Advertisement

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.வுக்கு எதிராக மெகா கூட்டணிக்கு சோனியா வியூகம்

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.விற்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து பொது வேட்பாளரை நிறுத்த காங். தலைவர் சோனியா தலைமையில் வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி பதவிகாலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆதரவு வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ. கூட்டணிவேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனை பா.ஜ. அல்லாத மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இதன் ஒரு பகுதியாக காங்.தலைவர் சோனியாவை, பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சியின் நிதிஷ்குமார் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளார். மார்க்,கம்யூ. கட்சியின் சீத்தாரம் யெச்சூரியும் சோனியா சந்தித்துள்ளார். மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் லாலுவும் காங்.குடன் கைகோர்க்க உள்ளார்.

மெகா கூட்டணிவரப்போகும் ஜனாதிபதி தேர்தலை மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கவுரவமான ஒன்றாக காங். கருதுகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள தேசியவாத காங். கட்சியின் சரத்பவார், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்.கட்சியின் மம்தா, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன்பட்நாயக்,, தெலுங்கானவில் தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் சந்திரசேகரராவ் ஆகிய கட்சி தலைவர்களுடன் காங். ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இக்கட்சிகளை தவிர உ.பி யில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும், பா.ஜ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் டில்லி .ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் காங்.கை ஆதரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடிக்கு கடும் சவாலை கொடுக்கவும், பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்து பொதுவேட்பாளரை நிறுத்திடவும், சோனியா தலைமையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பலத்த அடிவாங்கிய காங். ஜனாதிபதி தேர்தலில் சாதனைபடைக்குமா என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங். வியூகம் தெரியவரும்.

பா.ஜ. கூட்டணியை வீழ்த்திய காங்.கடந்த 2012-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் காங்.தலைமையிலான கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி , பி.ஏ.சங்மாவை வேட்பாளராக நிறுத்தியது. இதில் பிரணாப் முகர்ஜியே வெற்றி பெற்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (14)

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  பிஜேபின் வேட்பாளரே வெற்றிபெறுவார். இவர்கள் திட்டம் வீண். வாஜபேயி கண்டெடுத்த திறமையான ஜனாதிபதி தான் நம் அப்துல்கலாம், ஆனால் இன்றைய பிஜேபியோ ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பரிசீலித்து வருகிறார்களாம். இது ஒரு நிச்சயிக்கப்படாத செய்திதான். இருந்தாலும் நினைத்துப்பார்த்தாலே மிக கேவலம் உள்ளது.

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  பொருத்திருந்து பார்ப்போம், (முஹம்மத் ஹமீத் அன்சாரி) வழக்கம் போல துணை குடியரசு தலைவரே குடியரசு தலைவராக வர வாய்ப்பு அதிகம் போல் தெரிகிறது இவர்கள் ஆடும் குத்தை பார்த்தால்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாருங்கள்... யாரும் மக்களுக்காக ஜனாதிபதியை தேட வில்லை... தங்களுக்குகாக தலையாட்டும் பொம்மையைதான் தேடிவருகிறார்கள்...

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஹிந்திக்காரனை எல்லாம் தமிழிலேயே பேசவச்சுட்டுத்தான் மறுவேலை

 • kundalakesi - VANCOUVER,கனடா

  சட்டுக பாறை கூளி போல் இத்தாலிய வேலை ஈஷிக் கொண்டே இருக்குமோ?

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  சவப்பெட்டி காங்கிரஸ் கையில் ... ஓட்டுப்பெட்டியே மோடி கையிலிருக்கும்போது மெகா கூட்டணி அமைத்து என்ன செய்வது., உதிரிகட்சியெல்லாம் விலைபோய்விடும்.

 • Manian - Chennai,இந்தியா

  லஞ்சம்சாதிபதி ஜனாதிபதி உலகிலேயே காங்கிரஸின் முதல் சேவையாக இருக்கே கின்னிஸ் புக்கில் இடம் பெறலாம். மறதி நோயில் அவர் பாஜா சட்ட்ங்களி ஒருவேளை பாஸ் செடல் பாரத ரத்னா கிடைக்குமே அய்யகோ, இதுக்காவா ஆங்கிலேயர்களை வெரட்டினோம் ?

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  மக்களுக்கு நல்லது செய்ய தப்பித்தவறிகூட ஒருவரும் கூட்டணி அமைத்துவிடாதீர்கள். எப்படியாவது பி.ஜெ.பி யை ஜெயிக்கவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் செயல்படுங்கள், நாடு விளங்கும். உத்தமரை போல வேஷம் போட்ட கெஜ்ரிவால் இதற்கு ஆதரவு வேறு. நல்ல கூட்டணி, நல்லா வருவீங்கப்பா..

 • ARUN.POINT.BLANK -

  this lady is a shit

 • adalarasan - chennai,இந்தியா

  கூட்டணி சரி. நடுவில் உள்ளவர் நல்லவர். மற்ற இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள். ஜாமீனில் வெளியில் உள்ளனர் என்பதை நினைத்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை? லல்லுஜி, ரயில் அலுவகங்களில் செய்த அத்துமீறி செயல்கள் நினைத்தாலே பயமாக இருக்கிறது. 100 பேர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து கொண்டு நாடு முழுவதும் வரிப்பணத்தில் சுற்றனார்... என்பது உலகறியும்?சிறிய சப்ராஸி வேலைக்கு கூட தென்னிந்தியாவில் பீகாரை சேந்தவர்கள் தான் சேர்க்கப்பட்டனர்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஓகோ.. அதனால்த்தான் காங்கிரஸ் நிதி மன்றம் மறு விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்கிறதோ... இந்தக்கூட்டணியை உடைக்கவேண்டும்...

 • Vijay D.Ratnam - Chennai,இந்தியா

  ஜனாதிபதி வேட்பாளராக கருணாநிதியை நிறுத்துவார்களோ.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement