Advertisement

கறார் மோடி!

பிரதமர் மோடி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், யார் என்ன சொன்னாலும் அந்த காரியத்தை செய்யாமல் விட மாட்டார்.அவருக்கு நெருங்கிய அமைச்சர்களாக இருந்தாலும், மோடி, அவரது பிடிவாதத்தை விட மாட்டார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், 10 ஆண்டாக செயலராக ஒரு அதிகாரி பணியாற்றி வருகிறார்.ஜெட்லிக்கு மிகவும் நெருக்கமானவராகி விட்டார் அந்த அதிகாரி. அவரது பதவிக்காலத்தை நீட்டித்து, மீண்டும் தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் ஜெட்லி.
பிரதமர் மோடிக்கு, இது குறித்து ஒரு குறிப்பு அனுப்பினார். 'விரைவில் பிரதமர் அனுமதி அளித்து விடுவார்' என, காத்திருந்த ஜெட்லிக்கு அதிர்ச்சி. 'பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது; வேறு ஒருவரை நியமிக்கவும்' என, பிரதமரிடமிருந்து பதில் வந்தது.உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரதமருக்கு நெருக்கம். இவரிடம் செயலராக, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவருக்கு பதவி நீட்டிப்பு தர வேண்டும் என பிரதமருக்கு ராஜ்நாத் சிங் கடிதம் எழுதினார். ஜெட்லிக்கு மறுத்தது போல ராஜ்நாத் சிங்கிற்கும் அனுமதி தர மறுத்து விட்டார் மோடி. இந்த விவகாரம், பா.ஜ., வட்டாரங்களிலும், அதிகாரிகள் மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.'ஒரு அதிகாரியை பல ஆண்டுகளாக கூடவே வைத்துக் கொள்வது நல்லது இல்லை; நம்முடைய அனைத்து விஷயங்களையும் அந்த அதிகாரிகள் அறிந்து கொள்வர்; அது அரசியலுக்கு நல்லதல்ல' என்பது, மோடியின் கருத்து.'இதனால் தான், இந்த மூத்த அமைச்சர்களின் செயலர்களுக்கு பதவி நீட்டிப்பு தர மறுக்கப்பட்டது' என்கின்றனர், விஷயம் தெரிந்த, பா.ஜ., தலைவர்கள்.

வெளிநாட்டு பயணத்துக்கு தடை!
'மோடி, உலகம் சுற்றும் வாலிபராகி விட்டார்; அவர் போகாத நாடே இல்லை' என, சமூக வலைதளங்களில் கிண்டல் வந்தாலும் அதைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதே இல்லை. 'வெளிநாட்டு பயணத்தின் போது, நேரத்தை வீணாக்கவே மாட்டார் மோடி' என்கின்றனர் அதிகாரிகள்.நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அவர், பயண திட்டம், ஐந்து நாட்களாக இருந்தது. ஆனால், அந்த நாட்களை, மோடி குறைத்து விட்டார்.'நீங்கள் ராணுவ இலாகாவையும் கவனிக்கிறீர்கள்; பாகிஸ்தான் ஏற்கனவே பிரச்னை ஏற்படுத்தி வருகிறது; இந்த நேரத்தில் ஜப்பானில் அதிக நாட்கள் தங்க வேண்டாம்' என, மோடி கூறியதால், ஜெட்லியின் பயண நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.எந்த ஒரு அமைச்சர் வெளிநாடு செல்ல விரும்பினாலும், 'நேரடியாக ஒரு நாட்டுக்கு மட்டும் திட்டம் போடாதீர்; வழியில் உள்ள நாடுகளிலும் அலுவல் இருந்தால் அதற்கேற்றாற் போல் பயணத் திட்டதைப் போடுங்கள்' என, உத்தரவிட்டுள்ளாராம்.'இங்கு தான், இவர் தொல்லை தாங்க முடியவில்லை; வெளிநாட்டில் ஜாலியாக இருக்கலாம் என்றாலும், அதிலும் ஆயிரத்தெட்டு நிபந்தனை போடுகிறார்' என, புலம்புகின்றனர் அமைச்சர்கள்.

கூட்டமில்லாத அலுவலகம்!
டில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஒரு உணவகம் உள்ளது. அருமையான நம்ம ஊர் உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்; சுவையாகவும் இருக்கும்.ஒரு காலத்தில் உட்கார கூட இடம் கிடைக்காமல் இருந்த அந்த அலுவலகம், இப்போது ஆட்கள் இல்லாமல் காற்றாடுகிறது. தினமும், 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் வந்த காலம் மாறி, இப்போது, 1,000
ரூபாயைத் தொடுவதே கடினமாக இருக்கிறது.எந்த நேரமும் படு பரபரப்பாக இயங்கிக் கொண்டுஇருந்த காங்கிரஸ் அலுவலகம் பக்கம், இப்போது தொண்டர்கள் அதிகம் வருவதேயில்லை; அதனால் தான் இந்த கதி.'தோல்வி மேல் தோல்வி; சரியான தலைவரும் கிடையாது. இருப்பவரும் மக்களின் நாடித் துடிப்பை அறியாதவராக இருக்கிறார்; இந்த நிலையில் யார் காங்கிரஸ் பக்கம் வருவர்' என்கின்றனர், காங்., தலைவர்கள்.
மற்றொரு பக்கம், அசோகா சாலையில் உள்ள, பா.ஜ., அலுவலக உணவகத்தில், வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. தினமும், 20,000 ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கிறது. 'ஒரு காலத்தில் எங்கள் கட்சி, மத்தியில் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் ஆட்சி நடத்தியது; அப்போது, பா.ஜ., உணவகம், ஈ ஓட்டிக் கொண்டிருந்தது. இப்போது நிலைமை வேறு; எல்லாம், காலத்தின் கோலம்' என, வருத்தப்படுகின்றனர், காங்கிரசார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் மட்டும் பருப்பு வேகவில்லையே ஏன் ..ஏன்...ஏன்.. ?? பருப்புல கலப்படம் இருக்கறது தமிழர்களுக்கு தெரிஞ்சி போச்சோ

 • Tamilan - Doha,கத்தார்

  நான் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால், பின்ன என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற சினிமா வசனம் போல இருக்கிறது.

 • siva india - chennai,இந்தியா

  பிரதமர் மோடி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், யார் என்ன சொன்னாலும் அந்த காரியத்தை செய்யாமல் விட மாட்டார். எனக்கு பிரதமர் மோடி அவர்கள் மீது அதீத நம்பிக்கை உள்ளது நவம்பர் 16 ல் வந்த செய்திக்கு நான் நினைப்பது போல நிஜமாகிறது. "கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?...". "ஆம் மிக சரியான நடவடிக்கை சில அரசியல் தலைவர்கள் கைது செய்யும் முன் கீழ் மட்டத்திலிருந்து கைது செய்வார் அல்லவா அதுபோல கீழே உள்ள கருப்பு பண முதலை பிடிபட்டு வருகின்றனர். 1 ரிசர்வ் பேங்க் அதிகாரிகள் பிடிபட்டுள்ள சிலர், 2 புரோக்கர்கள் சிலர், 3 அரசியல்வாதிகள் சிலர் ,4 பெரும் பணக்கார்கள் சிலர் பிடிபட்டு உள்ளனர். மேலும் மேல் மட்டத்தில் உள்ள பேங்க் அதிகாரிகள்,பெரும் பணக்கார்கள்,புரோக்கர்கள் பலரும் பிடிபட போவதை விரைவில் பார்ப்போம் நாம். அப்போது விஜய மல்லையாவும், சுவிஸ் பண பதுக்கல் காரர்களும் கட்டாயம் பிடிபட போவதை பார்ப்போம்." 20-டிச-2016 14:56:45 IST என் நம்பிக்கை வீண் போகவில்லை. "ஆனாலும் நேர்மை யாக வரி செலுத்தும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினருக்குகாக அக்கரை பட பிரதமர் வழி செய்யவேண்டும்" பல ஆண்டுகளாக நேர்மையாக வருமான வரி செலுத்தியவர்கள், எதிர்பாராத நிலையில் வரி செலுத்த முடியாத நிலையில், விபத்தினாலோ வியாதியினாலோ, பாதிக்கபட்டவர்க்கு அவர் செலுத்திய மொத்த வரியில் 80% வரைலாவது, வரி செலுத்தியவர்கள் மீண்டு வரும் வரை அவருக்கோ குடும்ப உறுப்பினர்க்கோ வைத்திய செலவையும் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க வேண்டும். பிரதமர் அவர்கள் நேர்மையாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கபடுத்த வேன்டும் தினமலர் முலமாவது அவருக்கு நேர்மையாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வழி பிறந்தால் பலரது மனமார ஆசியும், வாழ்த்தும் அவருக்கு கிடைக்கும்.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  எல்லாம் சரி. அப்படினா, ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீரும்னு பொருள் கொள்ளலாமா ???

 • unmaiyai solren - chennai,இந்தியா

  உண்மைதான்.அதைத்தான் 2002 இல் குஜராத்தில் பார்த்தோமே.

 • Manian - Chennai,இந்தியா

  மோடி செய்வது சரியே. ஒரு தலைவர், ஒரு கப்பலுக்கு ஒரு கேப்டன் என்று இருப்பதே மேல். சுய சிந்தனை இல்லாதவர்கள் எடுப்பார் கை பிள்ளை. மோடி எந்த அதிகாரியையும் நம்பி முதல்வராகவில்லை. மேலும், ஒருவரே தனுக்குப்பின் தகுதியானவரை தெரிந்தெடுத்து , அவரை / அவளை தனக்குப்பின் மோடிக்கு உதவி செய்ய விரும்பாதவர், சுய நலமியே. இதே போலவே . நாடு முழுவதும் உள்ளது. அவர் ஏன் உங்களுக்கு தேவையான போது உதவி செய்கிறேன் என்று சொல்லவில்லை? உணவகம்: தேனீ க்களுக்கு தேனை தேடி கொள்ள தெரியாதா? சாப்பிடும் இடத்திலும் ஏதாவது ஆதாயம் கிடைக்காத என்று எண்ணாத இந்தியர்கள் வெகு வெகு சிலரே

 • B.Indira - thane,இந்தியா

  இதற்கு யாரும் எழுத மாட்டார்கள் ஏனென்றால் பாராட்ட வேண்டியிருக்குமே. பெங்காலில் ஒரு முஸ்லீம் சொன்னார்.மோடிஜி ஒரே லட்சம் ஓட்டு கேட்டால் நாங்கள் பத்து லட்சம் ஓட்டு கொடுப்போம்.நூற்று இருபத்தி ஐந்து கோடி மக்கள் என்று எங்களையும் சேர்த்து தானே மோடி சொல்கிறார் என்று.அந்த அளவுக்கு எல்லோரையும் கவர்ந்தவர் மோடிஜி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement