Load Image
Advertisement

அங்கே அப்படி... இங்கே இப்படி... மனசு வைக்காத ரயில்வே துறை

ஸ்ரீவில்லிபுத்துார்;கேரளாவில் அதிகளவில் ரயில்கள் இயங்கி வரும் நிலையில், பொதுமக்கள் கோரிக்கை வைக்காமலே புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கபடுகிறது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தின் வழியே கூடுதல் ரயில்கள் இயக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும், மதுரை மண்டல ரயில்வே நிர்வாகம் மனசு வைக்காமல் புதிய ரயில்களை இயக்க முன்வராதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக தினமும் 3 முறை மதுரை மற்றும் செங்கோட்டைரயில்கள், சென்னை செல்லும் பொதிகை, வாரம் இருமுறை வரும் சிலம்பு, சென்னை கோடைகால சிறப்பு ரயில் இயக்கபடுகிறது. மதுரை--செங்கோட்டை வழித்தடத்தின் இரு மார்க்கத்திலும் இரவுநேர ரயில்சேவை, திருச்சி- மானாமதுரை ரயிலைசெங்கோட்டை வரை தடநீட்டிப்பு, செங்கோட்டையிலிருந்து கோயம்புத்துாருக்கு ரயில் இயக்க ரயில் பயணிகள், வியாபார சங்கங்கள் மற்றும்பல்வேறு பொதுஅமைப்புகள் கோரிக்கை எழுப்பியும் இதுவரை புதிய ரயில்கள் இயக்கபடவில்லை.
ஆனால், புனலுார்--கொல்லம் வழித்தடத்தில் தினமும் 6 முறை ரயில்கள் இயங்கி வந்த நிலையில், கடந்த வாரம் முதல் பாலருவி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை தென்னக ரயில்வே இயக்கி உள்ளது. புனலுாரில் தினமும் அதிகாலை 3:20 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.40 மணிக்கு பாலாக்காடு சென்றடைகிறது, மறுமார்க்கத்தில் அங்கிருந்து மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவில் புனலுார் வந்தடைகிறது.

மனவேதனை

இவ்வழித்தடத்தில் அப்பகுதி மக்கள் கேட்காமலே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலை, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் இயக்கி உள்ளது. மக்கள் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் செங்கோட்டை-விருதுநகர் வழித்தடத்தில் கூடுதலாகரயில்கள் இயக்காமல், கேரளப்பகுதி மக்களுக்கு அதிகளவில் ரயில்கள் இருந்தும் புதிய ரயில் இயக்குகிறது.
அகலரயில்பாதை பணிகள் முடிந்த எடமண் வரை தடநீட்டிப்பு செய்வதும், தமிழக மக்கள் பயனடையும் வகையில் புதிய ஆரியங்காவு வரை ரயில்கள் தடநீட்டிப்பு செய்ய மறுப்பதும் என ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பு என்ற மனநிலையில் மதுரைகோட்ட ரயில்வே நிர்வாகம் செயல்படுவது விருதுநகர் மாவட்ட மக்களை மிகவும் மனவேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

இனிமேலாவது விருதுநகர் மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முன்வரவேண்டும். இது போல் இங்குள்ள மக்கள் பிரதிநிநிதிகளும் பாராஸ்மன்றத்தில் வாய் திறக்க ஏவண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement