Advertisement

ஆன்லைன் புக்கிங் செய்தால் வீடு தேடி பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் திட்டம்:

புதுடில்லி: ஆன்லைன் மூலம் புக்கிங் செய்பவர்களுக்கு வீடு தேடி வந்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இ- வர்த்தகம் மூலம் பெட்ரோல்,டீசல் ஆகியவற்றை ஆன்லைன் புக்கிங் செய்தால் வீடு தேடி சென்று எண்ணெய்நிறுவனங்களே பெட்ரோல்,டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிரமாக பரிசிலீத்து வருகிறது. இத்திட்டத்திற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

இது குறித்து மத்திய பெட்ரோலியம்,இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் டுவீட்டரில் கூறயியுள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால் பெட்ரோல், டீசலுக்காக நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நேரம் தவிர்க்கப்படும், இத்திட்டத்தை சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தென்மாநிலங்கள் இத்திட்டத்திற்கு பெருமளவு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

 • w victor - kodaikanal,இந்தியா

  ஆன்லைன் மூலம் பெட்ரோல்,டீசல் விற்பனை பற்றிய வாசகர்கள் கருத்து உண்மைதான்.ஆனால் பெட்ரோல் பங்குகளில் நம்மில் எத்தனைபேர் டிகிரி போட்டு பார்த்து தரம் அறிந்து வாங்குகிறோம்? "ஊரோடு ஒத்துவாழ்"என்ற சொல்லை மறந்துவிட்டார்கள் போலும்

 • Karthik Mk - Bengaluru,இந்தியா

  அய்யா ... முதலில் வீட்டுரிவாயு மற்றும் வாகன எரிபொருள் விலையை குறைக்க ஆலோசனை செயுங்க... அப்பறம் இதை யோசிப்போம் ......

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  இது ரொம்ப அதிகமா தெரியுதே.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பெட்ரோல் டீசல் விலை தங்கத்தின் விலையை கிட்டதட்ட தொட்டுவிட்டது... இனி அவைகளை இல்லம் தேடி கொடுப்பது களவு போவதை தடுக்கலாம்...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  சூப்பரப்பு .... ( வேறு ஏதாவது சொல்லி தேசதுரோகி என்ற பெயர் வாங்க விரும்பலைடா சாமி)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பாதுகாப்பு கருதி எரிபொருளை கேனில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. அது போலவே நிரப்புவதும் அதற்கான பிரத்தியேக இடங்களில் தான் செய்யப் படவேண்டும். தீயணைப்பு வசதிகள் எரிபொருளை மாற்றும் போது இருக்கவேண்டும். குழாயில் தரலாம். இப்படியே இவர்கள் விதிகளை உருவாக்குவார்கள். தனியார் மயமாக்கப் படுவதால் சேவையை அதிகரிக்கும் விதமாக யோசிக்கிறார்கள். அடுத்து இதனால் நேரடி விற்பனை என்பதில் அதிக லாபம், இடி தரகர்களான பெட்ரோல் ஸ்டேஷன் கமிஷன் மிச்சமாகும். இவர்கள் அதை நடை முறைப் படுத்து கிரார்களோ இல்லையோ, நமது டாஸ்மாக் காரர்கள் நிச்சயம் இதை யோசித்து நடை முறை படுத்துவார்கள். குடிமக்கள் இருக்கும் இடத்தில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன, வீடு தேடி வரும் டாஸ்மாக், மற்றும் குழாய்மூலம்வீட்டிற்கு நேரடியாக தரும் திட்டங்கள் அவர்களுக்கு உதவும். குடிநீருக்காக இனிக்கப் பட குழாய்கள் சும்மா தானே இருக்கின்றன, அதை பயன் படுத்தி கொள்வார்கள். இப்படி சிஎவதால், குடிமக்கள் குடித்து விட்டு வாகனம் ஒட்டி வியாபித்துக்களை ஏற்படுத்துவதிலிருந்து பொதுமக்களை காப்பாற்றலாம் என்று தீர்மானத்தை சட்ட சபையில் கூட நிறைவேற்றுவார்கள். கேனில் எரிபொருளை தருவதால் அதை அரசிற்கு தெரியாமல், தனியார் நிறுவனங்கள், அதை டீசல் என்ஜினுக்கு பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பயனப்டுத்தினார்கள் என்று கேனில் வழங்குவதை தடுத்தார்கள் சிலவருடங்களுக்கு முன்பு.

 • Gnanavelu Nithiyanandam - Richmond,யூ.எஸ்.ஏ

  மொதல்ல தண்ணி லாரியை ஒழுக்கமா பாருங்க. அப்புறம் உங்க அறிவு கண்ண திறங்க . முடியல உங்க கூட

 • thiru - Chennai,இந்தியா

  எப்படியோ நாடு நாசமா போறதுக்கு எல்லாம் திட்டங்களும் ரெடி... காங்கிரஸ் 10 வருஷம் ஆட்சி பண்ணி நட்ட குட்டிசுவரக்குணங்க இவங்க 5 வருசத்துல ஊத்தி மூடிடுவாங்க போல...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This tem is not good and advisable for the public.What is the use of on line booking .We are not getting any genuine items through on line booking.How we expect these also genuine. There is no safety and genuine on these petrol and diesel till these comes to our house.By this tem this government is going to make the people lazy and useless.These petroleum protects are highly inflammable materials and not news papers or courier materials to deliver by boys at home easily . The people can very well stand in ques for this purpose and the heaven is not going to fall on their heads if they stand in petrol bunks for petrol and diesel for their vehicles.

 • TamilAzhagan -

  பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை நிலையங்களில் பாதுகாப்பின்றி ஆபத்தான முறையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஸ்வைப் இயந்திரங்கள் உபயோகிப்பதை முறைபடுத்த வேண்டும் மற்றவை பிறகு பார்க்கலாம்.

 • S. Chandrasekaran - Chennai

  How is it possible? It requies extra man power. in that case, they will collect delivery charges. Already pertroleum prices are high. It may help big corpirate companies and not common man.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  முன்னால கேரோஸீன் தெருவில வண்டில பேரல்ல கொண்டுவந்து வித்துக்கிட்டு இருந்தாங்க..அப்பால நிப்பாட்டீட்டாங்க.டிஜிட்டல் னு சொல்லிக்கிட்டு கற்காலத்துக்கு போறாங்கப்பா...ஓஹோ..ஹோ...இது மே 14 ஞாயிறு விடுமுறையை தகர்க்கும் பிளானா?படு மட்டமா இருக்கு..கேவலமா திங்க் பண்றங்கப்பா,பெருந்தலைகள்..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இதெல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். பெட்ரோல், டீசல் பங்க்குகளை விட்டு வெளியே விற்பது சட்ட விரோதம் அல்லவா? அந்த பெட்ரோலின் தரத்துக்கு என்ன சான்று? கார்டு தேய்க்க வைக்க எந்த எல்லைக்கும் போவாங்க போல. விட்டா கம்பெனிக்கு ஆளை கூட கூட்டிகிட்டு வருவாங்க போல..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement