Advertisement

மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை

புதுடில்லி: மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா கட்டண சலுகை அறிவித்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத சலுகைக்கான வயது வரம்பு 63 லிருந்து 60 ஆக குறைத்துள்ளது.

உள்நாட்டு சேவைஇச்சலுகையின் படி நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் இந்திய மூத்த குடிமக்கள், அனைத்து உள்நாட்டு சேவை விமானங்களில் பயணிக்கலாம். கோடை விடுமுறை தொடங்கும் வேளையில் திருத்தப்பட்ட வயது வரம்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் தங்களது பிறந்ததேதி உடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்றை வைத்து எகனாமிக் கிளாசில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (22)

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  சாகரத்துக்கு முன்னாடி பறந்திட்டு போகட்டோமோ என்ற என்னமோ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வெளிநாட்டு சேவைகளுக்கும் இந்த சலுகையை நீட்டிக்கலாமே... முதியவர்களின் ஆசி இந்திய அரசாங்கத்திற்கு கிடைக்கும்...

 • Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா

  இந்த சலுகை பல ஆண்டுகளாக இருப்பது தான். வயதை மட்டும் 60 ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் இது ஒரு ஏமாற்று அறிவிப்பு. இந்த சலுகை டிக்கட்டின் விலை சாதாரண டிக்கட்டின் விலையை விட அதிகம். அரசே ஏமாற்றுவது வேடிக்கையாக இருக்கிறது

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அனைத்து உல்நாட்டு விமான சேவை நிறுனங்களும் சலுகை அறிவித்து மோர்னு மாதங்களுக்கு munbe வாசிக்கையாளர்களை கவர்ந்து vitta நிலையில், எல்லோருக்கும் பிந்தி தான் நமது நேஷனல் FLAG CARRIER மெதுவாக முழித்து கொண்டிருக்கிறது. இளைஞர்களுக்கு சலுகை அறிவிட்துர்ந்தாள் இந்நேரம் இருக்கைகள் விற்று தீர்த்திருக்கும். மூத்த குடிமக்களுக்கு சலுகை அறிவித்ததில் என்ன பெரிய லாபம் வந்து விட போகிறது. நேரம் நிறைய இருக்கும், விமான பயணம் ஒன்றும் அவர்களுக்கு சொகுசு அல்ல. ரயில் பயணம் சரியானது. இதய நோயாளிகளுக்கு என்ன தான் சொன்னாலும் தவிர்க்க முடிந்தால் தவிர்ப்பது நலம். அடுத்து விமானம் நிலையங்கள் ஊருக்கு வெளியே சென்று மாமாங்கம் ஆகிறது. விமான நிலையங்களுக்கு செல்வதற்கே டாக்சிக்கு அதிக கட்டணம் தரவேண்டும். அடுத்து இவர்கள் அப்படி என்ன மரியாதை தருகிறார்கள் சீனியர் சிட்டிசன்களுக்கு. கவினரில் நிற்க வேண்டும், அது சரி இல்லை இது சரி இல்லை என்பார்கள். சலுகை கட்டினோம் என்றால் சேவைகளை கருணைத்து விடுவார்கள். அங்கு லக்கஜ் எக்ஸ் ரெய் செய்வதிலுருந்து எங்கு தான் இவர்கள் உதவுகிறார்கள். அடிப்படை மாறவேண்டும். இளவயதினருக்கு குறிப்பாக ஐ தி கம்பனை ஐ டி கார்ட் காண்பித்தல் அம்பது சதவீத சலுகை என்று சொல்லி பாருங்கள் இளகினார்கள் அதிகம் வருவார்கள் அது ஒரு தொடர்கதை ஆகிவிடும். நான் ஏர் இந்தியாவில் மஹாராஜா மெம்பெர் தான். ஜெட்டில் பிளாட்டினம் மெம்பெர். சேவைகள் uyaralvil அற்புதம் தான். சீர் தூக்கி பார்த்தல் ஏர் இந்தியா சிறப்பாகத்தான் இருக்கிறது, மஹாராஜா கிளப் மெம்பர்களுக்கு, பிசினஸ் அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு. காலதாமதம், மற்றும் அன்பான சேவை இல்லை என்ற ஒரு குறையை ஏர் இந்தியாவின்மீது சுமத்துபவர்கள் இருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இன்றில்லை தான். என்ன மூத்த குடிமக்கள் வயதில் இருப்பவர்கள் தான் ஏர் ஹோஸ்டஸ் ஆகா இருக்கிறார்கள். ஏர்இந்தியா ஸ்டார் அல்லியன்ஸ் மெம்பெர். நிறைய விஷயங்கள் மஹ்ராஜாவை மற்ற எந்த விமானங்களாலும் ஈடு செய்ய முடியாது. நடுதர ஆண்கள் வெள்ளி செய்யும் கவுண்டரில் சென்று சேவையை பாருங்கள் அற்புதமாக இருக்கும் உண்மையிலேயே. நமக்காக காத்திருக்கும் ஒரே விமானம் நமது விமானம் தான். சில நிமிடங்கள் தாமதம் ஆனால் காத்திருப்பார்கள். இண்டிகோ அல்லது ஸ்பைசில் அப்படி இல்லை.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  எப்படியானாலும் விமானத்தில் வசதியானவர்தான் போகப்போகிறார். ரயிலில் இருந்த சலுகையை அகற்றிவிட்டு எதற்கு விமானத்தில் சலுகை? அதுவும் ஏர் இந்தியா கடும் நஷ்டத்தில் இயங்கும்போது? இது அமைச்சர்களுக்கே உதவும், அவர்கள் மட்டுமே வயது முதிர்ந்த-விமானத்தில் செல்லத்தக்க ஏழைகள்.

 • VISWANATHAN B - chennai,இந்தியா

  This is unfair. If you login and check, the fare for concession is double than the normal fare. Useless offer

 • VISWANATHAN B - chennai,இந்தியா

  This is not correct. If you login and check the fare for senior citizens, the amount is double than normal fare. No clues why

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இலவசமா கொடுத்தாலும் போகக்கூடாது... மட்டமான வண்டி.. அதுக்கு கட்ட வண்டிலேயே போகலாம்...

 • Shake-sphere - India,இந்தியா

  பொருளாதார வகுப்பு பள்ளி, கல்லூரிகளில்தான் இருக்கும், இதில் சிக்கன வகுப்பு என பொருள் கொள்ள வேண்டும்.

 • jagadeesan - Hosur,இந்தியா

  தமிழ் நாடு அரசியல் தலைவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு இந்தமாதிரியான செய்திகள் கண்ணுக்கு தெரியாது.வாழ்க பாரதம் வெல்க baratham

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  மத்திய அரசிற்கு நன்றி.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Very good decision for the benefit of senior citizens. It should be extended to International flights also.

 • sundaram - Kuwait,குவைத்

  இந்த சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் தங்கள் மூத்த குடிமக்கள்தான் என்று உறுதி கூறவேண்டும். அதே நேரம் ஏர் இந்தியா , இந்த குறிப்பிட்ட விமானம் குறிப்பிட்ட இந்த இடத்தில் இருந்து கிளம்பி குறிப்பிட்ட அந்த இடத்துக்கு பத்திரமாக போய் சேரும் என்று உறுதி கூறுவார்களா? மோடி பக்தர்கள் என்னை மன்னிக்கவேண்டும், ஏர் இந்தியா பயணங்களில் எனது அனுபவங்கள் இப்படி கருத்து எழுத தூண்டுகிறது. உதாரணம்: சென்னையில் இருந்து ஹைதராபாத் வழியாக டில்லி செல்லும் பயணத்தில் டில்லி சென்ற பின்னர் தெரிந்தது எனது பெட்டி ஹைதராபாத்தில் இறக்கப்பட்டுவிட்டது என்று. அம்மான் நகர் விமான நிலையத்தில் போர்டிங் கார்டு கொடுத்த பின்னர் விமானத்தில் இடமில்லை என்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் பெப்சி மட்டும் கொடுத்து உட்காரவைத்தது, இது போன்று இன்னும் பலப்பல.

 • James - Mumbai,இந்தியா

  மிக்க மகிழ்ச்சி...

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  இவ்வளவுதானா கண்டிஷன்? அல்லது கண்ணுக்கு தெரியாத சின்ன எழுத்தில் ஏதாவது இருக்கிறதா/

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement