Advertisement

பத்திரப்பதிவுக்கு ஐகோர்ட் மீண்டும் தடை

சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. இடைக்கால தளர்வை ரத்து செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யும் வரை தடை தொடரும். எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தடையை ஏன் நீக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை மே 4,5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இடைக்கால தளர்வை நீக்கக்கூடாது என்ற ரியல் எஸ்டேட் தரப்பினர் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (30)

 • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

  அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வாங்கியவர்கள் திருடர்கள் அல்ல. தங்கள் பணத்தில் இடம் வாங்கி அதற்கு அரசு நிர்ணயித்த நில மதிப்பிற்கு 8 % வரி செலுத்தியே இதுவரை பதிவு செய்துள்ளனர். அது போன்ற இடங்கள் கட்டிடம் கட்டும்போதும் மீண்டும் நில மற்றும் கட்டிட அங்கீகாரம் பெற அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள். இப்படி ஏற்கனவே பலமுறை பணம் செலுத்தி பதிவு செய்யப்பட நிலங்களுக்கு தடை விதிப்பது எப்படி நியாயமாகும்? புதிதாக விளைநிலங்களில் போடப்படும் வீட்டுமனைகளுக்கு தானே தடை போட வேண்டும். இந்த வழக்கின் அடிப்படையே அது தான். ஒவ்வொரு நீதிபதியும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப தடை விதிப்பதும் தளர்த்துவதும் மீண்டும் தடை விதிப்பதும் கேலி கூத்தாக இருக்கிறது. தளர்வுக்கு பிறகான இந்த இடைப்பட்ட ஒரு மாதத்தில் பணம் கட்டியவர்கள் நிலை என்ன?

 • RAJ - chennai,இந்தியா

  The High court first banned the construction on Water bodies in 2015 and asked the Government to regulate the unapproved layouts. Government. Parties and officials did not initiate any step as they did not want to loose their Income which were generated from the sales of unapproved layouts. Hence, the High court in Sep 2016 ordered the Govt. not to register unapproved layouts and asked the government to draft a policy on Layouts. This time also the Government and Officials sit on the paper. It is a mistake of Govt and why every one blame the Court.

 • VOICE - CHENNAI,இந்தியா

  95 % லஞ்சப்பணம் திருட்டுப்பணம் அனைத்தும் இதுபோன்ற அனுமதி மறுக்கப்படும் இடங்களில் பொறம்போக்கு நிலம் மற்றும் சென்னையில் முக்கியமான பகுதிகளில் சேரி பார்க்கலாம் அது நல்ல விலை போகின்ற வரை சேரியாக காட்சி அளிக்கும் நல்ல விலை கிடைத்து விட்டால் அடுத்த நாள் சேரியில் குடிசையில் தீ பிடிக்கும் அடுத்து ஒரு 3 மாதத்தில் அங்கு வணிக வளாகம் அல்லது அடுக்குமாடிகட்டிடம் வேலை நடப்பதை பார்க்கலாம். அனுமதி மறுக்கப்பட்ட இடம் என்று தெரிந்தும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதே கோர்ட் மதிக்காமல் செய்யப்படும் செயல் தான். இதில் அனைத்திலும் அணைத்து கட்சி அரசியல்வாதிகள் நிலங்கள் உள்ளன பார்க்கலாம் என நடக்கபோகுது என்ன என்று?

 • Nathan - Manama,பஹ்ரைன்

  இந்த அரசு எதுவும் செய்ய மாட்டேன் என்கிறது. எவ்வளவு முறை கோர்ட்டில் சொல்லி விட்டார்கள் செப்டம்பர் 2016 லிருந்து. அரசு செயல் படவே இல்லை. ஜெயலலிதா உடல் நிலை , மரணம், வார்தா புயல் , ஜல்லிக்கட்டு, அதி மு க , உட்கட்சி சண்டை, சசி தண்டனை, முதல் அமைச்சர் மாற்றம், தொடரும் சண்டை... இதிலேயே அரசு , அமைச்சர்கள் மூழ்கி விட்டார்கள். அவர்களுக்கு நேரம் எது ?

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  எதுக்கு எல்லோரும் கடத்தறாங்க?...அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கு மட்டும்தானே தடை....மழை, வெள்ளம் என்று வந்தால் எங்கே வேணா வீடு கட்ட அனுமதிக்கிறாங்க என்று புலம்ப வேண்டியது...அது வேற வாயி, இது வேற வாயா?..

 • RENU - Redmond,யூ.எஸ்.ஏ

  மலரின் மகள் எந்த உதட்டை சொல்கிறார்

 • Srini Vasan - nairobi,கென்யா

  இது நீதிபதிகளின் சர்வாதிகார போக்கு. தடி எடுத்தவன் தண்டல்காரனா ? இடைக்கால தளர்வை ரத்து செய்தது முழுக்க தவறான பொறுப்பற்ற தீர்ப்பு. தேவையற்றது. புதிய மனைகளுக்கான தடை நியாயமானது. அரசு வரையறுக்கும் வரை தொடரலாம். ஆனால் பழைய மனைகளுக்கு தடை செய்தது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வெந்த புண்ணில் வேல் பேசியது போல. தினமலர் இதனை கோர்ட் க்கு தெரிவிக்க வேண்டுகிறேன். மறு பதிவிற்கான மனைகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம்.

  • guru - chennai,இந்தியா

   இவர்களால் சாமானிய மக்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து காட்ட முடியுமா ?? என்ன ஒரு பொறுப்பற்ற தீர்ப்பு . தமிழக மக்கள் ஏற்கனவே சொல்ல முடியாத அளவிற்கு துன்பம் நாளுக்கு நாள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் . செயலற்ற அரசிடம் , அதை செய் இதை செய் என்றால் ? செய்றதற்கு ஆள் அம்பு சேனையுடன் கோட்டையில் ஆட்கள் ரொம்பி வழிகிறார்கள் :(

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   தமிழர் நீதி அவர்களின் பதிவையும் படியுங்கள்.

  • guru - chennai,இந்தியா

   அதற்க்கு பதில் பதிவையும் சென்று படியுங்கள்

 • guru - chennai,இந்தியா

  அரசு என்று ஒன்று இருந்தாத்தானே முன்னேற்றம் இருக்கும் மக்கள் இருந்தா என்ன , இல்லைனா என்ன . யார் எக்கக்கேடு கேட்டு போனால் என்ன , நாற்காலியை யார் பிடிப்பது என்பது தான் தலையாய பிரச்சனையே

 • Ramesh Sundram - Khazzan,ஓமன்

  ஐயோ வடை போச்சே

 • Sandru - Chennai,இந்தியா

  சென்னையில் வெயில் ரெம்ப அதிகம்

 • Selva - Chennai,இந்தியா

  அரசு திட்ட்ங்களில் கோர்ட் தலைஇடடால் அது ஆமை புகுந்த வீடு மாதிரி ஆய்டும்

  • GopalKrishnan - ,

   amam

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நல்ல தீர்ப்பு . இனியாவது நிலமும் தப்பிக்கும் , நிலத்தை காட்டி கொள்ளையடிப்போரிடமிருந்து பொதுமக்களும் தப்பிப்பார்கள் . தமிழக புறம்போக்குகள் , அரசுநிலம்கள் ,வரத்துக்கால்வாய்கள், நீர்நிலைகள் எல்லாம் இந்த ரீயல் எஸ்டேட் கூட்டத்தால்தான் காணாமல் போனது . பத்து ஏக்கர் நிலம் வாங்குவார்கள் , அதிலிருக்கும் மண்ணையெடுத்து அருகிலிருக்கும் குளம் அரசு நிலத்தில் கொட்டி சேர்த்து பிளாட் ஆக்குவார்கள் . பத்திரப்பதிவாளர்களுக்கு கொடுப்பதை கொடுத்து நிலத்தையும் பதிவுசெய்து கொடுப்பார்கள் . அப்புறம் நிலம் வாங்கியவர்கள் அலையும் அலைச்சல் ஐயோ, கொடுமை . குருவி போல சேர்த்த பணம் கோவிந்தா . சினிமா தயாரிப்பாளர்கள் , பிரபல ரௌடிகள் பிறப்பிடம் இந்த ரியல் எஸ்டேட் களம்தான். இதுல இன்னொரு கூட்டம் மவுலிவாக்கம் கட்டிடம் காட்டுவார்கள் . இடிந்து விழும் .விழாமல் நின்றால் ஐந்து வருடத்தில் இடியும் . சரிசெய்த்திட இறங்கினால் , ஐயோ கூரையில் கம்பி இருக்காது . புதிதாக கூரை போடணும் ,தரை போடணும் ..போண்டிதான். இவர்களை நீதிமன்றம் தவிர்த்து யாரும் மூக்கணாம் கயிறு போடமுடியாது . வன்முறை கூட்டம் . பணம் கொடுத்துவிட்டு திரும்ப கேட்ட்க முடியாது . மீசை பெருசா வைத்திருப்பார்கள் . இவர்கள் மீது காவல் துறை புகார் கொடுத்துவிட்டு , ஊரில் குடியிருக்க முடியாது . 6 மாடிக்கு என்று அனுமதி வாங்கி காட்டுவார்கள் . அப்பட கட்டிமுடித்தார்கள் என்று வாங்கியவர்கள் வீட்டில் குடியேற சென்றால் வீட்டுக்கு மேல இன்னும் ஒரு மாடி இருக்கும் ,அதுல பிரபல அரசியல்வாதிகள் , லோக்கல் கவுன்சிலர் வந்து குடியிருப்பார்கள் . கார் பார்க்கிங் ஷேர் செய்திட வேண்டும் .அடங்கிப்போக வேண்டும் .காவல்துறை இவர்கள் நெருங்கிய நண்பன் . இதையும் மீறி நீதிமன்றம் சென்றால் , இவர்களை விசாரிக்க தனியாக பொருளாதார குற்ற பிரிவு - என்று காவல்துறையில் இவருக்கு . இங்கு இவர்கள் ஏமாந்தோரை மிரட்டு மிரட்டு என்று மிரட்டி , ஏமாற்றும் கொள்ளை கும்பலிடம் சேர்ந்துகொள்வார்கள் . நம்மிடமிருந்து ஏமாற்றிய பணத்தை கறந்து விட்டு ,வழக்கை பதிவு செய்திடமாட்டார்கள் . பணம் பூனை ,குரங்கிடம் சென்று அப்பம் பங்கிட்டு ஏமாந்த கதிதான் . தமிழ்கத்தில் கொடுமைகள் கூடி கும்பி அடிக்கும் தொழில் இந்த ரியல் எஸ்டேட் கூட்டம்தான்.அரசு இவர்களை சட்டம் போட்டு கட்டம் கட்டாவிட்டால் , நிலம் எல்லாம் பிளாட் ஆகி , அது பூதகர பிரச்சினைக்கு கரணமாகிவிடும் மீ லார்ட் . 200 % லாபம் கொழிக்கும் தொழிலாம் . அதான் திருப்பதி நாமம் போடுவது இவர்கள்தான் .பெரு ரியல் எஸ்டேட் .

  • sura - ,

   you are talking about the real estate people, think about the middle class people those who wanted to sell the property for many reasons like marriage education and etc. if it is keep on delaying they will suffer a lot. government should take an action.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

   விபரம் தெரியாமல் , ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கி அனுபவித்து இருக்கிறார் இவர். ஆனால் நேர்மையாளர்கள் பலர் உள்ளனர். எங்கோ , யாரோ செய்யும் ஒரு தவறுக்கு ஒட்டுமொத்த மக்களையும் குறை கூறுவது தவறு. சட்டத்திற்கு உற்பட்டு, வரைமுறைக்கு உட்பட்டு நில வியாபாரம் செய்வதை ஊக்குவிக்கவேண்டும். தேவை படுபவர்கள் , முதலீடு செய்யும் எண்ணத்தில் உள்ளவர்கள் இதில் ஈடுபடுவதில் தவறேதும் இல்லை.

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   நான் 6 வருடங்களுக்கு முன் சாலிகிராமம் (சென்னையில்) ஒரு FLAT வாங்கினேன்.வாங்கும்போது கார் பார்க்கிங்கிற்காக அதிகப்படியாக ரூ.1 லட்சம் வாங்கினார்.கட்டிடம் முடித்து ஒப்படைக்கும் கார் நிறுத்தும் இடம் மார்க் செய்து கொடுக்கவேயில்லை. ஆனால் கார் பார்க்கிங்கும் உண்டு என்று பாத்திரத்திலும் காட்டவில்லை.உள்ள இடத்தில அட்ஜஸ்ட் செய்து கார் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.அதாவது பிளாட் சொந்தக்காரர்கள் அடித்துக்கொள்ளும் நிலைமை .அவரும் அப்போதைய பிரபல அரசியல் கட்சியை சார்ந்தவர் அவரும் சினிமா தயாரித்துக்கொண்டிருந்தார்.படம் ரிலீஸ் ஆனதா இல்லையா என்பது தெரியவில்லை.என்னுடைய வயதையும்,என்னுடைய சண்டை போடா குணத்தையும் பில்டர் exploit செய்துவிட்டார்.

  • guru - chennai,இந்தியா

   நீங்கள் சொல்வது புது வீட்டுமனைகள் பத்திரப்பதிவிற்கு மட்டும் தடை என்று தீர்ப்பு சொல்லியிருந்தால் பொருந்தும் . ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட லட்ச கணக்கான வீட்டுமனைகள் , கட்டிடங்களையும் மாத கணக்கில் மறு பதிவு செய்ய முடியாமல் மருத்துவ செலவிற்கு , திருமண செலவிற்கு திண்டாடும் மக்கள் நிலை என்ன ஆவது ?

  • NRK Theesan - chennai,இந்தியா

   இந்த இடைப்பட்ட நேரத்தில் யார் யார் பத்திரம் பதித்தார்கள் என்ற விவரத்தை வெளியிட்டால் ஏதாவது உண்மை தெரியும் ?........

  • Meenu - Chennai,இந்தியா

   அருமை. நடப்பதை எடுத்து சொல்லியிருக்கிறார். நானும் ஒரு பிளாட் இடம் வாங்கலாம் என்று திருச்சி மாவட்டம் லால்குடி ஏரியாவில் முயற்சி செய்தேன். அப்பாடா, இன்றைக்கு ஒரு ரேட், ஒரு மாதம் கழித்து ஒரு ரேட், இதுல இடை தரகர் தனக்கு இரண்டு சதவீதம் கமிஷன் என்று கேக்கிறான்.... என்னமோ அவன் முதல் போட்ட மாதிரி. கடந்த ஆறு வருடமா நானும் முயற்சி பன்றேன்... இஷ்டத்துக்கு விலையை ஏத்தி சொல்லிகிட்டேயே போறாங்க. சரி, இவளவு ரேட்டுக்கு வித்தாங்கன்னா அதுக்கு வருமான வரி கட்டியிருப்பங்களா? இருக்காது. வித்த இடமோ, அப்ரூவ் ஆகாத இடம். அரசு நிர்ணயித்த விலையை விட 200 அல்லது 300 சதவீதம் அதிகமா விலைக்கு வித்திருக்கிறாங்க. அதையும் ஒரு சில கூமுட்டைங்க வாங்கி, பிறகு அதை விட அதிக விலை வைத்து எவனாவது ஏமாந்தவன் வந்தா அவன் தலையில் கட்டி பணத்தை எடுத்துக்க வேண்டியது. அதுக்கு வருமான வரி கட்டிருப்பங்களா? அதான் இல்லை. இப்படியே இந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து நிறைய பேர் நல்லா சம்பாதிச்சுட்டாங்க. விலை அரசு மனை விலை கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மனையை மட்டும் தான் விற்க வேண்டும். வித்த மனைக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று அரசு, நீதிமன்றம் சட்டம் கொண்டுவர வேண்டும்.

  • Suresh Kumar - Chennai,இந்தியா

   மேடம் லால்குடி நல்ல ஊர்தான். தற்பொழுது புரோக்கர் புறம்போக்குகளிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுக்கிங்குகிறது . மெயில் டு mail to structuralsura@gmail.com if you need any help

  • RENU - Redmond,யூ.எஸ்.ஏ

   மீனு சுரேஷ் குமார் கடலை போடறார் ...தெரியாத நபருக்கு மெயில் பண்ணி அவஸ்தை படாமல் இருக்கவும் ...

 • ela cool - Thanjavur,இந்தியா

  அடப்பாவிகளா

 • Srinivasan Kothandaraman - Chennai,இந்தியா

  நாசமா போன தமிழ் நாடு அரசு

  • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

   இன்னும் நாசமா ... போகலியே ...... அது தானே பிரச்சினையே ....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இனி முதலீட்டுக்கு பொன்னிலும் லாபமில்லை மண்ணிலும் லாபமில்லை கடைசிவரை உழைத்துப்பிழையுங்கள் மக்களே (அட்சயதிரிதியை ஜாக்கிரதை 24கேரட் விலை 2012 இல் Rs. 3105. தற்போது 3,141.80 )

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அட்சய த்ரிதியை வியாபாரமே ஒரு டுபாக்கூர்..அன்று எதையும் வாங்க சொல்லவில்லை பெரியோர்கள்..எல்லாம் இந்த நகைக்கடை காரர்களின் சூழ்ச்சி..அட்சய த்ரிதியை அடுத்தவருக்கு கொடுத்து உதவ தான்..

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

   neengal thaadi மீசைக்கு மை அடித்திருக்கிறீர்களா, uthattukku saayam poosi irukkiraargalaa?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அவர் "மஹாபாரத்" சகுனி படத்தை போட்டோ ஷாப் பண்ணி வச்சிருக்கிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement