Advertisement

அரசியல் பிரவேசம்: அடியெடுத்து வைக்கிறார் ரஜினி! 'சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்

சென்னை: கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை, ரஜினி சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர், எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.
ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது:

எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், நான் தான் முதல் ஆளாக செல்வேன். அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். புகை மற்றும் மது பழக்கத்தை, ரசிகர்கள் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நான், ரசிகர்களை முன்பே சந்தித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பின், இப்போது சந்திக்கிறேன். 'ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார்; பின்வாங்குவார்; தயங்குகிறார்' என, சிலர் கூறுகின்றனர்.எந்த முடிவு எடுத்தாலும், நான் கொஞ்சம் யோசிப்பேன்.

சிலவற்றில் முடிவு எடுத்த பின் தான், பிரச்னைகள் இருப்பது தெரிகிறது. தண்ணீரில் கால் வைத்த பின் தானே, உள்ளே முதலைகள் இருப்பது தெரிகிறது. அதற்காக, முன்வைத்த காலை, பின்வைக்க மாட்டேன் என்றால் எப்படி? முரட்டு தைரியம் இருக்கக் கூடாது. பேசுபவர்கள் பேசியபடியே தான் இருப்பர்.

ஏமாற்றி விட முடியாது.
நல்ல படங்களை தருவது தான், என் வேலை; அதில், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். படம் ஓடுவதற்காக, ரஜினி ஏதாவது சொல்வார் என, சிலர் கூறுகின்றனர்.
இறைவனின் ஆசியால், உங்களின் அன்பால், அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
தமிழக மக்களையும், என் ரசிகர்களையும் ஏமாற்றி விட முடியாது. அவர்கள் ஏமாறுவது, ஒரு விஷயத்தில் மட்டுமே; அதுபற்றி, இப்போது பேச விரும்பவில்லை.

கடந்த, 21 ஆண்டுகளுக்கு முன், ஒரு அரசியல் விபத்து எனச் சொல்லலாம். அப்போது, ஒரு அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தருவது போன்ற சூழ்நிலைஉருவானது. அந்த கூட்டணி, தேர்தலிலும் வெற்றி பெற்றது. ரசிகர்களும், அரசியலில் ஆர்வம் காட்டினர்.

ரசிகர்கள் சிலர் எனக்கு கடிதம்
அன்று முதல், தேர்தல் சமயங்களில், சிலர் ஆதாயத்திற்காக, என் ரசிகர்களை தவறாக பயன்படுத்த துவங்கினர். ரசிகர்கள், தவறான வழியில் செல்வதை தடுக்க, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், 'நான் எந்த கட்சிக்கும் ஆதரவு தரவில்லை' என, பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து, ரசிகர்கள் சிலர் எனக்கு கடிதம் எழுதினர். 'நமக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம், காரில் பறக்கின்றனர்' எனக் கூறுவர். எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதை வைத்து, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என்ன சொல்வது?

என் வாழ்க்கை, அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது, நடிகனாக இருக்க வேண்டும் என்பது, கடவுளின் ஆணை. நாளை, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த பொறுப்பானாலும், நேர்மையாக, உண்மையாக செய்வேன்.

ஒரு வேளை, நான் அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என் அருகே கூட சேர்க்க மாட்டேன். அவ்வாறான தவறான எண்ணம் உடையவர்கள், இப்போதே என்னை விட்டு சென்று விடுங்கள். இல்லையென்றால், நானே ஒதுக்கி விடுவேன்.இவ்வாறு ரஜினி பேசினார்.

முன்னதாக, எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ''முதல் சந்திப்பில், ரஜினியை எப்படி பார்த்தேனோ, அப்படியே இப்போதும் உள்ளார். புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர். ரஜினி புகைப்படத்தை, வீட்டில் வைத்திருப்பவர்கள், அவரைப் போலவே ஒழுக்கமாக இருக்க, எண்ண வேண்டும்,'' என்றார்.

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடக்கும் நிகழ்ச்சியில் நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.

ரஜினி பேசியதாவது: எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், நான் தான் முதல் ஆளாக செல்வேன். அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். புகை மற்றும் மது பழக்கத்தை, ரசிகர்கள் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நான், ரசிகர்களை முன்பே சந்தித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பின், இப்போது சந்திக்கிறேன். 'ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார்; பின்வாங்குவார்; தயங்குகிறார்' என, சிலர் கூறுகின்றனர்.

எந்த முடிவு எடுத்தாலும், நான் கொஞ்சம் யோசிப்பேன். சிலவற்றில் முடிவு எடுத்த பின் தான், பிரச்னைகள் இருப்பது தெரிகிறது. 'படம் ஓடுவதற்காக, ரஜினி ஏதாவது சொல்வார்' என, கூறுகின்றனர்.

தமிழக மக்களையும், என் ரசிகர்களையும் ஏமாற்றி விட முடியாது. அவர்கள் ஏமாறுவது, ஒரு விஷயத்தில் மட்டுமே; அதுபற்றி, இப்போது பேச விரும்பவில்லை. இவ்வாறு ரஜினி பேசினார்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (151)

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த கூத்தாடி இப்பவே உண்மையாக பேசுகிறார். அதாவது இவருடன் அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணம் படைத்தவர்கள் ஓடிவிடுங்கள். இதன் உட்கருத்து இவர் ஒருவர் மட்டும் அரசியலில் வந்து சம்பாதிக்க வேண்டும் என்பதே. தமிழ்நாட்டை பற்றி ஒன்னும் தெரியாத கூத்தாடிக்கெல்லாம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு CM ஆகிவிடலாம் என்ற ஆசையே தவறு.

 • Royapuram Chandru - Dallas,யூ.எஸ்.ஏ

  அரசியலில் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. அரசியலுக்கு வந்து விட்டால் நிம்மதி போய் விடும். இவர் நிம்மதியை விரும்பும் மனிதர். மேலும் இவர் ஒரு தெளிவான சிந்தனை, மனதிடம் இல்லாதவர். இந்த குணங்கள் எல்லாம் அரசியலுக்கு சரி பட்டு வராது . இவையெல்லாம் இவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இவர் நடிக்கும் படங்களின் லாப நோக்கத்துக்காகவே இப்படி பேசி காலத்தை ஓட்டுகிறார். எல்லாத்துக்கும் ஆண்டவன் மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் . நாளையே "ஆண்டவன் அரசியலுக்கு வர வேண்டாம்" என்று சொன்னார் என்றும் சொல்லுவார்.

 • C Suresh - Charlotte,இந்தியா

  அரசியலுக்கு வருவதை விட்டு.. முதலில் பேசிய நதி நீர் இணைப்பில் முழு கவனம் செலுத்தினார் என்றால்.., அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்... இல்லையேல் பத்தோடு பதினொன்று...

 • Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா

  புலி வருது புலி வருது .. சொல்லி சொல்லி Ella படம் ரிலீஸ் ஆனது. இப்ப்போ புலி வந்தால் enna நரி வந்தால் என்னவாம் ? தமிழ் மக்களுக்கு இதுவும் வேணும்.

 • Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா

 • Abbas M - Doha,கத்தார்

  சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரஜனி நீயும் உன் குடும்பமும் நல்லா இருங்க

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  தூ ........... உருப்படவே மாட்டோம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  " மாயா மாயா எல்லாம் மாயா, .........". (சினிமா பாடல்).

 • pazhaniappan - chennai,இந்தியா

  ரஜினி மட்டுமல்ல ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ,ஆனால் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னோடு வரவேண்டாம் என்பதெல்லாம் அவரது அரசியல் சார்ந்த பேச்சே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது , அவர் மனச்சாட்சியை தொட்டு சொல்லட்டும் அவர் நடிப்பின் மூலமும் பிற தொழில்கள் மூலமும் சம்பாதித்த வருமானத்திற்கு ஒழுங்காக வரி காட்டியிருக்கிறார் என்று கண்டிப்பாக இல்லை . ஒருவேளை சமீப காலமாக அவருடைய திரை படங்கள் சரிவர ஓடவில்லை ஆகவே அரசியலுக்கு வர முடிவெடுத்து இருக்கலாம் ,அதை தைவிர்த்து அவர் புனிதர் புத்தர் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம் , அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து முன்னேறியவர் அவரை குறை சொல்ல வேண்டுமென்பதில்லை ,ஆனால் அவருடைய பேச்சுக்களை பார்த்தால் எவ்வளவோ பேருக்கு உதவியிருக்க வேண்டும்,இல்லையே முடியாத காலத்திலும் நடிப்பது என்ன காலை சேவை செய்வதற்கா ,இன்று பல்வேறு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருக்கிறார் இவையெல்லாம் என்ன மக்களுக்கு சேவை செய்வதற்காகவா

 • Ramesh Jagan - trichy,இந்தியா

  ரஜினி தமிழக அரசியலுக்கு தேவையில்லை. அவர் வேறு எங்யேயாவது முயற்சி செய்யட்டும். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை சேர்த்து கொள்ள மாட்டாராம் இவர் மட்டும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு வாங்க சில பல பலன்களை பெற்றுகொண்டு அனுமதிப்பாறாம் இத யாரும் கண்டுக்காம இருக்கணுமா இவர் நடத்தும் பள்ளிகளின் கட்டணககொள்ளை மற்றும் ஊழியரகளுக்கு முறையான சம்பளம் இல்லை இவரு வந்து பேசராரு இது நியாயமா நீங்களே சொல்லுங்க

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  ட்ராவிடக்கட்சிகள் தமிழகத்தை பொருளாதார ரீதியில் சின்னாபின்னமாகி விட்டனர். இப்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. பின் எப்படி வளர்ச்சிக்கு பணம்.ஜனங்கள் ஓசியில் சுகம் கண்டு அதையே பிடித்து கொண்டிருக்கிறார்கள்.எந்த வியாபாரத்திலும் லாபம் காண வேண்டும். ஆளும் கட்சி எம் எல் ஏக்கள் தான் போக்கு வ்ரதது துறையை நாசப்படுத்தியது. அது மட்டுமல்ல. பெர்மிட் இல்லாமல் நெடுந்தூர சொகுசு பஸ் களை கூட்டாக இயக்கி முதலாளிகளும் போக்குவரத்து துறை அமைச்சர்களும் லாபம் அடைந்துள்ளதாக பேசப்படுகிறது. அரசு பஸ்கள் ஒழுங்காகபராமரிக்க பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் சேவை செய்யும். இந்த வயதாக்கிய பஸ் களை மற்றவர்கள் வாங்கி புதுப்பித்து இன்னும் ஓட்டுகிறார்கள். இன்றைய பிரச்னை பொருளாதாரம். காரணம், ஓசைக்கு ஆளை பறக்கும் தமிழ் குடியர்கள்.கொள்ளை அடிப்பதில் சுகம் காணும் அரசியல் வாதிகள். எப்போது ஒரு பிரெஞ்சு புரட்சி வந்து இவர்ளை ஒழிப்பது.

 • Abbas M - Doha,கத்தார்

  இந்த ஆளுக்கு வரப்போகும் கேவலத்தையும் இழிவையும் மனிதர்கள் யாராலும் தடுக்க முடியாது

 • Ramesh Jagan - trichy,இந்தியா

  ரசினி வாக்குறுதி முதல்வரானால் கடவுளிடம் பேசி தமிழகத்திற்கு நீட் , காவேரி, முல்லை பெரியாறு, மீத்தேன் வாயு பிரச்சனை, மீனவர் பிரச்சினை, கரும்பு விவசாயிகளின் பிரச்சனை, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களான போக்குவரத்து, மின்சாரம், சேலம் உருககாலை, போன்ற பிரச்சினை கள் கனிம வள கொள்ளை, தாது மணல், வறட்சி , வேலையில்லா மற்றும் வேலை இழப்பு போன்ற பிரச்சினை களை தீர்த்து வைப்பார்.

 • Ramesh Jagan - trichy,இந்தியா

  ரசினி வாக்குறுதி முதல்வரானால் கடவுளிடம் பேசி தமிழகத்திற்கு நீட் , காவேரி, முல்லை பெரியாறு, மீத்தேன் வாயு பிரச்சனை, மீனவர் பிரச்சினை, கரும்பு விவசாயிகளின் பிரச்சனை, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களான போக்குவரத்து, மின்சாரம், சேலம் உருககாலை, போன்ற பிரச்சினை கள் கனிம வள கொள்ளை, தாது மணல், வறட்சி , வேலையில்லா மற்றும் வேலை இழப்பு போன்ற பிரச்சினை களை தீர்த்து வைப்பார்.

 • Ramesh Jagan - trichy,இந்தியா

  ரசினி ஒரு குழந்தை மாதிரிப்பா ரொம்ப பயப்படுவாப்ள, கொஞ்சம் விட்ட அழதேருவாப்ள அதனால ரொம்ம ஒட்டாதீங்கப்பா அவரு ஒரு பச்ச மண்ணு வழி தாங்க மாட்டாப்ள . ஏன் சொல்றோம்னா அந்த ஆளுக்கு ரொம்ப நாள ஆசைதான் அரசியலுக்கு வரனும்னு ஆனா கொஞ்சம் லைட்டா அதிகமா பயம் அதனால ரொம்ப கொஞ்சமா யேசிச்ச விட்டுடாப்ள சரி பணத்துக்கு என்ன பண்ணுவாப்ள நிறைய கருப்பு பணமா நிறைய வாங்கு வாப்ளயாம பேசிக்கிறாய்ங்க,,,,,,,,டிக்கட் எவ்வளவு வேணும்னாலும் வச்சுகக்கலாமாம் அரசாங்கத்துக்கிட்ட வரி ஏய்ப்பு செய்றது அரசு நிர்ணயித்த டிக்கட் கட்டணத்தை விட அதிகமா வசூலிதத்து அரச ஏமாத்தறது,,,அப்புறம் பள்ளிக்கூடத்தை கட்டி பயங்கரமா வசூல் பண்றாய்ங்களாம்பா அது மட்டும் இல்லையாம்பா தமிழகத்திலேய பள்ளிக் கட்டணக் கொள்ளையை அறிமுகப்படுத்தியதே இவருதானாம்பா சொல்றாய்ங்க,,,,,, இப்ப அந்த அம்மா இல்லாததால கொஞ்சம் பயம் கொறஞ்சுப் போச்சுனு பேசிக்கிறாய்ங்க,,,, இப்ப கூட வொண்ணும் இல்ல எதாவது ரெய்ட வொண்ணு போட்டூட்டாய்ங்கனு வச்சுக்குங்க அப்படியே நம்ம தலைவரு என்ன சொல்லுவாப்ளனு தெரியுமா நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவேயில்லை நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாய்ங்கன்று சொல்லுவாப்ள,,,,, அந்த அளவுக்கு கொஞ்சம் லைட்டா பயம்,,, அதுக்குள்ளேயே நம்ம ஆளுங்க வைச்சு செய்ய ஆரம்பிச்சிட்டாய்ங்க ஆரம்பமே இப்படி சோசியல் மீடியாவுல போட்டு கிளிக்கிறாய்ங்க போக போக என்ன ஆகுவாப்ளயோ தெரியல நம்ம புலிக்குட்டி என்றுக் காட்டிக் கொள்ளும் இந்த பச்ச மண்ணு பூனைக்குட்டி ஆனாலும் அந்த அம்மா இல்லாமால் ஆளாலுக்கு வந்தராய்ங்க தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா

 • (Original) Nakkeran - Coimbatore,இந்தியா

  வெயில் ஜாஸ்தியா இருக்கு

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ரஜினி வர கூடாது ன்னு சொல்லிற கருத்து வெளியிடுவதில்லை? ஏன்? நல்ல வேளை சோசியல் மீடியா இருக்கு.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  அவரைப் போலவே ஒழுக்கமாக இருக்க, எண்ண வேண்டும்???? என்னய்யா இப்படி சாளரா ஆரம்பிச்சுடீங்க? இப்பவேயா? வாங்க வாங்க உங்களையும் நாங்க களத்திலே பார்க்கணும்.நெறைய பேருக்கு எதிர்பார்ப்பு இருக்கு என்னதான் பேசுறீங்கன்னு பார்க்க.

 • kaviam - coimbatore,இந்தியா

  Rajinikanth should never come to politics. He will be another vijayakanth only. His followers are no less than vijayakanths followers

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒரு நல்ல மனிதரால் நிச்சயம் நல்லாட்சி கொடுக்க முடியும் ரஜினி நல்லவர் கடவுள் பக்தி நிறைந்தவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லாட்சி கொடுக்க முடியும் 1996 தேர்தலில் ரஜினியால் தான் வைகோ வெற்றி பெற முடியாமல் போனது அந்த பழியை போக்க நல்ல மனிதர் வைகோ அவர்களை முதல்வர் ஆக்க வேண்டும் . ரஜினி நினைத்தால் நிச்சயம் செய்ய முடியும்

 • Narayanan -

  avar arasiyalku vanthal tharalamaga avarai muthalvar aagalam makkal, ithanai aandugal dmk admk irunthu ena use. puthiyavargalku oru vaaipu tharalam

 • JayakumarNewPriyaDigitals -

  no politics. be one actor

 • Power Punch - nagarkoil,இந்தியா

  புரிந்தால் சரி.....

 • Power Punch - nagarkoil,இந்தியா

  பாட்ஷா படத்தை பார்த்து விசிலடிச்சவங்க யாரும் இப்போ இல்லை.. அது 25 வருடம் முன்னே.. இப்போ இருக்கற இளைஞ்சர்கள் தமிழ் நாட்டிற்கு யார் வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள்... உங்கள் ஆட்டம் திரையில் மட்டும் தான். அதற்கு வெளியே இல்லை...ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகைகளை எப்படி விரட்டி அடித்தார்கள் பார்த்தீர்களா...நீங்கள் அங்கே சென்றிருந்தாலும் அதுதான் நிகழ்ந்திருக்கும்...

 • arumugam subbiah - Tirunelveli,இந்தியா

  கர்ணன், கும்பகர்ணன் இருவரும் செஞ்சொற்று கடனுக்கு உதாரணமானவர்கள். தமிழர்களால் வளர்ந்த இவர் தமிழ் சமூகத்திற்கு செய்த நன்மைகள் என்ன? இவருடைய செஞ்சொற்று கடன் என்ன? தமிழகமே ஒட்டு மொத்த எழுச்சி பெற்று ஜல்லிக்கட்டுக்கு போராடிய போது இவரது பங்களிப்பு என்ன? இவரால் தன குடும்பமோ, தானோ, தன சமூகமோ மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ இவ்வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று இவருடன் நிழற்படம் எடுக்க துடிக்கும் எத்தனை இளைஞர்கள் எண்ணிப்பார்த்ததுண்டு. தன் மானமிகு எழுச்சி இளைஞர்களே சிந்தியுங்கள் இன்று தமிழகம் நீர் வளம், நில வளம், கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டிருகிறது. அது பற்றி இவர் என்றும் வை திறந்து பேசியது உண்டா? சிந்தியுங்கள்.

 • நண்பா - kudamook,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வந்து ஆண்டி ஆவதில் பல பேர்களுக்கு சந்தோசம்

 • Paranthaman - kadappa,இந்தியா

  சிம்ம லக்னம் மகர ராசி. 12.12.50 செவ்வாய். நேரம் நடு இரவு 23.49 மணி.இளவயதில் கால சர்ப்ப தோஷத்தில் சிக்கியவர்.ஆறாமிடம் செவ்வாய் மகரத்தில் உச்சம். மறைந்து நின்று ராஜபரிபாலனம். தனத்தில் கேது. உடன் சனி செல்வத்தின் மீது ஆசையில்லை. இருந்தாலும் சேர்த்த செல்வம் நிக்காது. சுகஸ்தானம் நான்கில் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் புதன் சுக்ரன்.7ல் வீட்டிலிருக்கும் குரு விரையம் தனம் சுகம் ஆகியவற்றை பார்க்கிறார். கட்சி ஆரம்பிப்பார். தொடரமாட்டார். ஆட்சியில் அமர்வார். தொடரமாட்டார். லக்னத்தை குரு பார்க்க ஆயுள் 95க்கு மேல். குடும்ப பந்தமுள்ள யோகி. சொத்து சுகத்தில் குறைவற்றவர். விரைய ஸ்தானாதிபதி வளர் சந்திரன் 6ல் மறைவு. தர்மத்தை அளந்து கொடுப்பார். எண்ணம் ஸ்திரம்.செயல்பாடுகள் வேகம். சப்தமத்தில் குரு தெய்வ நம்பிக்கை மிக்கவர். பிறவி சற்புத்திர அமைப்பு. ஆறில் மறைந்து அதுவே செவ்வாக்கு உச்சமானதால் தூர தேச வாசம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இவர் தலைமுறை நடிகர் சிவகுமார், அறக்கட்டளை அமைத்து சமூக தொண்டு செய்து வருகிறார், ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவை தந்து உதவுகிறது அகரம் அறக்கட்டளை, நலிந்து போன பழைய நடிகர்கள்/ நாடக கலைஞர்களுக்கு உதவி வருகிறார். இன்று அவர் மகன்களும் அந்த தொண்டை தொடர்கிறார்கள். ஆனால் அவர்களை விட பல மடங்கு பணம் சம்பாதிக்கும் ரஜினி ஏதாவது இந்த சமூகத்திற்கு செய்ததுண்டா? சினிமாவில் தன் சொத்து முழுவதையும் கண்ணைமூடிக்கொண்டு கொடுப்பது போல நடித்துவிட்டால் போதுமா? அதையே மக்கள் நம்பி ஓட்டுபோட்டுவிடுவார்களா? நாட்டு, சமூக பிரச்சினைகள், அதற்கு தீர்வு, முன்னேற்ற வழி, அதை நிறைவேற்ற உடலில் தெம்பு அனைத்தும் உள்ள ஒருவர் தான் வரவேண்டும். சினிமாவில் முகம் காட்டிவிட்டு, ஓய்வெடுக்கும் ஒருவர் அல்ல.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அரசியலுக்கு வந்து என்னத்தை கிழிக்கப்போகிறார் இந்த நடிகர். சினிமாவில் கிராபிக்ஸில் ஒரே நிமிடத்தில் இந்த நாட்டை சிங்கபூரைப்போன்று மாற்றி காட்டமுடியும் ஆனால் நிஜத்தில் முடியுமா? அதற்கு எவ்வளவு போராடவேண்டும். அதற்கு உடம்பில் தெம்பு இருக்கிறதா ? கெட்ட பலத்தினால் உடல்நிலை கெட்டுவிட்டது, மறுபுறம் இதுவரை சமூகம் என்றால் என்ன, நாடு என்றால் என்ன என்றே தெரியாது. சினிமாவில் தோன்றும் முகத்தை காட்டி பதவி பெற்று ஜெயாவைப்போல வீட்டில் முடங்கி கிடந்தால் இந்த நாடு உருப்பட்ட மாதிரிதான்.

 • Larson - Nagercoil,இந்தியா

  ரஜினியை புழுதி வாரி தூற்றுபவர்கள் ஒரு நல்ல நாணயமான அரசியல்வாதியை அடையாளம் காட்ட முடியுமா? இப்படியான மக்களுக்கு நல்லவர்களை அடையாளமும் காண தெரியாது, நல்லது செய்ய வருகிறவர்களையும் பிடிக்காது. தமிழன் நாசமாக போய் கொண்டிருப்பதற்கு முழுமுதர்காரணம் அடுத்தவர்கள் காலை பிடித்து கீழே இழுப்பது. கருணாநிதியோ, சசி கூட்டமோ, அம்மா அணியோ, யாராய் இருந்தாலும் ஊழல் செய்வதிலே குறியாய் இருக்கிறார்கள். யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கிற நேரத்தில் ரஜினியோ, பிஜேபியோ நல்லது செய்ய முன்வருகிறவர்களை வரவேற்போம்....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சினிமா பைத்தியம் என்று அந்தக்காலத்திலேயே படம் எடுத்தார்கள். அதில் ஜெய்ஷங்கர் தான் ஹீரோ. கிராமத்து பெண் ஒருவர் ஹீரோ மேல் பைத்தியம் கொண்டு அவர் தான் அனைவரையும் அடித்து துரத்துகிறார் மிக பலசாலி, கருத்து சொல்கிறார், பாட்டு பாடுகிறார், ஏழைக்களுக்கு உதவுகிறார், பெண்களின் மானத்தை காக்கிறார் என்றெல்லாம் கற்பனையில் இருப்பார். அதெல்லாம் தவறு அவரு நடிகர் மட்டுமே என்று உணர்த்த ஹீரோ அவரை சிலநாட்கள் தன்னுடைய சூட்டிங்கில் கலந்து கொண்டு உண்மையை நேரில் பார்த்து உணர செய்வார். ஆனால் தமிழ் நாடு மக்களுக்கு இன்னும் சினிமா பைத்தியம் தெளியவில்லை.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  சிபிஐ என ஒன்றிருக்கிறது மறந்து விடாதீர்கள்...

 • Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ

  மீண்டும் ஒரு சினிமாக்காரனா?

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  கருணாநிதி, ஜெயா என்ற ஆளுமைகள் இல்லாத சூழ்நிலை, ஸ்டாலின் பெரிய அளவில் சோபிக்காத நிலை, அதிமுக குழப்பங்கள் என தமிழகம் தடுமாறுகுறது... சீமான் போன்றவர்கள் வருவதைவிட ரஜினி வருவதே மேல்....இயல்பான சூழ்நிலையில் ரஜினி வருவதை நானே எதிர்த்திருப்பேன்...இப்போது மாறுபட்ட சூழ்நிலை....ஆனாலும், என் ஆதரவு வழக்கம் போல பாஜக வுக்கே..

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  இவர் ஒரு தொட நடுங்கி.... நிச்சயமாக இவர் அரசியலுக்கு வரப்போவதில்லை... அரசியலில் இவர் ஒரு ஜுஜுபி... தண்ணி இல்லா நீச்சல் குளத்தில் டைவ் அடிச்ச கதைதான்...இன்றைய கார்ட்டூனை பாருங்கள் உங்களுக்கே புரியும்..

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  ரஜனி யின் அரசியல் படுதோல்வி அடையும் .தமிழ்நாட்டை பூர்வீக தமிழ்நாட்டில் பிறந்த பூர்வீகத் தமிழன்தான் ஆழவேண்டும்

 • balakrishnan - Mangaf,குவைத்

  All the best sir.

 • P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா

  "ஒரு நடிகனாக எப்படி உண்மையாக, நேர்மையாக இருப்பேனோ, அப்படித்தான் நாளை வேறு எந்த பொறுப்புக்கு வந்தாலும் இருப்பேன்," இது உங்கள் நிலைப்பாடானால் உங்களை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்காக நீங்கள் முரட்டுத் துணிச்சலோடு தான் இயங்க வேண்டும். ஆட தெரியாதவ மேடை கோணல்ன்னாளாம் அதுமாதிரி நீங்க முதலை இருக்குது சுறா இருக்குதுன்னாதீங்க" தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்." தமிழக மக்களுக்காக உழைக்க நீங்கள் தயாரானால் இறைவன் உங்களை கருவியாக்குவான்

 • Senthil - Bangalore,இந்தியா

  எந்த சினிமா காரரும் தமிழ் நாட்டுக்கு முதல்வர் ஆக வேண்டியது இல்லை, இத்தனை நாள் ஜெயலலிதா படுத்திய பாடே போதும்.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  டாக்டர் என்ஜினீயர் போல நடிகர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது .. நடிப்பதும் தொழிலதானே என்று பலர் கேட்கிறார்கள் .. டாக்டர் என்ஜினீயர் , ஏன் ஒரு டிரைவர் கூட அரசியலுக்கு வரலாம்..ஏன் என்றால் அவர்களுக்கு அவர்கள் தொழிலில் சமூக பொறுப்பு அதிகம்..அதை உணர்ந்தவர்கள் அவர்கள் .. அவர்கள் அரசியலுக்கு வந்தால் அதில் பாதி அளவாவது சமூக பொறுப்பு அவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்றைய நடிகர்களின் படங்களை பார்த்தாலே தெரியும் ..எவ்வளவு கேவலமாக நடித்து விட்டு வெளியே வந்து அறிவுரை சொல்கிறார்கள்

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  இந்தாளு அரசியலுக்கெல்லாம் வரப்போவதில்லை. ஊடகங்கள் தான் எப்பொழுது பார்த்தாலும், சும்மா பரபரப்பை கிளப்பிகிட்டு திரிகிறது. இவருக்கு உண்மையிலுமே மக்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால், வர வேண்டிய நேரத்தில், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில் வந்து தமிழகம் கொள்ளையர்கள் கூடாரமாகால் தடுத்திருக்கலாம். கடந்த இருபது வருடங்களாக இதோ வரேன், அதோ வரேன் என சும்மா பூச்சாண்டி காட்டிகிட்டு இருந்ததும் இல்லாம..., அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டாராம். அடுத்தவங்களைச் சொல்ற இவருக்கு அறுபதிலும்..., அதிலும் கபாலி போன்ற தரமில்லாத படம், 'ப்ளாப்' படம் என்று தெரிந்தும் அதற்கு பல கோடிகள் சம்பளம், வெட்டி விளம்பரம் எதற்கு??? கடைசி காலத்தில் காசி, இராமேஸ்வரம் ... இல்லை, இல்லை... இமயமலை என போய் மோட்சம் அடையற வழியைப் பாருங்க சார், அரசியலுக்கு எல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டீங்க.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  நீங்கள் ஏன் நடிகர்சங்க தேர்தலில் போட்டியிட்டு உங்கள் நடிகர்எ நடிகைகளுக்கு எதாவது நல்லது செய்யுங்கள்ம் அது போதும் எங்களுக்கு. உங்கள் அரசியல் தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை திரு. ரஜினிகாந்த் அவர்களே எம் ஜி ஆர் , ஜெயலலிதா, போன்ற திரைப்பட நடிகர், நடிகை ஆண்டது போதும் சாமி. மீண்டும் ஒரு நடிகன் எங்களுக்கு வேண்டாம். உங்களுக்காக 1000 ரூபாய் குடுத்து படம்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். இல்லையென்றால் நடிகர் நடிகைகளுக்கு தனி காலேஜ், ஸ்கூல் போன்ற பல நல்ல காரியங்களை செய்யுங்கள்.

 • Meenu - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டு மக்கள் இப்ப யாரு இவரு எங்களுக்கு வேணும், எங்களை ஆளனும், இவருக்குள்ள அறிவு தமிழ் நாட்டில் வேறு யாரிடமும் இல்லை என்று சொன்னார்களா? இவரு நடிகர். நல்ல நடிக்க தெரியும். ஏன் நீங்களாவே கற்பனை பண்ணிக்கிட்டு அரசியலுக்கு வருவேன் என்று பீலா விடுறார். தமிழ்நாட்டில் உங்களுக்கு ஆதரவு கிடைக்காது. பேசாம எதோ ஒரு தொழில் செய்து மீதியுள்ள காலத்தை ஓட்டுங்க.

 • Mahendra Babu R - Chennai,இந்தியா

  நேற்று நக்மா சந்திப்பு. இன்னைக்கு இந்த அறிவிப்பு. சரிதான்.

 • UNMAI VILAMBI - TAMIL NADU,இந்தியா

  ‛சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' நல்ல வசனம் ரஜனி அவர்களே நீங்கள் உத்தமனா இருந்தால் நீங்கள் நடிப்புக்காக வாங்கும் பணத்தை அப்படியே வருமான மக காண்பித்து வரி கட்டுகிறீர்களா என்ன இந்த நாட்டில் inflation ரேட் எற காரணமே உங்களை போன்ற நடிகர்களால் தான் தெறியுமா இன்று இவ்வளவு பேசும் நீங்கள் ஜெயா உங்களை துவம்சம் பண்ணும்போது இதே ஸ்டாலின் - கராத்தே தியாகராஜன் - வெற்றிவேல் உதவினர்களே ஞாபகம் உள்ளதா அப்போ அரசியல் சாக்கடைகள் இனித்ததா நீங்கள் கையை காலை ஆட்டி சம்பாதித்து நாட்டை ஏமாற்றுகிறீர்கள் அரசியல்வியாதி கையை நீட்டி சம்பாதிர்த்து நாட்டை ஏமாற்றுகிறீர்கள் நீ ஒன்றும் உத்தமன் இல்லை அவர்களும் யோக்கியன் இல்லை

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  இவர் அரசியலில் ஈடுபட்டால் இவரது கட்சிக்கு லதா ரஜினிகாந்த் மகளிர் தலைவர். மருமகன் தனுஷ் செயல் (படாத) தலைவர். மகள்கள் கொள்கை (கொள்ளை?) பரப்புச் செயலாளர் மற்றும் பொருளாளர்.

 • sam - Doha,கத்தார்

  ரஜினிகாந்த் முதலில் தன் வீட்டை சரி பார்க்கட்டும். நீங்கள் எல்லாம் கூத்தாடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். இனி உங்களை போல் உள்ளவர்களை நம்பி தமிழ் நாடு ஏமாற வேண்டாம். மக்கள் நிச்சயம் சரியான பாடம் புகட்டுவார்கள்

 • Balaji - Khaithan,குவைத்

  இவருக்கான வாய்ப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டு காலாவதியாகிவிட்டது........ இப்போது ஜெ. மற்றும் கலைஞர் அரசியலில் இல்லாத சூழலை மீண்டும் தனது வாய்ப்பாக எடுத்துக்கொள்ள நினைக்கிறார் போல தெரிகிறது....... இதற்கான முன்னோட்டமாகவே இந்த சந்திப்பும், அதில் அவர் பேசியதும் அமைந்துள்ளது... இப்போதும் கடவுள் என்று சப்பைக்கட்டு காட்டினாலும், தனது ரசிகர்களை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் விலகிடச்சென்றுவிடுங்கள் என்றெல்லாம் சொல்லியதிலிருந்து உணரமுடிகிறது.......

 • R chandar - chennai,இந்தியா

  Let him come to politics for good and transparent administration. Before coming to politics he should form only trust and engage in social activity like forming educational institution,hospital,and arrange for subsidised rate of fee at school and subsidised rate of medical test for all ailments to people. As of now water is a problem let him speak to Modi on linking of river with in India at least in south india by forming good eminent and social group to achieve all the things and finish the same in short span which will make his name stands in history of the world

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  இவருக்கும் வேற வேலை இல்ல.. இவர் ரசிகனுங்களுக்கும் வேற வேலை இல்ல..இவரு தனி கட்சி எல்லாம் ஆரம்பிக்க மாட்டார்..சொந்த செலவுல சூனியம் வச்சிப்பாரா?? வேண்டும் என்றால் பிஜேபி யில் சேர்ந்து அதற்கு சூனியம் வைப்பார்...

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  சினிமாவா இருந்தாலும் அரசியலா இருந்தாலும் நான் மட்டும் தான் சம்பாரிப்பேன்...இது தான் அவர் எண்ணம்...ரசிகர்களே புரிந்து கொள்ளுங்கள்...

 • M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வருவதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.அதே நேரத்தில் ரஜினி சொல்வது போல் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் இப்பொழுதே ஓடிவிடுங்கள் என்று சொன்னார்.அவர் இன்னொன்றையும் சொல்ல தவறி விட்டார்.. என் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூற வேண்டும் . ஏனென்றால் அரசியலில் குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாகவே உள்ளே வருகிறார்கள். அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் இந்த குடும்ப உறுப்பினர்கள் தலையீட்டால்தான் பல முறைகேடுகள் நடைபெற வழி வகிக்கின்றன அதற்கு முதலில் ரஜினி அவர்கள் கடிவாளம் போட வேண்டும். அதை செய்தாலே அரசியலில் தூய்மை வந்து விடும் அதற்கு ரஜினி அவர்கள் வழிவகை செய்ய வேண்டும் இது என் போன்ற ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பு. அதை செய்வாரா ரஜினி அவர்கள்.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  இவன்தான் அகில இந்திய நடிகனாச்சே...போய் அவன் மாநிலத்தில் கட்சி தொடங்கலாம்.. இல்லை என்றால் மஹாராஷ்ட்ராவிற்கு போகலாமே...போக மாட்டான்.. அங்கே எல்லாம் போனால் அவர்கள் விரட்டி அடிப்பார்கள்.. இளிச்சவாயன்கள் இங்கே தான் அதிகம்..

 • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

  தனக்கு வாழ்வு கொடுத்த இந்த மாநிலத்துக்கு இவர் ஏதாவது செய்ய நினைத்தால் ஒரு வாரம் ஏதாவதொரு ஊரில் நீர் நிலைகளை சுத்தம் செய்து தூர் வாரினால் போதும். இவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த ஒரு வாரத்தில் பல ஊர்களில் இப்படி செய்தால் இந்த மாநிலம் பொலிவு பெரும். நீர் ஆதாரம் பெருகும். இந்த ஒரு வார உழைப்பு இவரை இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் மனங்களில் நிறுத்தும். இவரை போன்ற பிரபலங்கள் ஊடக வெளிச்சம் இன்றி ஒரு வாரம் இப்படி செய்ய இவர்களை எது தடுக்கிறது? தனிப்பட்ட நீங்களோ நானோ இவ்வாறு செய்தால் அதன் பலன் கிடைக்க நீண்ட வருடங்கள் ஆகும். இவரை போன்ற பிரபலங்கள் இதை செய்யாமல் இருப்பது ஏன்?

 • DINAGARAN S - new delhi,இந்தியா

  வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. தமிழக மக்களே சிந்தியுங்கள். நாட்டை முன்னேற்ற நல்ல நபர்களுக்கு வாக்களியுங்கள்.

 • (Original) Nakkeran - Coimbatore,இந்தியா

  அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டே

 • rajeswari.R - Dindigul,இந்தியா

  எவ்வளவோ பார்த்துட்டோம். இத பாக்க மாட்டோமா. இதுவும் கடந்து போகும்

 • (Original) Nakkeran - Coimbatore,இந்தியா

  புதிய கட்சி - தலைவர் : ரஜினிகாந்த் பொது செயலாளர் - லதா ரஜினிகாந்த் துணை பொது செயலாளர் - சௌந்தர்யா ரஜினிகாந்த் மகளிரணி தலைவி - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளைஞரணி தலைவர் - தனுஷ் _ இன்னும் ஒரு குடும்ப ஆட்சி

 • sampanthasuganya - Dubai Media city ,ஐக்கிய அரபு நாடுகள்

  கூத்தாடிகள்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தமிழகத்தின் சாபக்கேடு. என்ன செய்வது. சினிமா வேறு நிஜம் வேறு என்பதை இந்த மக்கள் எப்போதுதான் உணர்வார்களோ.

 • PothagarSingarajan -

  இவன் படம் ஒன்னு ரிலீஷ் ஆக முடியலை உடணே ஆண்டவன் சொல்ரான் ஔவையாா் சொல்ரான் அப்படின்னு படம் ரிலீஷ் ஆகும் வரை இவனுடைய முட்டாப்பய ரசிகா்களை பயங்கர முட்டாள்களா ஆக்கிடுறான் படத்தில் நடிக்காமல் வீட்டில் சும்மா இருக்கும் போதெல்லாம் இவனுடைய கோமாளி ரசிகா்கள் இவன் கன்னுக்கு தொிவதில்லையா????????????

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  ரஜினி சார் அன்று நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை எவ்ளவு பெரிய நாசம் தமிழ் நாட்டிற்கு செய்து விட்டது என்று பாருங்கள் எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ ஆட்சி முடிந்த மறுநாளே கருணாநிதி அவரை சிறைக்கு அனுப்பி வாழ்த்த வீட்டை சூறையாடி என்னவெல்லாம் அரங்கேற்றி ரசித்தான் சார் ரஜினி மு.கருணாநிதி கூட்டத்தை இனி தமிழ் நாட்டில் வரவிடாமல் பாருங்கள் அதற்க்கு வேலை செய்யுங்கள் - காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ வழி இரட்டை இலை ரஜினி என்று கூட வாருங்கள் ஆனால் மு.கருணாநிதி கூட்டம் மட்டும் தமிழ் நாட்டில் வேண்டாம் அன்று நீங்கள் சொன்ன கடவுளே ........ வசனம் மு.கருணாநிதிக்கூட்டத்திற்கு தான் பொருந்தும் காமராஜ் அண்ணாதுரை எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ இவர்கள் தான் தமிழ் மக்களை வாழவைத்தவர்கள் நீங்கள் அவர்கள் வழி சேருங்கள்

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  யோவ்..போய்யா..ஒன்னோட பூசாரித்தனமும் வேண்டாம்...பொங்கல் சோறும் வேண்டாம்....மஹாராஷ்ட்ராவில் போயி கட்சி தொடங்கு......

 • sanjay rangarajan - chennai,இந்தியா

  Rajinikanth has manipulated his fans for his personal benefits. What service has he done to tamil people? He has earned crores of rupees by acting in tamil films but has invested all the money in Karnataka. He has never taken responsibility on any issue. He supported Tamilnadu on the Cauvery issue & then apologised to kannadigas to get his movie released. He opposed Jayalalitha & then fell at her feet. When the strike between FEFSI workers & producers happened, he kept neutral. When his fans were beaten up by PMK men at the Madurai airport, he kept quiet. He invited PMK Ramadoss & thiruimalavalavan for his daughters wedding but not his fans. His fans are idiots who blindly support him.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  இவன்தான் அகில இந்திய நடிகனாச்சே...போய் அவன் மாநிலத்தில் கட்சி தொடங்கலாம்.. இல்லை என்றால் மஹாராஷ்ட்ராவிற்கு போகலாமே...போக மாட்டான்.. அங்கே எல்லாம் போனால் அவர்கள் விரட்டி அடிப்பார்கள்.. இளிச்சவாயன்கள் இங்கே தான் அதிகம்.. ஐயா சீமான் அவர்களே .. நீங்கள் மேடையில் சொல்வது அனைத்தும் உண்மை.. தமிழ் நாட்டு மக்கள் விழித்து எழ வேண்டிய தருணம் இது..

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  அடுத்தவனுக்கு சோம்பு தூக்கியது போதும் பாஜகவில் தமிழன் இல்லையா

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  நடிப்பு ஆட்டம் முடிந்து, உடல் சோர்ந்தவுடன், அரசியல் பக்கம் ஒதுங்குவது, நடிகர் / நடிகைகளின் வாடிக்கையான விஷயம் தான். இதில் ரஜினியும் விதிவிலக்கல்ல. யாரும் அரசியலில் வரலாம். இது பொது கருத்து. ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்தவுடன், காவிரி நதி நீர் பிரச்சினை / தமிழக தொழில் வளர்ச்சி / லஞ்ச லாவண்யம் இல்லா தூய அரசியல் மற்றும் அரசு ஊழியர் வாழ்க்கை போன்ற அதீத கற்பனை எல்லாம் சற்று அதிகம் தான். தான் அரசியலுக்கு வந்தால், தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்கிறார். அதாவது, இவரை சுற்றி சுற்றி வந்த ரசிகர்களின் கனவுலக அரசியல் வாழ்க்கை மற்றும் குறுக்குவழி பதவி மற்றும் சம்பாத்திய கனவு முடிந்தது. அரசியல் பன்ச் வசனம் பேசுபவர்கள் / பத்து பேரை துரத்தி அடிப்பவர்களால் தமிழகத்தை முன்னேற்ற உதவும் என்று எந்த மடையன் சொன்னது ? வேண்டுமானால், ரஜினி ஒன்றை செய்துவிட்டு அரசியலுக்கு வரலாம். அதாவது, தான் அரசியலுக்கு வந்தால், தமிழகத்தை இந்த இந்த வழிகளில், குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னேற்றுவேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு வரலாம். இல்லையென்றால், போதும் சாமி, ஏற்கனவே தமிழக அரசியல் குப்பைகளால் நாறுவது. பத்தோடு பதினொன்று, அதோடு இதுவும் ஒன்று.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  But Rajini earned money in crores in cinema from the people.He has not acted free.

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார் எங்க தலைவர்

 • P RAMESH - NEW DELHI ,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு வருவது தப்பில்லை அவர் ஒன்றை மட்டும் செய்தால் போதும் "நதிநீர் இணைப்பு" அவர் நீருக்காக குரல் கொடுத்தவர் தமிழ் நாடு ஏழை மாநிலம் இல்லை.

 • Smsundaram Sundaram - chennai,இந்தியா

  oor rendu patta ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு வேளை, நான் அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என் அருகே கூட சேர்க்க மாட்டேன். கவலை படாதீர்கள்... அந்த சூழ்நிலை எப்பொழுதுமே வராது... இதை கல்பாறையில் செதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எந்த நதியிலும் நீர் இல்லை... எனவே தயவு செயது அந்த வார்த்தைகளை கூவத்தில் எழுதுங்கள்...

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  அரசியலில் அடியெடுத்து வைக்கவேண்டிய தேவை இல்லை..இவ்வளவு காலமாக. இருந்தநீர் ஓர் விமர்சகராக. இருந்திருக்கலாம் . பதவி ஆசை யாரைத்தான் விட்ட்து.? பொதுநலவாதியில் இருந்து. சுயநல வாதியா . மாற விரும்புகிறார்.

 • Raamji - chennai,இந்தியா

  இவருக்கு இவர் ஸ்டைலிலேயே பதில் தருகிறேன். கோபம் வரலாம். மக்களுக்கு நல்லது பண்ணுவது என்ற எண்ணம் தவறில்லை. அரசியலுக்கு வந்துதான் நல்லது பண்ணமுடியும் என்ற நம்பிக்கை இக்காலத்தில் முடியாதது என்றே நிதர்சனமாக புரிகிறது. உலகில் எங்குமே ஆசையின் அளவு அளவிற்கு அதிகமாகிவிட்டதும் பல ஊழல்களின் செய்தியே, இந்த செய்திகளை தருவதுடன் மக்களையும் அலைகழிப்பது யார்? என்ற கேளிவியே பெரிது.(இன்றைய அரசியலை இங்கே சரியாக புரிந்துகொள்ள வேண்டும்). ரஜினி புரிந்து கொள்ள வேண்டும். புகழ் யாருக்குமே கிடைக்காது, இப்புகழை மிக சரியாக பயன்படுத்தியவன் கர்ணன்ஒருவனே. இந்த கர்ணன் விதிவசம் கெட்டவனோடு இருந்தாலும் நல்லதே நடக்கவேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே நல்லவர்களை காப்பாற்றியது. நல்லவனோடு இறைவன் இருப்பான் என்றே புரிகிறது. இங்கு கர்ணன் இறைவன் நம்மோடு இல்லையே என வருத்தபட்டால் இது கர்ணனின் குற்றமே. ஒரு கர்ணனைப் போல் ரஜினி ஒரு தர்மத்தை மக்களோடு இணைந்து செய்யலாம் அது நாட்டின் நீரராதரத்தை பெருக்க வல்லமையான புளிய மரங்களை நட வேண்டியது. ஓர் பசு தான் வாழ்நாள் முழுவதும் நல்லதே செய்கிறது என மறைநூல்கள் குறிப்பிடுகின்றன, அது பால்(இது ஒருதடவை கெட்டால்தானே தயிர்,வெண்ணெய், நெய்), சாணம், கோமியம் இப்படி பல நன்மைகள் பார்ப்பவன் பார்வையை பொருத்தே. ரஜினியும் கெட்டே புரிந்துகொள்ள இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்.

 • Ram - Tiruchirappalli,இந்தியா

  அரசியல் என்பது இன்று ஒரு தொழிலாக உள்ளது. அதன்மூலம் நிறைய சம்பாதிக்கிறார்கள். அரசியல் வாழ்க்கையை ஒரு தொண்டாக ஏற்பவர்கள்தான் வரவேண்டும். ரஜினியும் நிறைய சம்பாதித்துவிட்டார். சினிமாவிலும் நேர்மையான மக்கள் இல்லை. நடிகரின் சம்பளத்தை டிக்கெட் வாயிலாக பெற்றுவிடுகிறார்கள். நடிகர்களுக்கும் இது தெரியும். கபாலி படத்தின் விளம்பரம் ஒரு ஏமாத்துவேலை. அரசியல்வாதிகளுக்கும் மாத சம்பளம் உண்டு. லஞ்ச லாவண்யம் நம்நாட்டில் அதிகம். கடவுளே தமிழ் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். புது கடவுள்தான் வரவேண்டும். புதியவரை கண்டுபிடிக்க

 • உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  திமுக vs பாஜக ஆட்டம் முழு அளவில். அதிமுகவின் 35 -40 % வாக்கு வங்கி இப்பொழுது நிச்சயமாக இல்லை. ஒரு 15 - 20 % வரை மற்றவரக்ளுக்கு கிட்டும் வாய்ப்பு. இந்த வங்கியில் திமுக எதிர்ப்பு நிலை முக்கியமாக உள்ளது. பாஜகவைத் தடுத்து இதை சிதறவிட்டாலே திமுகவுக்கு பெரும் லாபம்- இது திமுகவின் கணக்கு. ரஜினி + பாஜக + பாமக+ OPS இவர்கள் கூட்டணி சேர்ந்தால் திமுகவை எதிர்கொள்ளலாம்- இது பாஜகவின் கணக்கு. 2019 பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சாதித்து காட்டினால்தான் பாஜகவை தமிழகம் மதிக்கும். இதை தடுக்க திமுக பெரும் முயற்சி மேற்கொள்ளும்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  நடிகர்கள் வேஷம்கட்டி திறமையாக நடித்து அரசியலில் குதித்து இதுவரை தமிழ்நாட்டையும் மக்களையும் ஏமாற்றியது போதாதா? இனிமேலும் நடிப்பு தலைவர்கள் தேவையா?

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  கூத்தாடிகள்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தமிழகத்தின் சாபக்கேடு. என்ன செய்வது. சினிமா வேறு நிஜம் வேறு என்பதை இந்த மக்கள் எப்போதுதான் உணர்வார்களோ.

 • Raj - Chennai,இந்தியா

  Ithu oru kizhinja dosai, easy a amukkidalam.

 • antony raj - tirunelveli,இந்தியா

  எத்தனையோ திறமையான அறிவாளிகள் தமிழகத்தில் இருக்க, இந்த மாதிரி வவ்வால்கள் அரசியலுக்கு வர துடிப்பது, தமிழன் சரியான முட்டாள்கள் என்று இந்த வந்தேறிகள் நினைத்து விட்டார்கள். நன்றாக பாருங்கள் நல்ல நிலையில் இருப்பவர்கள் எல்லாம் வந்தேறிகள்தான். ஏண்டா இன்னுமா அறிவு வராமல் இருக்கின்ட்ரீகள். முதலில் தமிழர்கள் ஒற்றுமையுடன் ஜாதி, மத துவேஷம் இல்லாமல் தமிழன் என்ற போர்வையில் ஒன்றுபடுங்கள். பிறகு பாருங்கள் நமது அசுர வளர்ச்சியை. தமிழன் தமிழனுக்கு எதிரியாய் இருந்தால் அவர்களைமட்டும் தேடிப்பிடித்து அழியுங்கள். ஒரு தமிழன் இன்னொரு தமிழனை பார்த்து சதா புன்முறுவலோடு பாருங்கள், பேசுங்கள், முடிந்தால் உதவிகள் செய்யுங்கள். அரசியலில் உள்ள கெட்டவர்களை ஒன்றுசேர்த்து அடித்து விரட்டுங்கள். பின்ன என்ன தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகிவிடும்.

 • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

  கண்டிப்பா இவர் வரணும்.. வந்து நின்னு, டெபாசிட் போகணும். இல்லே, ஒரு சீட்டு மட்டும் ஜெயித்து சட்ட சபையில். ஒண்டிக்கட்டியா இருக்கனும்.. அப்புறம் அதுவும் போயி, பிறகு மஸ்தான் கட்டி கெஞ்சி, மத்திய மந்திரி ஆகணும்.. அப்புறம் காண போகணும் (நம்ம சிரஞ்சீவி மாதிரி) அப்பதான் இந்த மக்களுக்கு அறிவு வரும்

 • Sameside Sekarsekaran - chennai,இந்தியா

  இன்னும் ஒரு நடிகரின் பின்னால் செல்ல தமிழன் தயாராகிவிட்டான்.

 • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

  நல்ல வியாபாரி. அடுத்த பட வியாபாரத்திற்கு மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டார் .

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அதற்காக முதல்வர் பதவிக்கு வாரவேண்டாமுங்கோ , ஜஸ்ட் அட்வைஸ் பண்ணுங்க போதும் தமிழ்நாட்டின் இந்த கேவலம்காலுக்கே காரணம் மக்களுக்கு நன்னாதெரியும் கேவலமான ஆட்ச்சிகளும் தெற்குத்தெரு தொறந்து சாராயக்கடைகளுமேதான் எல்லா அரசியல்வியாதிகளுமே குடிகாரனுகளேதான் காசுக்காசு என்று பரந்துபறந்து சேர்க்கும் தேனீக்களேதான் (தேனீக்களின் சேகரிப்பு மனுஷனுக்கேதான் யூஸ் ஆவுது அரசியவியாதிகளின் சேமிப்பு அவனுக குடும்பமேக்கேதான் போவுது , கூடவேயிருந்தேன் தியாகம் பண்ணேன் என்று சொல்லுன்னு இருக்காளே ஒருத்தி கம்பி எண்ணிண்டு அவ ஒருபதவிலேயுமே இருக்காளே ஆனால் பலகோடிகளுக்கே அதிபதி அவளுக்கு ஸ்பெஷல் வசதிகழ்வேரியாம் சிறையிலே இதைவிடவா கேவலம் இருக்கமுடியுமா , கார்லே பின்னாடி குந்திண்டு ஆடுதிருடிய கள்ளன் போல முழிச்சுண்டு இருந்தா எந்த வீடுகளெல்லாம் பெரிசா இருக்கு சுருட்டலாம்னு அவ இன்னிக்கு VIP யா ??????அசிங்கத்தை உச்சிமேதான் இது என்றுதான் இந்தக்கழகம்கள் ஒழியுமோ அன்றுதான் தமிழ்நாடு ஒளிரும் இனியும் இன்னொரு சினிவாலா தமிழக முதல்வன் ஆனால் தமிழா நீ அழிஞ்சே போவே .தமிழ்நாடும் அழிஞ்சுபோயிடும் , இவ்ளோ பேசும் ரஜனிகாந்த் காவிரி நீர் கிடைக்க எண்ணாததை எல்லாம் செய்தாங்க தமிழ் சினிமாலே நடிச்சங்ககாசு சேர்த்தாங்க அம்புட்டுதான்

 • Paranthaman - kadappa,இந்தியா

  கட்சிக்கு வருபவர்கள் சம்பாதிக்க தான் வருகிறார்கள். அவர்களை பார்த்து சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக சொல்வதும் அவர்களை குடிக்காதீர்கள். சிகரெட் பிடிக்காதீர்கள் என்று சொல்வதும் கேடபவர்களுக்கு காதில் தேன்பாயும். சிறு பிள்ளகள் பேசுதல் போல் உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக நன்றாக படித்தவர்கள் நல்ல பிறப்புடையவர்கள் சான்றாண்மை மிக்கவர்கள் ஆளுமை திறனாளர்கள் பதவி பணத்தாசை இல்லாமல் மக்கள் தொண்டை விரும்புபவர்கள் எப்போதும் மக்கள் நலனை சிந்திப்பவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள் என்று சொல்லி இருக்கலாம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முதுகெலும்பு இல்லாத ரஜினியால் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை...

 • Solayappa Lakshmanan - Pallathur,Sivaganga district,இந்தியா

  Tamilians should learn from Keralaites reg Film Actors & Politics. BJP may be trying to get a foothold in Tamilnadu. Rajnikanth will be a failure in dealing with the Cauvery Water issue. ( His actions in the past will reveal ) .It is high time that Tamilians to come out of Film fanatacies to Real World.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பன்னீரை விட்டு அதிமுக சாக்கடையை குழப்பி வேர் ஊன்றலாம் என்று நினைத்த தாமரை இப்போ ஒரு இவரை நம்பி புது நாடகம் போடுகிறது. இவரையும் வருமானவரியை காட்டி பயமுறுத்தினாய்ங்க போல..

 • Paranthaman - kadappa,இந்தியா

  ரஜினி அவர்களே ஆரம்பத்தில் படப்பிடிப்புக்கு குடித்து விட்டு லேட்டாக போனதால் முத்துராமன் திட்டியதாக கூறுகிறீர்கள்.அதன் பிறகு படப்பிடிப்பில் முதல் ஆளாக செல்வதாக சொல்கிறீர்கள். இதில் ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள். முத்துராமன் லேட்டாக வரக்கூடாது என்று சொன்னாரா. அல்லது குடித்து விட்டு லேட்டாக வரக்கூடாது என்று சொன்னாரா. அரசியல் ஒரு சாக்கடை அதில் உங்களைப்போன்ற குடும்பஸ்தர்கள் கால் வைப்பது சசிகலாவின் முதல்வர் பேராசை நிறைவேறாமையை காரணமாக சொல்ல்லாம். அரசியலில் நுழைந்து அதனை புனித படுத்த வேண்டுமானால் முதலில் குடும்பத்தை .விட்டு வெளியே வாருங்கள். அரசியலில் சந்நியாசம் பெறுங்கள். நீங்கள் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது உங்களிடம் சேர்பவர்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உங்களை போல் இருப்பார்கள் என்று எண்ணாதீர்கள்.அரசியல் பிரவேசத்திற்கு ஆண்டவன் கட்டளையை எதிர் பார்க்கிறீர்கள். அது உங்கள் மனச்சாட்சிக்குட்பட்ட விஷயம். நாளையே திடீரென்று எனக்கு ஆண்டவன் கட்டளை கிடைத்து விட்டது. இன்றே கட்சி தொடங்க்குகிறேன் என்று சொல்வீர்களா. கட்சியில் எவரேனும் ஊழல்செய்தால் உடனே அவரை சட்டப்படி தண்டிக்காமல் ஆண்டவன் கட்டளைப்படி அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டேன் என்று சொல்வீர்களா. ஆண்டவன் மனிதர்களுக்கு திறமைகளை மட்டும் மூலதனமாக கொடுத்துள்ளார். அதை மட்டும் நல்லமுறையில் சரியாக பயன்படுத்துங்கள். பெங்களூரில் ஒரு காலத்தில் பஸ் நடத்துநராக இருந்ததாக சொல்லியிள்ளீர்கள். அதன் பிறகு சென்னைக்கு வந்து பிரபலமானீர்கள். இதெல்லாம் ஆண்டவன் நேராக கொடுக்கவில்லை. அவன் உங்களுக்கு கொடுத்த திறமையே காரணம். உங்களால் இன்றைய சிக்கல் நிறைந்த அரசியலில் நீடித்து சமாளிக்க முடியுமா என்பதை சுய பரிசோதனை செய்யுங்கள். உங்கள் அரசியல் நுழைவு முடியுமா முடியாதா என்பதற்கு உங்கள் பிறந்த தேதியையும் நேரத்தையும் பிறந்த இடத்தையும் தவறு இன்றி சரியாக வெளிப்படுத்துங்கள். எதனையும் வெளிப்படையாக பேசும் துணிச்சல் உள்ள நீங்கள் இதை செய்வீர்கள் என நம்புகிறோம். உலகில் தன்னிகரற்ற மனிதராக மோடிஜி ஆண்டவன் தந்துள்ள வரப்பிரசாதம். அவர் போல் இதுவரை எவரும் வந்த்தில்லை. இனி வரப்போவதும் இல்லை. உங்களால் அவரைப் போல் பிரகாசிக்க முடியுமா.முடியாதா. எனபதை சொல்ல முடியும். தண்ணீரில் இறங்கியபின்னர் முதலை கண்ணுக்கு படுவதாக சொல்கிறீர்கள். கரையிலிருந்தே தண்ணீரில் முதலை நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.முதலை தண்ணீரில் உள்ளாதா இல்லையா என்பதை பார்க்க தண்ணீரில் இறங்கவேண்டியதில்லை. என்பதை மறந்து விட்டீர்கள். தங்களைப்போன்ற நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அரசியல் சாக்டையில் கால் வைத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா எனபதை திடமாக சிந்தித்து முடிவு செய்யுங்கள். ஆண்டவனை கை காட்டாமல் ஆழ்ந்த பக்தி செய்யுங்கள். நினைப்பது நடக்கும்.

 • krishnamoorthy -

  Really a good statement by thalaivar. That shows his humbleness. Someone has to come in do good for TN. Anyone like Seeman/Rajini/Sagayam anyone can resolve current predicament of TN. They all proved that they are worth to lead and make the people focused.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஏதோ தாமரை கட்சியில் சேருவதற்கு அல்லது மறைமுகமாக குரல் கொடுப்பதாக பார்க்கப் படுகிறது. நூல் விட்டு பார்க்கிறார். பாவம் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அமைதி ஆகிவிடுவார் அல்லது அமெரிக்க இமயமலை என்று சென்றுவிட்டு லக்ஷ்மான் ஜோலாவில் ரிஷிகேஷில் தங்கி விட்டு சில விஷயங்கள் அமைதியானதும் வருவார். அரசியல் என்பது மிகவும் திறமையானவர்கள் பக்கம் அதிர்ஷ்டம் அடித்தல் தான் வெற்றி. அவ்வளவு சாதாரணம் அல்ல. நரசிம்மராவ் காலத்தில் தமிழக காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்று மத்தியில் சிறப்பாக வருவதற்கும் கர்நாடகாவை சேர்த்து அரசியல் செய்வதற்கும் சிறந்த வாய்ப்பு இருந்தது. யாரையும் பகைத்து கொள்ள முடியவில்லை. அந்த முதியவர் ஒரே ஒரு நன்றி சொல்லி இவருக்கு குல்லா போட்டு விட்டு, இவர்இ தி மு காவிற்கு தான்வ ஒட்டு போடா சொன்னார் என்று நன்றாக பயன் படுத்தி கொண்டார்கள். சான் தி வி யின் சூட்சுமம் அதிகம். எங்காவது, எப்போதாவது இவர் திமுக கூட்டணிக்கு ஒட்டு போடா சொன்னாரா? போயஸ் தோட்டத்து ரோடில் இவரால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை பாதுகாப்பு ரசிகர்கள் அம்மா தொண்டர்கள் என்று இவருக்கு நெருக்கடி கொடுத்தார்கள், இவரால் பொறாமை தன்னை நிஜ வாழ்வின் சூப் ஸ்டாராக நினைத்து கொண்டு அப்படி இப்படி சொல்லி, தேர்தலில் நன்கொடை கேட்டு தொல்லை தருபவர்களிடம் இருந்து தப்பி ஓடி அமேரிக்காவில் இருந்து விட்டு வாக்கு அன்னிக்கு வந்து விடுபவர். இரட்டை இலை சின்னத்திற்கு ஒட்டு போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றுதான் சொன்னாராம். அதை அப்படியே திமுகாவிற்கு ஒட்டு போடுங்கள் என்று இவர் வாய்ஸ் கொடுத்ததாக மாற்றி விட்டார்கள். வேறு ஒன்னும் விளக்கம் தரவேண்டாம் மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று முதியவர் காட்டத்தலை இடத்தை இவரால் ஒன்னும் செய்ய முடியாமல், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டதே என்று பேந்த பேந்த முழித்தாராம். உண்மையிலே அந்த உதித்தவர் செய்த சாணக்கியத்தனம் அது ஒன்று தான். அதை பலர் அல்லது சிலர் குள்ள நரித்தனம் என்று கூட சொன்னதாக கேள்வி பட்டேன். அதன் பிறகு இவர் சில முயற்சிகளை செய்து தனி கட்சி அல்லது காங்கிரஸ் என்று குழம்பினார். தனி கட்சி என்றால் நேர்மையாக சொந்த சொத்தையெல்லாம் விற்று செலவழித்து பிறகு ஜகா வாங்கிய செவாலியே நடிகர் கதை அறிந்து திரு திரு வேனே முழித்து கொண்டே இருந்தவர் எந்த முடிவுக்கும் வர முடியாமல் திணறினார். ஒருவழியாக தனி கட்சி என்றில்லாமல் ரசிகர் மன்றத்தை மட்டும் உள்ளாட்சி தேர்தலில் நிற்கவைத்து பாரத்தால் என்ன என்று நின்னடித்து ஒருவாறு அதை நிறைவேற்ற முயலும் பொது, அனைவருக்கும் தெரியும் முதியவரின் கட்சியின் மூத்த அமைச்சகர்கள் தலைவர்கள் இவரை வாங்கு வாங்கு என்று வாங்கினார்கள், பேட்டி கொடுத்தார்கள், பழையது அனைத்தையும் சந்திக்கு கொண்டு வந்துவிடுவோம் என்றும், எழுபதுகளில் நடந்தது நாற்சந்திக்கு வரும் என்றும், அனைத்து வெளியுலகத்திற்கான நல்ல பெயரும் ஒரே நாளில் தவிடு பொடியாகிவிடும் என்றும், மக்கள்திலகத்துடனான போராட்டத்தை வெளியில் வெளிச்சம் போட்டு காண்பிப்போம் என்றும் கூறியதாகவும் சூட்டபிள் அறிவுரை வழங்கும் விதத்தில் சொல்லப் பட்டதாகவும் அதனால் இவர் அமைதியாகி விட்டதாகவும் பேச்சு உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கு வந்து இவரின் ஒத்தை ஓட்டை இட்டு விட்டு சென்றால் தான் இவருக்கு மரியாதை என்று செய்து வைத்திருக்கிறது அரசியல் இன்று. அந்த காலத்தில் வரி ஏய்ப்பு செய்தது. பின்னாளில் தானே இவர் அதிகரி செலுத்தும் நட்பு வாட்டாரத்தில் வந்தார். இப்போதே சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் இவரை வாங்கு வாங்கு என்று வாங்குவது சற்றுமுன் செய்தியாக முகநூலில் வெளி வந்திருக்கிறது. அது போல எத்துணையோ ஊடகங்கள் இவரின் மெண்டல் நாடகத்தை வெளி கொண்டுவரும் என்று கூட இப்போதே வாட்ஸாப்ப் வந்து கொண்டிருக்கிறது. தாமரையை விட்டு விலகினால், மகளுக்கு ஐ நா தூதுவர் பதவி காலி ஆகிவிடும். ஜப்பானில் முத்து சக்கை போடு போட்டது முதல் கபாலியை வெளிநாட்டு விமானத்தில் படம் வரைந்து விளம்பரம் செய்தது வரை உளவு துறைக்கும் பெறாவிற்கும் தெரிந்திருக்கிறதாம் பின்னாளில் என்ன யார் யாருக்கு உதவினார் என்பது எல்லாம். திருவண்ணாமலை கிரிவீதிக்கு திருவிளக்கை தந்தது தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். தனிஆவர்தனமாக சிலமணிநேரம் மெரினாவில் காவிரிக்கு உட்கார்ந்து விட்டு கர்நாடக மக்களுக்கும் ஆதரவு தந்து விட்டு விட்டதோடு சரி. இளம் வயதில் ரஜினி அங்கிள் எனக்கு சூப்பரோ சூப்பர் ஸ்டார். சினிமாவில் தா இவரை பிடித்திருக்கிறது, நேரில் தோற்றம் பிடிக்கவில்லை. கமலை விட ரஜினியை தான் ரொம்ப பிடிக்கும். இப்போது எனக்கு அஜித்தை பிடித்திருக்கிறது. அவர் படம் தான் பார்க்கிறேன். ரஜினி அங்கிள்ஸ் இனி ராகவேந்திரா படங்களில் நடிக்கலாம் அல்லது அமைதியாக காலம் தள்ளலாம். தியானம் செய்து காலத்தை கடத்துங்கள் அல்லது ஒவ்வொரு இறைவன் சன்னதிக்கும் சென்று மழை வேண்டி வருண யாகம் செய்யுங்கள். அது போதும். ஆல் தி பெஸ்ட்.

 • அன்புடன்கணேசன்முருகன் -

  தமிழ்நாட்டிற்க்கு பிடித்த சாபக்கேடு....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  HE HAS MISSED THE BOAT.

 • SaiBaba - Chennai,இந்தியா

  இது வெளிப்படையான ரகசியம் தான்.பிஜேபி காய் நகர்த்துவதை புரிந்து கொள்ளாத நிலையில் தமிழக மக்கள் இல்லை.உ.பி யின் யோகி ஆட்சி தமிழகத்திற்கு வந்தே தீரும். ஒருவேளை ரஜினியை வைத்து ஆட்சியை பிடித்தாலும், சில நல்லதுகளை ரஜினியைக்கொண்டு பிஜேபி தமிழகத்திற்கு செய்யும். ரஜினி தொடர்ந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை என்றாலும் முதலில் ஆரம்பித்து விட்டு பின்னால் நகர நேரிடலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் நம்ம லதா, தனுஷ் வகையறாக்கள் புகுந்து விளையாட ரஜினி அனுமதித்தால் இதுவரை ரஜினி சேர்த்து வைத்த நல்ல பேர் மொத்தமாக டேமேஜ் ஆயிடும். அதோட நம்ம ரஜினி சிறை எல்லாம் போனது இல்லை, எனவே முற்றிலும் சுற்றி இருப்பவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,யார் தவறு செய்தாலும் அவர் தலை உருளும். தான் மட்டும் நல்லவராய் இருந்தால் போதாது, தனக்கு ஒரு நல்ல படையும் வேண்டும். இதை ரஜினி சிந்திப்பாரா? கேரளாவில் நான் கழக்கூட்டத்தில் வேலை பார்த்த போது, எனது மேலாளர் ஒரு மலையாளி சொன்ன வார்த்தைகள் - 'ரஜினி தமிழ்நாட்டின் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுபவர். நான் சென்னையில் வேலை பார்த்தபோது என் டீமில் ஒரு பையன் தினம் ரஜினி படம் பார்ப்பான், அந்த படம் பார்க்கவில்லை என்றால் அவனது நாள் நிறைவுறாது'. எனவே ரஜினி நல்லவர். அவரை சுற்றி இருக்கும் கிரகங்களால் அவரது நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படாமல் அவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  இவர் பொண்ணு அமெரிக்கால ஆடுன டான்ஸ் மாதிரி தான் இருக்கும் இவர் அரசியலுக்கு வந்தா

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  நேர்மையாளர், சிறந்த யோகி, தலை சிறந்த மனிதர் என்று எல்லோராலும் ஏற்று கொள்ள பட்டவர். தைரியமாக பணம் சம்பாதிக்க கூடாது என்று முதல் சந்திப்பிலேயே கூறிவிட்டார். தர்மம் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு இது போன்ற சிந்தனைகளை அரசியல்வாதிகள் பேசி பார்த்ததில்லை. இந்த சூழ்நிலையில் ரஜினி போன்றவர்கள் மட்டுமே நேர்மையாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். நிச்சயம் ஒரு நல்ல ஆட்சி ரஜினிகாந்தால் மட்டுமே கொடுக்க முடியும். பத்திரிகைகள் ரஜினின் எண்ணம் பற்றி மனசாட்சியுடன் செய்தி வெளியிட வேண்டும்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  கூட்டல் சரியாக வரவில்லை. அடிமைகள் போட்டி போட்டு கொண்டு பிஜேபியை ஆதரிக்கின்றார்கள். மாறி, மாறி டெல்லி சென்று மோடி காலில் விழுந்து வருகின்றார்கள். அதனால் இன்னும் நான்கு வருடங்கள் சம்பாதித்துவிட்டு அரசியல் சந்நியாசம் வாங்கி ஓடி விடலாம் என்ற கனவில் இருக்கின்றார்கள். இவர் இப்போது கட்சியை ஆரம்பித்தால் தேர்தல் வருவதெற்குள், செலவழித்த சொத்துக்கள் கரைந்து விடுமே? காசை போட்டுத்தான் காசு எடுக்க வேண்டும் என்ற வித்தை பக்கத்து வீட்டுகாரியும், பிரேமா லதாவும் செய்ததை பார்த்து லதாவிற்கு பேராசை வந்து இவரை அரசியலில் தள்ளுகின்றாரா? வயதான காலத்தில் இவரால் தமிழகம் முழுவதும் சுற்ற முடியுமா? எமி ஜாக்சனை deal பண்ணிய இவரால் அரசியல் வியாதிகளை பண்ண முடியுமா?

 • Raman - Lemuria,இந்தியா

  வாழுத்துக்கள் தமிழர்களே

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ரஜினியை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் தவறாக பேசுங்கள். ஆனால் அவர் மனதளவில் நல்லவர். விமர்சனங்களை கண்டு துக்கம் கொள்ளாதவர். நான் ரஜினி ரசிகன் துளிகூட கிடையாது. பலமுறை ரஜினியை ஏசி உள்ளேன். ஆனால், இப்போது அவரது வார்த்தைகள் நம்பிக்கை தருகிறது. "என்னை நம்பி பணம் சம்பாரிக்கலாம் என்ற ஆசையில் வராதீர்கள். ஏமாந்து விடுவீர்கள். பண ஆசை உள்ளவர்களை, எனது அருகில் கூட வைத்து கொள்ள மாட்டேன்" என்று திடமாக கூறி உள்ளார். வரும் படத்தை ஓட்டவேண்டுமென்றால், அவர் இப்படி கூறியிருக்க வாய்ப்பு இல்லை. நல்ல படமாக இருந்தால், நான் எதுவும் சொல்லாவிட்டாலும் ஓடும் என்று உறுதியுடன் கூறுகிறார். பகட்டு இல்லாதவர். இப்போதைக்கு உள்ள ஒரே ஒரு எளிமையான தலைவர். ஓரளவிற்காவது மனசாட்சி கொண்டவர். இவரை தூக்கி போட்டுவிட்டு, யாரை தான் இப்போது ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்? ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும்போதே, நல்லதொரு ஆட்சியை தமிழர்களுக்கு கொடுப்பது, அவருக்கு ஆண்டவன் அள்ளி அள்ளி கொடுத்த அதிர்ஷ்டத்திற்கு, அவர் செய்யும் கடமை. எத்தனையோ பேர் ரஜினியை விட நன்றாக நடிக்கும் திறமை கொண்டவர்களுக்கு, அவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ரஜினிக்கு தான் கிடைத்தது. அதை அவர் திறமையால் பயன்படுத்தி கொண்டார் என்றாலும், அவர் ஹாஸ்பிடலில் இருக்கும்போது, தமிழகமெங்கும் ஒவ்வொரு ஊரிலும் மொட்டை போட்டார்கள். இதெல்லாம் உறவினர்கள் கூட செய்ய மாட்டார்கள். தன்பால் அன்பு வைத்திருக்கும் எண்ணற்ற மக்களுக்கு, உண்மையுடன் அவரின் நேரத்தை செலவிட வேண்டிய கடமையும் தருணமும் வந்து விட்டது. வாழ்த்துக்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  // ரஜினியின் அரசியல் பிரவேசம்// ஸீன் 1, டேக் 1345.. ஒரே ஸீனை எத்தனை டேக் தான் எடுப்பாய்ங்க..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நெறைய கருப்புப் பணம் சேர்ந்து விட்டது.. கட்சி ஆரம்பித்தால் கல்வி கொள்ளை அடிக்கும் இவரது பள்ளி, மற்றும் வியாபார நிறுவனங்களை மேலும் "பெருக்க" வைக்கலாம்ன்னு பிளான். எப்படியோ கட்சி ஆரம்பிச்சு, நாசமா போனால் சரி..

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  வைகோ மூலம் விஜயகாந்த் அம்மாவிடம் இருந்து போன தேர்தலில் 1500 கோடிகள் சம்பாதித்ததை பார்த்தவுடன் இவருக்கும் அந்த ஆசை வந்துவிடாது. வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்தால் நூறு கோடிகளுக்கு மேல் தேறாது. வயதும் ஆகி கொண்டு இருக்கின்றது. ரெண்டு பிள்ளைகளும், மருமகனும் பண்ணும் தொந்தரவும் தாங்க முடியவில்லை. போகிறபோது பெரிதாக தேற்றிவிட்டு போவம் என்ன நினைத்துவிட்டார். தமிழனை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement