார வசதியின்மை, விவசாயிகளின்
பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்ப்ப தற்கு, அவரி டம் திட்டம் எதுவும் உள்ளதா; அப் படி ஏதும் அவரிடம் இருப்பதாக நான் நினைக்க
வில்லை. அப்படியிருக்கும் போது, அவர் அரசி யலுக்கு வர வேண்டும் என, ஏன் அழைக்கின் றனர்; அமிதாப் பச்சனை போலவே, நடிகர் ரஜினிக்கும் தலை யில் ஏதுமில்லை.இவ்வாறு கூறி உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (73)

 • Kongu maakkan - Tuticorin,இந்தியா

  கொள்ளையடிக்க வரவனுங்கதாங்கய்யா பிளான் போட்டுட்டு வரணும்... நல்லவங்களா ஆண்டவன் நடத்திடுவாங்கய்யா.. ஜுட்ஜையா...

 • Kongu maakkan - Tuticorin,இந்தியா

  அது என்னய்யா தலைவரை தப்பா சொல்றவங்க எல்லாருமே தமிழன் இல்ல டேக்ஸ் கட்டலன்னு சொல்றிங்க.. இன்றைய அரசியலுkku அறிவாளிகள் விட நல்லவர்கள்தான் தேவை.. தலைவரை மிஸ் பண்ணிடாதிங்கப்பா..

 • Kongu maakkan - Tuticorin,இந்தியா

  நானும் பச்சை தமிழன்தான்.. சும்மா மொழி மத இன உணர்வுகளை தாண்டி சிந்திக்க பழகுங்கள்... கருத்து சொல்றவங்கள சொன்னேன்..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பழனிசாமி , பன்னீர் , தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜு , மோடி இவர்களை பார்த்து ,ரஜினிக்கும் ஆசை வந்துவிட்டது . இது தேசத்தின் அவலம் . இனி இந்தியாவை யாரும் காப்பாத்த முடியாது .

 • Guna - Chennai,இந்தியா

  அட வரட்டுமே யார் யார் அரசியலுக்கு வரவேண்டும் என ஏதாவது நியதி உண்டா ? இதுவரை வந்த அரசியல்வாதிகள் முன் அனுபவம் பெற்றா வந்தார்கள் ? எல்லாரும் வந்த பிறகு கற்றுக்கொண்டவர்கள் தான். மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்கள் தான் இப்படி எல்லாம் பட்ச பாதம் பார்ப்பார்கள். இது ஜனநாயக நாடு. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள். உண்டாகும் அதிகாரங்கள் எல்லாம் இறைவனால் தான் உண்டாகிறது.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  கட்ஜு குதர்க்கமான பல பதிவுகளை இட்டாலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தாக தான் உள்ளது ஆதலால் வெறுப்பு விருப்பின்றி வரவேற்க தான் வேண்டும்

 • Rajinikanth - Chennai,இந்தியா

  கட்ஜு கருத்து சொல்லிட்டாப்புல ..நெட்டிசன்களே.. ஸ்டார்ட் மியூசிக் .... ஏன்னா.. மனசுல பட்டதைத்தான் இந்த ஊருல பட்டுன்னு சொல்லமுடியாதே

 • V.Ravichandran - chennai .,இந்தியா

  வயசு , கெளரவம் இதையெல்லாம் விட்டு கட்ஜூ பேசுகிறார் .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக் நாட்டை தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் ஒரு நடிகன், நடிகை அந்த மாநிலத்தின் முதன் மந்திரி ஆகவே இல்லை? அப்படியென்றால் டாஸ்மாக் நாடு அவ்வளுவு கூமூட்டைகள் சேர்ந்த நாடா? கேவலம்???? தமிழன் தலை குனிந்து நிலம் பார்க்கின்றான் கூனிக்குறுகி அவமானத்தில் இந்த நடத்தையினால்? இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் "குடி" தான், டாஸ்மாக் நாட்டில் 72 % குடிகாரர்கள் என்கின்றது ஸ்டாட்டிஸ்டிக்ஸ்.

 • தறுதலைஜி - Coimbatore,இந்தியா

  நீர் உன் வயதிற்கும் இருந்த பதவியின் கௌரவத்திற்கும் உகந்தமாதிரி பேசாம விளம்பர வெறி பிடிச்சு அலைகிறீரே இது நல்லவா இருக்கு?

 • Jothi - Thiruvananthapuram,இஸ்ல் ஆப் மேன்

  ரஜினி ஒரு கையால் பத்து பேரை அடிப்பார். ஒரே பாட்டிலே தமிழ் நாட்டை உச்சத்துக்கு கொண்டுவந்துடுவார். இதெல்லாம் ஜட்ஜ் சார் உங்களால முடியுமா? முடியுமா? முடியுமா? சொல்லுங்க சார்? சொல்லுங்க.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Katju is a congress oriented leader,he mentioned akhilesh as a visionary leader during up polls, rajini better than Stalin or seeman

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  ஒரு கண்டக்டர் பஸ்சை வழிநடத்தலாம். ஆனால் ஒரு நாட்டை, நினைத்தாலே குலை நடுங்குகிறது

 • suresh - Chennai,இந்தியா

  நடிகர்கள் அளவுக்கு மிஞ்சிய பணம், புகழ் மற்றும் செல்வாக்கால் திளைப்பவர்கள். மக்கள் அனைவரையும் ரசிகர்களாகவே நினைப்பவர்கள். சாதாரண மக்களின் கஷ்ட நஷ்டங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒருபோதும் அவர்களால் சிறந்த, நேர்மையான, வளர்ச்சி நோக்கிய ஆட்சியை தரவே முடியாது. தமிழ் நாடு தற்போது எல்லா துறைகளிலும் சீரழிந்து கிடப்பதற்கு நடிகர் நடிகைகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தமிழா பட்டது போதும். இனி ஒருபோதும் கூத்தாடிகளை நம்பி உன் குடுமியை கொடுக்காதே. அப்படி கொடுத்தால் வருங்கால சந்ததி உன்னை கழுவி கழுவி ஊற்றும். வரலாற்றில் தமிழினத்தின் சுவடு தேடினாலும் கிடைக்காது பாத்துக்கோ

 • Venkii - Chennai,இந்தியா

  super starukku super aappu. ilaingarkal irukkura maanilathula ivana vitta vera aale illayaa?

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  இந்த கட்ஜு இருக்கிறாரே ? அவர் நம்ம வை கோ மாதிரி. எங்கே காய் வச்சாலும் உருப்படாது. இவர் சொல்லீட்டாரில்லே. ரஜினி நிச்சயம் வந்துருவாரு

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  ஒய்வு பெற்ற நீதி பதி ஆகா லட்சணமாக வீட்டில் ஒய்வு பெறுங்களேன். இன்னும் குழந்தை பிறக்க முடிவே பண்ணலே. அதுக்குள்ளே , அது சரியில்லே இது சரியில்லே என்று சொல்ல நீங்கள் என்ன நாட்டாமையா. நடிகர்கள் எல்லாரும் முட்டாள்களா. உலகம் ஒரு மேடை அதில் எல்லாருமே தானே நடிகர்கள்.. நீங்கள் இது வரை நடிக்க வில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். உங்கள் வயதிற்கும் நீங்கள் வகித்த பதவிற்கும் மரியாதையுடன் உண்மையான ஒய்வு பெற்று வீட்டில் அமர்வது நல்லது. இது ஜனநாயக நாடு - எல்லாரும் கருத்து சொல்லலாம். ஆனால் யாரை பற்றி சொல்கிறோமோ அவர்கள் கடை விரிக்கவில்லையே இன்னும்.

 • Indhuindian - Chennai,இந்தியா

  Tamil Nadu should totally ignore the film stars and those from film industry. They do this only for publicity and media glare with no real intentions TN's suffering is totally attribu to film industry managing the State- True from MK to MGR to JJ Unless this umbilical cord connecting TN with film industry is cut off there is no hope for the State

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  என்னமோ ஆட்சிக்கு வருபவர்கள் எல்லாம் மாபெரும் திட்டத்துடன் ஆட்சியை பிடித்தது போல் இவர் கூறுகிறார். முதலில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு இவருக்கு தெரியுமா? என்பதே சந்தேகம். அது சரி இவருக்கு எதற்கு இந்த பிரச்சனை. உருப்படியாக ஏதாவது செய்ய முயலுங்கள்.

 • Vijaykumar - Madurai,இந்தியா

  முட்டாள் தனமான ரஜினி முடிவு. தயவு செய்து கூத்தாடி பின்னாடி போகாதீங்க. அவர்களுக்கு நடிக்கத்தான் தெரியும். இந்த தடவையாவது வித்தியாசமா யோசிங்க. முதல்ல ஒழுங்கா நடிக்க சொல்லுங்க. சும்மா ஸ்டைல் வச்சு ஓபேதியாச்சு. படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க தயவு செய்து. நாங்க மாத்தி காமிப்போம். எங்க மாநிலத்திலும் நிறைய படித்த அறிவாளிகள் இருக்கிறார்கள். இன்னும் அடுத்த மாநிலம் ஆளு தேவை இல்லை. தமிழன் வாழ்க

 • Selestine Arputharaj, Kanyakumari - kanyakumari,இந்தியா

  கரெக்ட் கட்ஜு . யார் இந்த RAJINI. தமிழன ஆளுறதுக்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கு .இவன் குடும்பத்தை ஒழுங்கா பார்த்துட்டா போதும் தமிழனை பார்த்துக்க தமிழனுக்கு தெரியும் . மனதில் தைரியம் இல்லாத கோமாளி இவன் .தமிழக மக்களே இவனை நம்பி போய்டாதீங்க

 • S.prakash - Tiruchi,இந்தியா

  நீதிபதி மார்கண்டேய கட்ஜு பெயரில் வேறு யாரேனும் செய்தி அனுப்புகிறார்களா?

 • Devakumar James - Kadatchapuram,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒய் ஜி மகேந்திரனின் ஆலோசனையைத்தானே கேட்ப்பாரு. (நுங்கம்பாக்கம்???)

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  அய்யா உங்களுக்கும் ரஜினிக்கும் முடிச்சு போடும் வேலை ஆரம்பம் இவனை போன்ற அரசியல் ஞானம் இல்லாத ஆளுக்கு நீங்கள் ஏன் வேஸ்ட் செய்கிறீர்கள்

 • Baskaran - Mysore,இந்தியா

  இந்தியாவுல இருக்கற எதாவது ஒரு அரசியல்வாதிக்காவது மண்டையில எதாவது இருக்கா? அரசியல்ல தொழில் (அதுதானே நடந்துகிட்டு இருக்கு) நடத்த எந்த ஒரு அறிவும் தேவை இல்ல.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஒரு " மக்கள் திலகத்தை" , தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, தமிழக முதலமைச்சராக ஆக்கினார்கள். ஆனால் ஒரு சூப்பர் ஸ்டாரை, தமிழக மக்கள், அப்படி செய்வார்களா?. இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி எனலாமா?.

 • Indira -

  ரஜனிகாந்த்திடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்பது உண்மையே. ஆனால் நேர்மை உண்மை உள்ளது. இது இன்றைய உலகில் குறைவாகவே இருக்கிறது. அவர் நல்ல அதிகாரிகளின் ஆலோசனையை கேட்க வேண்டும். குடும்பத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். செய்வார் என்றால் அரசியலில் நுழையலாம்

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  We all see how it is being run by Tamil people now. Anna and Kamaraj's periods all are gone. Our Tamil leaders are working hard to steal Tamil Nadu for their personal benefits. We need a leader which we do not have right now. Rajini will not steal money for sure. We should support him.

 • rinesh -

  Mr. Rajinikanth is unsuitable and misfit for politics.

 • பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா

  அவன் சொல்றான் ....இவன் செய்றான் ......... குடும்பம் சொல்கிறது ...தலைவர் செய்கிறார் ......................................வேலை இல்லாமல் போன, விவாகரத்து ஆன சவ்ந்தர்யாவிற்கு வேலை கிடைக்க தமிழக முதல்வர் பதவி என்ன தெரு ஓரத்தில் கிடக்கும் பொருளா ? யார் வேண்டுமானாலும் எடுத்து செல்ல .....இவர் கட்சி ஆரம்பித்து , தமிழக அரசியல் தெரிந்து , மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்குள் கால் நூற்றாண்டு ஆகுமே , அதற்குள் ரஜினி காந்த் தே உயிருடன் இருக்க மாட்டார் .....அப்புறம் லதா ரஜினிகாந்த் பொதுச்செயலாளர் , சவ்ந்தர்யா துணை பொது செயலாளர் ....தனுஷ் பொருளாளர் ....ஐஸ்வர்யா நாடாளுமன்ற விவகார துறை என்று குடும்பம் பங்கு போட்டு கொள்ள வேண்டியது தான் ...................ஏற்கனவே மக்கள் எதிர்பார்த்து ஓட்டளித்து தான் இன்று இரண்டு குடும்பம் தமிழகத்தை பங்கு போட்டு கொள்ள துடிக்கிறது ...பத்தாத குறைக்கு இந்த கும்பலுமா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கட்ஜு நீங்கள் செய்யும் காரியம் ரஜினியை பெரிய ஆளாக மாற்றிவிடும்...

 • Ganapathy - Bangalore,இந்தியா

  கடுபுத்தராங்க யுவர் ஹானர் . நான் சும்மா தான் இருந்தேன் யுவர் ஹானோர், இந்த ரசிகர்களும் தமிழ் மியூசிக், கங்கை எல்லாம் வந்து என்ன உசுப்பிவிட்டார்கள் , ஆகவே தங்களுக்கு தமிழக மங்குண்ணிகளை பற்றி தெரியாதது ஒன்றும் அல்ல , ஆகவே இந்திய இபிகோ ,ஐநா சபையோட இபிகோ படி இந்த தமிழ் மக்களுக்கு மீண்டும் A2 வின் ஆட்சி கிடைக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

 • sam - Doha,கத்தார்

  சினிமா கூத்தாடிகள் தமிழ் நாட்டை கெடுத்தது போதும். சினிமா உடன் உங்கள் ஆட்டத்தை நிறுத்தி கொள்ளுங்கள். மக்களின் வாழ்வில் விளையாட தீர்கள்

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  So if Rajini comes to politics we can expect another Mafia gang llike Mannargudi Chinnamma. Even before coming to politics itself his daughter performed the best dance in UN Council. So think about the future........

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  யார் சொல்கிறார்கள் என்பதை விட எந்த நேரத்தில் எதை சொல்கிறார்கள் என்பது முக்கியம். இந்த விஷயத்தில் கட்ஜுவின் கருத்து தேவையான ஓன்று. ஆனால் எதிர்மறை ஆதரவை தர விரும்பும் தமிழக வாக்காளர்களை இது கட்டுப்படுத்த போவதில்லை. இன்றைய நிலையில் தமிழக மக்களும், உ பி மக்களும் ஓன்று. அறிவை அடகு வைத்தவர்கள்.

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  உரிய கருத்தை உரிய நேரத்தில் உள்ளதை உள்ளது என்றும் இல்லத்தை இல்லது என்றும் சொன்ன கட்ஜுக்கு பாராட்டுக்கள் தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் தொண்ணூறு சதவீதம் பேர் சுயநலம் கொண்டோராக இருப்பதால் அநேகர் ஜாலராக்கள் ஆக இருக்கிறார்கள்

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  கனம் நீதிபதிக்கு ரஜினி மீது ஏன் அவ்வளவு காட்டம். மக்கள் என்ன செய்வாரகள். உண்மையான நீதி மன்றம்சென்ற வழக்கு வாய்தா வாய்தா என வழக்கு போட்டவர் வயோதிகமாகி இறந்து விடுகிற நிலைதான் கான முடிகிறது. ஆனால் படத்தில் உடனே தீர்வும் தீர்ப்பும் அளித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் அதனால்தான்>>>>> இதே ரஜினி நீதி மன்ற நீதிபதியை >>>கூறினார் அவமதிப்பு வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள் அவ்வளவு பவர் நீதிக்கு<<>?>> நேர்மையான மனசாட்சி உள்ளது ரஜினிக்கு பாராட்டலாம்.>>>>மனசாட்சிக்கு பயப்படுபவனே மாமனிதன்.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ரஜினிக்கு தலையில் ஒன்றும் இல்லை என்று சொல்வது நாகரிகமாக இல்லை ..தலையில் இருக்கிறதோ இல்லையோ அரசியலுக்கு வருபவர்களுக்கு மனத்தில் இருக்க வேண்டும் -அன்பு கருணை பக்தி பாசம் ....தலையில் கனத்தை கொண்டு ,தமிழன் தமிழன் என்று கூவி கொண்டு ,பச்சை தமிழன் என்று சொல்லி கொண்டு பச்சை பச்சையாக வூழல்கள் செய்கிறார்களே .. கொலைகள் கூட செய்து கொண்டு ,பச்சை பத்திநிகளாக உலா வருகிறார்களே ...அவர்களையம் தூற்றலாமே ...ரஜினி இன்னும் வரவே illai...அதற்குள் உங்களுக்கு எப்படி தெரிந்துவிட்டது ..அவரிடம் திட்டங்கள் இல்லை ..என்று?....எம்ஜி ஆறும் இப்படி தான் i இப்படி தான் vanthaar....திரைத்துறை அரசியலில் கூடாது என்று எந்த சட்டமும் illai......வருகிறவர் யாராகவும் irukkalaam...வருகிறவர் தூய்மையாக வர வேண்டும் தூய்மையாக வாழ வேண்டும் தூய்மையாக ஆளுதல் ventum....மக்களாகிய மன்னர்கள் வழி நடத்துவார்கள்

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  நீதிபதி அவர்களே , அப்படி. போடுங்க அரிவாளை. பொதுமக்கள் கேள்விகேடடால் தலையை குழப்பிக்கொண்டு ஓடிப்போய் பொந்துக்குள் இறங்கிவிடுவார். அதன்பிறகுதான் பதில் சொல்வேன் என்பார். பண்டி விநாசிக்கு . ஏன் உடையார் வேலை?

 • Thulasiraman Ramanujam - Bangalore,இந்தியா

  அவருக்கு தலையில் ஒன்றுமில்லை ஆனால் இதயம் நிறைந்தவர்.உனக்கு தலை மட்டும் நிறைந்திருக்கு இதயம் காலி .

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  ரஜினிகாந்திடம் ஒரு காந்த சக்தி உள்ளது சிம்ம லக்கினம் , மகர திருவோணம் நட்சத்திரம். இந்த அமைப்பு அரிது. ராகு எட்டாம் வீட்டில் இருந்து புதையலை கொடுத்தார். சுக்ரன் , சனி, கேது இவர்கள் சிம்ம லக்கினத்திற்கு பேர் புகழ் மற்று செல்வம் கொடுப்பது என்பது மிகவும் அபூர்வம். இவர் மக்களுக்கு எதையும் செய்வார் இல்லை. பிறந்த கர்நாடக நாட்டில் இவர் வளர வாய்ப்பில்லை. காவேரியில் இவரால் தண்ணீர் கொண்டுவர முடியாது. இவர் லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லாததால் இவர் துணிவு அற்றவர். குருவின் பார்வை சனியின் கும்ப வீட்டில் இருந்து. இப்பொது சனிதிசை மாறி புதன் திசைவரும் பொது இவர் நிறைய இழப்புகளை சந்திப்பார்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நடிகர்கள், நாடகக்காரர்களை நம்பி என்று காமராஜரை தோற்கடித்தார்களோ - அன்றே தமிழகத்துக்கு தரித்திரம் பிடித்து விட்டது... அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை... திருட்டு திராவிடர்கள் ஏராளமான அடிமைகளை உருவாக்கி வளர்த்து வைத்து இருக்கிறார்கள் - அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை...

 • kum - paris,பிரான்ஸ்

  நீ உண்மையான நீதிபதியை இருந்திறந்த மாவட்ட நீதிபதியா இருந்திருப்ப உன்ன வளர்த்த அரசியல் வியாதிக்கு ஒத்து ஊதற நேரம் வந்தாச்சு

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ஐயா கொட நாடு, போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாக்களில் மட்டும் குடி இருந்து, தமிழகம் முழுவதும் சுற்றி பொது மக்களின் பிரச்சனைகளை பற்றி அறியாத (வரலாறு காணாத வெள்ளத்தின் பொது கூட வெளியே வரவில்லை) ஒரு அம்மணிக்கு பணம், பிரியாணி, மற்றும் சரக்கு கொடுத்தார் என்று ஒட்டு போட்ட மக்கள் கூட்டம் ஐயா இந்த தமிழர்கள். யாருக்கு தெரியும் நாளை விந்தியாவோ இல்லை தீபாவோ, அவரது கணவரோ கூட தமிழக முதல்வர் ஆகலாம். எங்கள் தமிழ் மக்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பு செய்யாதீர்கள்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  காரணம் , ஏற்கனவே பலரையும் நம்பி ஆட்சி கட்டிலில் அமர வைத்தனர் , மக்கள். தமிழகத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கு என்று உங்களுக்கே தெரியும் சார். எனவே திரு. ரஜினியிடம் சில தமிழர்கள் நம்பிக்கை வைக்கிறார்களோ என்னவோ?. ஆனால் அவர் , முன்னாள் முதல்வர் ஜெஜெ இருந்த பொழுதே, அரசியலுக்கு வந்து ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முயன்றிருந்தால், அதுதான் அவரின் மிக சிறந்த செயலாக இருந்திருக்கும் அல்லவா?.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  நீதிபதி கட்ஜு ரஜினியை பத்தி ஒருமுற சொன்னது நுறு முற சொன்ன மாதிரி

 • Karthik - Chennai,இந்தியா

  ரஜினிகாந்திடம் எந்த சரக்கும் இல்லை என்று சொல்லிவிட்டார். இவர் ஒரு தீர்க்கதரிசி. ரஜினிகாந்தை ஒரு நடிகனா ஏற்று கொள்ளலாம். அவர் அரசியலுக்கு 1996 வந்து இருக்க வேண்டும். பிறகு அவர் செய்வது எல்லாம் கண்ணாமூச்சி ஆட்டம் தான்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ஐயா உண்மையை சொல்லும் உங்களை பயித்தியக்காரன் என்றுதான் இந்த உலகம் சொல்லும். நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே நேற்று ஒரு நடிகை சமாதிக்கு சென்று இறந்தவருக்கு மாம்பழம் கொடுத்து புது அரசியல் வாழ்க்கையை தொடங்கி விட்டார். தமிழக மக்கள் அவருக்கு அமோக ஆதரவு கொடுப்பது உறுதி. ஏன் என்றால் அவர் பக்கத்துக்கு மாநிலத்தில் பிறந்தவர் ஆயிடறே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement