Advertisement

ராணுவம் குவிப்பா? ரஷ்யா மறுப்பு

மாஸ்கோ: வட கொரிய எல்லையில் படைகள் குவிப்பதாக, வெளியான தகவலை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது.
பல தடை, எதிர்ப்பை மீறி வட கொரியா அணு ஆயுத போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், வடகொரியா எல்லையை நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்து வருவதை மக்கள் பார்த்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டது.
ஆனால், இதனை மறுத்துள்ள ரஷ்ய ராணுவம், ரஷ்ய படைகள் ஏற்கனவே திட்டமிட்டப்படி அங்கு உள்ளன. இதில், அரசியலை தொடர்பு படுத்தக்கூடாது. அங்கிருந்த ராணுவ வாகனங்கள் திரும்புவதை தான் மக்கள் பார்த்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    எப்போ உண்மை வெளியே வந்திச்சி ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement