X
Advertisement

எச்1பி விசா: அமெரிக்காவிடம் ஜெட்லி கவலை

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் வில்புர் ரோசை சந்தித்தார். அப்போது, எச்1 பி விசா குறித்து இந்தியாவின் கவலையை ஜெட்லி கூறினார். இரண்டு நாடுகளின் பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவின் திறமை வாய்ந்த ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை ஜெட்லி எடுத்து கூறியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
அதற்கு எச்1 பி விசா நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கவில்லை என வில்புர் ரோஸ் கூறியதாக தெரிகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    நிர்மலா சீதாராமன் அவர்கள் இங்குள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் அது மாதிரியான சட்டங்களைக் கொண்டுவரலாம் என்கிறார். இந்த கோகோ கோலா, பெப்சி இவற்றை விரட்டினாலே போதும். ஆயிரக் கணக்கான கொடிகள் மிச்சமாகும்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    உனக்கு எதுக்குப்பா அவங்க நாட்டு பிரச்சனை, நீதானே நிதி அமைச்சர் இந்தியாவுக்கு. உனது நாட்டை முன்னேற்று. அவன் செய்து பார்ப்பான், முடியவில்லை என்றால் உதவிக்கு கூப்பிடுவான். அப்போ போ.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement