Advertisement

முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு: பன்னீர் அணி அறிவிப்பு

சென்னை: இரு அணிகள் இணைவது குறித்த பன்னீர் அணி சார்பில் முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைவது குறித்து வைத்திலிங்கம் தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி நியமித்துள்ளது. இந்நிலையில் பன்னீர் அணி சார்பில் , குழு அமைப்பது குறித்து இன்று (ஏப்-21) ஆலோசனை நடந்தது. இதில் முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மைத்ரேயன், மாபா. பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக்குபின்னர் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
பன்னீர் அணியைச் சேர்ந்த செம்மலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முனுசாமி தலைமையில் நத்தம் விஸ்வநாதன், மாபா. பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர், பொன்னையன், மனோஜ் பாண்டியன் ,மைத்ரேயன் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செம்மலை தெரிவித்துள்ளார்.

விரைவில் நல்லது நடக்கும்பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், அம்மா அதிமுக அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போது நிபந்தனைகள் குறித்து குழுவினர் பேசுவர். பேச்சுவார்த்தைக்கு முன்னர் நிபந்தனைகள் பற்றி பேசுவது சரியாக இருக்காது.விரைவில் நல்லது நடக்கும் என கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  MGR ஐயும் ஜெயலலிதாவையும் மக்கள் நினைவிலிருந்து ஒழிக்க பார்ப்பார்கள்... தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும்...

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  இவங்களும் முற்றாங்க மோதுறாங்க ஆனா முடிவு என்னமோ nov 29 தேர்தல் முடிவா தெரியுது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கிழிந்தது க்ரிஷ்ணாவரம்.....நீங்கள் இருவரும் குழு அமைத்து உடன்பாட்டிற்கு வருவதற்குள் தமிழக மக்களின் நிலை ஏன்னா ஆவது...ஆண்டவா இந்த தமிழக மக்களை இந்த வீணாப்போன அரசியல்வாதிகளிடம் இருந்து நீதான் காப்பாத்த வேண்டும்..

 • LAX - Trichy,இந்தியா

  2 கட்சிகள் கூட்டணி வைத்து இணையறதுக்கு தான், குழுக்கள் அமைக்கப்படும்.. கூட்டணி நிலைப்பதோ நீடிப்பதோ அவ்விரு கட்சிகளின் விருப்பம்.. அந்த கூட்டணி மாற்றத்தால், கட்சிகளுக்குள் எந்த (பெரிய) பிரச்சனையும் ஏற்படாது.. ஆனால், இங்கு இரு அணிகளாகப் (வெகு சில மாதங்களாக - பணத்தின்\பதவியின் ஆதிக்கத்தால்) பிரிந்த ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள், மீண்டும் ஒன்றிணைவதற்கு குழுக்கள் அமைக்கப்படுகிறதென்றால், இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. அப்புறம் எதற்கெடுத்தாலும் விவகாரமே வளரும்.. இதெல்லாமே, சதிகலா & கோ. வின் சூழ்ச்சிகள் அன்றி வேறில்லை.. ஜெ. அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுள்ள ஓ.பி.எஸ். அவர்களின் அணி, இப்போதைக்கு இந்த இணைப்பு சம்பந்தமான பேச்சிக்களைத் தொடராதிருத்தல் நலம்.. தேவை இல்லாமல் இப்போது இது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு, சிரிப்பாருக்கு வழிச்சுக்காட்டும் நிலைக்கு ஆளாக வேண்டாம்..

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  அதாவது, கோரிக்கைகள் நிறைவேறிய பின்பும் குழு அமைக்கலாம் (அல்லது) குழு அமைத்த பின்பும் கோரிக்கைகள் நிறைவேறலாம் (அல்லது) யாராவது பல்பும் வாங்கிடலாம்.

 • நரி - Chennai,இந்தியா

  இந்த குழுவும் ஒரு அணியாகும்,,,1 .சசி அணி 2 . தினகரன் அணி 3 E P S அணி 4 . O P S அணி 5 ஐவர் குழு அணி 6 . எழுவர் குழு அணி 7 .தீபா பேரவை 8 மாதவன் கட்சி....வேற யாரும் அணி வச்சிக்கிட்டு இருக்கீங்களாப்பா ...அதிமுக அடக்கம் நடக்க போகுது...பிறகு என்ன கூப்பிடல .....உன்ன கூப்பிடலைனு பிராது சொல்ல கூடாது

 • Shathik -

  இவங்க சண்டையே பெருசா இருக்கு.... ஒன்னு சேர்ந்த என்ன... இல்லைன என்ன ..? மக்களுக்கு நல்லாட்சி புரியணும் ... விவசாயம் காக்கனும்... இல்லைனா கடல் நீரை சுத்திகரிக்கப்பட்டு ... விவசாயத்திற்க்கு பயன்படுத்தலாம்...

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  இவரு ஊழல் செய்து கம்பி என்ன கூடாதுன்னு என்ன வேலை பார்க்கிறார்கள். மஸ்தானின் கைக்கூலி

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கோரிக்கைகள் ஏற்றால் தான் குழுன்னு கூவுணாகளே..சசி கும்பல் நீக்கம்....சிபிஐ விசாரணை ...அமைச்சிட்டாங்களா என்ன...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அதிமுக பிரிவுகள் இணைப்பில் ஆளை ஏன் குழுவில் போட்டிருக்காக( மைத்ரேயன்) இணைப்பு உருப்படுமா?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தொலைக்காட்சியை போட்டால் ரெண்டு பக்கமும் கலீஜ் கலீஜா கழுவி ஊத்திக்கிறாங்க.. ஆனா குழு அமைக்கிறோம்னும் கொழப்புறாய்ங்க. அப்புறம் குழு அமைச்சு? என்ன கும்மியடிப்பாய்ங்களோ.. எப்படியோ நாசமாய்ப் போனா சரிதான்..

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

  அங்க யோகி அதிரடியா கலக்கறார் . இங்க கலங்கிப்போய் நிக்கறாங்க. நான் உத்திரப்பிரதேச பிரஜையா மாறலாம்னு முடிவுபண்ணிட்டேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement