Advertisement

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிகாரிகள்..."நாங்க ரெடி!' 2,708 ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலை

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல், ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்பதால், திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள் மீண்டும் பரபரப்பாக துவங்கியுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விசாரணையில், ஜூன் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஜன., மாதம் வெளியான பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேவையான ஓட்டுச்சாவடிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த, அக்., மாதம், மாவட்டத்தில், 2,689 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் மாநகராட்சியில், 555 ஓட்டுச்சாவடிகள் இருந்தன; புதிய வாக்காளர் அடிப்படையில், கூடுதலாக, எட்டு சாவடிகள் அமைக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள, 16 பேரூராட்சிகளில், 271 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. சாமளாபுரம் பேரூராட்சியில், 17 சாவடிகள் இருந்த நிலையில், கூடுதலாக இரண்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பேரூராட்சிகளின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை, 273ஆக உயர்ந்துள்ளன.
ஐந்து நகராட்சிகளில், 227 ஓட்டுச்சாவடிகள் இருந்தன; தாராபுரம் நகராட்சியில் இரண்டு; உடுமலை நகராட்சியில், ஏழு என, ஒன்பது சாவடிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நகராட்சிகளில், 236 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement