Advertisement

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்: தனிநபர் சார்ந்து இயங்கி வந்த இயக்கம், கூட்டுத் தலைமை எனும் ஜனநாயகப் பண்பை நோக்கி நகர்ந்திருக்கிறது.


டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில், இத்தனை காலம் ஜனநாயகம் இல்லை... ஜெ.,யின் சர்வாதிகாரமே இருந்துச்சுன்னு சொல்றீங்க... ஆட்சியைக் காக்க இன்னும் என்னவெல்லாம் பேசுவீங்களோ என்பது தான், கட்சியினரின், 'டவுட்'டாக இருக்கு...!



துணை சபாநாயகர் ஜெயராமன்:
ஜெ., உருவாக்கித் தந்த இந்த ஆட்சியை, தி.மு.க.,விடம் பறிகொடுக்க மாட்டோம்.




டவுட் தனபாலு: உங்க பங்காளிச் சண்டையில், அவங்களை ஏங்க இழுக்குறீங்க... ஆட்சி கவிழட்டும்னு நினைப்போரை, உசுப்பேத்தி உசுப்பேத்தி, நீங்களே பறிக்கும் முயற்சியில் இறங்க வைத்திடுவீங்க போல... நாளொரு முடிவெடுக்கும் உங்க எம்.எல்.ஏ.,க்களுக்கு, தி.மு.க.,வை ஆதரிப்பது ஒன்றும் உறுத்தலாக இருக்காது என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!



-த.மா.கா., தலைவர் வாசன்:
அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே, த.மா.கா.,வின் விருப்பம்.




டவுட் தனபாலு: பதவிக்காலம் முடிந்ததும் காங்கிரசில் இருந்து பறந்து வந்த நீங்க, இதை எல்லாம் சொல்லலாமா... ஒருவேளை, இதேபோன்ற குரல் ஏதும், காங்கிரசில் இருந்து உங்களுக்கு வரட்டும் என்பதற்காகத் தான், இந்த, 'பிட்'டோ என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    உங்க பங்காளிச் சண்டையில் மக்களை ஏங்க இழுக்குறீங்க... ஆட்சி கவிழட்டும்னு நினைப்போரை, வாழ விடுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement