Advertisement

ஆந்திராவில் கடைக்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பலி

திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து, சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில், பயணிகள் உட்பட 20 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (16)

 • Sathish - Coimbatore ,இந்தியா

  ஆந்திரா லாரி டிரைவர்கள் மிகவும் தறிகெட்டவர்கள். அப்படி ஒரு ட்ரைவரால் வாளையார் அருகே எனக்கு நேரவிருந்த ஒரு மிகப்பெரிய விபத்தில் தப்பித்த அனுபவம் எனக்கு உண்டு. highway சாலைகளில் நாம் வேகமாக செல்லும்போது அவர்கள் வண்டிகளை முந்தி செல்ல நேர்ந்தால் நம் காரின் front wind shield கண்ணாடியில் விழுமாறு எச்சிலை காரி துப்புவதும், நீரை ஊற்றுவதும் என எல்லா கன்றாவித்தனமான வேலைகளையும் செய்வார்கள். கண்மண் தெரியாமல் வண்டியை ஓட்டுவதில் கில்லாடிகள். AP registration கொண்ட லாரிகளை கண்டாலே சிறிது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லது. எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  ///hasan - Chennai,இந்தியா 21-ஏப்-2017 14:53 தமிழன் மாட்டுக்கு மட்டும் தான் போராடி ஜெயித்தான். ஏன் காவேரி நீருக்காக இதுவரை போராடவில்லையே. ஏன் தமிழ் நாட்டில் அணைகட்டினால் கன்னடக்காரன் தமிழனிடம் கை ஏந்தனும் அதை செய்ய தமிழன் ஒன்று கூடவில்லையே./// .............மாட்டு விசயத்தில் தீர்வை, இங்கேயே காணும் வாய்பிருந்தது. ஆனால் காவிரிக்கான தீர்வை , அண்டை மாநிலத்தில்தானே காணவேண்டி இருக்கு. முதல் விசயத்தில் சாதிப்பது சுலபம். ஆனால் இரண்டாவது விசயத்தில்............?.

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  வண்டி கண்டிஷன் எப்படி இருந்தது? டிரைவர் தண்ணி போட்டிருந்தாரா? செல் போன் பேசிக்கொண்டிருந்தாரா? சாலை கண்டிஷன் எப்படி இருந்தது/

 • vidhura - chennai,இந்தியா

  போராட்டம், எதிர்ப்பு ,சினிமா , இலவசம் இதற்கு மட்டும் தான் ஒன்று கூடும் , தமிழ் இனமும் , தொல்லை காட்சிகளும். ராமநாத மாவட்டத்தில் வந்து , கூட்டாக வறண்ட நிலத்தை வாங்கி , விவசாயம் செய்து , மற்றவர்களுக்கு வழி காட்ட , பஞ்சாப் மாநில மக்கள் இருக்கிறார்களே நமது குடிமகன்கள் , வீடு பெண்மணி உழைத்து , சாப்பாட்டுக்காக மற்றும் குழந்தைகள் படிப்புக்காக வைத்துள்ள பணத்தை , திருடி அல்லது அடித்து , உதைத்து பிடுங்கி சரக்கு அடித்து , மானம் கேட்டு மல்லாக்க படுத்து , நடிகைகளை நினைத்து உளறுவான் . உருப்படியாக ஒன்று சேர்ந்து உழைக்க மற்ற மாநிலத்தில் இருந்து கலெக்டர் , மக்கள் வர வேண்டும்.

 • jayaraman - Mumbai,இந்தியா

  இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஐரோப்பாவில் நடந்தது போன்ற தீவிரவாத தாக்குதலா என்பதை ஆராயவேண்டும்..

 • ganapati sb - coimbatore,இந்தியா

  it is better to be called as Mr Late than late Mr என்ற வாசகம் அர்த்தமுள்ளது மனித வாழ்வில் ஒன்றுதான் சர்வ நிச்சயமாக நடக்கும் அதுதான் மரணம் எனினும் அது விபத்துக்களால் தனக்கோ மற்றவர்க்கோ ஏற்படாதவாறு வாகன ஓட்டுனர்கள் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும்

 • sundaram - Kuwait,குவைத்

  இந்த செய்தியை படிச்சா தினமலர் செய்தி மாதிரி இல்லையே. வேற எதோ நல்ல பேப்பர் செய்தி மாதிரி இருக்கே. தினமலர் செய்தியா இருந்தா உலகத்தில் இந்தியா இருப்பதும் அங்கு நரேந்திர மோடி தலைமையில் நல்லாட்சி நடப்பதும் தெரிந்ததே. அந்த இந்தியாவில் ஆந்திரா என்ற மாநிலத்தில் சந்திரபாபு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடை பெறுகிறது. அங்கு திருப்பதி என்ற ஊரும் அந்த ஊருக்கு பக்கத்தில் ஒரு சாலையும் இருக்கிறது. அந்த சாலையில் தினசரி பஸ் லாரி போக்கு வரத்து நடைபெறுவது வழக்கம் . அப்படி நடக்கும் போது ஒரே ஒரு லாரி கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது அப்படீன்னுதானே செய்தி வந்திருக்கும். ஒருவேளை இன்னிக்கு பத்திரிகை தர்மத்துக்கு லீவு நாளோ?

 • sundaram - Kuwait,குவைத்

  ஆந்திராவுல எந்த கட்சி ஆட்சி நடக்குது, யாரு முதலமைச்சருன்னு போடவேயில்லையே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement