Advertisement

அதிக விலை கொடுக்க வேண்டிவரும்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

புதுடில்லி: தலாய்லாமாவை துருப்பு சீட்டாக தொடர்ந்து பயன்படுத்தினால், இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என சீனா கூறியுள்ளது.
இது தொடர்பாக சீன அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பத்திரிகையில் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தலாய்லாமா சொன்னார் என்பதற்காக அருணாச்சல்லின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது என இந்தியா கருதக்கூடாது. சீனாவுக்கு எதிராக தலாய் லாமாவை இந்தியா முக்கிய கருவியாக பயன்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் அருணாச்சல்லில் 6 இடங்களின் பெயர்களை ஏன் மற்றப்பட்டது என்பதை இந்தியா தீவிரமாக யோசிக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக தலாய் லாமாவை முக்கிய துருப்பு சீட்டாக பயன்படுத்துவது என்பது புத்திசாலித்தனம் அல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால், இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எல்லையில் நிலவும் பிரச்னையை தீர்க்க சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அந்த செய்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (34)

 • chander - qatar,கத்தார்

  போடா போடா புண்ணாக்கு நாங்க அப்பவே இப்படித்தான் எங்க ஐயா நாடு நாடாய் போய் ஆளும் ஆயுதமும் வாங்க போயிருக்கிராறுல

 • Darmavan - Chennai,இந்தியா

  இது சீனாவின் ரௌடித்தனமான போக்கை காட்டுகிறது.எல்லாரையுமே அது மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைக்கிறது.இதற்கு நாம் அனுமதிக்க கூடாது.அதற்கு முதலில் இறக்குமதியை நிறுத்தவேண்டும் திபெத் சீனாவின் பகுதி அல்ல என்று அறிவிக்கவேண்டும்.திபெத்தியருக்கு தனி விசா வழங்க வேண்டும்.திபெத்தியரை மட்டுமே கொண்ட தனி ராணுவப்படை அமைத்து சீன எல்லையில் நிறுத்த வேண்டும்.நம் ராணுவத்தை மேலும் நவீனமாக ஆக்க வேண்டும்.அமெரிக்கா ஆஸ்திரேலிய ஜப்பான் இவற்றோடு ராணுவ ஒப்பந்தம் போடவேண்டும்.இப்படி செய்தல் சீனா நம்மிடம் வாலாட்டாது.அதன் மிரட்டலுக்கு பயப்படாமல் தலாய்லாமாவுக்கு எங்கும் போக அனுமதிக்க வேண்டும்

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல அன்டன் காகா(சீனா) குருவிகளுக்கு வேதம் புரியல...வேதம் புரியல............................ யாரு யாருக்கு சொல்றது?

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  இந்தியா உடன்னான சீனாவின் வர்த்தகம் ஆண்டுக்கு 7,250 கோடி அமெரிக்க டாலர். இதை இழக்க சீனா விரும்பாது, அதுமட்டும் அல்லாமல் ஏனைய உலக நாடுகளும் இந்தியாவில் நிறைய முதலீடு செய்துள்ளது, இந்தியாவின் பெரிய வர்த்தக சந்தையையும் நம்பியுள்ளது. அதனால் போர் சூழும் நிலை உருவாகும் நிலையில் அதை உலக நாடுகள் அதை தனித்து விடும் . இதையும் மீறி போர் சூழ்கிறது என்று ஒரு கற்பனைக்கு எடுத்துக்கொள்ளவோமே. இரு நாடுகளும் அணுஆயுதத்தை கட்டாயம் உபயோகப்படுத்தாது. போர் பல நாட்கள் நீளும். நமக்கு துணையாக ஜப்பான், வியட்நாம் துணை நிர்க்கும், சீனாவிற்கு துணையாக வடகொரியா போரிடும், அது தென் கொரியாவை தாக்கும். இந்த செயல் அமெரிக்காவையும் போரினுள் இழுக்கும். உலகமே பேரழிவை சந்திக்கும். இந்தியா சீனா 100 ஆண்டுகள் பின்னோக்கி நகரும். அனைத்தையும் சீனா நன்கு அறியும். இத்தனை நாட்கள் தான் பாடு பட்டு சேர்த்த பொருளாதாரத்தை சீனா ஒரு பொழுதும் இழக்க விரும்பாது. அவ்வப் பொழுது எல்லையில்அறசல் புறசல் இருக்குமே ஒழிய சீனா ஒருபொழுதும் போர் புரியாது. இந்தியா 1962ஐ விட தற்பொழுது வலிமையான நிலையில் இருக்கிறது என்பதை சீனா நன்கு அறியும்

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  சுதந்திரம் கிடைச்சு இன்னிவரை எந்த நாட்டின்மீதும் ஆக்கிரமிப்பே செய்யலீங்க எங்கள் இந்திய தேசம் , ஸீனாக்காரனும் பாகிஸ்தானும் தான் அடாவடி செய்றானுக அடக்கிவைக்கவேண்டும் இதுகளை பாவம் மோடி உள்நாட்டு அவலங்களையே சரி செய்யமுடியலே , அவ்ளோ தொள்ளைபிடிச்சு நடக்குறானுக்கோ

 • Vetri Vel - chennai,இந்தியா

  என்ன குஜராத் தேநீர் விருந்துக்கு அழைப்பு வரலியா... அதுக்கு இப்படியா...இருக்கவே இருக்கு.. அம்பானி அதானி கும்பலை அனுப்பி வைக்கிறோம்..... வாய் சொல் வீரர் எங்கே..? பதுக்கி இருக்கிறார் இன்னும்... நீயா நானா னு காமிக்க வேண்டாமா.. சீனா காரனுக்கு..

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தங்களை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடனும் இவர்கள் மிரட்டல் போக்கி காண்பிக்கிறார்கள். அனைவருமே சீனாவை ஒதுக்கி வைத்து நம்பிக்கைக்கு உதவாதவர்கள் என்று தான் வைத்திருக்கிறார்கள். நமது நட்பு நாடுகள் இவர்களை சுற்றி உள்ளன அவைவளும் இவர்களுக்கு எதிரியாக இருக்கின்றன. சீனாவால் தற்போதைய நிலைமையில் அவ்வபோதைக்கு ஜம்பம் அடித்து கொண்டே இருக்க முடியும். ஆனாலும் நாம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும். அப்படிதான் இருக்கிறோம். மோடியின் ஆட்சியில் ஃபிராண்டையர் பகுதியில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். வாடா கிழக்கு இந்தியா உண்மையில் ஜோராக இருக்கிறது பழைய நிலைமையை பார்க்கும் போது. இனி நாம் அந்த பிரதேசம் வழியாக ரயிலிலேயே கம்பூசியாவின் அங்கோர்வாட் கோவில்களுக்கு சென்று வரலாம். சோழ சாம்ராஜ்யத்தின் மகத்துவத்தை தமிழ் அரசர்களின் பண்டைய பாரம்பரித்தை அங்கே சென்று களிக்கலாம்.

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  ///அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா 21-ஏப்-2017 18:33 சீனாக்காரன் பொருளை இறக்குமதி செய்யாமல் விட்டாலே சரியாகி விடுவான்................ K.Sugavanam - Salem,இந்தியா 21-ஏப்-2017 18:33 உங்க கைப்பேசி என்ன மேக்கு?அத மொதல்ல சொல்லுங்க ஜி..உங்க கணினி எந்தூரு ப்ரொடக்ட்டு?power bank என்ன brand ?///............ ஆமாங்க இந்த டிஜிட்டல் துறையில், தரம் இருக்கோ இல்லையோ, இந்த சீனனின் எலட்ரானிக்ஸ் பொருட்கள், நம் இந்திய சந்தையில் மிக அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகிறது. நம்ம பணம் அவனிடம் குவிவதால் அவன் ஆட்டம் போடுகிறான். Be indian buy indian's. இந்த நிலை மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் நவீன டெக்னாலஜியை சமகாலத்தில் நாமும் பயன்படுத்த அன்னிய பொருட்களை வாங்கியதாலும், நம் இந்திய கம்பெனிகள் நவீன டெக்னாலஜியில் பின்தங்கிவிட்டதுமே எனலாம். இதற்கு மாற்று வழிகள் கண்டு, நாம் சீன பொருட்களை புறக்கணிக்கலாம். நாம் வேறு நாட்டிடம் இருந்து பொருட்கள் வாங்கினாலும், அதே போன்ற போலி பொருட்களை உருவாக்குவதிலும் சீனன் எக்ஸ்பர்ட்டானவன் எனலாம்.

 • N.K - Hamburg,ஜெர்மனி

  ஆமாம், சீனாவின் டப்பா பொருட்களை தடைசெய்தபின், சற்று அதிக விலை கொடுக்கவேண்டிவரும்தான். அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்.

 • Viji Ram - kovai,யூ.எஸ்.ஏ

  நமது admk , dmk மற்றும் காங்கிரஸ் போன்ற ஊழலில் உளுத்து போன, டெக்னாலஜி-கு , வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத , அதை பற்றிய எந்த அறிவும் இல்லாத , படிக்காத , உலக நடப்பு தெரியாத களவாணிகள், அவர்களுக்கு காசு வாங்கி ஒட்டு போடும் , தறுதலை கூட்டம் உள்ளவரை , உலகத்தில் நம்மை பர்மா கூட விரட்டும்.

 • jagadeesan - Hosur,இந்தியா

  சீனாவின் தற்போது நிலைமை நான் உயிரோடு இருக்கிறான் என்று உலகத்துக்கு காட்டவே இப்படி ஒரு மிரட்டல் ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்ட வருகிறான் என்பது உண்மை. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு சீனா.இனி போரில் இவர்களை பயன்படுத்துவது சீனாவுக்கு kashtame

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  சீனாவை ஒண்ணுமில்லாம பண்ணுவது ரொம்ப ஈஸி... நம்ம கம்யூனிஸ்ட் ஆட்களை 10 நாள் அங்க அனுப்பிவெச்சா போதும் அந்த நாடு நாசமா போய்டும்... நம்ம கம்யூனிஸ்ட் ஆட்கள் காலடி வெச்ச எந்த இடம் உருப்படும்... முள்ள முள்ளாலதான் எடுக்கணும்...

 • PRAKASH -

  unnaiya mathiri pala per pathichu da chinese summa pulipu katadhada.Endha velainaalum naangha vanghu vom vanghu vatharuku thyaar than irukaen...IM A ATOMIC NATION & AND U ALSO ATOMIC NATION FIGHT EACH OTHER DAMAGE IS VIGOROUS LY...IF U READY IM READY . PECHU VARTHAI THOLVIZHIL MUDINTHATHU...JAI HIND

 • RSam,KualaLumpur -

  India should tactically avoid procating China. Focus more on trade and technology transfer. Conflict will drag our growth which is not in the best interest of India. So far China has been very friendly to us.

 • Ramesh - Tambaram,இந்தியா

  என்ன விலை என்றாலும் வாங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது

 • SINGAM - chennai,இந்தியா

  இதற்கு ஒரே வழி சீனாவை இந்தியா போல் ஆக்குவது. கருமந்தர கம்யூனிஸ்ட், கட்டுமரம், நாட்டுப்பற்று மிக்க வீரமணி, முலாயம், லொள்ளு, உளுத்துப்போன காங்கிரஸ், எல்லா ஜாதி கட்சிகள், எல்லோரையும் சீனாவுக்கு அனுப்பிவிட வேண்டியது தான்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீனனுக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் என்ன வேலை? சீன இறக்குமதியை கட்டுப்படுத்தவேண்டும்... அது ஒன்றே போதும்...

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  பாரத புத்திரர்கள் கவலை வேண்டாம் , அவர்கள் நமக்கு சமம் இல்லை ( அவர்கள் நிறுவனத்தில் முன்பு பனி செய்யும் பொழுது நமக்கு அதிக மரியாதை கொடுகின்றனர் என்பதை உணர்த்தேன் ) . ஆனால் நாம் ஊழல் என்ற புற்று நோயால் சிதைந்து கொண்டுள்ளோம் .ஊழல் ( திமுக /அதிமுக ) நின்றால் சீனா ஒரு ஆணி புடுங்க முடியாது .சுபராம காரைக்குடி

 • p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா

  உலக மேப்பில் இருந்து நீக்கப்பட வேண்டிய நாடுகள் பாகிஸ்தான் சீனா வடகொரியா

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சீனாக்காரன் பொருளை இறக்குமதி செய்யாமல் விட்டாலே சரியாகி விடுவான்

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  பொது மக்களாகிய நாம் சீன பொருட்களை பகிஷ்காரிப்போம். இந்தியா முழுவதும் சேர்ந்து இதை செய்தால் தான் சீனர்களுக்கு புத்தி வரும். அணு சக்தி உள்ள நம்மிடம் சீனா போரை பயன் படுத்தாது. மாற்றாக இவ்வாறு எரிச்சல் மூட்டும்.

 • Prakash Srinivasan - chennai,இந்தியா

  இங்கே கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் ஒரு ஏவுகணையை சீனா மீது ஏவ வேண்டாம். நாம் சீனா பொருள் வாங்குவதை நிறுத்திக்கொண்டாலே அவர்கள் கொட்டம் அடங்கியிரும் . செய்வீர்களா? ..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  தலாய்லாமா, இந்தியாவில் அடைக்கலமாகி வெகு காலமாகிவிட்டது. இந்தியாவின் பகுதிகளை தனதாக்கி சீனா செய்யும் அட்டூழியங்கள் , இந்தியாவின் இறையாண்மைக்கே விடும் சவால். இந்தியாவில் அமைதியை கெடுக்க அவர்கள் பாகிஸ்தானை உபயோக படுத்துவதும் .இந்தியா ஐ நா சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதை தடுப்பதும் இவர்கள்தான், , பொருளாதரத்தை கெடுக்க அவர்கள் கள்ள நோட்டுகளை அடித்து நேபாள் மூலம் விநியோகப்படுத்துவதும், நன்கு அறியப்பட்டவையே. இப்படி மறைமுகமாக இந்தியாவை இவர்கள் வீழ்த்த நினைப்பதும், பலவீனப்படுத்துவதும் , நமக்கு கோபத்தை வரவழைக்கும் செயல்கள் என்பதை அவர்கள் என்று உணருவார்கள்.

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  யாரிடம் சீனா சீண்டிப்பார்க்க நினைக்கிறது, மோடிஜியின் அனல் பார்வை சீனா மீது விழுந்தால், சீனா ஒரு புள்ளியாக தேய்ந்து விடும். நேற்று கூட உலகில் சக்தி வாய்ந்த தலைவர் என மோடி என்று தினமலர் சொல்லி இருந்தது. ஏய் சீனாவே இது மோடிஜியின் பொற்கால ஆட்சி, வலிமையின் ஆட்சி , வெற்றியின் ஆட்சி....

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  டேய் சப்பை மூக்கா பழைய நேரு/சோனியா திருட்டு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்று நினைத்தாயா? இப்போது நடப்பது நாட்டு பற்றுள்ள பாஜக மோடி ஆட்சி. வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள்.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  இந்த ஒற்றை மனிதனுக்கு ஏன் சீனா இவ்வளவு அஞ்சி நடுங்க வேண்டும்?....

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இன்னும் வாய் திறக்காமல் இருந்தால் முதலுக்கே மோசம் ஆகிவிடும்..விரைந்து செயலாற்றுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement