Advertisement

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் டில்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.


இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(ஏப்.,25) 4 வது நாளாக விசாரணை நடத்தினர் . சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நீடித்த நிலையில் நேற்று(25ம்தேதி) நள்ளிரவில் தினகரன் கைது செய்யப்பட்டார்.


போன் அழைப்புகள் ஆய்வு:
சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் ரூ 1.30 கோடியுடன் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.


ஒரே வரியில் பதில்:
தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நீடித்தது.


நள்ளிரவில் கைது:
4 நாட்களாக 37 மணி நேரம் நடந்த விசாரணை நள்ளிரவில் நிறைவடைந்து, முடிவில் தினகரன் கைது செய்யப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (185)

 • Koteeswaran Iyer - salem,இந்தியா

  மேற்படி விசாரணையில் தேர்தல் நாமினேஷன்ல் காட்டிய சொத்து கணக்கையும் பரிசீலனையும் செயய வேண்டும். வருமான வரியும் இப்பணம் எப்படி வந்தது? என விளக்க வேண்டும். அது சரி டெல்லி க்கு இப்பணம் எப்படி இத்தனை காவலையும் மீறி சென்றது.

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  லஞ்சம் குடுக்க முயற்சித்ததற்காக கைது செய்தது வரவேற்கத் தக்கது. ஆனால், லஞ்சம் வாங்க தயாராக இருந்த, முயற்சி செய்த தேர்தல் ஆணைய நபர் யார்? அதைக் கண்டுபிடிங்கப்பா முதலில். இதுவரை நடந்த ஒரு சில முக்கியமான தேர்தல்கள் என்ன லட்சணத்தில் நடந்திருக்கும் என்பது புரியும் ஜனநாயக முறையில், நேர்மையான முறையில் தேர்தல் நடக்கிறதா என்ற சந்தேகம் நிறையவே இருக்கிறது.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இங்கே ஒன்றை பார்க்க வேண்டியது இவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் இதை கூறுவது ஒரு தேர்ந்த fraud இவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் எனில் இதை வாங்க இருந்த அந்த கருப்பு ஆடு தேர்தல் அதிகாரி யார் அவரை ஏன் இவர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரவில்லை

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  உதவி துணை பொது செயலாளர் பதவி திவாகரனுக்கு கொடுக்கணும் அவர் ஜெயிலுக்கு போன பிறகு பொறுப்பு உதவி துணை பொது செயலாளர் பதவி நடராஜனுக்கு அப்புறம் அவரு ஜெயிலுக்கு போன பிறகு உதவி பொறுப்பு உதவி துணை பொது செயலாளர் பதவி தினகரன் பொண்டாட்டிக்கு கொடுக்கணும் .......... இப்படியே மொத்த கூட்டத்தையும் ஜெயிலுக்கு அனுப்பிடனும்

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கள்ளம் கபடத்தின் பலிகடா இந்த தினகரன்.....அதிமுக அடிமைகளின் மத்தியில் இருந்த ஒரே ஒரு தலைவர் இந்த தினகரன்.. ..... அதனால தான் ஆம்பிளையை கண்டால் பிடிக்காத ஜெயலலிதா இவரை எப்போதுமே இந்த அடிமைகளின் மத்தியிலிருந்து வேறுபடுத்தி வைத்திருந்தார்......இவரை வற்புறுத்தி அழைத்ததே இந்த அடிமைகள் தான்...

 • Visu Iyer - chennai,இந்தியா

  யார் லஞ்சம் வாங்கினாங்க .. கொடுக்க முயற்சி செய்ததற்க்கே என்றால் ... இதற்க்கு முன் நடந்த நிகழ்வுகளை பார்க்க வேண்டாமா? அதிமுக வை மட்டுமே துரத்துகிறார்களே .... இதில் இருந்து ஏதாவது புரிகிறதா?

 • manivannan - chennai,இந்தியா

  இது ஒரு தற்காலிக வேக கட்டுப்பாடு நடவடிக்கையே.. இதுலே ஜாமினில் விட்டு பிடிப்பார்கள். இன்னும் கேஸுகள் இருக்கின்றனவே.அதுலே பார்த்து கொள்வார்கள்.. தினகரன் மிகவும் புத்திசாலித்தனமாக செயப்படுகிறோம் பணத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைத்து ஓவர் ஸ்பீடாக காய்களை நடத்தினார்... என்னிக்கு இரூந்தாலும் மாட்ட வேண்டியவர் தான்...கார்டெனில் இருந்தப்போ கதையே வேற... மறந்து விட்டார் போல ...

 • Prabu Radhakrishnan - chennai,இந்தியா

  இதில் யார் நல்லவர் என்பது நகைப்பிற்கான வினா?

 • SachidanandanC -

  The entire Mannargudi family/group should be behind the bars

 • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

  இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் டில்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டான். ?இப்போது நல்ல ஆப்பு.இப்படியே விட்டால், தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிடுவான்..பாவி தினகரன் என்னமா சின்னம்மா வளர்ப்பு?

 • manivannan - chennai,இந்தியா

  லஞ்சம் கொடுக்க முயன்றதாகத்தானே வழக்கு, கொடுத்ததாக இல்லையே அதாவது குற்றம் முழுவதுமாக நடைபெற வில்லையே.. அதனால் தண்டனையும் mikavum குறைவாகவே இருக்கும் ஆனால் இதோ ஜாமினில் எடுத்து விடுவார்கள். வக்கீலையும் அழைத்து க்கொண்டுதான் போயிருப்பார். அப்புறம் என்ன வழக்கு போகும் போகும் போய்க்கொண்டே இருக்கும்... தினகரனின் அத்து மீறிய வேகத்தை குறைக்க எடுக்கப்பட்ட ஸ்பீட் பிரேக் நடவடிக்கை தான் இது . வேற கேசில் பார்த்து க்கொள்வார்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ராசியில்லைன்னு சசி குடுமபத்தினர் போயஸ் காரனைப் புறக்கணிக்கின்றனர் அவர்களுக்கு கட்சிப்பதவி மட்டும் ராசியா என்ன? நிரந்தர பொது செயலாளர் என்று கூறிய ஜெயா செத்தபிறகு அடுத்த பொ செ சசி ஜெயிலில் இப்போ துணை பொ செ கூட ஜெயிலில் ..இனிமேல் யாராவது அப்பதவிக்கு ஆசைப்படுவார்களா??

 • varun -

  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.....ungala nambi antha amma(jay) vetula vittanga paarunga avungala sollanum paavingala ungala vaika vendiya idathula vaikanum da.....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இன்னிக்கு மாலையிலிருந்து தொடங்கி எல்லா தொலைக்காட்சியிலும் இந்த செய்திதான் விவாத பொருள்....நெறியாளர்களா, வாங்கின காசுக்கு மேலே சும்மா கும்முன்னு கூவனும்...நிமிடத்துக்கு நூறு முறை மானே தேனே பொன்மானே என்ற மாதிரி பாஜக, மத்திய அரசு, மோடி என அங்கங்கே போட்டுக்குங்க....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை, தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை?.....தமிழனுக்கு லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியாதே..அப்பழுக்கற்ற தமிழனுக்கா இந்த இழிநிலை?...அவ்..அவ்......

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  "லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்" என்றால் அதுல எவனும் லஞ்சம் வாங்களேன்னு அர்த்தமா ?

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  பெங்களூரு சிறையில் அவனை அடைக்க வேண்டாம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மொதல்ல லஞ்சம் வாங்கினவன அரெஸ்ட் பண்ணுங்கடா... இந்த மாதிரி விநோதத்த வேற எங்கனயும் நானு பாத்ததில்லே.....

 • Larson - Nagercoil,இந்தியா

  தினகரனையும், சசிகலாவையும் இன்னமும் தலைவர்களாக வணங்கி திரியும் கூவத்தூர் கூட்டங்களை என்ன செய்வது..? திருந்தாத ஜென்மங்கள்...

 • Raman Gopalakrishnan - chennai,இந்தியா

  ஊழல், திருட்டு அரசியல்வாதிகளை பிடிப்பதே பெரிய காரியம். பிடிபட்ட தினகரன் போன்ற பெரிய திமிங்கிலங்களை எக்காரணம் கொண்டும் வெளியே விடக்கூடாது. சீக்கிரம் விசாரித்து தண்டனை கொடுத்து உள்ளே தள்ளவேண்டும்.அப்போதுதான் ஓரளவிற்காவது ஊழல் குறையும்.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  தேர்தல் கமிஷனை பயன்படுத்தி கைது செய்த பாஜாவிற்கு வாழ்த்துக்கள்

 • R Senthil - Tirupur,இந்தியா

  பட்டியல் நீளும் வாய்ப்பு உள்ளது

 • P N SIVAKUMAR - CHENNAI,இந்தியா

  கடா எப்போ வெட்டுவாங்க எப்போ வெட்டுவாங்கோ என்று கேட்டு கொன்று இருந்தீர்கள் கடைசியில் கடா வெட்டி ஆகி விட்டது.

 • R Sanjay - Chennai,இந்தியா

  இதெல்லாம் ஒரு சின்ன கேசு, பிஜேபி தமிழக அரசியல் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்க போடுற மிரட்டல் கேசு. புடிச்சி ரெண்டுநாள் ஜெயில்ல வச்ச 122 MLA க்களும் 50 MPக்களும் பிஜேபிக்கு அடங்கிடுவாங்க. அதுக்குதான் இந்த கைது நாடகம்.

 • sivakumar - chennai,இந்தியா

  எச்சரிக்கை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, திட்டமிட்டு, ஆசைப்பட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் பகை உண்டு பண்ணி ஒன்றன் பின் ஒன்றாக [ பண்ணீர், சசிகலா தற்போது தினகரன் ] காலி செஞ்சு வரோம்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவர் லஞ்சம் கொடுக்க முயன்றார்.., சரி.. யாருக்கு ?? தேர்தல் கமிஷனை காப்பாற்றியே தீர வேண்டிய கட்டாயத்தில் பிஜேபி இருக்கிறது...Election commission & BJP are not beyond doubts

 • spr - chennai,இந்தியா

  அட போங்கய்யா நாளைக்கே அந்த கிழவன் ஜெத்மலானி இவரை ஜாமீனிலே எடுத்து வழக்கை மறுபடி இன்னுமொரு நூறு ஆண்டுகள் விசாரிக்க வைச்சு, ஏதாவதொரு கேடு கெட்ட நீதிபதியும் "முறையான ஆதாரணங்கள் இல்லை விசாரணை முறைப்படி நடக்கவில்லை சி பி ஐ சரியான ஆதாரங்களைக் காட்டவில்லை" என்று ஏதானும் ஒன்றைச் சொல்லி வெளியே விட்டுவிடப் போறானுங்க அதுக்குள்ளே என்னவோ இவனை தூக்கிலே போட்டாபோலே பேசுறீங்களே இதெல்லாம் இதுவரை நடந்த காட்சிகள்தான் நாளைக்கே இவன் மோடிக்கு ஜால்றா அடிக்காத தயாரான கேஸ் ஒண்ணுமே இல்லே

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த தீனக்காரனை டெல்லி சிறையிலேயே அடையுங்கள்..பெங்களூரின் கொண்டு வந்து விடாதீர்கள். பெண்சிங்கம் இருக்கிற கடுப்பில் மூன்றரை டன் எடையில் ஒரு அறையை ஓங்கி கொடுத்தால் தீனக்காரன் மூஞ்சி எல்லாம் பெயர்ந்து விடும். பெங்களூர் சிறையில் சுவர்கள் எல்லாம் விரிசல் விட்டு கொண்டு இருக்கிறதாம்.

 • parthiban T - Periyakulam,இந்தியா

  தினகரன் கைது பங்கு சந்தை உயர்வு ஏதோ நல்ல செய்தி மாதிரி தெரிகிறது. இதேபோல் ஊழல் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டால் மேலும் மேலும் உயரும் என்று எதிர் பார்க்கிறோம்...

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  பொதுச் செயலாளர் care of பி.பிஅக்ரஹாரா துணைப் பொதுச் செயலாளர் care of திஹார் ஆஹா, இதல்லவோ கட்சி

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  லஞ்சம் கொடுப்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணம். இது ஒரு பெரிய குற்றமாக இன்று மக்களுக்கே தெரியவில்லை என்பதுதான் வேதனை. தினகரனை போல் களி திங்க வேண்டியவர்கள் தமிழகத்தில் இன்னும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஹா ஹா... ஸ்விஸ் தமிழா: எத்தன கமெண்ட்.. ரொம்ப டயர்ட் ஆகியிருப்பேள்.. போய் ஒரு போர்ன்விட்டா குடிச்சிட்டு வந்து மறுபடி திரு மோடியை திட்டுங்க.. ஸ்டார்ட் மியூசிக்..

 • Sathya - Coimbatore,இந்தியா

  இந்த திமுக கும்பலை எப்போ புடிப்பிங்க ......

 • MANI DELHI - Delhi,இந்தியா

  குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்ப்பட்டுள்ளார். அவருக்கு பெயில் கிடைத்தால் என்ன இல்லையென்றால் என்ன யாருக்கு லாபம். பணத்திற்க்காக அவருக்கு வக்கீல்கள் பிணைக்கு வேண்டி வக்காலத்து வாங்குவது தான் அவமானமாகிறது. சட்டம் தமது கடமையை செய்யும். உண்மை என்றும் தோற்றதில்லை. இதை பற்றி தினகரன் என்ற தனி மனிதன் தான் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அண்ணா திராவிட முன்னேற்ற கைதிகள்.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  சூப்பர். தமிழ் நாட்டின் மானத்தை போட்டி போட்டு கொண்டு வாங்கி கொண்டு இருக்கும் இவர் நிரந்தரமாக உள்ளே இருக்க வேண்டும் என்பதே (நல்ல) மக்களின் விருப்பம்

 • Sandru - Chennai,இந்தியா

  செய்தி முழுமை அடையவில்லை. "திகார்" சிறையில் "தினகரன்" என்று முழு விவரங்களுடன் வந்திருக்க வேண்டும்.

 • (Original) Nakkeran - Coimbatore,இந்தியா

  ADMK முன்னாள் நிரந்தர பொது செயலாளர் - உயிருடன் இல்லை ADMK பொது செயலாளர் - பெங்களூரு சிறையில் ADMK துணை பொது செயலாளர் - திஹார் சிறையில் - நல்ல கட்சி நல்ல ஆட்சி

 • Pandiyan - Chennai,இந்தியா

  இதை எதிர்பார்த்தது தான் ..ஆ தி மு க ..தி மு க ..இரண்டுகட்சிகளிலும் உள்ள ஊழல் பெருச்சாளிகளை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் ஊழல் பணத்தை பறிமுதல் செய்தால் மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரும் ..அதைவிட்டு எதோ அரசியல் காரணத்திற்க்காக மட்டும் இதுபோன்ற நடவடிக்கை பயன்படுத்த படுகிறது என்று மக்கள் மத்தியில் ஒருவித சலிப்பு வந்துவிடும்.

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  "ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழைய வாய்ப்பில்லை". ஊசி எங்கய்யா??? தினகரன் தமிழகத்தின் அவமானச் சின்னம். தினகரன் கைது நாடகம் எல்லாம் சரி. லஞ்சம் கொடுக்கும் வரை கண்காணித்து, குடுத்தவன், வாங்கினவன் என இரு தரப்பையும் கைது செய்திருக்கணும். ஆனாலும், என்ன புண்ணியம்?. நாலு நாள்ல வெளில வந்து ஜாலியா சுத்திகிட்டு இருப்பானுக.

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தானே லஞ்சம் கொடுத்ததால் என்ற பெயருடன் வழக்கு போடமுடியவில்லையே அப்படியெனில் லஞ்சம் வாங்க முயன்ற வழக்கு என தேர்தல் கமிஷன் நபர்கள் சிலர் மீதும் வழக்கு போட்டு சிறை தள்ளவேண்டுமே ஏன் இன்னும் செய்யவில்லை

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  மோடி அவர்கள் குஜராத் முதலைமைச்சராக இருந்த போதே, 'ஜெயா அம்மையாரின் உயிர்க்கு ஆபத்து இருக்கிறது. அவருக்கு எதிராக சில சதி திட்டங்கள் வரையப்பட்டு இருக்கிறது' என்று முன்னமே குஜராத் மாநில உளவு தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை விடுத்து இருந்திருந்தார். இதற்காக குஜராத் அரசில் அவருக்கு மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமான தமிழர் உயர் அதிகாரியை சென்னைக்கு அனுப்பி ஜெயாவை நேரடியாக சந்திக்க வைத்து இந்த உறுதியான தகவல்களை அறிவித்து இருந்திருந்தார். அதற்க்கு பின் தான் ஜெயா அம்மையார் சுதாகரித்து, சதிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கினார். இந்த செய்தி சொல்லும் உண்மை என்னவென்றால் மோடி அவர்கள் ஜெயா அம்மையார் மீது ஒரு மரியாதை கலந்த நட்புணர்வு இருந்திருந்தது. என்பது தான். அந்த நட்புணர்வு தான் ஜெயாவின் மரணம் இந்திய பிரதமருக்கும் ஒருவித பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த எண்ணமே முதலமைச்சராவதை தடுத்து சதிகலாவை ஜெயிலுக்கு போக வைத்ததும், பன்னீரை ஆதரிப்பதும், இடை தேர்தல் நிறுத்தி வைப்பும், பொறி வைத்து அதில் சிக்கிய தீனாக்காரன் கைது நடவடிக்கை போன்றவைகள் அவருடைய மனநிலையை பறை சாற்றுகின்றன. இந்த அடிப்படையில் தமிழக அரசு கேட்டால் அடுத்த நிமிடமே மத்திய அரசு தாமதிக்காமல் ஜெய மரணத்தை பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும். ஜெய அம்மையாரின் மரணத்தில் இருக்கின்ற மர்ம முடிச்சுகளும் அவிழும். இதுவும் நடக்கும். மோடி அவர்கள் ஒரு சிம்ம சொப்பனம் என்பதை சொல்லும் நிகழ்ச்சிகள் தமிழக அரசியலில் இன்னும் நடக்கும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This episode end with" Thodarum" and we don't know what are all the" Dhigil "Katchigal" are going to appear in this Episode hereafter.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  ஒரு நல்ல செயல்.. வரவேற்போம்...ஆனால் குமாரசாமிக்கு கொடுக்கும் போது ஏன் மத்தியஅரசு கைகட்டி வேடிக்கை பார்த்தத்து..?.இதே தினகரன் தான் அந்த வேலையை செய்து இருப்பார்... எதோ நல்ல நேரம்...சுப்ரிம் கோர்ட்டை இவர் விலை கொடுத்து வாங்க முடியவில்லை.. இவருக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு படமாக இருக்க வேணும்.. அதோடு எப்படி இவ்வளவு பணம் வந்ததது என்று கண்டு பிடித்து அதை அடைக்க வேண்டும்..

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இவர் உடனடியாக வெளியே வந்து விடுவார், எப்படி என்றால், இவர் லஞ்சமே கொடுக்கவில்லை, கொடுக்க இருந்தார் என்பது தான் வாதம், பாருங்கள் வேடிக்கையை , வந்தே மாதரம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  புதுப்பணக்காரர்கள் எப்பவுமே தப்புகளை செய்யதெரியாமல் எக்குதப்பாக செய்து தினகரனை போல்தான் மாட்டிக்கொள்வார்கள்... பெங்களூரிலேயே குடும்பத்தோடு சிறையில் அடையுங்கள்..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஜெ க்கு அப்புறம் தினகரன் தான் மிக சிறந்த தலைவராக வர வாய்ப்பிருந்தது... ஆனால், அவரை ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து விட்டு, இன்று மத்திய அதிகார வர்க்கம் வேடிக்கை பார்க்கிறது... தினகரனை கைது பண்ணியதில் தவறில்லை.... லஞ்சம் வாங்கியது யார் ?.. இந்த உண்மையை சொல்லாதவரை மத்திய அரசை நம்புவாரில்லை... RK நகரில் 89 கோடி கொடுக்கப்பட்டதாம்... யாருக்கு கொடுத்தார்கள்?... RK நகர் மக்களிடம் அந்த 89 கோடி எங்கு உள்ளது?/.. லஞ்சம் வாங்கிய RK நகர் மக்களை எதுக்கு கைது பண்ணவில்லை?... அதுபோல சின்னத்துக்கு 60 கோடி கொடுக்கப்பட்டதாம்.. .யாருக்கு கொடுக்கப்பட்டது?... லஞ்சம் வாங்கியது யார்?... பதில் சொல்லுமா?.. மத்திய அரசு ?...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  உலக வரலாற்றில் லஞ்சம் கொடுக்க முற்பட்டவரை கைது பண்ணியது இது தான் முதல் முறை... பொதுவாக, லஞ்சம் வாங்கியவரை தான் முதலில் கைது பண்ணுவார்கள்... ஆனால் லஞ்சம் யார் வாங்கினார்கள் என்று மக்களுக்கு சொல்ல கூட தேவையில்லை என்ற சர்வாதிகாரம்.... இது தான் மத்திய வர்க்கத்தின் இன்றய நிலை...லஞ்சம் வாங்கிய அல்லது வாங்க முற்பட்ட, தேர்தல் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட தயாரா?.. சும்மா பொத்தாம் பொதுவாக கொடுக்க முற்பட்டார்கள் என்று சப்பை கட்டக்கூடாது.... நிச்சயம் இதுல வாங்காமல் எவனும் இருந்திருக்க வாய்ப்பில்லை... [ இதுக்கும் சொம்புகள் பதில் சொல்லாது.... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சம்மந்தமே இல்லாமல் என்னை திட்டிவிட்டு, ஓடி ஒளிந்து கொள்வார்கள்... ]

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது... காரணம் 89 கோடி கொடுக்கப்பட்டாதாம்... இரு கேள்விகள்.. 1 . கொடுக்கப்பட்டதாக தினகரன் மீது மட்டும் பழி விழுமாறு, விஜயபாஸ்கரை மட்டும் கட்டம் கட்டியதேன்?. மீதி பெயர் இடம் பெற்றவர்களிடம் ஒரு விசாரணை கூட இல்லையே? 2 . லஞ்சம் கொடுத்தவர் தினகரன் என்றால் வாங்கிய RK நகர் மக்கள் மீது என்ன நடவடிக்கை ?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சேகர் ரெட்டியை கைது பண்ணினார்கள்....அவருக்கு பல தொடர்பு என்றார்கள்... மணல் மாபியாக்களுடன் தொடர்பு என்றார்கள்...ஆனால், கைது சேகர் ரெட்டியோடு நிற்கிறது? அவருடன் ஷோக்கா நின்ற மணல் மாபியா மீது விசாரணை கூட இல்லை... எதுக்கு விசாரணை அடுத்த கட்டடத்துக்கு நகரவில்லை...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  கண்டைனர் லாரியில் பணம் என்றார்கள்... மீடியாக்கள் ஊழல் பணம் என்றன.... நாத்தம் , சொக்கத்தங்கம் மணல் மாபியா மற்றும் அன்புநாதன் அதில் ஈடுபட்டனர் என்றார்கள்.... ஆனால் விசாரணை அன்புநாதன் வரை தான் சென்றது.... பணத்தை காப்பாற்றிய மத்திய வர்க்கம் யார்?... எதுக்கு காப்பாற்றினார்கள்?... விடை கிடையாது.... தேசபக்தர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்... [ சொம்புகள் என்னை திட்டி ஓர் கருத்தை போட்டுவிட்டு, பதில் சொல்லாமல் தப்பித்து ஓடிவிடுவார்கள்...]

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக லஞ்சம் வாங்கினவனை விட்டுட்டு லஞ்சம் கொடுத்தவரை கைது பண்ணியிருக்காங்க அதான் ஏன்னு புரியல்லை.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  பலநாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான். பங்களூர் சிறைச்சாலைக்கு அடிக்கடி போயி இதைத்தான் கற்றுக்கொண்டார்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்த கேசில் தினகரன் வெளியில் வர சந்தர்ப்பம் இருக்கு. காரணம் இவரின் வக்கீல் கேட்கப்போகும் ஒரே கேள்வி ' தேர்தல் ஆணையத்துக்கு, யாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார், அவரை கோட்டில் முன் நிறுத்துங்க என்று? அப்படி கேட்டால் என்ன பண்ணப்போகுது, சந்தேக நபர்களை தப்பிவிடக்கூடாது. எந்த அப்பாவி மாடிக்கபோறானோ?

 • Nagercoil Suresh - India,இந்தியா

  ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டார்..அ தி மு க, கம்பெனி ஊழியர்கள் தமிழ் நாட்டிலுள்ள பல துறைகளை குத்தகைக்கு எடுத்துவிட்டு சிறைத்துறையையும் நிரப்புகிறார்கள்...

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  பேராசை பெரு, நஷ்ட்டம் என்பது சசி மற்றும் தினகரனை பொறுத்தவரை நிரூபணமாகியிருக்கிறது.

 • Adhavan - chennai,இந்தியா

  கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன, இப்ப நல்ல அனுபவி, இவர முதல் நாளே கைது செய்து இருக்கலாம்.

 • JOE TARANTULA - Chennai,இந்தியா

  இதெல்லாம் சும்மா. 12 மணிக்கு அரெஸ்ட் காலை 11 மணிக்கு பெயில். இதுதான் பாரத். மேரா பாரத் மஹான்.

 • bairava - madurai,இந்தியா

  இப்போ தான் ஜில் ஜில் னு இருக்கு மாபியாவின் அடுத்த விக்கேட் அவுட் இந்த மாபியாகும்பல் இதுவரை மஞ்சகுளித்தது எல்லாம் ஜெயலலிதா என்ற இரும்பு பெண்ணால் தான் என்பதை மறந்துவிட வேண்டாம் அவரை கொன்ற பாவத்திற்காக இவர்கள் தண்டனை அனுபவிக்கப் போகிறார்கள் வேறொரு குற்றத்திற்காக இதுதான் "அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லும்"

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  கோர்ட்டுக்கு மே மாசம் விடுமுறை இருக்குமே ...அவரை 30 ம் தேதி வரை போலீஸ் காவலில் வெச்சுக்கணும் ..

 • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

  கேவலமான மன்னார்குடி கும்பல். இந்த கும்பலுக்கு காசு, புட்டி, குட்டி வாங்கி அடிமையான 122 பேரையும், மக்கள் ஒடுக்க வேண்டும். ADMK இரு அணி இணைப்பு கூடாது. அந்த 122 பேர்களும், சசி குடும்ப விசுவாசிகள். மறுபடியும் சசி கும்பல் கைக்கு கட்சி வந்துவிடும். இந்த கும்பலின் கையில் சிக்கி ப்ளாக் மைல் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அவர்களை 6 முறை தேர்ந்தெடுத்த நாம் வெட்கப்பட வேண்டும்.

 • Kokkarako ko - Trichy ,இந்தியா

  ADMK வின் கனவுகள், கற்பனைகள் தவிடுபொடியாகும் காலம் வெகு தூரம் இல்லை. கவர்னர் ஆட்சி வந்ததும் தெரியும், இவர்கள் நிலை என்ன என்பது. அணி, அணியாக பிரிந்து நின்று, பேச்சுவார்த்தை, சேர்கிறோம், பிரிகிறோம், புறணி பேசுகிறோம், உங்களுக்குள்ளேயே அடிச்சிக்குவோம், பின்னர் சேந்துக்குவோம், வெளியே பேட்டி கொடுப்போம், கப்பலில் பயணம் செய்து பேசுவோம், நள்ளிரவில் பேசுவோம், பத்தாததிற்கு, இடை, இடையே தெர்மோக்கோல் எல்லாம் விடுவோம், ஆனால் மக்களுக்கு மட்டும் எந்த வேலையும் செய்ய மாட்டோம் என்று மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று திரியும் ஒவ்வொரு MLA , அமைச்சர்களுக்கும் பதவி பறி போகும் காலம் வெகு தூரம் இல்லை. எல்லாம் போன பிறகு, உங்களை வச்சு செய்ய ஒரு சக்தி வரும். அப்போ கேட்குற உங்கள் அலறல் சத்தத்தை மக்கள் கேட்க்காமல் செவிடர்களாக இருப்பார்கள். அப்போ தெரியும் நீங்கள் யார் என்று. புரிந்தால் சரி. மேலே சொன்ன அனைத்தும் பல மக்களின் மனக்குமுறல் என்பதை தற்போது பதவியில் இருக்கும் எந்த மனிதனும் மறக்க வேண்டாம்.

 • Kokkarako ko - Trichy ,இந்தியா

  இது போதாதா?? ஆட்சியை கலைக்க?? கவர்னர் ஆட்சியை 4 ஆண்டுகள் நடத்தினாலாவது அதிகாரிகள், அரசாங்க அல்லக்கைகள் எல்லாம் அடங்குவார்களா என பார்க்கலாம்.

 • Manian - Chennai,இந்தியா

  அந்தப் பணம் தமிழ் குடி மக்கள் பணம். அதை தமிழ் நாட்டிற்கே தரவேண்டும். ஆமா, இது பத்தி அந்த பழக்கம் ஏன் கேசு போடவில்லை. ? ஒரு வேளை அவருக்கும் 35 கோடி துப்பாய் வீடா போயிருக்குமோ? இல்லாட்டி, மஞ்சத்துண்டுக்கு போச்சோ? இல்லாட்டி, இம்ம நேரம் தொளபதி ஒரு புது போராட்டமில்லே ஆரம்பிசுறுப்பாரு. அவர்க்கும் பொழுது போகணுமில்லே ? இல்லாட்டி தொண்டாக வேளை இல்லையுன்னு எடப்பாடிக்கிடடே காவடி எடுப்பானுகளே .

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எவனும் தீ குளிக்கவில்லையா? அப்படினா நாமளே தீ குளிக்க வைக்கணும்.

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  எல்லாம் நல்ல படியாய் முடிஞ்சுது.... அடி முதல் நுனி வரி. கைக்கு கை மாறும் பணமே... .உன்னை கைப்பாத்த நினைக்குது மனமே.... தேவன் கோயில் மணி ஓசை ...நல்ல செய்திகள் சொல்லும் மணியோசை ...

 • Jay - Coimbatore,இந்தியா

  Appidiyea vijayabaskar veetila nadandha raidla maattuna aathaarangala vechu amaicharkalai seyyaveum

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  RK நகரில் வெற்றி பெற்று, இந்நேரம் தமிழகத்தின் புதிய முதல்வராக வித்யாசாகர் மூலம் பதவி பிரமாணம் செய்து தமிழக மக்களை காப்பாற்ற உள்ளவர். இவர் இப்படி தள்ள பட்டது விதியின் கொடுமையே. ஜெயாவின் ஆவி தமிழகத்தை பலி வாங்குகின்றது அடுத்து என்ன நடக்க போகின்றதோ. அந்த பன்னீருக்கு தான் தெரியும்

 • Paranthaman - kadappa,இந்தியா

  கணெடெய்னரில் கொண்டு போய் கோடநாட்டு பங்களாவில் அடுக்கி வைத்த ஜெயா பணம் மாபியா கும்பலை ஆட்டி வைக்குது.

 • Maruthamuthu Mani - coimbatore,இந்தியா

  0 ரன்னுக்கு ஐந்து விக்கெட் விழுந்துவிட்டது . இன்னும் எமன் , திவா , ஜெய் , மற்றும் உள்ள விக்கெட் கள் விழுவது எப்போது .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திருட்டு கழகத்தை ஆட்டிப்படைக்கும் திறமை உள்ள ஒரு கூட்டத்தின் பிரதிநிதியை உண்மை சொல்ல வைக்க இவ்வளவு சிரமம்...

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  லஞ்சம் வாங்கி பழக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து பழக்கம் இருக்காது. அது சம்பந்தமான டெக்னீக் தெரியாது. யாரும் லஞ்சத்தை கொண்டு கொடுப்பதில்லை. முதலில் குறிப்பறிந்து அவர்கள் எதிர்பார்த்தால் மட்டுமே கையில் ஊட்டி விட வேண்டும். கை மச மச என்று இருக்கும் அதிகாரிகளின் தொனியிலேயே தெரிந்து கொள்ளலாம். அவர்கள் எப்படி என்று. நாமாகவே அவர்கள் எதிர்பார்க்கலாமலே கொண்டு கொடுத்து விட கூடாது. இந்த பால பாடம் கூட இவருக்கு தெரியவில்லை. வாங்கி வாங்கி சிவந்த கரங்களுக்கு கொடுக்க தெரியாமல், பீடம் தெரியாமல் சாமி ஆடி விட்டார்கள். எப்படியோ நல்ல செய்தி வந்திருக்கிறது. இனி அந்த பானா சீனாவின் மகனும், அவரின் அப்பனும், டீவி சகோதரனும்ஸ் உள்ளே போகவேண்டும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  துரியோதனன், நாட்டில் அனைவருமே கெட்டவர்கள், நல்லவர்களே கிடையாது என்று சொன்னானாம். வெண்மை சுவரை சிகப்பு நிறக் கண்ணாடி கொண்டு பார்த்தால் அனைத்தும் சிகப்பாகத்தான் தெரியும் பார்வையில் பார்க்கும் நோக்கத்தில் தான் சரியில்லை என்று அன்றே கிருஷ்ணா பரமாத்மா மஹா பாரதத்தில் சொல்லி இருக்கிறார். அதே போல இவர் அதிகாரிகள் அனைவரும் தன்னை போலத்தான் லஞ்சம் வாங்குபவர்கள் லஞ்சம் கொடுத்தல் தமிழகம் போல அத்தனை மிடாஸு வேலைகளையும் செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார் போல. நாட்டில் அனைவருமே குமாரசாமிகளாகவே வா இருப்பார்கள். மோடியின் நாட்டில் நல்லவர்கள் மிக அதிகம். இங்கு வந்து பாருங்கள் மத்திய அரசின் அதிகாரிகளை என்று டில்லி அழைத்து இவருக்கு புரிய வைத்துள்ளார். தலைவியே மோசமாக இருந்ததால் தமிழகத்த்தில் இவர்கள் அனைவரும் துள்ளி குதித்திருக்கிறார்கள், தலைவி எவ்வழி அவ்வழி தொண்டர்கள். அல்லது அம்மா எட்டடி பாய்ந்தால் குட்டி எட்டடி பாயும் என்பதற்கிணங்க இவர்கள் 16 அடி பாய்ந்திருக்கிறார்கள். இப்போது உள்ளே.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இவர் எல்லா போட்டோவிலும் நம்மை பார்த்து சிரித்தார், இப்போது ஊரே இவரை பார்த்து சிரியாய் சிரிக்கிறது. இதை தான் அவ்வையார், பிறரை பார்த்து முற்பகல் சிரிப்பின், ஊரே நம்மை பார்த்து பிற்பகல் சிரிக்கும் என்று 2023 வருடங்களுக்கு முன்பே கூறி சென்றுள்ளார்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  நாட்டிற்கு நல்லது நடக்கும் போது, கேடு கெட்டவனுக்கு கேடு தான் விளையும் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது. நான் எழுத்து கூட்டி கூட்டி படித்தேன். நான் இப்போது எழுதியிருப்பது தப்பில்லாமல் இருக்கிறது பாருங்கள். சரிதானே அங்கிள்ஸ்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தொடர்ந்து விசாரணை தினமும் விசாகரனை என்ற போதே தெரிந்து விட்டது தான். முழி முழி என்று விழி பிதுங்கி இருக்கிறார். இங்கிருந்து கிளம்பும் போதே தெரியும். அவர்கள் மூன்று நாள் அவகாசம் கூட தர மாட்டோம், ஒரு மணிநேரம் கூட அவகாசம் கிடையிலாது என்ற போதே தெரிந்து விட்டது, இவர் விசாரணைக்கு வர மறுத்தல், கைது செய்து இழுத்து சென்று விடுவார்க்கல் என்பது. ஐவரும் அங்கு இங்கு என்று யாரை யாரை அழைத்து பேசினார். அனைத்து ஒட்டு கேட்கப் பட்டுவிட்டது. இவருக்கு உத்தவிய அதிகாரிகள் அந்த டீ வி சகோதரர்களை அழைத்து விசாரித்தது போலத்தான் விசாரிப்பார்கள், ஒன்றும் பிரச்சினை இல்லை எல்லா கேள்விக்கும் சம்பந்தா சம்பந்த மில்லாமலும் மலைப்பாலாகவும், குழப்பமாவும் தெளிவாக சொல்ல வேண்டாம் என்று பொத்தம் பொதுவாக சொல்ல சொல்லி தந்திருக்கிறார்கள். பாவம், ஐவரும் நம்பி அங்கு போய் மாட்டி கொண்டார். முதல் நாள் விசாரணையிலேயே இவராசி கொஞ்சம் விட்டு விட்டு அந்த நள்ளிரவில்விசாரணைக்கு பிறகு இவர் யாருக்கெல்லாம் போனில் பேசினார் என்று ஒட்டு கேட்டிருக்கிறார்கள். முதல் நாளில் கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகு பலர் கொஞ்சமாக ஜகா வாங்கி விட்டார்களாம். இவர்களுக்கு தான் டில்லியில் யாரும் ஆட்கள் கிடையாதே அப்பொறம் என்ன? அந்த பானா சீனா வே பாவம் மோடி சிறந்தவர் அப்படி இப்படி என்று ட்விட்டரில் புகழ்ந்து தள்ளி ஓரளவாவது தன மகனை காப்பாற்ற திணறுகிறார், அவரே அப்படி என்னும் பொது இவர் எம்மாத்திரம். முக்கியமான இரண்டு போரையும் இவரால் நெருங்கவே முடியவில்லை. பாவம். அந்த மாபெரும் அரசு சிங்கின் மகனை சந்திக்கவே முடியவில்லையாம். ஹிந்தி நஹி ஆத்தி, அதுவும் பீகார் ஹிந்தி. போயா உள்ள என்று தள்ளி விட்டார்கள். அந்தோ பரிதாபம் அந்த பத்திரிக்கை ஆசிரியரை கூட சந்தித்து கொஞ்சம் தீவிரத்தை குறைக்க சொல்லலாம் என்று போகிறதா பிரயத்தனம் செய்திருக்கிறார். அவரின் அனைத்து போனும் சுவிட்ச் ஆப் ஆகி விட்டதாம் இவர்கள் அழைத்தால். சரி கொன்ஜம் நாள் நீதி மன்ற காவலில் டில்லி வெயிலில் காயட்டும். அல்லது அங்கும் எ சி வேண்டுமானால் யாருக்கு 36 கோடி நன்கொடை தருவது என்று குழப்பாக இருக்கப்போகிறது. ஹே விளம்பி சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. இது எப்படி யாவது போகட்டும். அது சரி ஹே விளம்பி என்பது தமிழ் வருடமாக இருக்குமா? ஹே என்ற வார்த்தை தமிழ் அல்லவே? இது தான் எனது கவலை இப்போதைக்கு.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வெள்ளி கிழமை மதியம் கைது செய்வார்கள் என்று நினைத்தேன்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  என்னால நீ கெட்ட உன்னால நா கெட்டேன் என்று யார் இருவர் சண்டை இட்டு கொள்வார்கள் இப்போது. சித்தியும் அக்கா மகனுமா?

 • ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ

  லஞ்சம் வாங்கி மாட்டிய திமுக, கொடுத்து மாட்டிய அதிமுக. பேஷ் பேஷ். சரியான போட்டி.

 • Ravi Manickam - Edmonton,கனடா

  தமிழன் - swiss,சுவிட்சர்லாந்து கூஜாவே.... ஆணிவேரை பிடுங்கினால் அக்கு வேர்கள் தானாக கன்டைனரில் வரும் அதுவரை வழக்கம் போல் மத்திய அரசை பலித்துக்கொண்டிரு...

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  Good News Dinamalar வாழ்க

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  ஒரு கட்சியின் தலைமை பதவியிலிருந்ததும்(முன்னால் முதல்வர் உட்பட.) ...இருக்க முயற்சித்தவரும் ..இருக்க முயற்சிப்பவரும்...திருட்டு க்கூட்டமே..ஒவ்வொரு ஆட்சிக்காலங்களிலும்..இவர்களால் சுருட்டப்பெட்டது எவ்வளவு ? அட ஆண்டவா...

 • Girija - Chennai,இந்தியா

  ஜெ ஆன்மா இவர்களை துரத்துகிறது, சசிகலா மூன்று முறை சமாதியில் அடித்து தட்டி எழுப்பிவிட்டார்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஜாமீன் கிடைச்சுடுமா...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  திராவிட தலைவர்கள் : - இது ஆரிய- திராவிட, வட- தென்னாடு பாஸ்தா , பர்கர் , பிஸ்சா தொண்டர் :- ஐயோ தலைவரே அது பாசிச பாஸ்தா இல்லை. தலைவர் :- விட்ரா, நேற்று நாம சாப்பிட்ட பாஸ்தா நியாபகத்துல சொல்லிட்டேன்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  குற்றம் செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் ஒரு பெட்டி கிரிமினலை நம்பி, பலமான ஆதாரம் இல்லாமல் போடும் வழக்கு நீதி மன்றத்தில் நிற்பது கஷ்டம். ஒரு நாளைக்கு வாதாட லட்ச கணக்கில் பணம் வாங்கும் கபில் சிபல், வேணுகோபால் போன்ற வக்கீல்கள் எளிதாக வழக்கை உடைத்து விடுவார்கள். ஆனால் அதேசமயம் தமிழகத்தில் மத்திய அரசு விரும்பியது நடந்து விடும். அடிமை அணிகள் இணைந்து விடும். கப்பம் எதுவும் கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் முந்திரிகள் முழுவதையும் சுருட்டுவார்கள் . தெர்மாகோல் ஆராச்சிகள் தமிழகத்தில் நிறைய நடக்கும். பாவம் தமிழ் மக்கள்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  டெல்லியிலே இப்படி என்றால், தமிழக தேர்தல் வாரியம், சட்டசபை செயலகம், போன்ற இடம்களில் எவ்வளவு பணம் பாதாளம் வரை பாய்ந்து ஜனநாயகத்தை கொன்று இருக்கும்??/

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தினகரனை கைது புண்ணியத்தில் எந்த நெருடலும் இல்லை... ஆனால் இவரை மட்டும் குறி வைப்பது எதுக்கு ?... மற்றவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகளா?.. குறிப்பா, கண்டைனர் லாரியில் இருந்த பணம் என்னவாயிற்று?... நத்தம் , மணல் மாபியா , அன்புநாதன் மீது அடுத்தகட்ட விசாரணை எதுக்கு இல்லை?.... கண்டைனர் லாரிகளை , காப்பாற்றிய மத்திய வர்க்கம் , எதுக்கு அப்படி செய்தார்கள்?...அந்த பணம் எங்கு சென்றது... ?.. இதற்கு சொம்புகளின் பதில் தேவை... [ ஆனால் பதில் சொல்ல மாட்டார்கள்... என்னை திட்டிவிட்டு , ஒரு கருத்தை போட்டுவிட்டு, தப்பித்து ஓடி விடுவார்கள்... இது தான் சொம்புகளின் தந்திரம் ]

 • Suresh Ramasamy - Coimbatore,இந்தியா

  இந்த மாதிரி யோக்கியனை தான் இத்தனை நாட்களாக தன் நிழலில் பாதுகாப்பாக வைத்திருந்தார் மடிந்த A1 குற்றவாளி.

 • ARUN.POINT.BLANK -

  veliya vidaatheenga ivana...

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  இருப்பதை வைத்து சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் தொழிலாளி,...............(MGR பட பாடல் வரி). பொதுவாக ஒருவர், தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுவதிலும், ஒரு நியாயம் நீதி இருக்கனும். இல்லைனா, தூக்க முடியாததை தூக்கி, தன் காலின் மேல் தானே ஒருவர் போட்டுக்கொண்டு துன்பப்படும் நிலைதான். சரிதானா?.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தரமுயற்சின்னு சொல்றாங்க. ஆனா அங்கே வாங்க பேரம் பேசுனது யாருன்னு சொல்லவேயில்லையே.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  விசாரணைக்காக காவலில் எடுத்திருக்கிறார்கள்.. அவ்வளவு தான்.. இதெல்லாம் இந்த மாபியாவுக்கு ஜுஜுபி மேட்டர்..பதக்கம் மாதிரி.. சசிகலா சொல்லிச்சே , "நான் பெங்களூர், சென்னை சிறைகளை எல்லாம் பாத்தவ"ன்னு. தம்பி ஒரு படி மேலே போயி நான் டில்லி ஜெயிலையே பாத்த "பருத்தி வீரன்"ன்னு மார் தட்டிக்குவாங்க.. குற்றப்பரம்பரைக்கு இதெல்லாம் வீரத்தழும்புகள்..

 • Mohan D - Boston,யூ.எஸ்.ஏ

  என்ன ஒரு 5000 ரூபாய் அபராதம் , மூன்று மாதம் சிறையில் போடுவார்களா ? அப்பறம் மற்றும் ஒரு கூவத்தூர் நடக்கும்

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  கூடிய சீக்கிரம் இரு அணிகளும் இணைந்துவிடும் வைபவம் நடக்கும். மறைமுகமாக தடையாக இருப்பார்கள் என்று நினைக்கப்பட்டவர்கள்கூட இப்போது விலக்க படுகிறார்கள்.

 • Karthik - Chennai,இந்தியா

  தினகரன் போனால் என்ன. இருக்கவே இருக்காரு திவாகர். பிறகு அவர்களின் புதல்வர்கள் மற்றும் உறவினர்கள். தமிழகத்தின் பெரிய கட்சி என்று சொல்லி கொள்ளும் கட்சி இன்று நடு தெருவில் நாறி கொண்டு இருக்கு. எவ்ளோ தான் காரி துப்பினாலும் அடக்காது. இவ்ளோ நாளா இவரை நல்லவர் என்று சொன்ன நாஞ்சில் சம்பத்தை சேர்த்தும் உள்ள போடுங்க.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தமிழ்நாடு பத்திக்கும்..

 • TamilReader - Dindigul,இந்தியா

  திஹார் ஜெயிலில் போடுங்க.... இந்தியாவில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த மாதரி தேச துரோகிகளுக்கு பெயில் (Bail) மட்டும் கொடுத்து விட வேண்டாம்

 • naankabali - kovai,இந்தியா

  சூப்பர்...நல்ல செய்தி .. வெளியிலே வந்துடுவான்

 • yaaro - chennai,இந்தியா

  குதர்க்கமா "ஏன் இன்னும் கைது செய்யல ".."எல்லாம் பணம் அப்பா ..பேரம் நடக்குது ", "எல்லாம் நாடகம் " என்றெல்லாம் கருத்து போட்ட எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் எங்கப்பா ..வாங்க வந்து இங்கயும் ஏதாவது நொட்டை நொள்ளை சொல்லிட்டு போங்க

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அடுத்த தீர்ப்பு "அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவின் தேர்வு செல்லாது" என்பது தான். படிப்படியாக..Step by step ஆப்பை சொருகுகிறார்கள், கழுவேற்றுகிறார்கள்.. அடுத்து பன்னீருக்கும் ஆப்பு தயார் பண்ணிக்கிட்டு தான் இருக்கிறார்கள்.. மக்கள்.

 • Kannan - Chennai,இந்தியா

  டிடிவி தினகரன் மற்றும் சசிகலா, மத்திய காங்கிரஸ் ஆட்சியை ரொம்ப miss பண்ணுதோ?

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  டெல்லிக்கு தெரியாத சட்டமொன்றும் இல்லை அதில் சிறந்த சட்டம் எதுவோ அதை தாங்களே தேர்ந்தெடுத்து தகுந்த தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் யுவர் ஹானர். குற்றவாளியே ஒரு கோடி இல்லை இரண்டு கோடி கொடுத்ததாக ஒப்புக்கொண்டதால் தாமதிக்காமல் தண்டனையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். - இப்படிக்கு பன்னீர் விழுதுகள்.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  என்ன இருந்தாலும் "விசாரணைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தோம்" என்று கூறி எளிதில் ஜாமீன் பெற்றுவிடலாம் என்பதுதான் தினகரன் எண்ணம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை உணர்ந்து டெல்லி நீதிமாற்றம் விரைவில் நீதி வழங்க வேண்டும்.

 • Dhakshinamurthy - உளுந்தூர்பேட்டை,இந்தியா

  இ...ழு...த்...து......மூடுங்கள்

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  பாராட்டுக்கள் லஞ்சம் கொடுத்தவர்களை கைது செய்ததற்கு. எப்போது லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்ய போகிறீர்கள்? மல்லையாவிடம் லஞ்சம் வாங்கிய அத்தனை பயல்களும் வெளியேதான் சுற்றி கொண்டு இருக்கின்றார்கள்?

 • ஊ...ஊ... -

  வாழ்த்துக்கள்

 • Abdul Akthar - Pune,இந்தியா

  முடக்குங்கள் அந்த கட்சியை

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  CHAPTER CLOSE.FOR DINAKARAN....NEXT DIVAKARAN...

 • Abdul Akthar - Pune,இந்தியா

  அடிச்சி கொள்ளுங்க தமிழனாக நான் வெட்கப்பட்டது போதும்

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  SWEET EDU ...KONDAADU..🤡

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement