Advertisement

தமிழக மந்திரிகளின் மோசடிகள் தொடர்ந்து அம்பலமாவது அவலம்!

தமிழக மந்திரிகளின் மோசடிகள், தொடர்ந்து அம்பலமாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. மந்திரிகள் விஜயபாஸ்கர், காமராஜை தொடர்ந்து, பெண் மந்திரி சரோஜா, 30 லட்சம் ரூபாய் கேட்டு, பெண் அதிகாரியை அடாவடி யாக மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, பாதுகாப்பு கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச் சையாக செயல்படுகின்றனர். ஊழியர்கள் நியமனம், பணி இடமாற்றம், 'டெண்டர்' என, அனைத்திற்கும் லஞ்சம் பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக் கின. சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில், வாக்கா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ததற்கான ஆவணங்களும் சிக்கின. அவர் மீது, இன்னமும் விசாரணை தொடர்கிறது.

அவரைத் தொடர்ந்து, மோசடி புகாரில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரூ.30 லட்சம்
இந்நிலையில்,30 லட்சம் ரூபாய் லஞ்சம்கேட்டு, பெண் அதிகாரியை, அமைச்சர் சரோஜா
மிரட்டியதாக, புகார் எழுந்துள்ளது. இது தொடர் பாக, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ராஜமீனாட்சி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2012ல், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், 2016ல், தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக, பணியில் சேர்ந்தேன். ஜெ., மறைவுக்கு பின், இப்பணியில் இருந்து என்னை நீக்க, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பல வழிகளில் தொல்லைகொடுத்தார். அவரை சந்தித்த போது, 'இந்த பணிக்கு, 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஜெய லலிதா, இலவசமாக பணி வழங்கி விட்டார். பணியில் நீடிக்க வேண்டும் என்றால், அந்த தொகையை தர வேண்டும்' என, மிரட்டினார்.

மாறுதல்
அதனால், 2017 பிப்ரவரியில், அவரிடம், என் தந்தை வாயிலாக, 10 லட்சம் ரூபாய் கொடுத் தேன். குடலிறக்க நோயால் அவதிப்பட்டதா லும், குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டி இருந்ததாலும், சென்னைக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்தேன்.

அமைச்சர் வீடு
இது தொடர்பாக பேச, அமைச்சர் சரோஜா, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அவரது வீட்டுக்கு அழைத்தார். மே, 7ல், அமைச் சரின் வீட்டுக்கு சென்றேன்; அங்கு, அமைச்சர், அவரது கணவர் மற்றும் கான்ட்ராக்டர் ஒரு வரும் இருந்தனர்.அமைச்சர் மற்றும் அவரது கணவர், பணி மாறுதல் அளிக்க, 20 லட்சம் ரூபாய் கேட்டனர். முன்னதாக, 'செலவினங் களை கூடுதலாக காட்டி, மாதம்தோறும்
மாமூல் தர வேண்டும்; சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு, 50 பேரிடம், தலா, 2.50 லட்சம் வசூலித்து தர வேண்டும்' என்றனர்.

நான் மறுத்தேன். ஆத்திரம் அடைந்த அமைச் சர், 'நான்கு ஆண்டுகளில், நான், 4,000 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும்; அதற்கு, ஒத்து ழைக்க வேண்டும். முடியாது என்றால், வேலையை விட்டு ஓடிவிடுங்கள். உங்கள் பணியின் தற்போதைய, 'ரேட்' 30 லட்சம்; அதை கொடுத்தால், பணி நிரந்தரம் செய்து விடு
கிறேன்; முடியாது என்றால், பணம் கொடுக்க காத்திருப்போருக்கு, விட்டுக்கொடுங் கள்' என்றார்.

மேலும், 'இதுகுறித்து வெளியில் சொன்னால், வேலையில் இருந்து நீக்கி விடுவேன். வீண் பழி சுமத்தி, அசிங்கப்படுத்தி விடுவேன்' என, மிரட்டி னார்.அமைச்சரால், எனக்கும், என் குடும்பத் தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்ற கமிஷனர், கரண் சின்ஹா, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம் செய்வதாக கூறி உள்ளார். அடுத்தடுத்து, அமைச்சர்கள் புகாருக்குள்ளா வது, அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கணவனே கணக்குப்பிள்ளை!
இதுகுறித்து, ராஜ மீனாட்சி கூறியதாவது:சமூக நலத்துறையின் கீழ் தான், பெண்கள், குழந்தை கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு உள்ளது. ஆனால், இந்த துறையின் அமைச்சர், பணம் கேட்டு மிரட்டுகிறார். பண வசூலிப்பில், அவரது கணவர், கணக்குப்பிள்ளை போல செயல்படுகிறார்.சத்துணவு பணியாளர் வேலைக்கு, 2 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். சமூக நலத்துறை யில், லஞ்சம் தலைவிரித் தாடு கிறது. லஞ்சப் பணத்தில் மஞ்சக்குளிக்கும் சரோஜா மீது, பிரதமர், கவர்னர், முதல்வருக் கும், ஆதாரங் களுடன் புகார் மனு அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (155)

 • ரங்கன் -

  இந்த அமைச்சர்களும் , எம்.எல்.ஏக்களும் தேர்தல் செலவுக்கு எத்தியெல்லாம் அடகு வெச்சு அம்மாவிடம் பணம் கொடுத்தாங்களோ?

 • m.viswanathan - chennai,இந்தியா

  ஒரு உறுதி எடுப்போம் . இனி வரும் தேர்தலில் அதிமுகவை தேர்வு செய்ய மாட்டோம் என . ஒருவேளை இந்த அயோக்கியன்கள் கட்சி மாறி , தேர்தலில் நின்றாலும் ஒட்டு போட மாட்டோம்

 • ananda - thirunelveli,இந்தியா

  ஏதோ புதுமை போல் மக்களுக்கு இந்த கருத்துக்களை வழங்குவது ஏன்? ஏற்கனவே தமிழகம் லஞ்சத்துக்கு பெயர் போனது தெறியாதா? தனியார் பள்ளிகளிலும், சிறுபான்மையினர் கல்விக்கூடங்களில் கூட தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் ஒவ்வொரு வேலை வைப்புகளுக்கும் கணிசமான பணம் லஞ்சமாக அரசு தரப்பிற்கும் செய்து வாங்கப்படுவதாக வதந்திகள் உள்ளன , இதை நியாயமான ரகசிய முறையில் விசாரித்தால் சிறுபான்மையினர் எவ்வளவாய் லஞ்சம் கொடுக்க கடடாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெறியவரும் ஆனால் வேலைக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்களும் மற்றும் சிறுபான்மை அமைப்பினரும் எவ்வாறு பயமுறுத்தி லஞ்சம் கொடுப்பதற்கு தள்ளப்பட்ட்னர் என்பதையும் ரகசியமாக விசாரிக்க வேண்டும். பெரிய பெரிய உண்மையிலே பெரும் லன்ச் ஊழல்கள் வெளிவருவது நிச்சயம். இதனால் அரசு அதிகாரிகளை தவிர சிறுபாண்மை அமைப்பினரும் பாதிக்கப்படலாம் ஆனால் உண்மை மூடிமறிக்கப்படுவதுதான் நிஜம் . எதுவாயிருந்தாலும் நாட்டு மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு அடைந்து லஞ்சம் கொடுக்க மறுக்கவும் அதை கொடுப்பவரை தடுக்கவும் முன்வரவேண்டும். தங்கள் வேலைவாய்ப்பு தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு வேலை கிடைக்குமே அல்ல என்றால் வேலை வாய்ப்பு கிடையாம பொய் விடுமே, என்னும் அதிகமாக பணம் கொடுத்து வேளை வாங்கிக்கொள்ள பிறர் ஆயத்தமாயிருக்கிறார்களே என்ற ஏக்கத்தில் மக்கள் ஆத்தாமையினால் லஞ்சம் கொடுத்தாவது வேலையை தக்க வைத்துக்கொள்கிறார்கள்/.

 • senthil - cbe,இந்தியா

  சரோஜா சாமானிகாலோ.... நான்கு மாதத்தில் 4000 கோடி...யப்பா அவ்வளவும் லஞ்சம்...திருட்டு கும்பல்கள்... எத்தனை குடும்பத்தின் சாபம்... விளங்குமா பரம்பரை....

 • s t rajan - chennai,இந்தியா

  ஆனால் இந்த மந்தி(ரி)கள் கையில் தமிழகம் சீரழிவதை எந்த நீதிமன்றமோ, CBI யோ, தேர்தல் கமிஷனோ தடுக்க வில்லையே ? அங்கும் லஞ்சம் புகுந்து விட்டதோ?

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  சரோஜா மீது, பிரதமர், கவர்னர், முதல்வருக்கும், ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பி உள்ளேன், அப்படியா லஞ்சம் தலைவிரித் தாடு கிறது ,அதுவும் நம்ம தமிழ்நாட்டில் ,லஞ்சம் அப்படினா என்ன ? லஞ்சம் வாங்கவில்லை என்றால் தான் தப்பு ,அப்புறம் பதவில் இருந்து என்ன பயன் .சம்பாதிக்க தான் அரசியலுக்கே வருகிறோம் என்று தான் எல்லா அரசியல் வாதிகளும் கூறுகிறான் ,இதை தான் அனைவரும் முன்னாடியே நம்ம கட்டுமர பேரன் தயா நீதி அன்றே கூறினார் .லஞ்ச புகார் மனு அனுப்பி இந்த பிரதமர், கவர்னர், முதல்வரு நடவடிக்கை எடுப்பார்களா ? ஜெ.ஜெ.வின் கொட நாடு கொள்ளை போகும் போது இது எல்லாம் நடக்குமா மக்களே ?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  கோட்டால வந்தா கொள்ளையடிக்க கூடாதா

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சும்மா இந்த பிலிம் எல்லாம் வேண்டாம் ஒண்ணும் நடக்கப்போவதில்லை. அவன் அவன் லட்சம் கோடியில் ஊழல் செய்யும் போது பிசாத்து 30 லட்சம் ஊழல், இப்படி மனோபாவத்துடன் இந்த வழக்கு தொடரும். சரோஜாவாவது, காமராஜாவது யாரும் உள்ளே போக மாட்டார்கள். ஆட்சி கவிழ இன்னும் சில வாரங்களே பாக்கி இருக்கின்றது. ஆட்சி கவிழ்ந்தவுடன் இதை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  மொதலமைச்சர் மூடிக்கிட்டு உக்காந்திருப்பாரே.?...இந்த மந்தியை எல்லாம் கூவத்தூர்ல வச்சி கோடி கோடி யா ...கொடுத்துள்ள ஆட்சியை காப்பாத்தியிருக்கு....இப்போ அவளை பதவியில் இருந்து தூக்கினா....அவ உடனே என் பின்னாடி எட்டு எம் எல் ஏ இருக்கானுங்க ன்னு சொல்லிட்டானான்னா..?

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  மந்திக்கு ஒட்டு போட்ட மாக்கள் எல்லாம் ஒரு ஸ்டெப் முன்னால வாங்க....அடிக்கெல்லாம் மாட்டேன்... அதை இப்போ மந்திரி ன்னு சொல்லுறாங்க...

 • karunchilai - vallam,இந்தியா

  எல்லா புகார்களும் , பதியப்பட்ட வழக்குகளும் கோப்புகளில் நிரந்தர உறக்கத்திலிருக்கும்.

 • (Original) Nakkeran - Coimbatore,இந்தியா

  சொர்ணாக்கா செத்து போச்சுன்னு யார் சொன்னது? இதோ இருக்கிறார் சரோஜா வடிவில்

 • siva - chennai ,இந்தியா

  corrupted tamilnadu where is jallikattu youngsters please take steps again start anti corruption movement. stupid government for government post like assistant professor 30 lakhs professor 50 laks & Vc 10 crores. how to improve our quality of education.

 • kc.ravindran - bangalore,இந்தியா

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .

 • (Original) Nakkeran - Coimbatore,இந்தியா

  நீதி மன்றம், ஆளுநர் அலுவலகம் , வருமான வரித்துறை, காவல் துறை , லஞ்ச ஒழிப்பு பிரிவு இவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது? திருமதி சரோஜா அவர்கள் தன் மேல் உள்ள குற்றச்சாட்டை இதுவரை மறுக்கவில்லை. நான் அப்படித்தான் என்ற அதிகாரத்துடனேயே தற்போதும் உள்ளார்

 • kandhan. - chennai,இந்தியா

  எங்கே அந்த அ தி மு க சொம்புகள் குறிப்பாக சேகர் சேகர் ??பதில் சொல்லட்டும் கேவலமான ஆட்சியை இதுவரையில் தமீழகம் கண்டதில்லை காரணம் வெளி மாநிலத்தவர்கள் ஆட்டம் அதிகமாகிவிட்டது எனவே தமிழர்கள் இப்போதும் ஒன்றுபடவில்லை என்றால் எப்போதும் இந்த நிலை மாறாது ???? கந்தன் சென்னை

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  கூவத்தூர் டீல் முடிவதற்குள் தினகரன் உள்ளே போய்விட்டார், இவர் கூவத்தூர் வாசத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அன்பளிப்பை மேற்கொண்டு ஏதாவது திட்டம் வைத்து பணமுடையில் சிக்கியிருப்பார், வேறு யார் ஈடுகட்ட முடியும்? துறையை சேர்ந்த அதிகாரிகள் தானே ? படு கேவலமான அணுகுமுறை , தகுதியில்லாதவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏழரை, மொத்தமாக விரட்டியடிக்கப்படவேண்டும், மக்கள் கட்டாயம் பாடம் கற்பிப்பார்கள், வாழ்க தமிழகம்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஒரு திருட்டு அடிமைக்கூட்டத்தை வைத்திருந்து, திறமையோ, நேர்மையோ, எளிமையோ இல்லாமலேயே ஆட்சி செய்து நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருந்த அம்மாவைப் பாராட்டத்தான் வேண்டும் .... மறுபக்கம் இதைவிடப் பயங்கரமான கும்பல் ..... நாசமாப் போனாண்டா தமிழன் ....

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  பார்த்தாலே ரவுடி மாதிரி இருக்கா. ஒரு நல்ல சாந்தமும் சிரிப்பும் நேர்மையான பார்வையும் உள்ள ஒரு மந்திரிய கூட பாக்க முடியலையே?

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இருக்கவே இருக்கு ஜாதி பிட்டு...நான் ஒரு தலித்து அதனால் தான் எனக்கு எதிரா சதி நடக்குதுன்னு ஒரு பிட்டை போட்டால் எல்லாம் சரியா பூடும்...

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இதுங்க எல்லாரையும் அடிச்சு ஜெயிலுக்கு அனுப்பணும்... அதுல ஒரே ஒரு சிக்கல், அடுத்து வரபோற கும்பல் இவங்களைவிட மோசம்... பாவம் தமிழக மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.... யாராவது ஒரு நேர்மையான தலைவர் இருந்தா சொல்லுங்க... கடவுள்தான் காப்பாத்தணும்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  எனது கேசத்தில் ஒரு எண்ணிக்கையை கூட அசைக்க முடியாது என்ற இறுமாப்பு , வக்கற்ற தலைமை, யோசனை அற்ற வாக்காளர்கள். இனி நாலாயிரம் கோடி என்ன நாற்பதாயிரம் கோடி கூட சம்பாதிக்கலாம். கிடைத்தால்

 • rajavikramaraj - papanasam,இந்தியா

  கை நீட்டும் மக்கள் உள்ள வரை தமிழ்நாடு தனிநாடுதான் ,பிஜேபி அரசு வஞ்சனை செய்வதால் தான் இன்னும் இந்த செயல்படாத அரசு ஆட்சியில் உள்ளது .இந்த maநாடும் நாட்டு ம் மக்களும் நாசமாய் போகட்டும் .இதுதான் பிஜேபி தற்பொழுதுள்ள நிலைப்பாடு .வாழ்க உங்கள் மத்திய அரசு .

 • Sundar - MELBOURNE ,ஆஸ்திரேலியா

  லஞ்சம் வாங்குவதில் தமிழக அமைச்சர்கள் Guinness record ல இடம் பிடித்துவிடுவார்கள்.ஒட்டு போட்ட மக்களுக்கும் தமிழகத்திக்கும் பெருமைதான்...இந்த மாதிரி நாதாரிகளை வச்சு செய்யணும்..

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  எங்கவீட்டு கரி காய் விற்கும் முனியம்மா மாதிரி இருக்கே இந்த பொம்பளை

 • Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்

  எங்கேயாவது அரசு அலுவலகத்தில் லஞ்சம் தர முடியாது என்று உரக்க சொல்லி சண்டை போட்டு பாருங்கள். உங்களை மாதிரியே ஏதாவது வேலை ஆக வேண்டும் என்று அங்கு வந்திருக்கிற சக குடி மக்கள் சலனமே இல்லாது நீங்கள் இருக்கும் பக்கம் கூட பார்க்காது தங்கள் வேலையை முடித்துக் கொண்டு கிளம்புவதிலேயே குறியாக இருப்பார்களே அன்றி உங்களுக்கு ஆதரவு தர தப்பித் தவறிக் கூட முன் வர மாட்டார்கள். அரசு ஊழியர்களுடன் மைத்துன உறவு கொண்டாடிக் கொண்டு அங்கு இருக்கிற ஒரு சிலர் ரொம்ப நல்லவர்கள் போல நம்மை சமாதானப் படுத்தி கிளப்ப பார்ப்பார்கள். சரியான தகவல் அளிக்காது அலைக்கழிக்கும் அதிகாரிகளை நேருக்கு நேர் மோத துணிச்சலோ நேரமோ இல்லாமல் "எவ்ளோ செலவானாலும் பரவால்ல சார் கொஞ்சம் பார்த்து பண்ணினீங்கன்னா நல்ல இருக்கும்" என்று சொல்பவர்கள் பெரும்பான்மையா இருக்கிற வரை லஞ்சம் தலை விரித்து ஆடத்தான் செய்யும்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அவருக்கு பாதுகாப்பு அவசியம்.

 • Meenu - Chennai,இந்தியா

  ஐந்து வருட ஆட்சியில் எவ்வளவு கோடிகளை சேர்க்க முடியுமோ அவ்வளவு கோடிகளை சேர்த்துவிட வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு, தேர்தலில் நின்று செலவு செய்கின்றனர். வாக்காளரும் பணத்தை வாங்கிக்கொண்டு விசுவாசமா வாக்களித்து விடுகின்றனர். இது கடந்த நாற்பது வருசமா நடந்து கொண்டு தான் இருக்கிறது நம் தமிழ் நாட்டில். இதுபோல ஆட்களுக்கும் ஆதரவா இருக்கிறவர்கள் தேச துரோகிகள்.

 • krishna - chennai,இந்தியா

  அம்மா என்று அன்போடு கூவிய மக்களுக்கு தன் ஒரு அசிங்கம் என்பதை கொள்ளை கூட தலைவி ஜெயா நிரூபித்துள்ளார்.சசி மன்னார்குடி மாபியா சரோஜா போன்ற திருடர் கூட்டத்தை வளர்த்து தமிழ் நாட்டை சீர் குலைத்ததுதான் ஜெயாவின் சாதனை.இந்த அசிங்கத்தை பெயரை சொல்லி வோட்டு கேட்டல் அடித்து விரட்டுங்கள்.அண்ணாதிமுக திமுக இரண்டுமே கொள்ளையர்களின் கூடாரம்.இந்த இரண்டு கட்சியையும் துரத்தி அடிக்க வேண்டும்.பணமும் சாராயமும் வாங்கி வோட்டை விற்பதை கேடு கேட்ட தமிழ் கூட்டம் நிறுத்த வேண்டும்.

 • Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ

  இந்த முகரக்கட்டைக்கு குங்குமம் விபூதி ஒரு கேடு. எடப்பாடி என்ன சொல்கிறார் இந்த நாதாரியைப்பற்றி? அவர் பொழப்பை அவர்பார்க்க பார்க்க வேண்டாமா? ஆறு கொள்ளைக்கூட்ட நாதாரிகள் வெளியேறினால் எடப்பாடி நாலாண்டுகளில் தேத்த வேண்டிய அவர் பட்ஜெட் அம்போ ஆகிவிடும். ஆகவே யார் எக்கக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று கருமமே கண்ணாக கள்ளத்தனமாக காசு பார்த்துக்கொண்டிருக்கிறார் தற்ச்செயலாக முதல்வர் ஆனவர். தமிழ்நாட்டின் தலைவிதி இது.

 • Arun - Chennai,இந்தியா

  லஞ்சப்பணத்தில்_மஞ்சக்குளிக்கும்_சரோஜா

 • Laxmanan Mohandoss - ambur,இந்தியா

  People who do not have self esteem and self respect become ministers,very hardly we see corrupt free ministers,unless the voters mind set change,this situation will continue in Tamilnadu.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  மை எழுதும் கண்ணாலே ...பொய் எழுதி போனாளே...

 • Sandru - Chennai,இந்தியா

  இந்தியாவில் தமிழகம்தான் ஊழலில் முதல் இடம் பெற வேண்டும் என்பதற்காக தன் கணவனுடன் சேர்ந்து கடுமையாக உழைக்கும் அமைச்சர் சரோஜா வாழ்க. அமைச்சருக்கு அணைத்து வகையிலும் தன் ஆதரவை தரும் முதல் அமைச்சருக்கும் நன்றி.

 • balasubramanian - coimbatore,இந்தியா

  அடித்த கொள்ளை அடித்ததுதான் .யாராலும் ஒன்றும் செய்ய முடியாது .எத்தனை ஊழல் பேர் வழிகள் தண்டனை பெற்று உள்ளே இருக்கிறார்கள் .?.கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கினால் அது குற்றமாகாது .ஏனெனில் அடித்த பணம் அவர்களுக்கு பலமாகிவிடுகிறது .

 • vetri - NELLAI,இந்தியா

  தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி ஊழல் ஆட்சி என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும், தலைமை முதல் அடி மட்ட கவுன்சிலர் வரை எல்லா இடத்திலும் ஊழல். வீடு வாங்குவதற்கு இடம் வாங்கினால் அதற்கும் கமிஷன். வீடு கட்டினாலும் அதற்கும் கமிஷன். இப்படி எல்லா விஷயத்திலும் ஊழல். மணல் குவாரிகளை இன்னும் 3 ஆண்டுகளில் மூடப்படும் என்றார் முதல்வர். இருக்கிற குவாரி அடித்தது போதாதென்று இன்னும் புதிதாக 7 குவாரிகளை திறக்கப்படும் என்றார் முதல்வர். 3 ஆண்டுகளில், குவாரி மணலில் ஊழல் செய்துவிட்டு, 5வது வருடம் உத்தமர் போல் மணல் குவாரிகள் மூடப்படும் என்று அறிவிப்பர். விஜயபாஸ்கர், காமராஜ் (பெருந்தலைவர் பெயரை வைத்துக் கொண்டு, உத்தம தலைவன் பெயரை கெடுத்தவன்) சரோஜா இப்படி பல தனித்தனி ஊழல் மன்னர்களை கொண்டுள்ள அதிமுக கட்சியில் இன்னும் பல முறைகேடு மன்னர்கள் பெயர் விரைவில் வெளிவர வாய்ப்பிருக்கிறது. இப்படி கேவலப்பட்ட பிறகும், கட்சி அவர்களை நீக்குவதாக இல்லை. கேட்டால், கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிறார்கள். அவர்களை நீக்கினால், ஆட்சி கலைந்து விடும் என்ற பயம். தைரியமான, உண்மையானவர்கள் என்றால் ஊழல் அமைச்சர்களை கட்சியில் நீக்குங்கள் பார்ப்போம்.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இன்னுமும் A1 குற்றவாளி ஜெயாவின் வழி நடப்போம் என்றுதானே இந்த கொள்ளையர்கள் கூறுகிறார்கள். பின் அப்படிதான் கொள்ளை அடிப்பார்கள். ஒட்டுமொத்தமாக இவர்கள் போன்றோரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தயாரா தமிழகமே? இந்த ஜல்லிக்கட்டு இளைஞர்கள் எங்கே போனார்கள்?

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இதுக்கு இவ வேற .... பார்த்து சம்பாதிக்கலாம்.

 • Rajan - singapore,சிங்கப்பூர்

  என் வீட்டு வசதிவாரிய பத்திரம் வாங்க நான்பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும் . லஞ்சம் இல்லையென்றால் அணுவும் அசையாது . பிரியாணிக்கு ஓட்டு போட்டால் இதற்கு மேலும் படவேண்டும் . 4000 கோடி எப்போ டார்கெட் முடியுமோ

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  ஊழல் பேர்வழிகளின் மொத்த குடும்பத்தையும் நிரந்தரமாக நாடு கடத்தப்பட வேண்டும்...

 • christ - chennai,இந்தியா

  இந்த நாதாரிகளுக்கா மக்கள் ஓட்டு போட்டார்கள் ?

 • christ - chennai,இந்தியா

  இது மூஞ்ச பார்த்தாலே தெரியுது இது இதுக்கு சரிப்பட்டு வரும்

 • christ - chennai,இந்தியா

  அடுத்த சொர்ணாக்கா ?

 • மூ. மோகன் - வேலூர்,இந்தியா

  அடக் கடவுளே திரும்பின பக்கமெல்லாம் கொள்ளைக் கூட்டமா தெரியுதே இதுகளை அனைத்து வசதிகளும் நிறைந்த 'புழலுக்கு' கூண்டோடு அனுப்பினாலாவது ஊழலோடு, ஜனத்தொகையும் கணிசமாய் குறையும்

 • antony raj - tirunelveli,இந்தியா

  இதுகளுக்கு ஓட்டுப்போட்டு முட்டாள் மக்களை சொல்ல வேண்டும். சுய நல்லொழுக்கம் இல்லாத .....

 • R Sanjay - Chennai,இந்தியா

  "ராஜ மீனாட்சி" 10 லட்சம் லஞ்சம் கொடுத்தது தவறு, தவறி முதலிலேயே கிள்ளி எரிய வேண்டும். சரோஜாவுக்கு 10 லட்சம் கொடுக்கும்போதே இவர் வீடியோ ஆதாரம் மூலம் சரோஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் மாட்டிவிட்டிருக்க வேண்டும்.

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  தமிழகம் என்று ஒரு யோக்கிய முதல்வரை கொண்டுவர முடியும் என்றால் ஒவ்வொருவரும் அவரவர் வடடத்திற்குள் லஞ்சம் வாங்காமலும் லஞ்சம் வாங்குவோரை வெளிக்கொணர்தலும் செய்கின்றனரோ அன்றுதான் கொண்டுவரமுடியும் ஊராட்சிகள் ஊழலாட்சிகளாகவும் நகராட்சிகள் நரக ஆட்சிகளாகவும் வருவாய்த்துறை வருவாய் பெறுவோராகவும் காவல்துறை ரௌடிகளுக்கு காவலர்களாகவும் கமிஷனர்கள் கமிஷன் அறுப்பவர்களாகவும் அரசு பணியாளர்கள் கையூட்டு பெறுபவர்களாகவும் இருப்பதிலிருந்து என்று தங்களை விடுவிக்கின்றனரோ அன்று தான் தமிழகம் தலை நிமிர முடியும் ராம் மோகன் ராவை ஏன் தலைமை செயலர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் ஏன் அவரை மறுபடியும் ஓர் துரையின் தலைவராக நியமிக்கவேண்டும் பன்னீர் முன்பு ஏன் ஜால்றா தண்ணீரை தெளிக்கவேண்டும் பிறகு ஏன் கண்ணீரை நடிக்கவேண்டும் எடப்பாடி ஏன் இன்னும் லஞ்ச அமைச்சர்களை நீக்காமலிருக்க வேண்டும் இவ்வளவு கூத்துக்கள் கூவத்தூரில் நடந்தும் ஆர் கே நகரில் ஆக்கம் கேட்டிட செயல்கள் பல நடந்து ஆக்கிரமிப்புகள் பல அரசியல்வாதிகள் ஆங்காங்கு செய்திருந்தும் ஏன் எவ்வித நடவடிக்கையும் எவரும் எடுப்பதில்லை ஏன் ஒரு கவர்னர் கவனிப்பாரில்லாது இருக்கவேண்டும்

 • Meenu - Chennai,இந்தியா

  முகத்திலேயே தெரிகிறது.

 • N Sankar - Tirunelveli,இந்தியா

  தமிழகத்தின் தற்போதைய அவல நிலை...

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  உனக்கெல்லாம் சமூக நலத்துறை. சமூக நலனுக்காக என்ன செய்தாய், குறைந்த பட்சம் தாழ்தப்பட்ட உன் சமூக முன்னேற்றத்திற்காக என்ன செய்தாய்.. கடவுள் கொடுத்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்குத் தொண்டு செயாமல், பதவி வந்ததும், அதை வைத்துக் கொண்டு என்னமா ஆடுற... எந்த நிலையில் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறாய் என்று வாழ்க்கையைத் திரும்பிப்பார் "ஊஞ்சானூர் சரோஜா". கடவுள் நினைத்தால், நீ ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர வெகுகாலம் ஆகாது.

 • YesJay - Chennai,இந்தியா

  பிடிச்சி உள்ள போடுங்க சார். லஞ்சம் கேக்கறாங்க லஞ்சம்...

 • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அணைத்து அயோக்கிய அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பங்களும் அழிந்து நாசமா போற காலம் வர சீக்கிரம் ஆண்டவன் தருவான்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  When Jayalalithaa was alive these people were acted like sincere, faithful, honest ,work and duty minded people to serve for the public as true good Samaritans because Jayalalithaa was watching all these people's secret activities by her Uzhavu Thurai and took action promptly and they were fear about their posts and power. After her death these people have gone unchecked as" Gulla Khavoo "and try to loot the state and the people maximum in order to recover the amount which they spent during the assembly election for their candidatures. They knew well this is their last posts and power of AIADMK party rule in Tamil nadu. These people can enjoy now for time being by such corrupted lives but at their last days the God will give them unexpected and unbearable sufferings and troubles in their families forever till they repent for their past bad deeds and actions to the public.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த மூஞ்சியில் விழித்து விட்டு சென்றாலே... ஏழு ஜென்மத்திற்கு சோறு கிடைக்காது... இதெல்லாம் மந்திரி...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அறுபது ஆண்டுகளாகவே தமிழக அமைச்சர்கள் இலைமறைவு காய் மறைவாக திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்... யாராவது ஒரு உத்தமர் கட்சியை விட்டு வெளியே வந்து மக்களுக்கு சேவை செய்யட்டும் பார்ப்போம்... ஒரு பயலும் வரமாட்டான்...

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இப்போ இருக்கிற அரசியல் அமைப்பில் இந்த பெண் அதிகாரி ராஜமீனாட்சி, யாரிடமும் புகார் செய்ய முடியாது.. இவர் போலீஸ் அதிகரிக்கு புகார் அனுப்பினால் அதை யாரும் கண்டுக்க மாட்டார்கள்..ஏனென்றால் போலீஸ் அரசின் ஒரு அங்கம்.. போலீஸ் சி.எம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.. அப்போ இவரின் கதறலை கேட்க தமிழகத்தில் யாரும் இல்லை..கவர்னருக்கு புகார் அனுப்பலாம்..ஆனால் இப்போ தமிழகத்திற்கு முழு நேர கவர்னர் இல்லை.. இந்த மாதிரியான கேஸ்களை கையாளத்தான் லோக் ஆயுத்த் தேவை.. ஜெயா ஆட்சியில் எந்த கண்காணிப்பு அமைப்பும் இல்லை..ஏன்..? எந்த எதிர்ப்புமில்லாமல் செய்லபட ஜெயா இவைகளை மூடினார்..?.. அசெம்பெலி நேரடி ஒளிபரப்பையே ஜெயா எதிர்த்தார்..தமிழகத்தை எல்லா வழிகளில் சீரழித்து விட்டுத்தான் இந்த அதிமுக போகும் போல் தெரிகிறது.. வாயையே திறக்காத கல்லுளி மங்கன் சி.எம் பழனிச்சாமி என்ன பண்ணமுடியும்...? அவருக்கு நாளைக்கு சி.எம் ஆக இருப்போமா என்று சந்தேகம்..அப்போ எப்படி ஆட்சி நடைபெறும் ..?.. இப்படித்தான் எல்லா அமைச்சர்களும், அதிகாரிகளும் கட்டுக்கட்டங்கமல் கொள்ளை அடிப்பார்கள். காற்று உள்ள போதே தூற்றி கொள்வார்கள்..அப்போ என்ன செய்ய வேண்டும்..?. இந்த அரசை உடனே கலைக்க வேண்டும்..இல்லை தமிழகம் திவால் ஆகிவிடும்..

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  அடுத்த படத்தின் டைட்டில் ரெடி "சரோஜா அலைஸ் சொர்ணாக்கா". அந்த படத்தில் நீங்களே நடித்தால் பாகுபலியின் வசூல் சாதனையை மிஞ்சி விடலாம். பார்ட் 1 மற்றும் 2 என்று எடுத்து 4000 கோடி ரூபாயை அள்ளிவிடலாம். சொர்ணாக்கா சாரி சரோஜா அக்கா என்ன ரெடியா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இது 30 தின் ஆட்சி காலம் போல..

 • sam - Doha,கத்தார்

  இதை போல் வெட்கம் கெட்ட அரசியல் வாதிகள் தமிழ் நாட்டிற்கு பெருத்த அவமானம். உங்களையெல்லாம் கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வோட் போட்டார்கள். காலம் உங்களுக்கு நெருங்கிவிட்டது

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  எது அவலம்..? அமைச்சர்களின் மோசடிகள் தொடர்ந்து அம்பலமாவதா..? ஓ.. அதாவது A1 குற்றவாளியென அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா மாதிரி கமுக்கமா அமுக்கிடனும்.. மோசடிகளை இப்படி அம்பலமாக விட கூடாது.. ஆனா A1க்கு அப்படி கன்டெய்னரை கூட சோத்துல வச்சு கமுக்கமா அமுக்கிற அளவுக்கு சில மோசடி பேர்வழிகள் துணை இருந்தது.. ஆனா இந்த அமைச்சர்களுக்கு அது இல்லை போல..

 • Tamilselvan - Chennai,இந்தியா

  திராவிட கட்சியின் ஊழல் பேர்வழிகளை பிடித்து நிரந்தரமாக உள் தள்ளினால் ஒரு பயலும் லஞ்சம், ஊழல் கொலை அடிப்பது பற்றி கனவிலும் நினைக்க மாட்டார்கள்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  பணப்பிசாசு என்றபடியால் தானே குடும்பத்தையும் விட்டு கூவத்தூர் விடுதியில் கூத்தடித்தார்கள் .

 • ravi - chennai,இந்தியா

  எல்லா ஊழல் லஞ்ச அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மக்கள் கல்லால் அடித்துக் கொல்லும் நாள் வரவேண்டும் - அப்போது தான் அவர்கள் உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் - இல்லாவிட்டால் காவல் துறையே அவர்களை பாதுகாத்து தப்பிக்கவைக்கும் - நீதிபதிக்கே தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது - இனி மக்கள் இன்னும் பொறுமையாக இருந்தால் ஒரு பயனுமில்லை - ஏறக்குறைய எல்லா அமைச்சர்களின் மீதும் ஊழல் புகார்கள் வருகின்றன - ஆகையால் மறுதேர்தல் உடனே வரவேண்டும் - இந்த மாதிரி நேரங்களில் மக்கள் ஓவ்வொரு ஆண்டும் தங்கள் முடிவை அறிவிக்க வாய்ப்பு வேண்டும் - வேண்டுமென்றால் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப சட்டம் வேண்டும் - ஜெய் ஹிந்த்

 • நிலா - மதுரை,இந்தியா

  மற்ற மந்திரிகள் யாவரும் நேர்மையானவர்களா?

 • selva28 -

  this is not the first issue. this bribing culture is there for long. since JJ is not there people are daringly making it to public. this is good sign of fight against corruption. everyone must join in bringing out all corruptions in govt functionaries to make TN clean n proved. vande madaram.

 • rajan. - kerala,இந்தியா

  சரோதாயீ பர்ஸனாலிட்டி இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபம் ,

 • rajan. - kerala,இந்தியா

  ஐயோ, என்னே ஒரு தத்துரூபமான அழகுடா இந்த சரோதாயீ 4000 கோடி டார்கெட் ஸ்பீடுல இருக்காக? பழனி தம்பி ஊழல கண்டுக்க மாட்டான். இத பார்க்கையில தம்பி டார்கெட் பல கோ -கோடி ரேஞ்சுல போகுமோ. பதவி இருக்கற நாளில தமிழ் நாட்டையே வித்து ஆட்டைய போட தயாராகிடாங்கடா வடிவேலா அலர்ட் ஆகிக்கடோய். அவனவன் கோணி பை யோட அள்ள ஒண்ணா உலா வாரானுங்கடோய்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சரோஜாக்காவுக்கு தெரியும் , எல்லாப்பயலுகளும் பண்றான்னுங்கங்கறது. எந்த அமைச்சரையும் எம் எல் எவையும், யாரும் கேள்வி கேட்க, பதவி நீக்க முடியாதுங்கறதும் தெரியும். கட்டிங்கில் பங்கு, யாரை நிறுத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு, மாநில அரசு இதழில் மத்திய ஆளும் கட்சியின் கொள்கை பிரச்சாரம், மத்திய அரசுக்கு எதிராக மூச்சுக்கூட விடமாட்டோம் என்பதை உறுதி..... இன்னும் என்ன வேணும். என்ன வேணும்னாலும் செய்யலாம், மத்திய மேலிடம் கண்டுக்காது, மேலிடமே திருப்தியாக இருக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதித்துறை போன்றவற்றிற்கு என்ன வந்ததாம். இப்போதைக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கலாம். மீடியாக்கள் அரசால் புரசலாக ஒரு செய்தியை போட்டுவிட்டு எலும்புத்துண்டு கிடைத்ததும் பதுங்கி கொள்ளும்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  கொள்ளையர்களின் கையில் இன்று நாடு இருக்கிறது, இவர்கள் தாங்கள் வாழ் எந்த எல்லைக்கும் செல்வார்கள், மொத்தத்தில் நம் மாநாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைக்கப்போகிறது தெரியவில்லை, வாழ்க வெள்ளைக்காரன், அவன் இருக்கும் வரை காந்தியையிக் காப்பாற்றிவந்தான், சுதந்திரம் பெற்றபின்பு ,,? இதே நிலை என்று அனைத்து தரப்பினருக்கும் வந்து விட்டது, இதற்குப் பெயர்தான் ஜநாயகம். வந்தே மாதரம்

 • Rajamani Baskaran - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  அவரது தந்தை மூலம் 10 லட்சம் கையூட்டு கொடுத்த அதிகாரி எப்படி உண்மையானவராவார்.

 • Raj - Chennai ,இந்தியா

  இன்னும் திமுக மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அனைவரும் கறையற்றவர்களா?

 • graghavan -

  madhiya sircar indha pugarkalukku sevimaduthu udane nadavadikkai edukka vendum

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். எப்போ யார் வருவாரோ தெரியாது. கிடைக்கிறவரை அள்ளிக்கொள்ளவேண்டியதுதான்.

 • Anandan - chennai,இந்தியா

  ஆத்தாவின் வாரிசுகள் எப்படி இருக்கும் இப்படித்தான்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இதையெல்லாம் பார்த்து கேட்டு தமிழன் பூரா உணர்ச்சி வசப்பட்டு அப்படியே ஓட்டை மாத்தி திமுகவுக்கு போடுவான்...எப்படி? நாப்பது வருடமா கொள்ளை அடிக்கறாங்கன்னு தெரிஞ்சும் போடுவான்...அப்புறம் இதே மாதிரி தினமலர் செய்தியா போடும்.......அப்பாவும் இதே மாதிரி என்னமா கொள்ளை அடிக்கிறாங்க ஊழல் பண்றங்க இவனுங்களையெல்லாம் எவனும் கேக்க முடியாதா நீதி மன்றம் ஏன் தண்டிக்க மாட்டீங்குதுன்னு இவனுங்களே ஒட்டு போட்டு கொண்டு வந்துட்டு வந்து வக்கணையா பேசுவானுங்க.........அடேய் திருந்துங்கடா இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏற்க்கனவே தமிழ்நாட்டின்மக்களின் பணம் 4 லட்சம் கோடியை ஆட்டையை போட்டுட்டானுங்க....எங்கேயுமே ரோடு இல்ல...மெட்ரோ ரயில் விடும்போது தான் தெரியுது நம்ப ஊரு ரோடு எவ்வளவு கேவலமா இருக்குன்னு....அவ்வ்ளவு பணத்தையும் பத்தியை கமிசனர் வாங்கி பாதி பணத்துல ரோடு போட்டு இருக்கானுங்க.............சென்னையில புறநகர்கள்ல ரோடுகள் இருப்பதில்லை..குண்டும் குழியும் தான்........

 • aanthai - Toronto,கனடா

  அவலம் என்று ஆரம்பிப்பதைவிட "கேவலம் " என்று ஆரம்பிக்கலாம் . 90 % லஞ்சத்தில் திளைக்கும் மந்திரிகள் உள்ள தமிழ் நாடு மிகவும் பெருமையாக ( அட சீ சீ கேவலமாக) இருக்கிறது .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அது என்ன எல்லோரும் 30 என்ற என்னை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. 30 ஒருவேளை ராசியில்லாத எண்ணா?

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  4000 கோடி போதுமா ? நீங்க ரொம்ப நல்லவரா நியாமாமா நடந்து கொள்கிறீர்கள் .

 • Viji Ram - kovai,யூ.எஸ்.ஏ

  மாநிலங்களுக்கு முதல் மந்திரி, மந்திரிகள் தேவையில்லை. கவர்னர் மற்றும் துறை வாரியான அதிகாரிகள் இருந்தால் போதும். இது தான் அமெரிக்காவில் இருக்கும் முறை. கண்ட படிப்பறிவில்லாத , குற்ற பின்புலம் கொண்டவர்கள் இதனால் நம்மை ஆட்சி செய்வது தடுக்கப்படும். அதேபோல் எம்.எல்.ஏக்கள் தேவை இல்லை. மேயர் அவரின்கீழ் அதிகாரிகள் போதும். மக்கள் சிந்திக்க வேண்டும்.

 • ஜெயாமாலன்,டெக்ஸாஸ், -

  ஜனாதிபதி ஆட்சி தேவை.உடனடியாக இந்த ஊழல் அரசை கலைக்கவேண்டும்

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  இவளையெல்லாம் நடு ரோட்டில் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.....பண பேராசை பிடித்த பேய்கள்....படித்தவன் எவனும் ஓட்டுபோடவில்லை என்றால் இதுதான் நடக்கும்.....நல்லா அனுபவிங்க...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  கூவத்தூரில் இந்த கிழவி பண்ணிய அலும்புகளுகளை தனி சீரியல் எடுக்கலாம். தெய்வமகள் காயத்திரி அண்ணியைவிட மோசமான வில்லி.

 • anbu - Hamilton,நியூ சிலாந்து

  ராஜமீனாட்சி தந்தை வாயிலாக, 10 லட்சம் ரூபாய் கொடுத்ததும் தவறு சரோஜா 4,000 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று சொன்னதும் தவறு இருவரும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் அப்படி பார்த்தால் சசி, பன்னீர் மற்றும் ஸ்டாலின் அணி இதைத்தான் செய்கிறார்கள் பல வருடங்களாக எல்லாரையும் உள்ளே வைக்க சிறையில்இ டம் கிடையாது திருட்டு சாம்ராஜ்ஜியம், எல்லா அணிகளும் திருடர்கள் அன்பு, நியூ ஸிலண்ட்

 • SaiBaba - Chennai,இந்தியா

  சேர்மனே ஒரு கோடி ரூபா லஞ்சம் வாங்கும் போது மந்திரிகள் முப்பது லட்சத்துக்கே மாட்டுறாங்களா? நம்ப முடியலையே. சரி விஜயபாஸ்கர் மேல என்ன நடவடிக்கை எடுத்தாங்க?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்து கைது செய்யவில்லை. காமராஜை விசாரித்து புழலில் அடைக்க வில்லை உட்சா நீதிமன்ற உத்தரவின் படி. வருமான வரி துறை கொடுத்த 16 அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. குட்கா புகழ் போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அப்படியே வழக்கு போட்டதாலும் சாகின்றவரைக்கும் நிதிபதிகள் தீர்ப்பு சொல்ல மாட்டார்கள். செத்த பிறகு சொல்லும் தீர்ப்பில், செத்தாதால் குற்றவாளி, குற்றவாளி ஆக மாட்டார். அதனால் கொடநாடு முதல் போயஸ் கார்டன் வரை மாபியாவே ஆண்டு அனுபவிக்கலாம் என்று உலகமே வியக்கும் தீர்ப்பை சொல்லுவார்கள். குமாரசாமி, தத்துவிடம் காட்ட முடியாத வீரத்தை கர்ணனிடம் காட்டுவார்கள் அந்த ஆம்பிள்ளை சிங்கங்கள்.

 • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

  பெண் மந்திரி சரோஜா, 30 லட்சம் ரூபாய் கேட்டு, பெண் அதிகாரியை அடாவடி யாக மிரட்டி உள்ளார். ஊழல் மந்திரிகள் இன்னும் பதவியில் இருக்கிறார்கள் என்றால் தமிழன் அறியாமையை என்ன சொல்வது. தீப்பொறி பார்க்கவேண்டிய நேரத்தில் மெழுகுவர்த்தி கூட எரியவில்லை.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  மாண்புமிகுன்னு கூப்புடுற அளவுக்கு தகுதியானவர்தானா இந்த அமைச்சர் ? 30 லட்சம் கேக்குறதுதான் மாண்பா?

 • Sekar KR - Chennai,இந்தியா

  ஆட்சி கலைப்பதற்குள் முழுமூச்சாக எவ்வளவு சுருட்டமுடியுமோ அவ்வளவு சுருட்டவேண்டும் , இது தான் அவ்ர்கள் வாழ்க்கையில் கடைசி சந்தர்ப்பம், நற்பெயரை பற்றிஎல்லாம் கவலை இல்லை. ஒரு நிமிடத்தைக்ககூட வீணடிக்காமல் சுத்துவதில் கவனம் செலுத்திவருகிறார்கள். அவர்கள் இனி எந்த எல்லைக்கும் செல்வார்கள்.மக்கள் தான் தங்கள் உடமையையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். க்கொள்ளவேண்டும்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  நமது ஊரில் ஒரு பழமொழி உண்டு.நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது பழைய இடத்திற்கு தான் செல்லுமாம்.அது போல் அரிப்பு எடுத்தவன் சொரிந்து கொண்டே இருப்பது போல் இந்த மந்திரிகள் காசு பணம் மணி துட்டு என்று என்றுஎங்கு பார்த்தாலும் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.கவர்னர் இதற்க்கு ஏதாவது முற்று புள்ளி வைப்பாரா.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  Sarosaavin rate ...30 Latcham a..a.broker kanavar....thamizhaadu valarkirathu....voozhalil..

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இப்படித்தான் ஒவ்வொரு தமிழக அமைச்சர்களும் கடந்த பத்தாண்டுகளாக பணியாற்றி வந்துள்ளனர். என்னவோ திடிரென்று பணம் கேட்பதை போன்று வியக்க கூடாது. திமுக ஆட்சியில் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு கேட்டார்கள். அதிமுக ஆட்சியில் நெஞ்சை நிமிர்த்தி, நிலைமையை எடுத்து சொல்லி தைரியமாக கேட்கிறார்கள். விரைவில் தமிழகம் பிஹார் ஆகிவிடும். தமிழர்கள் பிஹாருக்கு சென்று டீ கடையில் வேலை செய்ய போகிறார்கள்.

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  தோற்றத்தை பற்றி பேசுவது தவறெனினும் செய்தியின் பின்புலத்தில் இந்த மூஞ்சி'யை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது.. ஆளும் அது மண்டையும்.. ஒரு மாற்றத்துக்கு இந்த பொம்பள அமைச்சரையும் எடுப்பு புருஷனையும் உள்ள வச்சி விசாரிச்சால் என்ன?

 • Karthik - Chennai,இந்தியா

  இவர் ஒரு மருத்துவர். ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் தந்த அற்புதமா() மருத்துவர். எல்லா மந்திரிகளும்(முதல்வர் உட்பட) எல்லோரும் அடாவடி தான். ஒவ்வரு குட்டும் வெளியே வந்து கொண்டு இருக்கு. அம்மா இருக்கும் பொது வெளியே தெரியாம அவர்களை தூக்கி விட்டு மற்றவரை போடுவார். இது தான் அம்மாவின் மந்திரிகளின் மாற்றும் ரகசியம். காரணம் வெளியே சொன்னால் கட்சி மற்றும் ஆட்சிக்கு அசிங்கம் என்று தெரியும். அல்லது சேர வேண்டியது சேர வில்லை என்றாலும் மாற்றம் நடக்கும். அவர்களின் வழி வந்தவர்கள் இப்படி தான் இருப்பார்கள். அம்மாவின் பெயர் சொல்லி நடக்கும் ஆட்சி அப்படி தான் இருக்கும். கூவத்தூர் நாடகம் எவராலும் மறக்க முடியாத அசிங்கம். இந்த அசிங்களளை நம் சார்பாக அனுப்பியது அதை விட கேவலம். என்று காசு வாங்கி ஒட்டு போடுவதை நிறுத்தினால் ஓரளவது நாடு திருந்தும்.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  தமிழ்நாடு மோசம் என்று தான் நினைத்தோம். இவ்வளவு மோசம் என்று நினைக்கவில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement